Sri Kamakshi Virutham
Tamil Brahmins
Results 1 to 4 of 4
 1. #1
  Join Date
  Mar 2010
  Posts
  17,623
  Downloads
  2
  Uploads
  0

  Sri Kamakshi Virutham


  0 Not allowed!  காமாக்ஷி அம்மன் விருத்தம்
  -

  இந்த விருத்தம் ஆழுந்த பக்தியின் வெளிபாடு. உரிமை, கோவம், பயம், பக்தி, சரணாகதி என்று அனைத்தும் ஒருங்கே இணைந்த பாடல்.

  Kamakshi Virutham - YouTube

  Artist: Sisters, Bala Swami & Uma


  கணபதி காப்பு

  மங்களம் சேர் கச்சிநகர் மன்னு காமாக்ஷி மிசை
  துங்கமுள நற்பதிகம் சொல்லவே திங்கட்புயமருவும் பணி அணியும் பரமன் உள்ளந்தனில் மகிழும்கயமுகன் ஐங்கரன் இருதாள் காப்பு.

  சுந்தரி சௌந்தரி நிரந்தரி துரந்தரிஜோதியாய் நின்ற உமையே

  சுக்கிர வாரத்தில் உனைக் கண்டு தரிசித்தவர்கள்
  துன்பத்தை நீக்கிவிடுவாய்

  சிந்தைதனில் உன்பாதம் தன்னையே தொழுபவர்கள்
  துயரத்தைப் மாற்றிவிடுவாய்

  ஜெகமெலாம் உன் மாயை புகழவென்னாலாமோ
  சிறியனால் முடிந்திடாது

  சொந்தவுன் மைந்தனாம் எந்தனை ரக்ஷிக்க
  சிறிய கடன் உன்னதம்மா

  சிவசிவ மஹேஷ்வரி பரமனிட ஈஷ்வரி
  சிரோன்மணி மனோன்மணியும் நீ

  அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரி
  அனாத ரக்ஷகியும் நீ

  அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
  அம்மை காமாக்ஷி உமையே. [2]பத்து விரல் மோதிரம்

  எத்தனை ப்ரகாசமது
  பாடகம் தண்டை கொலுஸும்

  பச்சை வைடூரியம் இச்சையாய் இழைத்திட்ட
  பாதச் சிலம்பினொளியும்

  முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்
  மோஹன மாலை அழகும்

  முழுவதும் வைடூரியம் புஷ்பராகத்தினால்
  முடிந்திட்ட தாலி அழகும்

  சுத்தமாய் இருக்கின்ற காதினில் கம்மலும்
  செங்கையில் பொன் கங்கணமும்

  ஜெகமெலாம் விலை பெற்ற முகமெலாம் ஒளிவுற்ற
  சிறுகாது கொப்பின் அழகும்

  அத்தி வரதன் தங்கை சத்தி சிவரூபத்தை
  அடியனால் சொல்ல திறமோ

  அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
  அம்மை காமாக்ஷி உமையே! [3]கெதியாக வந்துன்னைக்

  கொண்டாடி நினது முன்
  குறைகளைச் சொல்லி நின்றும்

  கொடுமையாய் என் மீதில் வறுமையை வைத்து நீ
  குழப்பமாய் இருப்பதேனோ

  சதிகாரி என்றுதான் அறியாமல் உந்தனைச்
  சதமாக நம்பினேனே

  சற்றாகிலும் மனது வைத்து எனை ரக்ஷிக்க
  சாதகம் உனக்கில்லையோ

  மதி போல ஒளியுற்ற புகழ் நெடுங்கரமுடைய
  மதகஜனை ஈன்ற தாயே

  மாயனுடை தங்கையே பரமனது மங்கையே
  மயானத்தில் நின்ற உமையே

  அதிகாரி என்று நான் ஆசையாய் நம்பினேன்
  அன்பு வைத்து எனை ஆள்வாய்

  அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
  அம்மை காமாக்ஷி உமையே. [4]பூமியிற் பிள்ளையாய்ப்

  பிறந்தும் வளர்ந்தும் நான்
  பேரான ஸ்தலமும் அறியேன்

  பெரியோர்கள் தரிசனம் ஒருநாளும் நான்போற்றிக் கொண்டாடி அறியேன்

  வாமியென்றே சிவகாமியென்றே உன்னைச் சொல்லிவாயினாற் பாடி அறியேன்

  மாதா பிதாவினது பாதத்தைவணங்கி ஒருநாளுமே அறியேன் சாமியென்றே எண்ணிச் சதுரருடன்

  கைகூப்பிச்
  சரணங்கள் செய்தும் அறியேன்

  சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டுசாஷ்டாங்க தெண்டன் அறியேன்

  ஆமிந்தப் பூமியில் அடியேனைப் போல் மூடன்ஆச்சி நீ கண்டதுண்டோ?

  அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்அம்மை காமாக்ஷி உமையே. [5]

  பெற்ற தாய் என்றுன்னை மெத்தவும் நம்பி நான்பிரியனாய் இருந்தனம்மா

  பித்தலாட்டக்காரி நீ என்று அறியாது உன்
  புருஷனை மறந்தனம்மா

  பத்தனாய் இருந்தும் உன் சித்தம் இரங்காமல்
  பராமுகம் பார்த்திருந்தால்

  பாலன் நான் எப்படி விசனமில்லாமல்
  பாங்குடனே இருப்பதம்மா

  இத்தனை மோசங்கள் ஆகாது ஆகாது
  இது தருமம் அல்லவம்மா

  எந்தனை ரக்ஷிக்க சிந்தனைகள் இல்லையோ
  இது நீதியல்லவம்மா

  அத்திமுகன் ஆசையால் இப்புத்திரனை மறந்தையோ
  அதை எனக்கு அருள்புரிகுவாய்.

  அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
  அம்மை காமாக்ஷி உமையே. [6]மாயவன் தங்கை நீ

  மரகதவல்லி நீ
  மணிமந்த்ரகாரி நீயே

  மாயாசொரூபி நீ மகேஷ்வரியுமான நீ
  மலையரசன் மகளான நீ

  தாயே மீனாக்ஷி நீ சற்குணவல்லி நீ
  தயாநிதி விசாலாக்ஷியும் நீ

  தாரணியில் பெயர் பெற்ற
  பெரியநாயகியும் நீ

  அத்தனிட பாகமதில் பேறு பெற
  வளர்ந்தவளும் நீ

  ப்ரணவ சொரூபி நீ ப்ரஸன்னவல்லி நீ
  பிரிய உண்ணாமுலையும் நீ

  ஆயி மகமாயி நீ ஆனந்தவல்லி நீ
  அகிலாண்டவல்லி நீயே

  அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
  அம்மை காமாக்ஷி உமையே. [7]பொல்லாத பிள்ளையாய்

  இருந்தாலும் பெற்ற தாய்
  புத்திகளைச் சொல்லவில்லையோ

  பேய்பிள்ளையானாலும் தான் பெற்றபிள்ளையைப்
  பிரியமாய் வளர்க்கவில்லையோ

  கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாடும் கதறி
  நான் அழுத குரலில்

  கடுகுதனில் எட்டிலொரு கூறு அதாகிலும்
  காதினில் நுழைந்ததில்லையோ

  இல்லாத வன்மங்கள் என்மீதில் ஏனம்மா
  இனி விடுவதில்லை சும்மா

  இருவரும் மடிபிடித்துத் தெருதனில் வீழ்வதும்
  இது தருமம் இல்லையம்மா

  எல்லோரும் உன்னையே சொல்லி ஏசுவார்
  இது நீதி அல்லவம்மா

  அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
  அம்மை காமாக்ஷி உமையே. [8]முன்னையோர்

  ஜென்மாந்திரம் என்னென்ன பாவங்கள்
  மூடன் நான் செய்தனம்மா

  மெய்யென்று பொய் சொல்லி கைதனில் பொருள் தட்டி
  மோசங்கள் பண்ணினேனோ

  என்னமோ தெரியாது இக்க்ஷணம்தனிலே
  இக்கட்டு வந்ததம்மா

  ஏழை நான் செய்த தாய் பிழைத்து அருள் தந்து
  என் கவலை தீருமம்மா

  சின்னங்கள் ஆகாது ஜெயமில்லையோ தாயே
  சிறுநாணம் ஆகுதம்மா

  சிந்தனைகள் என் மீது வைத்து நீ நல்பாக்கியம் அருள்
  சிவசக்தி காமாக்ஷி நீ

  அன்ன வாஹனமேறி ஆனந்தமாக அடியேன்
  என் முன் வந்து நிற்பாய்

  அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
  அம்மை காமாக்ஷி உமையே [9]எந்தனைப் போலவே

  ஜெனனம் எடுத்தவர்கள்
  இன்பமாய் வாழ்ந்திருக்க

  யான் செய்த பாவமோ இத்தனை வறுமையில்
  உன்னடியேன் தவிப்பதம்மா

  உன்னையே துணையென்று உறுதியாய் நம்பினேன்
  உன் பாதம் சாக்ஷியாக

  உன்னையன்றி வேறு துணை இனி யாரையும் காணேன்
  உலகந்தனில் எந்தனுக்குப்

  பின்னையென்று நீ சொல்லாமல் வறுமை போக்கடித்து
  என்னை ரக்ஷி பூலோகம் மெச்சவே

  பாலன் மார்க்கண்டன் போல் பிரியமாய்க்
  காத்திடம்மா

  அன்னையே இன்னமும் அடியேனை ரக்ஷிக்க
  அட்டி செய்யாதேயம்மா

  அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
  அம்மை காமாக்ஷி உமையே. 10பாரதனில் உள்ளளவும்

  பாக்கியத்தோடென்னைப்
  பாங்குடன் ரக்ஷிக்கவும்

  பக்தியாய் உன் பாதம் நித்தம் தெரிசித்த
  பாலருக்கு அருள் புரியவும்

  சீர் பெற்ற தேகத்தில் சிறுபிணிகள் வாராமல்
  செங்கலியன் அணுகாமலும்

  சேயனிடம் பாக்கியங்களைத் தந்து ஜெயம் பெற்று
  வாழ்ந்து வரவும்

  பேர் பெற்ற காலனைப் பின் தொடர வொட்டாமல்
  பிரியமாய்க் காத்திடம்மா

  பிரியமாய் உன்மீதில் சிறியேன் நான் சொன்ன
  கவிபிழைகளைப் பொறுத்து ரக்ஷி

  "
  ஆறதனில் மணல் குவித்து அரிய பூசை செய்தஎன் அன்னை ஏகாம்பரி நீயே"அழகான காஞ்சியில்

  புகழாக வாழ்ந்திடும்
  அம்மை காமாக்ஷி உமையே. 11எத்தனை ஜெனனம் எடுத்தேனோ

  தெரியாது
  இப்பூமி தன்னிலம்மா

  இனியாகிலும் கிருபை வைத்து ரக்ஷியும் இனி
  ஜெனனம் எடுத்திடாமல்

  முத்தி தர வேணும் என்றுன்னையே தொழுது நான்
  முக்காலும் நம்பினேனே

  முன்பின்னும் தோணாத மனிதரைப் போலவே நீ
  முழித்திருக்காதேயம்மா

  வெற்றி பெற உன் மீதில் பக்தியாய் யான் சொன்ன
  விருத்தங்கள் பதினொன்றையும்

  விருப்பமாய்க் கேட்டு நீ அளித்திடும் செல்வத்தை
  விமலனர் ஏசப்போறார்

  அத்தனிட பாகமதை விட்டுவந்தே என் அரும்
  குறையைத் தீருமம்மா

  அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்
  அம்மை காமாக்ஷி உமையே.12


  Source: Advaitam Sathyam
  Last edited by P.J.; 13-11-2013 at 04:24 AM.
 2. #2
  Join Date
  Jan 2014
  Posts
  2
  Downloads
  7
  Uploads
  0

  0 Not allowed!
  please upload audio file thanks in advance
 3. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 4. #3
  Join Date
  Jan 2014
  Posts
  2
  Downloads
  7
  Uploads
  0

  0 Not allowed!
  i am newly joined this site hello to all
 5. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 6. #4
  Join Date
  Mar 2010
  Posts
  17,623
  Downloads
  2
  Uploads
  0

  0 Not allowed!
  Quote Originally Posted by savithriramadoss View Post
  please upload audio file thanks in advance
  Sir

  Please Try Giri Trading, Chennai, for Audio.
 7. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •