Tamil Brahmins
Page 2198 of 2198 FirstFirst ... 1198169820982148218821942195219621972198
Results 21,971 to 21,979 of 21979

Thread: Think or sink!

  1. #21971
    Join Date
    Sep 2010
    Location
    Coimbatore, India
    Posts
    61,468
    Downloads
    0
    Uploads
    0

    0 Not allowed!
    Mouth:
    In a man.. the gateway to his soul.
    In a woman.. the outlet of her heart.

    Mind:
    A man who never alters his opinions is like
    the stagnant water breeding reptiles of the mind.
  2. #21972
    Join Date
    Sep 2010
    Location
    Coimbatore, India
    Posts
    61,468
    Downloads
    0
    Uploads
    0

    0 Not allowed!
    (Applicable to those who have not extinguished
    the little spark in them called Conscience)

    An action - which does not make you feel guilty or bad

    after you do it - is moral.

    An action - which makes you feel guilty and bad
    after you do it - is immoral.
  3. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
    If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
  4. #21973
    Join Date
    Sep 2010
    Location
    Coimbatore, India
    Posts
    61,468
    Downloads
    0
    Uploads
    0

    0 Not allowed!
    Due to some weird reason I am unable to post in my Poems thread.

    I will give the links of today's poems here. Hope for a better luck tomorrow!

    https://bhagavathybhaagavatam9.wordp...%B5%E0%AE%BF1/
  5. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
    If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
  6. #21974
    Join Date
    Sep 2010
    Location
    Coimbatore, India
    Posts
    61,468
    Downloads
    0
    Uploads
    0

    0 Not allowed!
    Since Periya PurANam is not blogged yet I am forced to give
    the poem itself along with its translation in this thread!

    #6s. மீண்டும் திருவாரூர்

    அடைந்தார் திருவாரூர் எல்லையைச் சுந்தரர்;
    நுழைந்தார் திருவாரூரில் பொழுது சாயும் போது.

    பதிகங்கள் பாடினார்; பார்வையை வேண்டினார்;
    மதியணி வேணியன் மனம் கனிந்தான்; தந்தான்;

    'துரோகம் செய்துவிட்டேன் பரவையாருக்கு' எனத்
    தங்கிவிட்டார் தேவாசிரிய மண்டபத்திலேயே அன்று.

    துவண்டாள் சுந்தரரைப் பிரிந்த பின்பு பரவையார்;
    துன்புற்றாள் அனல் மேல் இட்ட புழுவைப் போன்றே.

    இரவு பகல் போல் ஆனது; பகல் இரவு போல் ஆனது ;
    இல்லாமல் போய்விட்டன மனஅமைதியும் ஆனந்தமும்.

    வந்தது ஒரு செய்தி ஒரு நாள்; தாக்கி விட்டது அவளை;
    சுந்தரர் மணந்து கொண்டார் சங்கிலியாரை என்பது

    வேதனை மேலிட்டது ; நெஞ்சில் மண்டியது சினம்;
    "தேவை தானா எனக்கு இப்படி ஒரு நிலைமை? "

    மாறிவிட்டாள் ஒரு சிறகொடிந்த சிறு பறவையாக!
    மாறினாள் பற்றுக்கோல் அற்ற முல்லைக்கொடியாக!

    பயனின்றிப் பாலைவனத்தில் காயும் நிலவு ஆனாள்;
    பாய் மரம் இல்லாத ஒரு படகு போலப் பரிதவித்தாள்.

    அஞ்சினார் சுந்தரர் பரவையாரிடம் மீண்டும் செல்ல;
    அனுப்பினார் ஏவலரைத் தம் வருகையைத் தெரிவிக்க.

    பார்க்க இயலவில்லை பரவையாரை ஏவலர்கள்;
    பாங்கிகள் விரட்டி விட்டனர்; கதவை அடைத்தனர்;

    சித்தம் தடுமாறினார் சுந்தரர் இதைக் கேட்ட பின்னர்;
    'இத்தனை சினம் இருந்தால் அங்கு செல்வதெப்படி?'

    அடுத்து அனுப்பினார் திறமை வாய்ந்த மாதர்களை;
    தடுக்க முடியவில்லை தோழிகளால் அம்மாதர்களை;

    அறிவுரைகள் பல எடுத்துக் கூறினார் மாதர் - ஆனால்
    அறிவுரைகளுக்குச் செவி மடுக்கவில்லை பரவையார்.

    "என்னை மறந்தார் ; வேறு பெண்ணை மணந்தார்;
    ஏற்க முடியாது அவரை மீண்டும் ஒருமுறை என்னால்;

    புண்படுத்தாமல் சென்று விடுங்கள் என் மனத்தை;
    பெண் பட்ட பாடு பெண்ணுக்குத் தெரியாதா? " என

    திரும்பிச் சென்றனர் மாதர்கள் அனுப்பியவரிடமே;
    திருபக் கூறினார் நடந்த நிகழ்வுகளை எல்லாம்

    வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

    #6s. Back in ThiruvAroor

    Sundarar reached ThiruvAroor one day when the dusk fell. He prayed to Siva and begged to restore his eye sight. Lord Siva took pity and Sundarar got back his eye sight.

    He felt guilty of having deserted ParavaiyAr and did not have the courage to meet her in person. So he stayed in the MaNdapam attached to the temple.

    ParavaiyAr suffered a lot after Sundarar deserted her all of a sudden. She could not sleep at night nor do her chores in the day time. She lost her mirth, joy, happiness and peace of mind completely.

    One day a shocking news came to her that Sundarar had married ChangiliyAr at ThiruvOtriyoor. She felt deeply hurt and terribly angry. Surely she did not deserve this fate! She felt as helpless as a bird with broken wings; a creeper without a supporting pole, a cool moon wasting its rays in a dry desert and a boat floating without any sails.

    Sundarar sent his attendants to convey the message that he had arrived in ThiruvAroor to ParavaiyAr. But the friends and maidservants of ParavaiyAr did not allow those servants to meet their mistress. Those attendants went back and conveyed their failure even to meet the lady.

    Sundarar got scared more at the intensity of anger in ParavaiyAr. He sent some experienced and wise women this time to argue his case. The maids could not stop these ladies from meeting Paravaiyar.

    These women advised her freely and at great length. ParavaiyAr turned a deaf ear to all their justifications. She flatly refused to forgive Sundarar or to meet him ever again.

    These women also failed in their mission miserably and went back to report to Sundarar.
    Last edited by Visalakshi Ramani; Yesterday at 10:24 AM.
  7. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
    If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
  8. #21975
    Join Date
    Sep 2010
    Location
    Coimbatore, India
    Posts
    61,468
    Downloads
    0
    Uploads
    0

    0 Not allowed!
    I am unable to post my poems today also.
    Here is the link for today's poem from Bhagavathy Bhaagavatam - skanda 9
    https://bhagavathybhaagavatam9.wordp...E%B3%E0%AF%8D/
  9. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
    If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
  10. #21976
    Join Date
    Sep 2010
    Location
    Coimbatore, India
    Posts
    61,468
    Downloads
    0
    Uploads
    0

    0 Not allowed!
    SEkkizhArin Periya PurANam

    #6t . சிவன் தூதுவன் ஆனான்

    உறக்கம் பிடிக்கவில்லை சுந்தரருக்கு - ஆனால்
    உறங்கி கொண்டிருந்தனர் அவர் தொண்டர்கள்.

    'முறையிடலாம் மனக்குறையை இறைவனிடம்' என
    முறையிட்டார் தன் மனக்குறையை இறைவனிடம்.

    எழுந்தருளினார் பேரொளிப் பிழம்பாகப் பெருமான்;
    "விழைவது என்ன? என்னை அழைத்தது எதற்கு?" என

    "ஊடல் கொண்டாள் பரவையார் சினம் அடைந்து!
    ஊடலைப் போக்கிடச் செல்வீர் அவளிடம் ஒரு தூது!"

    புறப்பட்டார் பரவையார் மாளிகைக்குச் சிவபிரான்;
    மாறியது திருவாரூர் சிலலோகம் போல அப்போது!

    பின் தொடர்ந்தனர் அவரை அமரர், சிவகணங்கள்;
    பிற முனிவர்கள், நந்தி தேவன், மற்றும் குபேரன்.

    பின் தொடர்ந்தன மணி ஒளி வீசும் பல நாகங்களும் ;
    பின் தொடர்ந்தன மலர்த்தேன் பருகும் வண்டுகளும்:

    தங்குமாறு ஆணை இட்டார் அனைவரையும் வெளியே;
    தான் நுழைந்தார் மாளிகையுள் அர்ச்சகர் கோலத்தில்.

    "திறவாய் கதவைப் பரவையே!" என்றார் அர்ச்சகர் சிவன்.
    உறங்காமல் விழித்திருந்த பரவை எழுந்தாள் உடனேயே.

    விரைந்து வந்து திறந்தாள் மாளிகையின் கதவை - " இவர்
    வரவேண்டிய காரணம் என்ன இங்கே இந்த வேளையில்?"

    "இழைத்து விட்டான் பெரும் பிழையை உன் கணவன் - தன்
    பிழைக்கு வருந்தித் தவிக்கிறான் உன் பிரிவாற்றாமையால்!

    இணைந்து வாழவேண்டும் நீங்கள் இருவரும் முன்போலவே;
    இசைந்து அனுமதிக்க வேண்டும் அவன் இங்கு வருவதற்கு!"

    "சிவத் தலங்களைத் தரிசிக்கச் சென்றவர் செய்தது என்ன?
    சிந்திக்கவில்லை எதைப்பற்றியும்! மணந்தார் சங்கிலியாரை!

    எந்தத் தொடர்பும் இல்லை எனக்கு அவருடன் இனிமேல்!
    எந்த முயற்சியும் பலன் தராது! என் மனம் மரத்து விட்டது!"

    எத்தனை முறை எடுத்துக் கூறினாலும் மாறவில்லை மனம்;
    'இத்தனை உறுதியா இந்தப் பெண்ணிடம்?" என்று வியந்தார்!

    வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

    #6t. Lord Siva becomes a messenger

    Sleep eluded Sundarar on that night but all his disciples were fast asleep. He decided to share his sorrows with Siva. Lord Siva appeared as brilliant light and demanded to know what Sundarar wanted from Him?

    Sundarar said,"Paravai is very angry with me and I can't stand her separation any longer. Please go to her as my messenger to make her forget her anger and accept me once again."

    Siva left for the house of Paravai and the ThiruvAroor resembled Sivalokam at that time. The Devas, the Siva gaNas, the rushis, Nandhi Devan and Kuberan all followed Siva. Huge serpents followed flashing the brilliant light of their gems. Buzzing bees also followed the unusual procession.

    Siva ordered everyone to stay outside the house. He wished to enter all by himself disguised as the priest of the temple. Siva knocked the door and called out the name of Paravai in the voice of the priest.

    Paravai was also tossing in the bed unable to fall asleep. She rushed to the door and opened it. She could not stop wondering what had made the priest visit her house so late at night!

    The priest spoke to her thus, "Your husband had committed a grave mistake no doubt. But now he repents for the mistake. He wants to be forgiven by you and be accepted by you. Take pity on him. You two must continue to live a long and happy life as before."

    Paravai could not contain her anger and said, "He went on a pilgrimage. He forgot me and married another woman in ThiruVOtriyoor. I can never forgive him. I have no intention of living with him. However hard you may try, I will not change my mind."

    Siva in the guise of the priest could not help wondering at the firm determination in Paravai.

  11. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
    If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
  12. #21977
    Join Date
    Sep 2010
    Location
    Coimbatore, India
    Posts
    61,468
    Downloads
    0
    Uploads
    0

    0 Not allowed!
    malarum niaivugaL...

    சவாலுக்குச் சவால்!

    எங்கள் நடன நிகழ்ச்சியில் முக்கியமானது
    என்றும் தசாவதாரமும், ராமாயணமும்;

    ஜெயதேவரின் தசாவதாரப் பாடலும் மற்றும்
    'பாவயாமி ரகுராம'மும் இல்லாமல் முடியாது.

    எல்லோருக்குமே அந்த நடனங்கள் தெரிந்தாலும்
    எல்லோரும் சம வாய்ப்பளிக்க சுழற்சி முறையே!

    ராம நவமி அன்று 1989 இல் சிறப்பு நிகழ்ச்சி!
    ராமாயண நாட்டியம் வேண்டும் எனக் கோரிக்கை!

    அன்றைக்கென்று மாறிவிட்டாள், நிகழ்ச்சியில்
    ஆட இருந்த பெண், ஒரு கிஷ்கிந்தை வாசியாக!

    தவறைச் சுட்டிக்காட்டினால் திருத்திக் கொள்ளாமல்,
    தாய், தந்தையுடன் வந்து என்னிடம் மல்லுக்கு நின்றாள்!

    " என் பெண் ஆட மாட்டாள்! என்ன செய்யப் போகின்றீர்கள்?
    எப்படி நடக்கும் நிகழ்ச்சி என்று நானும் பார்க்கின்றேன்!"

    " நன்றாக நடக்கும் நாளைய நாட்டிய நிகழ்ச்சி!
    நானே ஆடப் போகின்றேன் ராமாயணப் பாடலுக்கு!"

    சொல்லும் போது என்னுடைய வயது ~ நாற்பது நான்கு!
    சொன்னதுடன் நிற்கவில்லை ஆடவும் செய்தேன் மேடையில்!

    எனக்கு rehearsal தேவையில்லை என்ற போதிலும்,
    எனக்குப் பாடிய வீணை மாஸ்டருக்குத் தேவைப்பட்டது!

    குறித்துக் கொடுத்துவிட்டேன் அவர் புத்தகத்திலேயே
    நிறுத்த வேண்டிய இடங்களும், பாடவேண்டிய முறைகளும்!

    எனக்குப் பிடித்த சொற்றொடர் "சவாலுக்கு சவால்"!
    என்னை நேரில் பார்க்க வெட்கி அவள் எதிர்ப்படவே இல்லை!

    வீணாக வம்பை விலைக்கு வாங்கியதன் பலன்
    வீணாயிற்று அவள் நடன வகுப்பும், பயிற்சியும்!
  13. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
    If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
  14. #21978
    Join Date
    Sep 2010
    Location
    Coimbatore, India
    Posts
    61,468
    Downloads
    0
    Uploads
    0

    0 Not allowed!
    malarum ninaivugaL....

    மியூசிக் மாஸ்டர் மாசாணன்.


    எங்கிருந்து வந்தார் ஆனைமலைக்கு?
    எப்படி வந்து சேர்ந்தார் தாத்தாவிடம்?
    எதுவும் எனக்கு நினைவில் இல்லை!
    அதுவும் நன்மைக்கே என எண்ணுவோம்!

    தாத்தாவில் மாணவனாகக் கற்றவர்,
    தானே குருவானார் எங்கள் மூவருக்கும்!
    கோபமே வராது குறும்பு செய்தாலும்,
    பாவம் நல்ல இசைஆசிரியர் தான் அவர்!

    என்னையும், தங்கை ராஜி ராமையும்,
    எழுத வைத்தார் Technical Examinations!
    நாலரை மணிக்குத் தானாக எழுந்து
    ராந்தல் விளக்கில் தியரி படிப்பேன்!

    அப்பா எழுந்து வரும்போதே கேட்பார்,
    "கண்களை ஏன் கெடுத்துக்கொள்கிறாய்?"
    அப்பாவிடம் சொல்லுவேன் தினமும்,
    "கரண்ட்டை வீணாக்க வேண்டாமே" என்று!

    ஒன்பதாம் வகுப்பில் லோயர் எழுதினேன்,
    பத்தாம் வகுப்பில் ஹையர் எழுதினேன்;
    புகுமுக வகுப்பின் ஆண்டு விடுமுறையில்
    புனிதமான Teachers' training முடித்தேன்!

    பிறகு சில ஆண்டுகள் தொடர்பில்லை
    சிறந்த சங்கீதத்துடன் சிறிதளவு கூட!
    எட்டு வருடங்கள் ஹாஸ்டலில் தங்கி,
    வீட்டுக்கு வந்தபின் தொடர்ந்தது அது!

    இசைக்கும், இறைக்கும் மிக நெருங்கிய
    இசைந்த தொடர்பு உள்ளது உண்மையே!
    இசையின் மூலம் இறையைப் பிடிக்கலாம்!
    இசைக்கு மயங்காதவர் என்று யாருள்ளார்?

    வீணையைக் கற்றேன் யுவ குருவிடம்!
    வீணை டீச்சர் எனக்கு ராஜி ராம் தான்!
    இரண்டு ஆண்டுகளில் நிறையக் கிருதிகள்;
    பிறகு சென்றுவிட்டார் சிங்காரச்சென்னைக்கு.

    கற்றது மறவாமல் இருக்க விரும்பி,
    மற்றவர்க்கும் அதைக் கற்பித்தேன்.
    வாய்ப்பாட்டு படித்ததால் எளிதாகவே
    வாசிக்க முடிந்தது தெரிந்த பாடல்களை!

    பெரியமகன் வீணை கற்றுக் கொண்டான்;
    சிறிய மகன் மண்டலின் கற்கின்றான்;
    குட்டிப் பேரனுக்கு இசை இருந்தால் போதும்
    பட்டுக் குழந்தையாகவே மாறிவிடுவான்!

    குட்டிப் பேத்தி மட்டும் என்ன குறைச்சலா?
    குழந்தைக் குரலில் பாடிக்கொண்டே இருப்பாள்;
    இசையோடு இசைந்த வாழ்வே நல்ல வாழ்வு!
    இசை இல்லாத வாழ்வு மிகவும் தாழ்வே!

    இசையை அறிமுகம் செய்த தாத்தாவுக்கும்,
    இசையைக் கற்பித்த ஆசிரியர் மாசாணனுக்கும்.
    வீணையை வாழ்வில் இணைத்த ராஜி ராமுக்கும்,
    வீணை அரசி கலைவாணியின் ஆசிகள் உண்டு!

  15. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
    If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
  16. #21979
    Join Date
    Sep 2010
    Location
    Coimbatore, India
    Posts
    61,468
    Downloads
    0
    Uploads
    0

    0 Not allowed!
    இது எப்படி இருக்கு?

    இயர் போனில் பாட்டு கேட்கும்
    பால் வியாபாரி. காது கேட்காது!

    நெடு நெடு உயரம்; பரபர ஓட்டம்;
    எப்படி இவனிடம் எக்ஸ்ட்ரா பால்
    கேட்டு வாங்க முடியும்???

    ஒலிம்பிக் சாம்பியன் ஆக இருந்தால்
    ஒரு வேளை துரத்திப் பிடித்து வாங்கலாம்!!!


    இது எப்படி இருக்கு?
    நல்ல நாளில் வேண்டுமாம் air டிக்கெட்.
    நல்ல விலையில் வேண்டுமாம் டிக்கெட்.

    மூன்று மாதம் முன்னால் கேட்டால்
    ஒரு வேளை அது கிடைத்திருக்கும்!

    ஒரு மாதம் முன்பு கேட்டால்

    இரு மடங்கு சார்ஜ் ஆகாதோ???

  17. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
    If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •