Tamil Brahmins
Results 1 to 1 of 1
 1. #1
  Join Date
  Feb 2010
  Location
  coimbatore. INDIA.
  Posts
  2,033
  Downloads
  44
  Uploads
  0

  மாலையில் தீபம் கேதார கெளரி வ்ரதம் கார்தĮ


  0 Not allowed!
  தீபாவளி யன்று மாலையில் தீபம்

  நிர்ணய சிந்து-141. தத்தோ தீபஸ் சதுர்தஸ்யாம் நரக ப்ரீதயே மயா சதுர்வர்த்தி சமாயுக்த: சர்வ பாபாபநுத்தயே

  தீபாவளியன்று மாலையில் தனது வீட்டிலும் பக்கத்திலுள்ள சிவா/ விஷ்ணு அம்பிகை கோவில்களிலும் நல்லெண்ணெய் விட்டு நான்கு திரிகள் போட்டு விளக்கு ஏற்றி மேற் கணடவாறு ப்ரார்த்தனை செய்து கொள்ளவும்.

  இதனால் நரக பயம் கிட்டாது. சந்தோஷமாக இருப்பார்கள்.

  ஹேமாத்ரி புத்தகம் கூறுகிறது.; ப்ரதோஷ ஸமயே லக்ஷ்மீம் பூஜயித்வா தத: க்ரமாத் தீப வ்ருக்ஷாஸ்ச தாதவ்யா: ஷக்த்யா தேவ க்ருஹேஷு ச ஸ்வலங்க்ருதேந போக்தவ்யம் ஸித வஸ்த்ரோப சோபிநா.

  தீபாவளி யன்று 2-11-13 சனி யன்று மாலையில் ஸுர்யன் மறையும் நேரத்தில் பூஜை செய்பவர்கள் புத்தம் புதிய ஆடைகள் ஆபரணங்கள் மூலம் தன்னை அலங்கரித்துக்கொண்டு அஹம் சிருதி ஸ்ம்ருதி புராணோக்த பலாவாப்தி த்வாரா மஹாலக்ஷிமி ப்ரஸாத சித்யர்த்தம் ஸுக ராத்ர்யாம் மஹா லக்ஷிமியாஹா இந்திர குபேரயோஸ்ச பூஜனம் கரிஷ்யே. என்று சங்கல்பம் சொல்லி

  மஹா லக்ஷ்மீயை தேவேந்திரன் குபேரனுடன் கூட முறைப்படி படத்திலோ விக்கிரஹத்திலோ, கலசத்திலோ ஆவாஹனம் செய்து ஸஹஸ்ரநாமம், அஷ்டோத்ரம் அர்சனை செய்து சுமார் 16 தீபங்களுக்கு குறையாமல் நெய் தீபம் ஏற்றி வைத்து பூஜை செய்ய வேண்டும்.

  ஓர் தாம்பாளத்தில் பேனா பென்சில் வைத்து அதில் காளியையும், கணக்கு எழுத பயன்படும் நோட்டு புத்தகத்தில் ஸரஸ்வதி தேவியையும் ஆவாஹனம் செய்து ஓம் இந்த்ராய நம: என்று இந்த்ரனையும் க்லீம் குபேராய நம: என்று சொல்லி குபேரனையும் பூஜை செய்ய வேண்டும். சக்கரை பொங்கல், பால் நிவேதனம் செய்யவும்.

  மஹாலக்ஷிமி, இந்த்ரன், குபேரனை கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி ப்ரார்திக்கலாம். இதனால் வீட்டில் லக்ஷ்மீ கடாக்ஷம் தடங்கலின்றி இருக்கும்.

  விச்வரூபஸ்ய பார்யாஸி பத்மே பத்மாலயே சுபே
  மஹா லக்ஷ்மி நமஸ்துப்யம் ஸுகராத்ரீம் குருஷ்வ மே
  விஷ்ணோர் வக்ஷஸி பத்மே ச கட்கே சக்ரே ததாம்ப்ரே

  லக்ஷ்மி நித்யா தயாஸி த்வம் மயி நித்யா ததா பவ
  நமஸ்தே ஸர்வ தேவாநாம் வரதாஸி ஹரிப்ரியே
  யாக திஸ் தவத் ப்ரபன்னாநாம் ஸா மே பூயாத் த்வதர்சனாத்.

  விசித்ரைராவதஸ்தாய பாஸ்வத் குலிச பாணயே
  பெளலோம்யாலிதாங்காய சஹஸ்ராக்ஷாய தே நம:

  தநதாய நமஸ்துப்யம் நிதி பத்மாதி பாய ச
  பவந்து த்வத் ப்ரஸாதான் மே தந தான்யாதி ஸம்பத:


  3-11-13. ஞாயிறு கிழமை அமாவாசை தர்ப்பணம். கேதார கெளரீ வ்ருதம்.

