Tamil Brahmins
Page 2237 of 2237 FirstFirst ... 1237173721372187222722332234223522362237
Results 22,361 to 22,365 of 22365

Thread: Think or sink!

 1. #22361
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  63,151
  Downloads
  0
  Uploads
  0
 2. #22362
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  63,151
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  48b. நாரைக்கு முக்தி

  48 (b). நாரைக்கு முக்தி

  சிவபக்தி பற்றி இழுத்தது நாரையை,
  தவநெறி நிறைந்த மதுரையம்பதிக்கு!


  “இனி எனக்கு இங்கென்ன வேலை?
  இனி நான் சேர வேண்டியது மதுரை!”


  சோர்வின்றிப் பறக்கலாயிற்று நாரை;
  சேர்ந்தது சென்று மதுரையம்பதியை!


  பொற்றாமரைக் குளத்தில் புனித நீராடி,
  சுற்றி வந்தது ஐயன் விமானத்தை வலம்!


  தொடர்ந்தன உபவாசம், வலம் வருதல்,
  தொடர்ந்து பதினைந்து நாட்களுக்கு அங்கு!


  பசி வந்திடப் பத்தும் பறந்து போம் அன்றோ?
  பசி மேலிட்டு விட்டது செங்கால் நாரைக்கு.


  புசிக்க விரும்பியது வண்ண மீன்களை;
  புசிக்கவில்லை அத்திருக்குள மீன்களை!


  சிவன் தோன்றினான் நாரையின் முன்னே!
  தினம் அது தியானித்த உருவத்திலேயே!


  “என்னருமை நாரையே கூறுவாய்!
  என்ன வரம் வேண்டும் உனக்கு?’ என,


  “சிவலோகப் பதவி வேண்டும் ஐயனே!
  இகலோகத்தில் எதுவும் வேண்டாம்!”


  “அங்ஙனமே ஆகுக! ” என்றான் ஐயன்.
  செங்கால் நாரையின் தாபம் தீர்ந்தது.


  “இன்னும் ஒரு வரம் வேண்டும் என் ஐயனே!”
  “என்னவாயினும் சொல் என் நாரையே!” என,


  “தண்ணருள் பெற்ற தீர்த்தத்தில் உள்ள,
  புண்ணிய மீன்கள் உண்ணப்படலாகாது!


  இல்லாமல் செய்வீர் குளத்தில் மீன்களை!
  பொல்லாத பறவைகள் தின்னாதவாறு!”


  அருளினான் அதையும் கருணாகரன்,
  அருளினான் நாரைக்குச் சாரூப்யம்!


  மூன்று கண்களும், நான்கு தோள்களும்
  தோன்றின நாரையின் திருமேனியில்!


  வெண்ணீற்று மேனி, வரிப் புலித்தோல்,
  அண்ணலின் உருவம் பெற்றது நாரையும்!


  அற்புத விமானம் வந்து இறங்கியது!
  கற்பகலோகம் சென்றது நாரை சிவன்!


  கூடற்காண்டம் முற்றுப் பெற்றது.


  வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.

 3. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 4. #22363
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  63,151
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  #175. உருவமும், அருவமும்.

  எங்கும் நிறைந்த இறைவன் எவனோ அவன்
  எந்த உருவமோ அன்றி உடலோ இல்லாதவன்;

  எங்கும் நிறைந்த அவனை வெறும் அருவமாக
  எண்ணிப் பார்ப்பதும் வெகு கடினமே ஆகும்.

  ஐம்பொறிகள் வழியே அனைத்தையும்,
  ஐயம் திரிபற அறிந்து கொள்ளும் நாம்,

  ஐயம் பொறிகளின் உதவி சற்றும் இன்றி
  ஐயனையும் கூட அறிந்துவிட முடியாது.

  உருவ வழிபாடு தோன்றியது இந்த
  ஒரு காரணத்திற்காகவே அறிவோம்;


  அருமை பெருமைகள் அனைத்தையும்
  ஒருங்கே பெற்ற ஒரு அழகிய வடிவு!

  நினைக்கும்போதே மனம் நிறைந்து
  நனைக்கும் கண்ணீர்த் துளிகள் வழிந்து;

  இனிக்கும் அந்த உருவத்திடம் மயங்கி
  மனத்தை பறி கொடாதார் யாரோ?

  உருவ வழிபாட்டை மறுக்கும் மதமும்
  உருவங்களின் துணையையே நாடும்;

  இறைவனின் தூதனாகவோ, அல்லது
  இறைவனின் சிறந்த குழந்தையாகவோ.

  வெற்றிடத்தின் மீது மனத்தைப் பதித்து,
  வெகு நேரம் தியானம் செய்வது கடினம்;

  உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் அழகில்
  உள்ளத்தைத் தொலைத்துவிடலாம் எளிதாக!

  மந்திரம், தந்திரம், யந்திரம் என்கின்ற
  மூன்றுமே பலன் அளிக்கும் ஒருபோலவே;

  சுந்தர ரூபம் தரும் இன்பத்தை வேறு
  எந்த ரூபமுமே தர இயலாது அல்லவா?

  வாழ்க வளமுடன்,
  விசாலாக்ஷி ரமணி.

  Please use the link for the English translation

  https://wordpress.com/view/vannamaalai.wordpress.com
 5. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 6. #22364
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  63,151
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  A watchmaker MUST be smarter than the watch he has made!

  I do not encourage 'a watch' doubting and discussing the intelligence of its 'maker'!
 7. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 8. #22365
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  63,151
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  "Koovi azhaiththaal kural koduppaan!"


  #032. உன் அண்ணன்

  உருவமும், அருவமும் ஆக விளங்கும்
  கருநிறக் கண்ணன், கார்மேக வண்ணன்;
  வருவான் அவனை விரும்பி அழைத்தால்,

  சிறுவன் ஜடிலனின் கதை இதை உணர்த்துமே!

  பண்டைய நாட்களில் பள்ளிகள் குறைவு;
  எண்ணிவிடலாம் ஒரு கை விரல்களால்!
  படிப்பதென்றால் பல காத தூரம் தனியே
  நடந்து சென்றிட வேண்டும் மாணவர்கள்.

  காட்டு வழியே தன்னந் தனியே தினம்,
  காட்டு விலங்குகளின் பீதியில் செல்லும்,
  சிறுவன் ஜடிலன் தன் ஏழைத் தாயிடம்,
  மறுகியவாறே ஒருநாள் உரைத்தான்,

  கள்ளிக் காட்டைக் கண்டாலே அச்சம்.
  பள்ளி செல்லவோ மிகவும் விருப்பம்.
  எனக்குத் துணையாக யார் வருவார்கள்?
  எனக்கு ஒரு பதில் கூறுங்கள் அம்மா!

  கண்ணன் இருக்கும் போது நமக்கு
  என்ன பயம் சொல், என் கண்ணே என்ற
  தாயிடம் கேட்டான் யார் அந்தக் கண்ணன்?
  தாய் சொன்னாள், அவன் உன் அண்ணன்.

  பாதி வழியில் சிம்ம கர்ச்சனை கேட்டு,
  பீதியில் உறைந்த சிறுவன் ஜடிலன்,
  கண்ணா! கண்ணா! உடனே வா! என்
  அண்ணா! அண்ணா! என்று ஓலமிட,

  மனத்தை மயக்கும் மோகனச் சிரிப்புடன்,
  முன்னே வந்து நின்ற அழகிய சிறுவன்,
  வா தம்பி! நாம் பள்ளிக்கு போவோம் என
  வழி காட்டி நடந்தான் ஜடிலன் முன்னே.


  பள்ளியை அடைந்ததும் தம்பி ஜடிலனிடம்,
  பள்ளி விட்டதும் கூப்பிடு, வருவேன் எனப்
  பகர்ந்து மறைந்தவன் யார் என்பதை அந்தப்
  பாலகன் அறியான்! நாம் அறிவோமே!

  வாழ்க வளமுடன்,
  விசாலாக்ஷி ரமணி

 9. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •