• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

என்றென்றும் அன்புடன் - thodarkathai - anamika -

Status
Not open for further replies.

anamika

Active member
என்றென்றும் அன்புடன் - thodarkathai - anamika -

என்றென்றும் அன்புடன்
*********************************

அத்தியாயம் - 1
*********************

உச்சிப் பிள்ளையார் அரசாளும் திருச்சி.

காலை எட்டேகால் மணி.

பொன்விழாக் கண்ட ஜே.எம். கல்லூரி; பொன்விழா நினைவாக அமைக்கப்பட்ட நுழைவாயில் வழியாக அதோ நிதிலா வந்து கொண்டிருக்கிறாள்.

இருபுறமும் மரங்கள் அணிவகுத்து அவளை வரவேற்க, தென்றல் மெல்ல தடவிச் சென்றது. முதல் நாள் மலர்ந்த பன்னீர் புஷ்பங்கள் சுவாசத்தை நிரப்பி, நெஞ்சத்தை இனிக்கச் செய்தன. இந்த இனிமையான அனுபவம் பெறவும், அலுவலக நேரத்தில் பேருந்தில் வரும் 'இடிமன்னர்கள்' தொல்லையைத் தவிர்க்கவும் சற்று முன்னதாகவே கல்லூரிக்கு வருவது நிதிலாவின் பழக்கம்.

'இன்றோடு இது கடைசி' என்று நினைத்தபோது, மனதின் மூலையில் லேசாய் ஒரு சோகமேகம் எட்டிப் பார்த்தது. ஆம்! இரண்டு வருட பட்ட மேற்படிப்புத் தேர்வுகள் முடிந்து, இன்று பிரிவுபசார விழா! அவர்கள் வகுப்பில் அனைவரும் இன்று தான் கடைசியாய் சந்தித்துக் கொள்ளப் போகிறார்கள்!!

நிதிலா மெல்ல வகுப்பறைக்குள் நுழைந்தாள். அங்கே கரும்பலகையில் ஒரு கோவிலின் மணிமண்டபம் உருவாகிக் கொண்டிருந்தது. அவள் வந்தது கூடத் தெரியாமல் வாசலுக்கு முதுகைக் காட்டியபடி தன்னை மறந்து படம் வரைந்து கொண்டிருந்தான் திலீப்!

கோவிலில் மணிமண்டபம்; அதை ஒட்டியபடி அழகான நீராழி மண்டபம்; அலை அலையான நீர்நிலையில் நீந்தும் இரு அன்னபட்சிகள்; மண்டபத்தில் சிற்பங்கள் வரைந்து கொண்டிருந்தான்.

நிதிலா சப்தம் செய்யாமல் எதிர்ப்புறம் இருந்த ஜன்னலை நோக்கிச் சென்றாள். வேப்பமரக் காற்றும், குயில் ஓசையும் தாலாட்ட, அங்கிருந்தபடி திலீப் வரைவதைப் பார்த்து வியந்து கொண்டிருந்தாள்.

யாரோ தன்னையே பார்ப்பது போலத் தோன்ற, திலீப் திரும்பினான். அவன் திரும்பிய மறுநொடி நிதிலா திரும்பி ஜன்னல் வழியே வெளியே பார்க்கத் தொடங்கினாள். திலீப் மனதுக்குள் ஆச்சர்யம்!

"நிதிலா! எப்போது வந்தாள்?" என்று.

கண்கள் அவளைப் பார்த்துக் கொண்டே இருக்க, மனது "இது தான் சமயம்; இதை நழுவ விடாதே" என உந்தியது. மேஜை மேல் இருந்த தன் டைரியின் உறையைப் பிரித்து அந்த வாழ்த்து மடலை எடுத்தான். நேற்று இரவு கண்விழித்து அவனே வரைந்து தயாரித்த மடல்; இரண்டு ரோஜா மலர்களை ஒரு இதயம் இணைத்துக் கொண்டிருந்தது. ஒரு முறை பிரித்துப் பார்த்தவன் மறுபடி உறையில் இட்டு, நிதிலா அருகில் சென்று,

"குட்மார்னிங்!" என்றான்.

திரும்பிப் பார்த்த நிதிலாவுக்கு ஆச்சரியம்! அவள் கல்லூரியில் சேர்ந்த இந்த இரண்டு வருடங்களில் முதன் முதலாக இன்று தான் அவளிடம் பேசியிருக்கிறான்! பிரமிப்பு மாறாதவளாய், பதிலுக்கு 'குட்மார்னிங்' என்றாள்.

"எல்லார் கிட்டயும் ஆட்டோகிராஃப் வாங்கிட்டீங்க போலிருக்கு"

திலீப் கேட்க, "ஆமாம்" என்று சொல்லி முடிப்பதற்குள், இன்னும் அவனிடம் வாங்காதது நினைவுக்கு வந்தது.

"உங்க கிட்ட தான் இன்னும் வாங்க்லே"

"இந்தாங்க என்னோட ஆட்டோகிராஃப்" என்றபடி திலீப் கவரை அவளிடம் கொடுத்தான்.

"என்ன கவர் இது?"

நிதிலா புரியாமல் ஒரு நொடி விழித்து, பிறகு கவரைப் பிரித்தாள்.

அழகான படம்; ரோஜாக்களை இணைக்கும் இதயம்!

நிதிலாவுக்கு படபடப்பு கூடியது; உள்ளே பிரிக்க, முத்தான கையெழுத்தில் கவிதை!

"என் மனதில் நீயிருந்து
எப்போதும் சிரிக்கின்றாய்!
உன்னோடு கரம் இணைக்க
உரிமை எனக்குத் தருவாயா?"

என்றும் அன்புடன்,
நெஞ்சில் உன் நினைவுடன்,
திலீப்.

அப்படியானால்...அப்படியானால்....திலீப் என்னை விரும்புகிறானா? ஓ, கடவுளே! நிதிலாவின் மனது படபடத்தது. நிதிலாவின் முகம் நோக்கி திலீப் காத்திருக்க, அவளுக்கோ தன் நிலையை விளக்க முடியாத சூழ்நிலை! எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் நிறைந்த திலீப்பின் விழிகளை அவளால் சந்திக்க் முடியவில்லை; வார்த்தைகளை கவனமாய் தேர்ந்தெடுத்து,

"சாயந்தரம் நர்மதா வீட்டுக்கு வாங்க; ப்ளீஸ், எதுவானாலும் அங்கே பேசிக்கலாம்" என்றாள்.

வெளியே மாணவர்களின் பேச்சுக்கள் கேட்க ஆரம்பித்து விட, திலீப் தலையாட்டி விட்டு அவசரமாய் மறுபடி படம் வரைய சென்றான்.

நடந்த நிகழ்ச்சிகளை நிதிலாவால் நம்ப முடியவில்லை; ஆனால் கையில் வைத்திருந்த வாழ்த்துமடல் நடந்தவற்றுக்கு சாட்சியாய் சிரித்தது. அவசரமாய் தன் கைப்பையில் அதை மறைத்தாள். அன்றைய நிகழ்ச்சி எதிலுமே அவளால் மனமொன்றி ரசிக்க முடியவில்லை.

நிதிலாவின் தவிப்பை கவனித்து உணர்ந்த நர்மதா விவரத்தைக் கேட்க, அவளிடம் மட்டும் நடந்ததைக் கூறினாள்.

திலீப் நிலையோ வேறு; அவனைப் பொறுத்தவரை பாரத்தை இறக்கியாகி விட்டது; எதிர்மறையான பதில் இல்லாததால் வெற்றி நிச்சயம் என தனக்குள் சொல்லிக் கொண்டான். உற்சாகம் கரைபுரண்டது.

அவன் வரைந்திருந்த படத்துக்கு பாராட்டுக்கள் குவிந்தன. மெல்ல கலைநிகழ்ச்சிகள் களை கட்டத் துவங்கின. திலீப் பாடாமல் எந்த ஒரு நிகழ்ச்சியும் நடந்தது இல்லை. எல்லாரும் அவனை பாட அழைத்தனர்.

இனிமையான குரல்வளம்; கேட்பாரை உருக வைக்கும் பாவம்; முறையாக கர்நாடக சங்கீதம் பயின்ற ஞானம் - அத்தனையும் நிறைந்த அருமையான பாடல் திலீப்பினுடையது.

திலீப் பாட வந்ததுமே அரங்கில் முழு அமைதி; முதலில் "மஹா கணபதிம்..." பாடினான்; பாடல் முடிந்ததும், கைதட்டல் அதிர்ந்தது. அடுத்த பாடலுக்காக அனைவரும் ஆவலோடு காத்திருந்தனர்.

கூட்டம் முழுதும் சுற்றிய அவன் விழிகள், நிதிலாவைக் கண்டதும் ஒரு நொடி நின்றது; அடுத்த நொடி பாடல் ஆரம்பித்தது.

"என்னைத் தாலாட்ட வருவாளா?
நெஞ்சில் பூமஞ்சம் தருவாளா?

............கண்ணுக்கு இமையாக இருக்கின்றாள்;
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள் "

தன்னை மறந்த லயிப்புடன் திலீப் பாடிக் கொண்டிருக்க, நிதிலா சுற்றிலும் ஒரு முறை பார்த்தாள். அனைவரும் சொக்கிப் போய் பாடலை ரசித்துக் கொண்டிருக்க, அதற்கு உரியவளோ அதை ரசிக்கமுடியாத மனநிலையில் தவித்தாள்; இந்த அன்பை, இந்தக் குரலில் பிரதிபலிக்கும், கேட்பாரை உருக வைக்கும் காதலை நான் மறுக்கப் போகிறேனே? அது தெரிந்தால், அவன் மனது எப்படி வேதனைப்படும்? என்று எண்ணிய நிதிலா தனக்குள் வருந்தினாள்.

(தொடரும்.....)
 
Right time to start a new story! You know why, Anamika?

Kunjuppu Sir is back after a short break. :)
 
பெயரிலாதவளே,(அனாமிகாவின்) உங்கள் தொடர்கதையின் ஆரம்பமே நன்றாக..இருக்கிறது. அடுத்த அத்தியாயத்துக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.
Cheers...
 
நினைக்க தெரிந்த மனமே..உனக்கு

மறக்கத் தெரியாதா...?

பழகத் தெறிந்த உயிரே..உனக்கு

விலகத் தெரியாதா...?

இது நிதிலவின் பாடலோ...?

Tvk

தொடர் கதையாய் தொடங்கின நிதிலா ..

தொடர்வதற்கு மனதில்லா நிலாவானதின்...

தொடரும் 'மர்மம்' என்னவோ..?

Tvk
 
தொடர் கதையாய் தொடங்கின நிதிலா ..

தொடர்வதற்கு மனதில்லா நிலாவானதின்...

தொடரும் 'மர்மம்' என்னவோ..?

Tvk
Superbly put in Sir. expecting Ms.Ananmika to start posting her next chapter at the earliest. Thanks RR maam for posting the other ones. Will certianly go thru them .

Cheers.
 
Dear friends,

Thanks for reading and giving ur feedback. As I am planning it to be a weekly issue, I will be posting the next chapter tomorrow, pls wait and read it on every Thursday!!!!!

Special thanks to Raji ma'am ; happy to note that Kunjuppu Sir is there!!! There can't be a thiruvilaiyadal film without Nakheeran, isn't it?!!!!

Thanks to VR Ma'am and Raji ma'am for the continuous support and encouragement given.

Regards
Anamika
 
Dear Readers,

This is a novel from my archives. written around 10 yrs back.Pls keep the background in mind and read and enjoy the story.

