Tamil Brahmins
Page 770 of 786 FirstFirst ... 270670720760766767768769770771772773774780 ... LastLast
Results 7,691 to 7,700 of 7853
 1. #7691
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  64,336
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  #829 to #832

  #829. உடல் வசப்படும்

  தலைவனும் ஆயிடும் தன் வழி ஞானம்
  தலைவனும் ஆயிடும் தன் வழி போகம்
  தலைவனும் ஆயிடும் தன் வழி உள்ளே
  தலைவனும் ஆயிடும் தன் வழி அஞ்சே.


  இவ்வாறு வெற்றி பெற்ற தலைவன் தன் ஆன்மாவை அறிந்தவன் ஆவான். அவனைச் சிவயோகம் தானே வந்தடையும். தன்னைத் தானே வசப்படுத்தி ஆளும் திறமை அவனுக்கு வரும். அவன் சொற்படி ஐந்து பூதங்களும் நடக்கும்.


  #830. ஐந்து நாழிகை போதும்!


  அஞ்சிக் கடிகைமேல், ஆறாம் கடிகையில்
  துஞ்சுவது ஒன்றத் துணைவி துணைவன் பால்
  நெஞ்சு நிறைந்தது வாய்கொளது என்றது
  பஞ்சக் கடிகை பரியங்க யோகமே.

  பரியங்க யோகம் ஐந்து நாழிகைப் பொழுது மட்டுமே செய்ய வேண்டும். ஆறாம் நாழிகையில் துணைவி தன் துணைவனுடன் பொருந்தி உறங்குவாள். ஐந்து நாழிகைப் பரியங்க யோகமே அவளுக்கு மன நிறைவை அளித்துப் போதும் இனி வேண்டாம் என எண்ணச் செய்யும். இதற்கு மேலே பரியங்க யோகம் நீடித்தால் விந்து வெளிப்படும்.


  #831. குண்டலினியைக் கடக்க இயலும்


  பரியங்க யோகத்துப் பஞ்சக் கடிகை
  அரியஇவ் யோகம் அடைந்தவர்க்கு அல்லது
  சரிவளை முன்கைச்சி சந்தனக் கொங்கை
  உருவித் தழுவ ஒருவர்க்கு ஒண்ணாதே.

  நழுகின்ற வளையல்கள் அணிந்த கைகளை உடைய, மணம் பொருந்திய கொங்கைகளை உடைய குண்டலினி சக்தியைக் கடந்து மேலே செல்வது மிகவும் அரிது. பரியங்க யோகத்தில் அரிதாக ஐந்து நாழிகை இருக்க முடிந்தவனுக்கே இந்த திறமை வாய்க்கும்.


  #832. பரியங்க யோகம் மேன்மை தரும்


  ஒண்ணாத யோகத்தை உற்றவர் ஆர் என்னில்,
  விண் ஆர்ந்த கங்கை விரிசடை வைத்தவன்
  பண்ஆர் அமுதினைப் பஞ்சக் கடிகையில்
  எண்ணாம் என் எண்ணி இருந்தான் இருந்ததே.


  யாவருக்குமே அடைவதற்கு அரிதாகிய இந்த யோகத்தைச் செய்து அதை அறிவித்தவர் யார் தெரியுமா? வான் கங்கையை ஜடையில் தரித்த ருத்திரன் ஆவான். அவன் உருவத்தை எண்ணாமல், நாதத்துடன் கூடிய ஒளியை ஐந்து நாழிகைப் பொழுது எண்ணமல் எண்ணி அனுபவித்திருந்தான்.
 2. #7692
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  64,336
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  #833 to #836

  #833. யோகத்துக்கு உரிய வயது

  ஏய்ந்த பிராயம் இருபதும் முப்பதும்
  வாய்ந்த குழலிக்கும் மன்னர்க்கும் ஆனந்தம்
  ஆய்ந்த குழலியோடு ஐந்தும் மலர்ந்திடச்
  சோர்ந்தன சித்தமும் சோர்வு இல்லை வெள்ளிக்கே.


