• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பேய்கள் பற்றி பாரதி & விவேகானந்தர்

Status
Not open for further replies.
பேய்கள் பற்றி பாரதி & விவேகானந்தர்

Bharathi_F.jpg


பயமே இல்லாத பாரதி!

(All Quotes in English are words of Swami Vivekananda. All quotes in Tamil are words of Subramanya Bharathi: Swami)

பாரதியின் தேசபக்திப் பாடல்களும் தமிழ் மொழி வாழ்த்துப் பாடல்களும் பிரபலமான அளவுக்கு அவருடைய தெய்வ பக்திப் பாடல்கள் பிரபலமாகவில்லை. கண்ணன் பற்றிய பாடல்கள் மட்டும் ஓரளவுக்குப் பரவின. அவர் ஞானம் பற்றியும் பயம் ஒழிப்புப் பற்றியும் பாடிய பாடல்கள் மிகவும் பொருள் பொதிந்தவை. இது பற்றி அதிகம் விளக்குவதற்குப் பதிலாக அவருடைய வரிகளைப் படித்தாலே புரியும். இதையே சுவாமி விவேகனந்தரின் வீர வசனங்களிலும் காணும்போது மெய்சிலிர்க்கிறது.


“அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
இச்சகத்துளோரெல்லாம் எதிர்த்து நின்றபோதிலும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே
உச்சிமீது வான் இடிந்து வீழுகின்றபோதினும்
அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே.”


Fear is death, fear is sin, fear is hell,
fear is unrighteousness, fear is wrong life.
All the negative thoughts and ideas that are in
the world have proceeded from this evil spirit of fear.
---Swami Vivekananda

“அச்சம் தவிர்
ஆண்மை தவறேல்” (புதிய ஆத்திச்சூடி)

****
“பொய்,கயமை, சினம், சோம்பர்,கவலை, மயல்,
வீண்விருப்பம், புழுக்கம், அச்சம்,
ஐயமெனும் பேயையெல்லாம் ஞானம் என்னும்
வாளாலே அறுத்துத் தள்ளி”

Be a hero. Always say, "I have no fear."
Tell this to everyone — "Have no fear." --Swami Vivekananda

“இன்னும் ஒரு முறை சொல்வேன் பேதை நெஞ்சே
எதற்குமினி உலைவதிலே பயன் ஒன்றில்லை;
முன்னர் நமது இச்சையினாற் பிறந்தோம் இல்லை;
முதல் இறுதி இடை நமது வசத்தில் இல்லை;
மன்னும் ஒரு தெய்வத்தின் சக்தியாலே
வையத்தில் பொருள் எல்லாம் சலித்தல் கண்டாய்!”

“The earth is enjoyed by heroes”—this is the unfailing truth. Be a hero. Always say, “I have no fear.”-- Swami Vivekananda


பேய்கள் பற்றி பாரதியும் விவேகானந்தரும்

“நெஞ்சு பொறுக்குகுதில்லையே—இந்த
நிலைகெட்ட மனிதரை நினைந்துவிட்டால்
அஞ்சிஅஞ்சிச் சாவார்—இவர்
அஞ்சாத பொருள் இல்லை அவனியிலே!
வஞ்சனைப் பேய்கள் என்பார் –இந்த
மரத்தில் என்பார் அந்தக் குளத்தில் என்பார்;
அஞ்சுது முகட்டில் என்பார்—மிகத்
துயர்ப்படுவார் எண்ணிப் பயப்படுவார்.”

Be strong! Don’t talk of ghosts and devils. We are the living devils. The sign of life is strength and growth. The sign of death is weakness. Whatever is weak, avoid! It is death. If it is strength, go down into hell and get hold of it! There is salvation only for the brave.-----Swami Vivekananda

“அச்சமும் பேடிமையும் அடிமைச் சிறுமதியும்
உச்சத்திற் கொண்டாரடீ—கிளியே
ஊமைச் சனங்களடி!
ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்றும் இல்லா
மாக்களுக்கோர் கணமும்—கிளியே!
வாழத் தகுதி உண்டோ?”
****
பயம்தான் பேய்

“பயம் எனும் பேய்தனை அடித்தோம்—பொய்மைப்
பாம்பைப் பிளந்துயிர் குடித்தோம்;
வியன் உலகனைத்தையும் அமுதென நுகரும்
வேத வாழ்வினைக் கைப்பிடித்தோம்”

மரணம் பற்றி பாரதியும் விவேகானந்தரும்

“ஆன்ம ஒளிக்கடல் மூழ்கித் திளைப்பவர்க்கு
அச்சமும் உண்டோடா?—மனமே!
தேன் மடை இங்கு திறந்தது கண்டு
தேக்கித் திரிவமடா!”


“Many times I have been in the Jaws of death, starving, footsore, and weary; for days and days I had had no food, and often could walk no farther; I would sink down under a tree, and life would seem to be ebbing away. I could not speak, I could scarcely think, but at last the mind reverted to the idea: “I have no fear nor death; never was I born, never did I die; I never hunger or thirst. I am it! I am it! The whole nature cannot crush me; it is my servant. Assert thy strength, thou Lord of lords and God of gods! Regain thy lost empire! Arise and walk and stop not! ” And I would rise up, reinvigorated; and here I am today, living! Thus, whenever darkness comes, assert the reality, and everything adverse must vanish.
Fear not, and it is banished. Crush it, and it vanishes. Stamp upon it, and it dies.”
Swami Vivekananda


“அச்சத்தை வேட்கைதனை அழித்துவிட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்துபோகும்”
****
“சாகத் துணியிற் சமுத்திரம் எம்மட்டு
மாயையே—இந்தத்
தேகம் பொய் என்றுணர் தீரரை என்
செய்வாய்1—மாயையே”
****
“காலா! உனை நான் சிறு புல் என மதிக்கிறேன்; என்றன்
காலருகே வாடா—சற்றே உனை மிதிக்கிறேன்”
****
நிலவைப் பற்றிப் பாடும் பாடலில் கூட
“அச்சப் பேயைக் கொல்லும் படையாம்
வித்தைத் தேனில் விளயும் களியாய்
வாராய், நிலவே, வா” – என்று பாரதி பாடுகிறார்.


நீங்கள் பாரதிப் பித்தன் என்றால் கீழ்கண்ட தலைப்புகளையும் காண்க:

(1).சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே (2).பாரதியுடன் 60 வினாடிகள் (3) பாரதி நினைவுகள் Go to nilacharal.com for items 2 and 3 (4) பாரதி பாட்டில் பழமொழிகள் (5) 60 second Interview with Swami Vivekananda
 
Hello sir ,Very happy to see Bharathiyar s quotes,all stated are ever green .& sure will inspire any body.Thanks for posting.
 
Dear Dr Narayani

Thanks for the comments. Bharathy will inspire every one. He said உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும் It is very true with his songs.He was an inspired and enlightened poet.In another place he says மந்திரம் போல் சொல் இன்பம் வேண்டுமடா. His words have the mantra effet. He always prayed to Goddess Sarasvati வெள்ளமெனப் பொழிவாய் என் நாவினிலே. Goddess Sarasvati made it true.

I am writing one more article for Bharathy Day which falls on 11th December.
Keep in touch.
 


வள்ளலார், 'மதம்' என்பதைப் 'பேய்' என்கிறார். 'மதம்' என்பதற்கு, 'ஆணவம்' என்றே

பொருள் இருந்தாலும், '(ஜாதி) மத வெறி' என்
றும் எடுத்துக்கொள்ளலாமே!


"ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற

உத்தமர் தம் உறவு வேண்டும்

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்

பெருமை பெறு நினது புகழ் பேசவேண்டும் பொய்மை
பேசாதிருக்க வேண்டும்

பெருநெறி பிடித்தொழுக வேண்டும் மதமான பேய்
பிடியாதிருக்க வேண்டும்

மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும் உனை
மறவாதிருக்க வேண்டும்

மதிவேண்டும் நின் கருணை நிதி வேண்டும் நோயற்ற
வாழ்வு நான் வாழவேண்டும்

தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலமோங்கு கந்தவேளே

தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வமணியே"

:pray2:
 
மதம் ஒரு பேய் அல்ல. ஆனால் மதவெறி ஒரு பேய்தான்.வள்ளலார் வாழ்ந்த காலம் பிரிட்டிஷ் ஆட்சிக்காலம். அவருக்கும் ஆறுமுக நாவலருக்கும் இடையே பெரிய மோதல் நடந்தது. முஸ்லீம்கள் ஆட்சிக்காலத்தில் இந்துக் கோவில்கள் (அயோத்யா, மதுரா,காசி உள்பட) தரை மட்டமாக்கப்பட்டு மசூதிகள் எழுப்பப்பட்டன. கிறிஸ்தவர்கள் பெரும் வேகத்தில் கடலோர மீனவர்களை கிறிஸ்தவர்களாக்கினர். இதை எல்லாம் மனதில் கொண்டு மதத்தின் பெயரால் நடந்ததை இப்படிச் சொல்லி இருக்கலாம். காரல் மார்க்ஸ் கூட மதம் ஒரு அபினி என்று கூறியதன் பிண்ணனியைப் பார்த்தால் ஓரளவு சரியே என்று சொல்லத் தோன்றும்.வள்ளலாரைப் பொறுத்தமட்டில் ம.பொ.சி. எழுதிய வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு நூலில் இதற்கு விளக்கம் இருக்கலாம். உங்கள் பொருள் பொதிந்த கருத்துக்கு நன்றி.
 
மதம் ஒரு பேய் அல்ல. ஆனால் மதவெறி ஒரு பேய்தான்........
மத வெறியினால் வருவது ஒரு வகை மதம், அதாவது ஆணவம் - என் மதமே பெரியது என்ற ஆணவம்!
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top