Thanks
Anamika

அத்தியாயம் - 2
**********************

கலைநிகழ்ச்சிகள் முடிந்து நிதிலாவும், நர்மதாவும் மூன்று மணியளவில் வீட்டுக்கு வந்தார்கள். அன்று கடைசி நாளானதால் நிதிலா தாமதமாக வருவதாக தன் வீட்டில் சொல்லியிருந்தாள். நர்மதாவின் பெற்றோர் முற்போக்கான எண்ணமும், மகள் மீது முழு நம்பிக்கையும் உடையவர்கள். அதனால் பாடக்குறிப்புகள் வாங்கவும், கொடுக்கவும் பல மாணவர்கள் அங்கே வந்து செல்வது சகஜமானது. அதனால் தான் நிதிலா திலீப்பை அங்கே வரச் சொல்லியிருந்தாள்.

தோழிகள் இருவரும் நர்மதாவின் அறைக்கு சென்றதும், திலீப்பைப் பற்றிய பேச்சு ஆரம்பித்தது:

"நிதிலா, நீ சொல்றதை என்னால நம்பவே முடியலை....அதுவும் திலீப்னா....."

நிதிலா திலீப் கொடுத்த வாழ்த்து மடலை எடுத்து நீட்டினாள். படத்தையும், கவிதையையும் ரசித்த நர்மதா,

"ரொம்ப நல்லாயிருக்கு இல்ல, நிதி! இவ்ளோ டீஸண்டா லவ் பண்றதை யாருமே சொல்லியிருக்க மாட்டாங்க."

"நர்மதா, என்ன சொல்ல வர்றே?"

"திலீப் கிட்ட என்ன குறை, சொல்லு? நல்ல குணம்; பாடினா இன்னிக்கெல்லாம் கேட்டுட்டே இருக்கலாம்; படம் வரைஞ்சா இன்னிக்கெல்லாம் பார்த்துட்டே இருக்கலாம்; அவன் கிட்டே 'கிரேஸ்' ஆகி எவ்வளவோ ஜூனியர் கேர்ல்ஸ் அவன் பின்னாடி சுத்தறாங்க, தெரியுமில்ல? அவங்களை எல்லாம் அவன் திரும்பிப் பார்த்தது கூட கிடையாது."

"எல்லாம் சரி தான், நர்மதா; ஆனா, திலீப் சொல்லியிருக்கிற நேரம் டூ லேட், நாம என்ன பண்றது?"

"ரைட் நிதி; முன்னாடியே ஒரு சின்ன 'ஹிண்ட்' காட்டியிருந்தாக் கூட பரவாயில்லை; ஆமா, அவன் உன்னை இவ்ளோ 'டீப்பா' லவ் பண்ணியிருக்கான்; உனக்கு சின்ன சந்தேகம் கூட வரலே?"

"இருந்தது நர்மதா; தனியா எங்கியாவது நாங்க பார்த்துக்க நேர்ந்தா, அவன் பார்வையில ஒரு வித்தியாசம் இருந்ததை நான் உண்ர்ந்தேன். இட் வாஸ் நாட் ஃப்ரெண்ட்லி ஆர் காஷுவல், பட் சம்திங் மோர் தான் தெட்!
***********************

காலேஜ் ஹாஸ்டல்.

விழா முடிந்து அனைவரும் நேராக சினிமாவுக்கு போய்விட்டனர், திலீப்பைத் தவிர. நண்பர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும், விடாப்பிடியாக மறுத்து விட்டான். கை பேப்பரில் கிறுக்கியபடி இருக்க, மனசு நிதிலாவை சுற்றிச் சுற்றி வந்தது.

எப்படி நிதிலா தன் மனசுக்குள் நுழைந்தாள் என்று தன்னையே கேட்டுக் கொண்டிருந்தான், திலீப். நிச்சயம் அழகு மட்டும் காரணமல்ல; நிதிலாவை விட அழகான பெண்கள் அவன் பின்னால் சுற்றியதுண்டு. அவன்
வகுப்பறையிலேயே தினமும் விதவிதமாய் உடையணிந்து லைட் மேக்கப் போட்டு வரும் மாணவிகள் உண்டு. அவர்களுக்கு 'ஃபேஷன் பரேடு' என்று மாணவர்கள் மத்தியில் பட்டப்பெயர் உண்டு. நிதிலா அணியும் உடையில் ஒழுங்கு இருக்கும்; கவர்ச்சி இருக்காது.

நிச்சயம் இது முதல் பார்வையில் முகிழ்த்த காதல் இல்லை; கல்லூரி சேர்ந்த ஆறு மாதங்களில் நிதிலாவின் குணம் அவனையும் அறியாமல் கவனத்தில் பதிந்து விட்டது.

பிறர் கவனத்தைக் கவர ஆர்ப்பாட்டம் செய்வது, வீண் அரட்டை அடிப்பது - இதல்லாம் அவளிடம் கிடையாது. அடக்கமான அழகு, எடுத்த காரியத்தை நேர்த்தியாக செய்து முடிக்கும் திறமை, அதில் காட்டும் அக்கறை என பலவிதமான நல்ல குணங்கள் இருந்தன. அவனறியாமல் நிதிலா அவனுள் நுழைந்து விட்டாள்.

ஒரு முறை ஆசிரியர் பாடக்குறிப்புக்கு வேண்டிய 'ரெகார்ட்' நோட்டை முதலில் திலீப்புக்கு கொடுத்து விட்டு , அவனுடைய புத்தகத்தை 'சர்க்குலேட்' செய்து எழுதிக் கொள்ளும்படி மற்றவர்களுக்கு சொன்னார். அனைவரும் அப்படியே செய்தனர். திலீப் ஒரு முக்கியமான ஃபார்முலாவை மாற்றி எழுதிவிட்டிருக்க, மற்ற மாணவர்கள் அவரவர்கள் சரியாக எழுதிக் கொண்டார்களே தவிர, அவனுடைய புத்தகத்தில் இருந்த தவறை சுட்டிக் காட்டவுமில்லை; சரி செய்யவும் இல்லை. நிதிலாவிடம் புத்தகம் போன பிறகு தான், நர்மதா மூலம் தவறை சரி செய்யும்படி சொல்லி அனுப்பினாள். அவன் நிதிலா மீது வைத்திருந்த மதிப்பு உயர்ந்து கொண்டே போனது.

முதலாண்டு விடுமுறையின் போது தான் திலீப் நிதிலாவை தான் எவ்வுளவு நேசிக்கிறோம் என்பதை உணர்ந்தான்; ஒன்றரை மாத விடுமுறை எப்போது முடியும் என்று தவம் கிடந்தான்; ஆனாலும் தன் காதலை வெளிப்படுத்தும் தைரியம் அவனுக்கு இல்லை. தினமும் அவளை பார்த்து மகிழ்வதோடு திருப்தி கொண்டான்.

படிப்பிலும், ஒழுங்கிலும் கவனமாய் இருந்த, அனாவசியமாய் ஒரு புன்னகை கூட செய்யாதபடி கட்டுப்பாடாக இருந்த நிதிலாவிடம் தன் காதலை சொன்னால், "கல்லூரி வந்தது படிக்கவா? காதல் செய்யவா?" என்று தன்னை வெறுத்து ஒதுக்கி விடுவாளோ என்ற பயம் எழுந்தது. அதனால் படிப்பு முடியும் வரை பொறுத்திருக்க முடிவு செய்தான். தன் எண்ணங்களை கவிதையாய் வடித்து, நெஞ்சுக்குள்ளே நிதிலாவை வைத்து, படிப்பில் கருத்தை செலுத்தினான்.

ஆயிற்று; படிப்பு முடிந்து இன்று மனக்கதவைத் திறந்தாகி விட்டது!

நேரத்தைப் பார்க்க, முள் நாலு மணியைக் காட்டியது. நர்மதா வீட்டுக்கு செல்ல திலீப் தயாரானான்.

**********************

நர்மதா வீடு.

திலீப் வந்ததும், நர்மதா வெளியே செல்ல எழுந்தாள். நிதிலா அவளையும் உடன் இருக்கும்படி கண்களால் கெஞ்சினாள். நர்மதா மீண்டும் அமர்ந்து கொண்டாள்.

மௌனம் நிலவ, நர்மதாவே உதவிக்கு வர வேண்டிய நிலை!

"திலீப்! நீங்க தப்பா எடுத்துக்கக் கூடாது, வந்து....வந்து...நிதிலாவுக்கு காதல்ல நம்பிக்கை இல்லை"

திலீப் திடுக்கிட்டது அவன் பார்வையிலேயே தெரிந்தது.

நிதிலா தன் வழக்கமான அமைதியை குரலில் வரவழைத்துக் கொண்டு கேட்டாள்.

"எப்படி திடீர்னு ஒருத்தரை காதலிக்க முடியும்னு நிஜமாகவே எனக்கு புரியலை?"

"நர்மதாவை உங்களுக்கு எவ்வுளவு நாளா தெரியும்?"

இதற்கும், நாம் கேட்ட கேள்விக்கும் என்ன தொடர்பு? புரியாமல் விழித்தாலும், நிதிலா,

"இரண்டு வருஷமா தெரியும்" என்றாள்.

"உங்களுடைய ரெண்டு வருஷ நட்பில இருவது வருஷ நட்போட வலிமையும், ஆழமும் இருக்கிறது நம்ம கிளாஸுக்கே தெரியும். இல்லையா?"

திலீப் நிறுத்த, இருவரும் தலையசைத்தனர்.

"நம்ம கிளாஸ்ல மத்தவங்களோட வராத நெருக்கமும், நட்பும் எப்படி நர்மதா கிட்ட மட்டும் உங்களுக்கு வந்தது? எந்த அடிப்படையில நர்மதாவை உங்க தோழியா செலக்ட் பண்ணீங்க?"

"என்ன கேட்கறீங்க திலீப்? ஃப்ரெண்டை எப்படி செலக்ட் பண்ண முடியும்? இயல்பா பூ மலர்ற மாதிரி தான் நட்பும் மலரும்."

நிதிலா கூற,

"நண்பர்கள் தொடர்ந்து நட்போட இருக்க பல காரணங்கள் இருக்கலாம்; நட்பு முறிஞ்சு போகவும் ஏதாவது காரணம் இருக்கலாம். ஆனா இவரோட நாம பழகலாம்னு நினைக்கிறோம்னா அதுக்கு முன்னாடியே நமக்கு அவரைப் பிடிச்சுட்டதுனு தான் அர்த்தம். ஏன் பிடிச்சதுன்னு காரணம் சொல்ல முடியாதோ, அதே போல தான்
காதலுக்கும் காரணம் சொல்ல முடியாது."

நிதிலா வாயடைத்துப் போய்விட்டாள். இருவரை ஒருவராய் மாற்றும் நட்பை அவள் உணர்ந்திருக்கிறாள்; அனுபவித்துக் கொண்டும் இருக்கிறாள்!

திலீப் மேலும் தொடர்ந்தான்:

"நர்மதாவோட நட்பு எப்படி சாத்தியமானதோ, அதே போல என்னுடைய காதலும் சாத்தியமானது. முன்ன பின்ன தெரியாத ரெண்டு உள்ளங்கள் இணையறது நட்புலயும், காதல்லயும் தான்! ஆனா, நட்பு கேட்காத காரணங்களை காதல் கேட்குது."

நிதிலாவின் மனசுக்கு அவன் சொன்ன நியாயம் புரிந்தது. ஆனால் அதை ஏற்றுக் கொள்ளும் நிலை இல்லையே!

"திலீப், உங்களோட அன்பை என்னால இப்ப நல்லாவே புரிஞ்சுக்க முடியுது"

திலீப் முகத்தில் வெளிச்சப் பூக்கள்!

"ஆனா, அதுக்கு நன்றி சொல்ல தான் முடியுமே தவிர, ஏத்துக்கற உரிமை எனக்கு இல்லை"

"ஆமாம் திலீப், நிதிலாவுக்கு அடுத்த மாசம் கல்யாணம்!"

"என்ன?"

திலீப்பின் குரல் அதிர்ந்தது.

"மாப்பிள்ளை அமெரிக்கால இருக்கார். ஃபோட்டோ பார்த்து ரெண்டு சைடும் பிடிச்சுப் போச்சு. அடுத்த மாசம் தான் லீவுல வரப் போறார். நிச்சயம் பண்ணி, உடனே கல்யாணம்னு முடிவு ஏற்கனவே முடிவு பண்ணியாச்சு. ரொம்ப க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸை மட்டும் கூப்பிடலாம்னு முடிவு பண்ணினதால நம்ம க்ளாஸில யாருக்கும் இது வரைக்கும் தெரியாது. உங்களுடைய ப்ரொபோசல் ரொம்பவே லேட்டாயிடுச்சு, திலீப்"

நர்மதா முடிக்க,

"என்னால உங்களுக்கு சிரமம் ஏற்பட்டிருந்தா, ப்ளீஸ் மன்னிச்சு, என்னை மறந்துடுங்க"

மெதுவாக சொல்லிய நிதிலா அவன் கொடுத்த வாழ்த்து மடலை நீட்டினாள்.

(தொடரும்......)
 
"என்னால உங்களுக்கு சிரமம் ஏற்பட்டிருந்தா, ப்ளீஸ் மன்னிச்சு, என்னை மறந்துடுங்க"....

வெள்ளை புறா.... ஒன்று போனது கையில் வராமலே.....!!

Tvk

"என்னால உங்களுக்கு சிரமம் ஏற்பட்டிருந்தா, ப்ளீஸ் மன்னிச்சு, என்னை மறந்துடுங்க"....

வெள்ளை புறா.... ஒன்று போனது கையில் வராமலே.....!!
Tvk

நட்புப் புறா ஒன்று சென்று ஒளிந்தது
நட்புடன் நம் அருகில் வராமலேயே !

நட்புப் புறா ஒன்று சென்று ஒளிந்தது
நட்புடன் நம் அருகில் வராமலேயே !

யார் அந்த நிலவு....?

ஏன் இந்த கனவு...?

காலம் செய்த கோலம..

இங்கு நாம் வந்த மரபு...

Tvk
 
if these are directed to me....

""நட்புப் புறா ஒன்று சென்று ஒளிந்தது....""

யார்..யார்...அவர் யாரோ...??

ஊர்..பேர் தான் தெரியாதோ...

Tvk
 
Last edited:
Just for fun..I am using the Tamil film songs for comments.. I don't know whether it is liked by others or not but I am

relishing in selecting suitable song..

TVK
 
""நட்புப் புறா ஒன்று சென்று ஒளிந்தது....""

யார்..யார்...அவர் யாரோ...??

ஊர்..பேர் தான் தெரியாதோ...

Tvk

யார்..யார்...அவர்...
TiruValarKrishnan தான்!!! :)
 
அத்தியாயம் - 3
**********************

யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா.

நிதிலா மிஸஸ். மகேஷ் ஆகி ஆறு மாதங்கள் முடிந்து விட்டன. அதற்குள்ளாகவே அறுபது வருடங்கள் வாழ்ந்து முடித்த அலுப்பும், சோர்வும் நிதிலாவுக்கு ஏற்பட்டு விட்டது.

நிதிலா கணவனிடம் இருந்து அப்படி அதிகமாக எதுவும் எதிர்பார்க்கவில்லை; பரஸ்பர பகிர்தலும், புரிந்து கொள்ளுதலும் தான் அவள் விரும்பியது. ஆனால் மகேஷ் உணவுக்கும், இரவுக்கும் மட்டுமே அவளை பயன்படுத்திக் கொண்டான்.

திருமணத்திற்கு முன் தொலைபேசியில் பேசும் போதல்லாம் குரலில் அன்பு பொங்க, அக்கறையோடு பேசிய அந்த மகேஷ் மறைந்து விட்டான்; கணவனான பிறகு, கண்ணெதிரேயே அவள் இருக்கும் போது கூட, எந்த விஷயம் குறித்தும் அவளிடம் பேசுவதே கிடையாது. அவனைப் பொறுத்த வரை டி. வி, சோஃபா செட் போல மனைவியும் ஒரு பொருள்; அவன் தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கும் பொருள்; அவ்வளவே!

திருமணம் முடிந்து ஒரு வாரத்தில் அமெரிக்கா வந்து விட்டாள். அவளை வெளியில் அழைத்துச் செல்வதில் மகேஷுக்கு விருப்பமில்லை. மாலைகளில் வீடு திரும்பியதும் தொலைக்காட்சியை 'ஆன்' செய்துவிடுவான்; இரவு படுக்கப் போகும் வரை அதுவே துணை. காலை மறுபடி அலுவலகம்.

அதன் பின் நிதிலாவுக்கு தனிமையே துணை. அங்கு உள்ள தமிழர், இந்தியர் என்று யாரோடும் அவளுக்கு அறிமுகம் இல்லை. தொலைக்காட்சியில் சில நிகழ்ச்சிகளும், அவள் எடுத்துச் சென்ற புத்தகங்களும், பாடல்களும் அவளுக்கு பொழுது போக உதவின.

கணவனுடன் ஆறு மாதங்கள் வாழ்ந்த பிறகும், நிதிலாவால் அவனைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனாலும் பணம் அவனைப் பொறுத்த வரை வாழ்வில் பிரதான இடம் வகித்ததை மட்டும் கணித்து வைத்திருந்தாள். அதற்கு காரணமான நிகழ்ச்சியும் கூடவே நினைவுக்கு வந்தது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு நர்மதாவின் திருமண அழைப்பு வந்தது. நிதிலா மகிழ்ச்சியில் துள்ளினாள்.

அன்று மாலை மகேஷ் வந்தபின் அவன் பார்வையில் படும்படி அதை வைத்தாள். எடுத்துப் பார்த்தவன்,நிதிலாவை முறைத்தான்:

"என்ன இது?"

"என் க்ளோஸ் ஃப்ரெண்ட் நர்மதாவுக்கு கல்யாணம்; கண்டிப்பா வரச் சொல்லி எழுதி இருக்கா."

"நீ இருக்கிறது மதுரை, விழுப்புரம்னு நினைச்சியா? கிளம்பி கல்யாணம், காதுகுத்துனு எல்லாத்துக்கும் போக! இது அமெரிக்கா!! ஃப்ளைட் சார்ஜ் என்ன ஆகும்னு நினைச்சுப் பார்த்தியா?"

ஒரு முறை இந்தியா போய் வருவதில் உன் செல்வம் ஒன்றும் தேய்ந்து விடாது என்று கத்த வேண்டும் போல் இருந்தது நிதிலாவுக்கு. திருமணப் பேச்சுக்களின் போதே, நிதிலா அமெரிக்க செல்ல ஆகும் செலவை அவள் பெற்றோர் தான் தர வேண்டும் என்று மகேஷின் தாயார் ஜாடையாக சொல்லிவிட்டார். நிதிலாவின் பெற்றோர் நல்ல வசதி உள்ளவராதலால் அது ஒன்றும் அவர்களுக்கு பிரச்சனையாகத் தோன்றவில்லை. எப்படியும் மகளுக்கு நல்ல சீர் வரிசைகளோடு பிரம்மாண்டமாக திருமணம் செய்வது அவர்களின் கனவாகவே இருந்தது. அதிலும் அமெரிக்க மாப்பிள்ளை என்பதில் கூடுதல் சந்தோஷம் வேறு!!

நிதிலாவுக்கு தான் இதில் சின்ன உறுத்தல் இருந்தது. அதிலும் அவள் அப்பா அவர்கள் இருவருக்குமான செலவையுமே அவரே ஏற்றுக்கொண்டு விட்டார் என்று தெரிந்த போது அவரிடம் சண்டை போட்டாள். அவர் சிரித்துக் கொண்டே அவளை சமாதானப்படுத்தி விட்டார்.

"உனக்கு செய்யாம நான் யாருக்குடா செய்யப் போறேன்? அவர் யார்? என் மாப்பிள்ளை தானே? "

பழசு நினைவுக்கு வந்ததும் கண்கள் கலங்கின.

இத்தனைக்கும் மகேஷின் குடும்பமும் பணத்துக்கு குறையுள்ள குடும்பமல்ல.

நிதிலா தன் அப்பாவுக்கு சின்ன தகவல் சொன்னால் போதும், டிக்கெட் வந்து நிற்கும். நிதிலாவுக்கு ஆத்திரம், கோபம், ஏமாற்றம் எல்லாம் ஒன்றாக பொங்கியது. அமெரிக்காவுக்கு கிளம்பும் போது அம்மா சொன்ன அறிவுரை நினைவுக்கு வர, தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.

"நிதி! மாப்பிள்ளை மனசைப் புரிஞ்சு நடந்துக்கோ! அவங்க கோவமா இருந்தாலும், நாம தான் விட்டுக் கொடுக்கணும். பொறுமையா இருந்து தான் ஆம்பளைங்க மனசுல இடம் பிடிக்க முடியும்."

நிதிலாவிடம் விரக்தியான சிரிப்பு விரிந்தது.

"மனசே இல்லாதப்ப எப்படி அம்மா இடம் பிடிக்கறது?"

திருச்சியில் தன் தாய், தந்தையோடு வாழ்ந்த இன்ப நிகழ்வுகள் நினைவுக்கு வர, கண்கள் கலங்கின.

"அப்பா எந்த ஊருக்குப் போனாலும், நிதிலாவுக்கு ஏதாவது வாங்காமல் திரும்ப மாட்டார்; வீட்டுக்கு ஒரே பெண் என்று அவள் மீது மிகுந்த பாசம் வைத்த பெற்றோர்!

"இந்த சுடிதார் ஷோகேஸ்ல பார்த்தேன், நம்ம நிதிலா கலருக்கு எடுப்பா இருக்குமேன்னு வாங்கிட்டு வந்துட்டேன்"

உடைகளும், அவள் விரும்பக் கூடிய பொருள்களுமாக மகாராணி போல வாழ்ந்தாள். அன்பான பெற்றோர், மனதப் புரிந்து கொண்ட தோழமை - மீண்டும் அது போல ஒரு இனிய வாழ்க்கை கிடைக்குமா?

காலையில் இருந்து எதுவும் சாப்பிடாததில் வயிறு சத்தமிட்டது. தட்டு எடுத்து வைப்பதற்குள் குமட்டிக் கொண்டு வர, வாஷ்பேசினுக்கு ஓடினாள்; வயிற்றில் புரட்டல்; கூடவே தலைசுற்றல்; கண்கள் இருட்டிக் கொண்டு வர, தடவியபடி சோஃபாவைத் தேடி அப்படியே படுத்துக் கொண்டாள்.

மறுபடி விழிப்பு வந்து பார்த்த போது, மணி இரண்டு ஆகியிருந்தது. வயிற்றுப் புரட்டலுக்கும், வாந்திக்கும் காரணம் யோசித்த போது, மனசுக்குள் சின்ன மகிழ்ச்சி பூத்தது!

அட! அவளுக்கு நாள் தள்ளியிருந்தது!

மகேஷிடம் இதை சொல்ல வேண்டும் என்று ஆவல் அவளையும் மீறி எழுந்தது. அவன் ஆஃபிஸ் நம்பரை எடுத்து தொடர்பு கொண்டாள். அவன் பெயரையும், பதவியையும் சொல்லி இணைப்புக் கேட்டாள்.

எதிர் முனையில் கிடைத்த பதில் அவளை இடியாய் தாக்கியது. மகேஷ் வேலையை ராஜினாமா செய்து மூன்று மாதங்கள் ஆகிவிட்டதாம்!!

நிதிலாவுக்கு சற்று முன் பூத்த சந்தோஷம் அப்படியே கருகிப் போனது. என்ன நினைத்துக் கொண்டு இப்படி நடந்து கொள்கிறார்? வேலையை விட்டு மூன்று மாதமாகி விட்டது, இன்னமும் அவளிடம் சொல்லவில்லை. வேறு ஏதாவது புதிய வேலை கிடைத்ததா? அப்படியென்றால், புதிய அலுவலகம் பற்றி அவளிடம் எதுவும் சொல்ல வேண்டாமா?

வாழ்க்கை சிக்கல்கள் மேலும் மேலும் சேர்ந்து கொள்ள, எங்கிருந்து துவங்கி இந்தச் சிக்கலின் முடிச்சை அவிழ்ப்பது என்று தெரியாமல், நிதிலா கவலையிலும், குழப்பத்திலும் மூழ்கிப் போனாள்.

துன்பம் சில நாள்...

இன்பம் சில நாள்...

சொன்னவர் யார் தோழி...

இன்பம் கனவில் ..

துன்பம் எதிரில் ...

காண்பது ஏன்..தோழி...

Tvk
 
அத்தியாயம் - 4
*********************
நிதிலா யோசித்து யோசித்து களைப்படைந்தாள். வழக்கம் போல் விடை தெரியாத வினாக்கள் அவளைச் சுற்றி வட்டமிட்டன.

'"ஏன் எனக்கு மட்டும் இப்படி ஆக வேண்டும்?"

"தான் வேலை செய்யும் இடத்தைக் கூட சொல்லாமல் ஏன் மகேஷ் என்னை புறக்கணிக்கிறார்?"

மீண்டும் கவலையில் முழுகிப் போவதற்கு முன்னால் தன்னைத் தானே தேற்றிக் கொண்டு, ஒரு தீர்மானத்திற்கு வந்தாள்.

"இனிமேல் என் நம்பிக்கை குழந்தை தான்; மழலை தான் என் வாழ்வை மலரச் செய்யப் போகிறது."

குழந்தையின் நினைவு வந்ததும் தான், மகேஷுக்கு ஃபோன் செய்த காரணம் நினைவுக்கு வந்தது.

"இனிமேலாவது மகேஷை நம்பாமல் நாம் சுயமாக வாழ பழகிக் கொள்ள வேண்டும்" என்று தோன்ற, வீட்டைப் பூட்டிக் கொண்டு, டாக்டரைப் பார்க்க கிளம்பினாள்.

மருத்துவமனையைக் கண்டுபிடிப்பதில் அதிகம் சிரமம் இருக்கவில்லை. அவள் இருந்த தெருவில் இருந்து பக்கத்தில் தான் இருந்தது. விவரங்களைச் சொல்லி காத்திருந்த பின், வழக்கமான ஃபார்மாலிடிஸ் முடிந்து டாக்டரை பார்த்தாள். அவள் கரு உறுதி செய்யப்பட்டது. கூடவே வேறு சில பரிசோதனைகளுக்கான இரத்தம் எடுக்கப்பட்டு, மீண்டும் மறுநாள் வரும்படி சொல்லி அனுப்பினார்கள்.

அன்று மாலை வீடு திரும்பிய மகேஷைப் பார்க்கக் கூட நிதிலாவுக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும், வழக்கம் போல் அவன் டி.வி பார்க்க அமரவும், சற்றே தயக்கத்துடன் கேட்டாள்:

"உங்க வேலை எல்லாம் எப்படி இருக்கு?"

பதிலுக்கு ஒரு பார்வை மட்டுமே மகேஷிடமிருந்து வந்தது.

"வந்து...சும்மா...தெரிஞ்சுக்கலாம்னு தான்..."

நிதிலா சமாளிக்க முயன்றாள்.

"இங்க பார்! நான் ஆஃபிஸ் போறேனா, இல்லையா, எந்த வொர்க் பண்றேன் - இதல்லாம் உனக்கு தேவை இல்லாத விஷயம். உனக்கு செலவுக்கு தேவையான பணம் கிடைக்குதில்ல; பீ ஹாப்பி வித் இட்! தட்ஸ் யுவர் லிமிட்!!"

உன் நிலை இவ்வுளவு தான்; உன் எல்லை இது வரை தான் என்று மகேஷ் வாயாலேயே கேட்டதும், நிதிலா பதில் பேசவே இல்லை. இனி பேச என்ன இருக்கிறது? தான் குழந்தை உண்டாகி இருக்கும் சேதியை அவனிடம் பகிர்ந்து கொள்ளக் கூட அவளுக்கு வாய் வரவில்லை. வழக்கம் போல் அன்றைய பொழுதும் மௌனத்திலேயே கழிந்தது.

மறு நாள் மகேஷ் வெளியில் சென்ற பிறகு, நிதிலா ஆர்வமாய் கிளினிக்கிற்கு சென்றாள்.

அவளைப் பார்த்ததுமே டாக்டர் வருத்தப்பட்டது போல தெரிந்தது. உடன் யாராவது வந்திருக்கிறார்களா என்று கேட்க, நிதிலா இல்லையென தலையாட்டினாள்.

டாக்டர் பலவிதமான அறிவுரைகள் கூறி பீடிகை போட ஏதோ கெட்ட சேதி காத்திருப்பதை அவள் உள்மனம் உணர்த்திற்று.

"டாக்டர், குழந்தைக்கு ஏதாவது குறை...."

"இல்லை. குழந்தை நன்றாக இருக்கிறது. ஆனால் உங்களுக்கு...உங்களுக்கு...ஹெச்.ஐ.வி பாஸிடிவ் இருக்கிறது. அது கருவுக்கும் பரவும் வாய்ப்பும் இருக்கிறது. அதனால் நீங்கள் விரும்பினால் கருவை கலைத்து விடுவது நல்லது என்பது ஒரு மருத்துவராக என் அபிப்ராயம். கூடவே நீங்கள் இப்போதிலிருந்தே நல்ல சிகிச்சை முறைகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறை இதெல்லாம் கடைப்பிடித்தால் நீங்கள் பயப்படத் தேவையில்லை."

நிதிலாவின் முகத்தில் அவள் திகைப்பும், அதிர்ச்சியும் அப்பட்டமாய் படர்ந்தது. டாக்டர் அவளை தட்டிக் கொடுத்தார்.

"காட் இஸ் தேர், தைரியமாக இரு, நல்ல முடிவெடு. ரொம்ப லேட் செய்தால் அப்புறம் கஷ்டமாகி விடும்."

மறுபடி வந்து சந்திக்கும்படி கூறி அனுப்பினார். இயந்திரம் போல் நிதிலா வீடு நோக்கி திரும்பி வந்தாள்.

"என்னிடமிருந்து என் குழந்தைக்கு எய்ட்ஸா? கடவுளே, உனக்கு இரக்கமே இல்லையா?"

ஒரு கேள்வி அவள் உள்ளத்தை வண்டாய் குடைந்தது.

"எந்த தவறான பழக்கமும் எனக்கு இல்லை; இது வரை ரத்தம் செலுத்தியதும் இல்லை. எனக்கு எப்படி எய்ட்ஸ்...? ஒரு...ஒரு வேளை மகேஷ் மூலமாக வந்திருக்குமோ?"

தனக்கு வந்துள்ள கொடிய நோயை எண்ணி வருந்துவதா? தன் வாழ்வை மலர வைக்கும் என எண்ணி மகிழ்ந்த சிசுவை மொட்டிலேயே பறிக்க வேண்டியதாகி விட்டதே, அதற்காக கண்ணீர் விடுவதா?

மாலை வரை அழுது அழுது ,கண்ணீர் நதி காய்ந்து போனது. இது பற்றி மகேஷிடம் கேட்டே ஆக வேண்டிய நிலை.

குரலில் சுரத்தே இல்லாமல், மகேஷிடம் சொன்னாள்:

"நான் 'கன்சீவ்' ஆகி இருக்கிறேன்.."

நிதிலா ஒரு நொடி பேச்சை நிறுத்தி அவன் முகத்தைப் பார்த்தாள். அவன் சொன்ன சேதிக்கு 'ரியாக்ஷனே' இல்லை. இவன் மனிதனா இல்லை சிலையா?

தனக்குள் எண்ணியவாறு மீண்டும் தொடர்ந்தாள்:

"ஆனால் குழந்தைக்கு எய்ட்ஸ் வரும் சாத்தியம் இருப்பதால் டாக்டர் 'அபார்ட்' பண்ண சொல்லியிருக்கார்"

துக்கத்தால் குரல் இடறியது.

"இதைப் போய் நீ டாக்டர் கிட்ட கேட்டிருக்க வேண்டாம்; எங்கிட்டே கேட்டிருந்தா நானே சொல்லி இருப்பேன்."

அவன் பேசுவதில் பாதி புரிந்தும், மீதி புரியாமலும் நிதிலா அவனையே வெறித்துப் பார்த்தாள். அவன் அதோடு பேச்சை நிறுத்தி விட்டு போய் விட்டான்.

மறு நாள் மகேஷ் வெளியில் செல்லும் வரை நிதிலா பொறுமையாய் இருந்தாள். டிராவல் எஜென்சியைத் தொடர்பு கொண்டு இந்தியா செல்ல டிக்கெட் கேட்டாள். அவள் அதிர்ஷ்டம் அன்று இரவு விமானத்தில் ஒரு சீட் கிடைத்தது.

விமான நிலையம் சென்று பணம் செலுத்தி புறப்பட வேண்டும். பணம்?

தன்னிடம் இருந்த பணத்தை கையில் எடுத்துக் கொண்டாள். தன் நகைகளையும் பத்திரமாக எடுத்துக் கொண்டு துணிந்து கிளம்பினாள்.

நிச்சயம் மகேஷ் அவளைத் தேடப் போவதில்லை. அதனால் அவனுக்கு தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை. அங்கே விடை பெற்றுக் கொள்ளவும் வேறு யாரும் அவளுக்கு இல்லை.

"வாழ்க்கைப் பயணத்தில் தான் என்னை ஏமாற்றி விட்டாய்! இந்த வழிப் பயணத்திலாவது உடன் வந்து உதவி செய்யேன்!!" என்று ஆண்டவனை வேண்டிக் கொண்டு நிதிலா கிளம்பினாள்.

(தொடரும்......)
 
மலருக்கு தென்றல் பகையானால்..அது

மலர்ந்திட கதிரவன் துணையுண்டு...

நிலவுக்கு வானம் பகையானால்..அது

நடந்திட வேறே வழியேது...

படகுக்கு துடுப்பு பகையானால் ..அங்கு

பாய் மரத்தாலே உதவியுண்டு...

பெண்ணுக்கு துணைவன் பகையானால்..அந்த

பேதையின் வாழ்வில் ஒளியேது...

Tvk
 
மலருக்கு தென்றல் பகையானால்..அது

மலர்ந்திட கதிரவன் துணையுண்டு...

நிலவுக்கு வானம் பகையானால்..அது

நடந்திட வேறே வழியேது...

படகுக்கு துடுப்பு பகையானால் ..அங்கு

பாய் மரத்தாலே உதவியுண்டு...

பெண்ணுக்கு துணைவன் பகையானால்..அந்த

பேதையின் வாழ்வில் ஒளியேது...

Tvk

Very apt and crisp 'description' Sir, Thanks!

Anamika
 
சரிதான்!

ஆனால்
Malarukku thendral pagaiyaanaal <= இங்கிருந்து சுட்டது!! :spy:

Ha...Ha...

"Just for fun..I am using the Tamil film songs for comments.. I don't know whether it is liked by others or not but I am

relishing in selecting suitable song.."

TVK

This is my earlier post as reply to VR madam....So No regret in "suittifying"...

TVK
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top