  ஐப்பசி மாதம் அமாவாசை அன்று கேதார கெளரீ வ்ருதம் அநுஷ்டிக்க படுகிறது. கெளரி என்ற பார்வதி (கேதார்நாத்தில் ஸ்வயம்பூவாக தோன்றிய சிவனுடன்) இடது பாதி பாகத்தை பெற செய்த இந்த வ்ருதம் கேதார கெளரீ வ்ருதம் ஆனது.

  இன்று ஒரு கலசத்தில் கீழ் கண்ட ஸ்லோகம் சொல்லி கேதாரேஸ்வரரை ஆவாஹனம் செய்யவும். சூலம் டமருகம் சைவ ததானம் ஹஸ்த யுக்மகே
  கேதார தேவ மீசானம் த்யாயேத் த்ரிபுர காதினம்

  இத்துடன் 21 இழை 21 முடிச்சு உள்ள மஞ்சள் சரட்டில் அம்மனை ஆவாஹனம் செய்து 16 உபசார பூஜை செய்து அஷ்டோத்ரத்தால் அர்சித்து 21 பழம், 21 அப்பம், 21 வெல்ல உருண்டை நிவேதனம் செய்து பூஜையை முடிக்கவும்.

  21 முடிச்சுள்ள மஞ்சள் சரட்டை சுமங்கலி பெண் தனது கையில் கீழுள்ள மந்திரம் சொல்லி கட்டிக்கொள்ள வேண்டும்.

  ஆயுஸ்ச வித்யாம் ச ததா ஸுகஞ்ச ஸெளபாக்கிய வ்ருத்திம் குரு தேவ தேவ ஸம்ஸார கோராம்புநிதெள நிமக்னம் மாம் ரக்ஷ கேதார நமோ நமஸ்தே..

  பிறகு 21 ஸுமங்கலி பெண்களுக்கு 21 மஞ்சள் கிழங்கு, 21 வெற்றிலை, 21 பாக்கு கொடுத்து நமஸ்கரித்து அவர்கள் ஆசி பெற வேண்டும்..


  கார்த்திகை ஸ்நானம். காலையில் தினமும் 4-11-13 முதல் 2-12-13 முடிய.

  ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறு நாள் பிரதமை முதல் கார்த்திகை அமாவாசை முடிய தினமும் காலையில் சூர்ய உதயத்திற்கு முன்பாக ஸ்நானம் செய்யும் வ்ரதம்..

  இதனால் நாம் அறியாமல் செய்யும் பாபம் விலகும். மனதில் தூய எண்ணங்கள் உண்டாகும்.ஆண்கள் பெண்கள் எல்லோரும் இதை செய்யலாம்.
  ஸ்நானம் செய்யும் போது சொல்ல வேண்டிய மந்திரம்.

  கார்த்திகே அஹம் கரிஷ்யாமி ப்ராத: ஸ்நானம் ஜநார்தன ப்ரீத்யர்த்தம் தவ தேவேச தாமோதர மயா ஸஹ.

  ஸ்நானம் செய்துவிட்டு உலர்ந்த வஸ்த்ரம் கட்டிக்கொள்ளவும். நெற்றிக்கு இட்டுக்கொண்டு கையில் ஜலம் எடுத்துக்கொண்டு ஸூர்யனை நோக்கி நின்றுக்கொண்டு

  மயா க்ருத கார்த்திக ஸ்நானாங்கம் அர்க்ய ப்ரதானம் கரிஷ்யே என்று சங்கல்பம் செய்து கொண்டு கீழ் கண்ட மந்திரம் சொல்லி அர்க்யம் விடவும்.

  வ்ரதிந: கார்த்திகே மாஸி ஸ்நானஸ்ய விதி வந் மம க்ருஹாணார்க்யம்
  மயா தத்தம் தநுஜேந்த்ர நிஷூதன ஶ்ரீ க்ருஷ்ணாய நம: இதமர்க்யம், இதமர்க்யம், இதமர்க்யம்.

  நித்ய நைமிதிகே க்ருஷ்ண கார்த்திகே பாபநாசனே க்ருஹாணார்க்யம் மயா தத்தம் ராதாயா ஸஹிதோ ஹரே. ஶ்ரீ ஹரயே நம: இதமர்க்யம், இதமர்க்யம் இதமர்க்யம்.

  அநேந அர்க்ய ப்ரதாநேன ஶ்ரீ ஹரி: ப்ரீயதாம். இதனால் துக்கங்கள் விலகி நன்மை உண்டாகும்.. எல்லா நாட்களும் செய்ய முடியாவிட்டலும் முடிந்த நாட்களில் ஸ்நானம் செய்யலாமே.

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •