Tamil Brahmins
Page 2250 of 2250 FirstFirst ... 1250175021502200224022462247224822492250
Results 22,491 to 22,496 of 22496

Thread: Think or sink!

 1. #22491
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  63,817
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  # 103. கூட்டணி.

  என்னை எதிர்ப்பவர்கள் எப்போதும்
  கூட்டு முயற்சியாகவே செய்வார்கள்.

  நரிகளுக்கும், ஓநாய்களுக்கும் பலம்
  அவற்றின் எண்ணிக்கையிலேயே!

  ஈயக் குண்டு எறியும் ஒரு போட்டி!
  அதை நடத்துபவரின் பெயரும் அதுவே!

  எல்லோர் பெயர்களை எழுதிக் கொண்டு,
  அவர்களுக்கு நம்பர்கள் அல்லாட் செய்தார்கள்.

  ஒவ்வொருவராக குண்டு எறிய வைத்து,
  அங்கே அவர்களின் நம்பரை வைத்தார்கள்.

  கடைசிப் பெண் எறிந்த உடனேயே
  பரிசு யாருக்கு என்ற ரிசல்ட் அறிவிப்பு!
  வீசிய நீளங்களை அளக்கவும் இல்லை!

  எந்த நம்பர் முதலிடம் என்று அளந்து பார்த்து,
  லிஸ்டில் அவர் யார் என்று பார்த்துச்
  சொல்ல வேண்டும் 'யார் வென்றவர்' என்று.

  கண்டக்டர் விடவில்லை! நானும் தான்!

  "பார்த்தாலே தெரிகின்றதே!" என்றார்.
  "பார்த்தல் நம்பர் தெரியும்! பெயர் கூடவா?"என

  வேறு வழி இல்லாமல் அளந்து பார்த்தால்
  முதலிடத்தில் என் நம்பர் உள்ளது!

  காற்றுப் போன பலூன் ஆகிவிட்டது
  கண்டக்டர் * * * * * * * முகம்!

  நான் போராடுவேன் என்று அவர்
  சற்றும் எதிர்பார்க்கவில்லை.

  "உங்களுக்குப் அவரைப் பிடித்திருந்தால்
  நீங்கள் பரிசை ஃப்ரீயாகக் கொடுங்கள்!

  போட்டி என்று வைத்தால் அதைப்
  பொறுப்பாகச் செய்யுங்கள்" என்றேன்!

  Projectiles படித்து விட்டு குண்டு வீசிய என்னை
  குண்டு Just like that ஓரம் கட்ட விடுவேனா?
 2. #22492
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  63,817
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  # 104. My Hindi teacher.

  நான் பள்ளியில் படிக்கும்போது
  ஹிந்தி ஒழிப்புப் போராட்டம்!

  ஹிந்தி வகுப்புகளிலும் கல் விழும்.
  ஹிந்தி ஆசிரியர் மீதும் கூட.

  ஹிந்தி டீச்சர் ஒரு திருமணம் ஆகாத மிஸ்.
  விதவைத் தாயார் அவருக்குத் துணை.

  பெட்டிக் கடை போன்ற சிறிய வீட்டில்
  மனநிறைவோடு வாழ்ந்து இருந்தனர்.

  சொற்பச் சம்பளம் கிடைக்கும்
  அந்த வேலையும் போனால்....?

  நல்லவேளை அவருக்கு ஆபீஸ்
  கிளெர்க் உத்தியோகம் கிடைத்தது!

  மண்டையை உடைத்துக் கொண்டு
  ஹிந்தி படித்தாலும், அவர்கள்
  மண்டை மீண்டும் உடையலாம்!

  யானை தான் தலையிலேயே
  மண்ணை வாரிப் போட்டுக் கொள்ளும்.

  தமிழனும் அதையே செய்கின்றான்.

  உலகின் எந்த மூலைக்குச்சென்றாலும்
  பிழைக்கும் தகுதியைப் பெறவேண்டாமா??

  குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டிக்
  கொண்டு இருந்தால் போதுமா???
 3. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 4. #22493
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  63,817
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  The blog on the compositions of my paternal grandfather is under construction now.

  https://haridasanarayanan.wordpress.com/

  As suggested by my dear sister Smt. Raji Ram, I am including the English Transliteration of the songs right below the Tamil songs.

  There are 133 songs all together. I with the help of my sister will post as many of them as possible. It is a miracle that the registers which my grandfather had used to write down his songs have not crumbled down during the past 50+ years!

  May be because he used the register meant for writing accounts. But the pages do not look very good when scanned due to the numerous lines running both horizontally and vertically!

  On second thoughts can there really be an unmixed blessing in Nature ???
 5. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 6. #22494
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  63,817
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  # 105. மிளகூட்டல் அபிஷேகம்!

  முன்பெல்லாம் இளவயதிலேயே
  திருமணம் ஆகிவிடும் பெண்களுக்கு!

  கருத்தடை கான்செப்டோ, வசதிகளோ
  இல்லாததால், ஃபெர்டிலிட்டி period
  முழுவதும் பெற்றுத் தள்ளுவார்கள்!

  அம்மாவுக்கும் பெண்ணுக்கும் வயது வித்தியாசம்
  15 ஆண்டுகள் இருந்தாலே மிகவும் அதிசயம்!

  அம்மாவும், பெண்ணும் போட்டி போட்டுக் கொண்டு
  பிரசவ வார்டு ஆக்கி விடுவார்கள் வீட்டையே!

  மாமாவுக்கும், மருமகனுக்கும் ஒரே வயது!
  சித்தப்பாவுக்கும், மகனுக்கும் ஒரே வயது!

  "டேய் மாமா போடா!" "டேய் சித்தப்பா வாடா!"
  எல்லாம் அன்று சர்வ சாதாரணம்.

  மருமகனும், மாமியாரும் சமயத்தில்
  சம வயதினராகவும் இருப்பது உண்டு !

  பயந்தாங்குள்ளி மனைவிடம் பேசுவதைவிட
  விவரம் அறிந்த மாமியாரிடம் பேசுவதை
  மருமகன்கள் விரும்பியும் இருக்கலாம்.

  அம்மாவின் மீதே பொறாமை கொண்ட ஒருத்தி
  கற்சட்டி மிளகூட்டளை அம்மா மீது ஊற்றினாளாம்!

  அந்த அம்மாவே என்னிடம் கூறியதால் நம்பினேன்!
  நல்ல காலம் உயிர்சேதம் இல்லை, Police உம் வரவில்லை!

  யார் யார் மீது எதற்குப் பொறாமைப் படுவது என்ற
  ஒரு வரைமுறை கொஞ்சமாவது வேண்டாமா???
 7. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 8. #22495
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  63,817
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  # 106. தவலை வடை.

  என் நெருங்கின தோழியின் வாழ்வில்
  நடந்த நிகழ்ச்சி உண்மை நிகழ்ச்சி இது !

  அவள் கணவர் அவளைக் "கிராமப்புறம்"
  என்று எப்போதும் கேலி செய்வாராம்.

  திருமணமான புதிதில் ஹோட்டல் விசிட்.
  வடை, ஸ்வீட், காபி ஆர்டர் செய்தார்கள்.

  "ஸ்பூனைக் கண்ணாலாவது பார்த்ததுண்டா?
  ஹோட்டலுக்குள் நுழைந்தது உண்டா?" என்று
  கேலி பேசிக்கொண்டிருந்தாராம் அவர்.

  வடை வந்தவுடன் ஜம்பமாக அவளிடம்,
  "பார் இப்படி எடுக்க வேண்டும்!" என்று காட்ட,
  தவலை வடை தவளை வடையாக மாறிவிட்டு

  அடுத்த டேபிள் ஆசாமியின் தட்டுக்குத் தாவ,
  அவன் அஞ்சி நடுங்கினான்!
  இவர் முகத்தில் ஈயாடவில்லையாம்.

  அன்றிலிருந்து கிராமத்துப் புறம்
  என்ற கேலிப் பேச்சு நின்றதாம்!
  தவலைக்கும், தவளைக்கும் நன்றி!
 9. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 10. #22496
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  63,817
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  The new limits set to laziness

  The remote assistant is expected

  1. switch ON/OFF the T.V

  2. connect someone on the phone

  3. reduce the volume/ brightness of the T.V.

  4. flush the toilet after use

  5. switch on the microwave

  6. switch on the Roomba

  7. make the shopping list

  8. read the notification

  9. tell the weather for the day

  10. tell the time of the day

  11. tell jokes/stories to kids

  12. play word game/ hide and seek with kids

  I may be unaware of some more uses of the remote assistant.

  Where is human race heading to????

  One obvious fact is that the remote assistant has assumed the role of real person - so very indispensable - that people greet her Good morning and good night in addition to thanking her for the tasks performed by her.

  Remember they never do these to a real human being helping them in more ways than the virtual Alexa!
 11. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •