• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

அதிசய அனுமார் சிலை

Status
Not open for further replies.
அதிசய அனுமார் சிலை

photo_hanuman-temple_karol-bagh_new-delhi@uwysvewg_74v9_1_300.jpg


ஆஞ்சனேயர் என்றும் அனுமார் என்றும் மாருதி என்றும் போற்றப்படும் பஜ்ரங்க பலி இந்தியா முழுதும் பிரபலமாகி வருகிறார். மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப அவ்வப்போது சில கடவுளர் பிரபலமாவது இந்துக்களுக்குப் புதிதல்ல. “கருத்து ஒன்றே, கடவுள் உருவங்கள் மாறு படலாம்—“ஏகம் சத், விப்ராஹா பஹுதா வதந்தி” என்று உலகின் பழமையான சமய நூல் ரிக் வேதம் கூறும்: “உண்மை ஒன்றே, அறிஞர்கள் பல்விதமாகப் பகர்வர்”- என்பது இதன் பொருள்.
மாநிலத்துக்கு மாநிலம் போட்டி போட்டுக் கொண்டு பெரிய பெரிய அனுமார் சிலைகளை நிறுவி வருகின்றன. 125 அடி முதல் 150 அடி வரை விண்ணைத் தொடும் வகையில் அனுமார்கள் ஆகாசத்துக்கும் பூமிக்கும் வளர்ந்து வருகிறார்கள்! புதிய காலம், புதிய அணுகுமுறை-- தவறே இல்லை. அதற்காக ஆகம முறைப்படி அமைந்த சுசீந்திரம் கோவில் 18 அடி உயர அனுமாரையும் நாமக்கல் ஆஞ்சநேயரையும் மறந்து விடக்கூடாது.


அனுமார் இந்தியாவின் ‘சூப்பர்மேன்’. ஆங்கிலத்தில் தற்காலத்தில் எழுந்த சித்திரப் படக் கதைப் புத்தகங்களில் (காமிக்ஸ்) வரும் சூப்பர்மேன், ஸ்பைடர்மேன், பேண்டம் ஆகிய அனைத்தையும் தோற்கடிக்கும் அத்தனை சாகசங்களையும் அனுமன் அன்றே செய்துவிட்டான் என்பதை சுந்தரகாண்டம் படிப்போர் அறிவர். அவன் ‘சொல்லின் செல்வன்’ மட்டும் அல்ல. அளப்பறிய அற்புதங்களைச் செய்தவன். உலகின் முதல் மூலிகை மருத்துவன் அவன். இமய மலைக்குச் சென்று சஞ்சீவீ மூலிகையைக் கொண்டு மாண்டோரை மீட்டவன் அவன்.
karolbagh.jpg


போரில் இறப்போர் சுவர்க்கம் புகுவர் என்பது புறநானூற்றிலும் உண்டு, ரிக்வேதத்திலும் ராமாயண, மஹாபாரத இதிஹாசங்களிலும் உண்டு. வேதத்திலும் சங்கத் தமிழ் பாடல்களிலும் வீர மாதா, வீர அன்னை பாடல்கள் இருப்பதை ஏற்கனவே எழுதிவிட்டேன். ஆக போரில் இறப்போர் வீரர்களே. ஆனால் இதைவிட பெரிய வீரம் புலன்களை வெல்லும் வீரம். “புலன் ஐந்தும் வென்றான் தன் வீரமே வீரம்”-- என்று அவ்வைப் பாட்டியும் புகழ்வார்.



மற்ற நாடுகளில் ஏ.கே-47 துப்பாக்கியால் அதிகம் பேரைச் சுட்டுக் கொல்வோரே வீரர்கள். இந்தியாவில் இதைவிடப் பெரிய “மஹா வீரர்கள்” உண்டு. புலனை வென்ற மஹாவீரர்கள் அவர்கள். ஆஞ்சநேயர் அவர்களில் ஒருவர். மற்றொருவர் சமண மத 24-ஆவது தீர்த்தங்கரர் மஹாவீரர். இப்படி விரல் விட்டு எண்ணக்கூடிய மஹாவீரர்கள் இந்தியாவில் இருந்திருக்கிறார்கள். ‘நிர்வாண சாமியார்களுடன் அலெக்ஸாண்டர்’ என்ற கட்டுரையில் மாமன்னரையே துச்சமாகத் ,துரும்பாக மதித்த சாமியார் பற்றி எழுதினேன். ஆக அனுமாருக்கு, மஹாவீரனுக்கு புதிய கோவில்கள் எழுப்பி நாட்டின் இளைஞர்களை பிரம்மச்சர்ய பாதையில் கொண்டு செல்வது நல்லதே. நாட்டின் தலை நகராம் டில்லியில் இப்படிப்படட் ஒரு கோவில் 108 அடி ஆஞ்சநேயருடன் உருவாகியுள்ளது.


டில்லி கரோல் பாக் பகுதியில் உள்ள ‘சங்கட மோக்ஷன் தாம்’ (கோவில்) ஒரு ஒப்பற்ற, நூதனமான அனுமார் கோவில் ஆகும். அதிபயங்கர டில்லிப் போக்குவரத்துக்கு இடையே, பறக்கும் மெட்ரோ ரயில் பாதை அருகே பிரம்ம்மாண்ட உருவத்தில் ஆரஞ்சு வண்ணத்தில் ஜொலிக்கும் இந்த அனுமாரை யாரும் மறைக்க முடியாது, மறக்கவும் முடியாது. இது 35 அடி அஸ்திவாரத்துடன் அமைந்த பெரிய அனுமன் சிலை. அனுமனின் மயிர்க்கால்கள் தோறும் ராம நாமம் கேட்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. சிரஞ்சீவியான அனுமன் இருதயத்திலே எப்போதும சீதா ராமன் குடி கொண்டிருக்கிறார்கள் என்பது நாம் அறிந்ததே. இதை உணர்த்தும் வண்ணம் வாரத்துக்கு இரண்டு முறை நெஞ்சைத் திறந்து காட்டுகிறார். எலெக்ட்ரானிக் முறையால் இயக்கப்படும் இந்த அதி நவீன ஆஞ்சநேயனைக் காண லட்சக்கணக்கானோர் கூடி நிற்பர்.


மக்களின் நம்பிக்கை அளவு கடந்தது. வட இந்திய மக்களுக்கு அனுமன், ஓர் சூப்பர்மேன் அல்ல, சூப்பர் கடவுளே. தினமும் வெல்லம், உளுந்து, எள், கடுகு எண்ணை, கருப்புத் துணி, இரும்புப் பொருட்கள், பூ, பழம் ஆகியன கொண்டு வருகின்றனர். சிலைக்குக் கீழே பிரம்மாண்டமான தண்ணீர்த் தொட்டி உள்ளது. வாரத்துக்கு இருமுறை அனுமன் நெஞ்சைத் திறக்க, ராமரும் சீதையும் வெளியே தோன்ற பக்தர்கள் ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் இடுகிறார்கள். ஒலிபெருக்கி மூலமும் ராம நாமம் ஒலிக்கிறது.

aptopix-india-hanuman-temple-2011-12-13-9-11-91.jpg


எனது முந்திய கட்டுரைகளையும் படித்து இன்புறுக:

1.நாமும் அனுமார் ஆகலாம், 2.ராமாயண வினா விடை, (3-9) ‘ராமாயணா ஒண்டர்ஸ்’ (ஆங்கிலத்தில் ஏழு பகுதிகள்)

(இதைப் பயன்படுத்துவோர் பிளாக் பெயரையோ கட்டுரையாளர் லண்டன் சுவாமிநாதன் பெயரையோ சேர்த்து வெளியிடுவது தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் செய்யும் மரியாதையாகும். படங்கள் என்னுடையவை அல்ல. நன்றி)
 
......... (இதைப் பயன்படுத்துவோர் பிளாக் பெயரையோ கட்டுரையாளர் லண்டன் சுவாமிநாதன் பெயரையோ சேர்த்து வெளியிடுவது தமிழுக்கும் தமிழ் எழுத்தாளர்களுக்கும் செய்யும் மரியாதையாகும். படங்கள் என்னுடையவை அல்ல. நன்றி)
தங்கள் ஆதங்கம் எனக்குப் புரிகிறது. ஆனால் தாங்கள் உபயோகிக்கும் படங்களுக்கு, வலைத் தளப் பெயரையோ

புகைப்படக்காரர் பெயரையோ குறிப்பிடாது இருப்பது ஏனோ?
தங்கள் நன்றி யாருக்கு? :noidea:
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top