  இந்தப் பரியங்க யோகம் செய்வதற்கு ஏற்ற வயது பெண்ணுக்கு இருபதும், ஆணுக்கு முப்பதும் ஆகும். அப்போது இந்த யோகத்தில் பொருந்திய இருவருக்கும் ஆனந்தம் உண்டாகும். பெண்ணின் ஐம் பொறிகளும் இன்பத்தில் மலர்ந்திடும். ஆனால் ஆணுக்கு விந்து நீக்கம் ஏற்படாது.

  #834. கள்ளத் தட்டானார்


  வெள்ளி உருகிப் பொன்வழி ஓடாமே
  கள்ளத் தட்டானார் கரியிட்டு மூடினார்
  கொள்ளி பரியக் குழல் வழியே சென்று
  வள்ளி உள்நாவில் அடக்கி வைத்தாரே.

  வெண்மையான சுக்கிலம் உருகிப் பொன்னிற சுரோணிதத்தில் கலக்காமல் தடுத்தார் மறைந்து இருந்த சிவன் என்னும் தட்டானார். அவர் கரியாகிய அருளினால் பக்குவம் செய்வார். தீ என்ற அக்கினிக் கலை உண்டாகும் வண்ணம், ஊதுகுழல் ஆகிய சுழுமுனை வழியே சென்று; உள்நாவில் ஒளிமயமான சந்திர மண்டலத்தை விளங்க வைப்பார்.

  #835. சிவசூரியன் விளங்குவான்


  வைத்த இருவரும் தம்மில் மகிழ்ந்து உடன்
  சித்தம் கலங்காது செய்கின்ற ஆனந்தம்
  பத்து வகைக்கும் பதினெண் கணத்துக்கும்
  வித்தகனாய் நிற்கும் வெங்கதிரோனே.

  காம வயப்படாமல் தெய்வ காரியமாக எண்ணிப் பரியங்க யோகத்தைச் செய்ய வேண்டும். விந்து நீக்கம் இல்லாமல் ஆணும் பெண்ணும் புணரும் போது இருவரும் இன்பம் அடைவர். அவர்களுக்குப் பத்து திசைகளுக்கும் தலைவனான பதினெட்டு வகைத் தேவர்களுக்கும் தலைவனான சிவசூரியன் விளங்குவான்.

  #836. நாதத்தில் திளைப்பர்


  வெங்கதி ருக்கும் சனிக்கும் இடைநின்ற
  நங்கையைப் புல்லிய நம்பிக்கு ஓர் ஆனந்தம்
  தங்களில் பொன் இடை வெள்ளிதாழா முனம்
  திங்களில் செவ்வாய் புதைந்திருந்தாரே.

  விருப்பத்தைத் தருபவன் கதிரவன். பிறப்பைத் தருவது கருவாய். பரியங்க யோகம் செய்யும் ஆடவன் இவை இரண்டுக்கும் இடையில் ஆனந்தம் அடைவான். அவ்வகைப் புணர்ச்சியில் சுக்கிலம் சுரோணிதம் வழியே பாயாது. எனவே இருவரும் சந்திர மண்டலத்தில் உள்ள செந்நிறம் உடைய சக்தியாகிய நாதத்தில் திளைத்து இருப்பர்.
 3. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 4. #7693
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  64,336
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  #837. ஊர்த்துவரேதசு

  திருத்திப் புதனைத் திருத்தல் செய்வார்க்குக்
  கருத்தழகாலே கலந்து அங்கு இருக்கில்
  வருத்தமும் இல்லையாம் மங்கை பங்கற்கும்
  துருத்தியில் வெள்ளியும் சோராது எழுமே.


  அறிவைத் திருத்தி அமைத்து, மனத்தைத் தூய்மைப் படுத்தி, கருத்தழகுடன் பரியங்க யோகம் செய்யும் போது. எந்தத் துன்பமும் இராது. உடலில் விந்து நீக்கமும் இராது. அதன் விளைவு என்ன? விந்துவைச் செலுத்தும் காம வாயு மேல் நோக்கிச் செயல்படும் ஊர்த்துவரேதசு வந்து அமையும்.


  #838. உடல் உருகும்


  எழுகின்ற தீயை முன்னே கொண்டு சென்றிட்டால்
  மெழுகு உருகும் பரிசு எய்திடும் மெய்யே
  உழுகின்றது இல்லை ஒளியை அறிந்தபின்
  விழுகின்றது இல்லை வெளி அறிவார்க்கே.


  சுவாதிஷ்டானத்தில் உள்ள காமத்தீயை மேலே ஏற்றிப் புருவ மத்திக்குக் கொண்டு செல்ல வேண்டும். அப்போது தீயின் முன் வைத்த மெழுகைப் போல யோகியின் உடல் உருகிவிடும். புருவ மத்தியைத் தாண்டிச சென்று துவாசாந்தப் பெருவெளியையும் அங்குள்ள ஒளியையும் அறிந்தவரின் உடல் ஒருநாளும் கீழே விழாது. மெழுகு போல உருகிவிடும்.


  #839. ஒளி தெரிந்தால் உலகம் தெரியாது


  வெளியை அறிந்து வெளியின் நடுவே
  ஒளியை அறியின் உளிமுறி ஆமே
  தெளிவை அறிந்து, செழு நந்தியாலே
  வெளியை அறிந்தனன் மேல் அறியேனே.


  வானத் தானத்தை அறிந்து கொண்டு, அங்கே விளங்கும் பொன்னிற ஒளியைக் காண அறிந்து கொண்டால் என்ன ஆகும்? உள்ளம் வேறுபடாமல் தெளிந்த ஞானம் கிடைக்கும். சிவன் அருளால் வானமும் அதன் நடுவில் ஒளியும் தெரியும். வேறு எதுவும் தெரியாது. ஒளி தெரிந்தால் உலகம் தெரியாது.


  #840. உடலில் உறையும் தெய்வங்கள்


  மேல்ஆம் தலத்தில் விரிந்தவர் ஆர்எனின்,
  மால்ஆம் திசைமுகன் மாநந்தி யாயவர்
  நால்ஆம் நிலத்தின் நடுஆன அப்பொருள்
  மேலாய் உரைத்தனர் மின் இடையாளுக்கே.


  ஒருவருக்கு மேலாக ஒருவர் என்று நம் உடலில் விளங்கும் தெய்வங்கள் யார் யார்? திருமால், நான்முகன், உருத்திரன், பராசக்தி, பரமசிவம் என்னும் தெய்வங்கள் நம் உடலில் உறைகின்றனர். துரிய பூமியில் பராசக்தியை விட மேலே இருப்பான் சிவன்.
 5. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 6. #7694
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  64,336
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  #841 to #844

  #841. நெடுங்காலம் வாழ இயலும்

  மின்இடை யாளு மின்னாளனும் கூட்டத்துப்
  பொன்இடை வட்டத்தின் உள்ளே புகப்பெய்து
  தன்னோடு தன்னைத் தலைப்பெய்ய வல்லிரேன்
  மண் இடைப் பல்ஊழி வாழ்தலும் ஆமே.


  மின்னல் போன்ற இடையை உடைய சக்தி தேவியையும், அவளை ஆளும் சிவனையும், அவர்கள் கூட்டத்தையும் பொன் ஒளி கொண்ட வானத்தில் நிலை பெறச் செய்ய வேண்டும். அந்தக் கூட்டத்தில் தன் ஆன்மாவையும் காண அறிந்தவர் இந்த உலகில் நெடுங்காலம் வாழ இயலும்.

  #842. ஆன்மாவே யாகப் பொருள்


  வாங்கல் இருதலை வாங்கிலில் வாங்கிய
  வீங்க வலிக்கும் விரகு அறிவார் இல்லை
  வீங்க வலிக்கும் விரகு அறிவாளரும்
  ஓங்கிய தன்னை உதம் பண்ணினாரே.


  காம வாயுவை உள்ளே இழுத்துச் சுக்கிலம் கெடுமாறு செய்தலையும், அவ்வாறு உள்ளே இழுத்த காம வாயுவை மேலே செலுத்தும் வழியினை அறிபவர் இல்லை. அத்தகைய மாற்றங்களைச் செய்ய அறிந்து கொண்டவர் தன்னையே சிவனிடம் ஹோமப் பொருளாக அர்ப்பணிப்பவர் ஆவார்.

  #843. முடி கறுக்கும்!


  உதம் அறிந்து அங்கே ஒருசுழிப் பட்டால்
  கதம் அறிந்து அங்கே கபாலம் கறுக்கும்
  இதம் அறிந்து எ ன்றும் இருப்பாள் ஒருத்தி
  பதம் அறிந்தும்
  உளே பார் கடிந்தாளே.

  ஆன்மாவை இறைவனுக்கு ஓமப் பொருளாக்கி அதைச் ஸஹஸ்ர தலத்தில் பொருத்தினால், அப்போது தலை மயிர் கறுத்து விடும்.சக்தியும் அவனது இதம் அறிந்து செயல் புரிவாள். அவன் பக்குவத்தை அறிந்து கொண்டு, பிருத்விச் சக்கரத்தின் செயலை மாற்றி அருளுவாள் . மேலே சென்று விட்ட காம வாயு மீண்டும் கீழே சென்று விடாமல் தடுப்பாள்.

  #844. அடியும் இல்லை நுனியும் இல்லை!


  பார் இல்லை, நீர் இல்லை, பங்கயம் ஒன்று உண்டு;
  தார் இல்லை, வேர் இல்லை, தாமரை பூத்தது ;
  ஊர் இல்லை, காணும் ஒளி அது ஒன்று உண்டு
  கீழ் இல்லை, மேல்இல்லை, கேள்வியிற் பூவே.

  ஆயிரம் இதழ்த் தாமரை ஒன்று உண்டு. ஸஹஸ்ரதளம் என்று அதன் பெயர். அது சிதாகாசத்தில் இருப்பதால் அங்கு நிலமோ நீரோ இல்லை! இந்தத் தாமரை மலர்ந்தே உள்ளது. அதனால் அதற்கு அதற்கு மொட்டும் இல்லை, வேரும் இல்லை. அதில் ஒளியால் நிரம்பி உள்ளது. ஒளி எங்கும் பரவி இருப்பதால் அதற்குக் குறிப்பிட்ட இடம் என்று எதுவும் இல்லை. நாதத்துக்குக் காரணம் இந்த தாமரையே என்றாலும் அதற்கு அடியும் இல்லை நுனியும் இல்லை!
 7. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 8. #7695
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  64,336
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  20. அமுரி தாரணை

  20. அமுரி தாரணை
  அமுரி = வீர்யம்
  வீர்யம் உடலில் தங்குவதற்குச் செய்ய வேண்டியவை

  #845 to #847


  #845. வருந்தாமல் இருக்கும் வழி

  உடலில் கிடந்த உறுதிக் குடிநீர்
  கடலில் சிறு கிணறு ஏற்றம் இட்டால் ஒக்கும் ;
  உடலில் ஒருவழி ஒன்றுக்கு இறைக்கில்
  நடளிப் படாது உயிர் நாடலும் ஆமே


  உடலுள் நீங்காது இருந்து உறுதியை அளிப்பது உணர்வு நீர் ஆகும். கடலின் அருகே ஒரு சிறு கிணறு தோண்டிவிட்டு அதன் நீரை ஏற்றம் இட்டு இறைக்கலாம். அதைப் போன்றே உடலில் கீழே செல்லும் உணர்வு நீரை வேறு வழியாக மேலே போகச் செய்யலாம். அப்படிச் செய்வதன் மூலம் உயிர் வருத்தம் அடையாமல் காப்பாற்றலாம்.

  #845. விளக்கம்


  உடலில் உள்ள அமுதமயமான வீரியத்தை வீணாக்கக் கூடாது. அதை ஓர் ஆக்கப் பொருளாக மாற்ற வேண்டும். உடலில் ஒளியை அமைத்து உடலுக்கு உறுதி தருவது அமுரி நீர். இல்லற வாழ்வில் உள்ளவர்கள் காம வாயு செயல் படும் போது சிவத் தியானம் செய்து போகத்தையே யோகமாக மாற்றி விடுவர். யோகியர் மூல பந்தனம் செய்து, குதத்தை நெருக்கிப் பிடித்து, சிவத்தியானம் செய்து, மூல வாயுவுடன் காம வாயுவைக் கலந்து, உடலுள் மேலே ஏற்றுவர்.


  #846. பொன் போல் உடல் ஒளிரும்


  தெளிதரும் இந்தச் சிவநீர் பருகில்
  ஒளிதரும் ஓராண்டில் ஊனமொன்றில்லை
  வளியுறு மெட்டின் மனமும் ஒடுங்கும்
  களிதரும் காயம் கனகம தாமே.


  தெளிந்த இந்த அமுரியை ஓராண்டு காலம் பருகி வந்தால் உடலில் ஒளியினைக் காண இயலும். கேடற்ற இந்த நீர் காற்றுடன் கலந்து உடலில் மேலே ஏறுவது. எட்டு ஆண்டுகள் பயிற்சி செய்தால் மனம் கீழே நோக்குவதைத் துறந்து விடும். எப்போதும் மேலேயே நிற்கும். உடல் பொன் போல் ஒளிரும். மனம் எப்போதும் மகிழ்வுடன் இருக்கும்.

  #847. தலை மயிர் கறுக்கும்


  நூறு மிளகு நுகருஞ் சிவத்தினீர்
  மாறு மிதற்கு மருந்தில்லை மாந்தர்கள்
  தேறில் இதனைத் தெளியுச்சி கப்பிடின்
  மாறு மிதற்கு மறுமயிராமே.

  சிவ நீர் ஆகிய அமுரி கீழே உள்ள குறியை நெருக்கிப் பிழியும். அதனால் அது உடலில் நீடித்து நிற்கும். இதை விட நல்ல மருந்து வேறு ஒன்றும் இல்லை. மக்கள் இதன் நுட்பத்தை கண்டு கொண்டு அமுரியைத் தலையில் பாயச் செய்தால் வெளுத்த மயிர் மீண்டும் கறுக்கும் விந்தையினைக் காணலாம் 9. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 10. #7696
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  64,336
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  #848 to #850

  #848. பருவத்தே பருக வேண்டும்

  கரையரு கே நின்ற கானல் உவரி
  வரைவரை என்பர் மதியிலா மாந்தர்
  நுரைதிரை நீங்கி நுகர வல்லார்க்கு
  நரைதிரை மாறு நமனுமங் கில்லையே.


  மதி இல்லாத மாந்தர்கள் சிறு நீர் குழாய்க்கு அருகில் உள்ள சுக்கிலத்தையும் கழித்து விட வேண்டும் என்பர். தகுந்த பருவத்தில் அமுரி நீரை அருந்த அறிந்து கொண்டவர்களுக்கு வெளுத்த மயிர் மீண்டும் கருக்கும். சுருங்கிய தோல் மாற்றம் அடையும். இங்ஙனம் அமுரி நீரை அமைத்துக் கொள்பவர்களுக்குக் கூற்றுவனால் அச்சம் இல்லை.

  #849. உடல் மென்மையாகும்


  அளக நன்னுத லாயோர் அதிசயம்
  களவு காயங் கலந்தவிந் நீரில்
  மிளகு நெல்லியும் மஞ்சளும் வேம்பிடில்
  இளகும் மேனி இருளும் கபாலமே.


  அழகிய கூந்தலை உடையவளே! ஒரு விந்தை உள்ளது. மறைவாக இந்த அமுரி நீர் உடலில் மேலே சென்று சிரத்தை அடையும் போது மிளகு, நெல்லி, மஞ்சள், வேப்பம் பருப்பு இவற்றைக் கலந்து நன்றாக அரைத்துத் தலையில் தேய்த்துக் குளித்தால் உடல் மேன்மை அடையும். தலை மயிர் கறுப்பாக ஆகும்.

  #850. அமுரியின் பெருமை


  வீர மருந்துஎன்றும் விண்ணோர் மருந்து என்றும்
  நாரி மருந்து என்றும் அந்தி அருள் செய்தான்,
  ஆதி மருந்து என்று அறிவார் அகலிடம்
  சோதி மருந்து இது, சொல்ல ஒண்ணாதே.


  வீரியத்தால் உண்டாகும் மருந்து இது. எனவே வீர மருந்து என்பர். இது வான் வெளியில் ஒளி மயமாக ஆவதால் விண்ணவர் மருந்து என்பர். பெண் சம்பத்தால் அடையப்படுவதால் இது நாரீ மருந்து எனப்படும். இதுவே முதன்மையான மேலான மருந்து என்று யோகியர் அறிவர். பேரொளி மயமான இதைச் சாமானியமான மனிதர்களுக்குச் சொல்லக் கூடாது.
 11. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 12. #7697
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  64,336
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  21. சந்திர யோகம்

  21. சந்திர யோகம்
  சந்திரனை உடலில் விளங்கச் செய்யும் யோகம் இது

  #851 to #853


  #851. உடலில் உள்ள சந்திரனின் நிலை

  எய்தும் மதிக்கலை சூக்கத்தில் ஏறியே
  எய்துவ தூலம் இருவகைப் பக்கத்துள்
  எய்தும் கலைபோல ஏறி இறங்குமாம்
  துய்யது சூக்கத்துத் தூலத்து காயமே.


  சந்திர கலை பருவுடலில் இருந்து நுண்ணுடலுக்கு ஏறும். பிறகு நுண்ணுடலிலிருந்து பருவுடலுக்கு இறங்கும். இரண்டு பக்ஷங்களில் வளர்பிறையில் வளர்ந்தும், தேய் பிறையில் தேய்ந்தும் வரும் நிலவைப் போலவே இதுவும் அமையும். சந்திர கலையால் நுண்ணுடல் எத்தனை தூய்மை அடைகின்றதோ அதற்கேற்ப பருவுடலும் தூய்மை அடையும்.

  #852. யோகியர் நன்கு அறிவர்.


  ஆகின்ற சந்திரன் சூரியன் அங்கியுள்
  ஆகின்ற ஈர் எட்டொடு ஆறு இரண்டு ஈர்ஐந்துள்
  ஏகின்ற அக்கலை எல்லாம் இடைவழி
  ஆகின்ற யோகி அறிந்த அறிவே.


  உடலுள் விளங்கும் சந்திரனுக்கும் பதினாறு கலைகள் உண்டு. உடலுள் விளங்கும் சூரியனுக்குப் பன்னிரண்டு கலைகளும், அக்கினிக்குப் பத்துக் கலைகளும் உள்ளன. இவை அனைத்தும் நடுநாடியாகிய சுழுமுனை வழியே இயங்குபவை என்பதை யோகியர் நன்கு அறிவர்.

  #853. கதிரவனும், தீயும், நிறைமதியும்!


  ஆறுஆறு அது ஆம்கலை ஆதித்தன், சந்திரன்
  நாறா நலங்கினார், ஞாலம் கவர்கொளப்
  பேறுஆம்; கலை முற்றும் பெறுங்கால் ஈரெட்டும்
  மாறாக் கதிர்கொள்ளும், மற்றங்கி கூடவே.


  பன்னிரண்டு கலைகளை உடைய சூரியனைச் சந்திரனுடன் சேர்க்க அறிந்து கொண்டவர் உலகம் விரும்பும் பேறுகளை அடைவர். பதினாறு கலைகள் கொண்ட சந்திரனில் சூரியன் மட்டுமின்றி அக்கினியும் ஒடுங்கும் 13. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 14. #7698
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  64,336
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  #854 to #856

  #854. பிரணவம் அறுபத்து நான்கு கலைகளாகப் பரிமளிக்கும்.

  பத்தும் இரண்டும் பகலோன் உயர்கலை
  பத்தினொடு ஆறும் உயர்கலை பால் மதி,
  ஒத்தநல் அங்கியது எட்டு எட்டு உயர்கலை
  அத்திறன் நின்றமை ஆய்ந்து கொள்வீரே.


  கதிரவனின் கலைகள் பன்னிரண்டு. பால் போன்ற நிலவின் கலைகள் பதினாறு. இவற்றுடன் அக்கினியின் கலைகள் இணையும் போது அறுபத்து நான்கு கலைகளாகப் பரிமளிக்கும். இதை நன்கு ஆராய்ந்து உணர்ந்து கொள்ள வேண்டும்.
  தலைக்கு மேல் கலைகள் அறுபத்து நான்காக விளங்கும். அவையே பிரணவத்தின் கலைகள் ஆகும்.

  #855. தொண்ணூற்றாறு கலைகள்


  எட்டெட்டு அனலின் கலையாகும் ஈராறுள்
  சுட்டப் படுங்கதி ரோனுக்கும் சூழ்கலை
  கட்டப்படும் ஈர் எட்டா மதிக்கலை
  ஓட்ட படாஇவை யொன்றொடொன்றாகவே.

  அக்கினிக் கலைகள் அறுபது நான்கு. சூரியனின் கலைகள் பன்னிரண்டு. சந்திரனின் கலைகள் பதினாறு. இவை கட்டப் படும் மூலாதாரத்தின் நாள்மீனுக்கு நான்கு கலைகள். மொத்தம் தொண்ணூற்றாறு கலைகள் கூடித் தொழில் புரியும்.

  #856. மூலாதாரத்தில் தொண்ணூற்றாறு கலைகள் உள்ளன


  எட்டெட்டும், ஈராறும், ஈரெட்டும், தீக்கதிர்
  சுட்டிட்ட சோமனில் தோன்றும் கலை என்ப
  கட்டப்படும் தாரகைக் கதிர் நால்உள;
  கட்டிட்ட தொண்ணூற்றோடு ஆறும் கலாதியே.

  அக்கினி, கதிரவன், சந்திரனின் இவற்றின் கலைகள் முறையே அறுபத்து நான்கு, பன்னிரண்டு, பதினாறு என்பர். இவை சேர்ந்துள்ள மூலாதாரத்தில் உள்ள நட்சத்திரத்துக்கு உள்ளன நான்கு கலைகள். இவ்வாறு மூலாதாரத்துடன் இணைக்கப்பட்டுள்ள கலைகள் மொத்தம் தொண்ணூற்றாறு ஆகும்.
 15. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 16. #7699
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  64,336
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  #857 to #859

  #857. யோகியரின் சிவத்தியானம்

  எல்லாக் கலையும் இடை, பிங்கலை, நடுச்
  சொல்லா நடுநாடி ஊடே, தொடர் மூலம்
  செல்லா எழுப்பிச் சிரத்துடன் சேர்தலால்
  நல்லோர் திருவடி நண்ணி நிற்பாரே.


  சந்திரன், சூரியன், அக்கினி இவற்றின் எல்லாக் கலைகளும் இடைகலை, பிங்கலை நடுநாடி இவற்றின் வழியே தொடர்பு உடையவை. இயல்பாகக் கீழே நோக்கும் இவற்றைத் தடுத்து, அவற்றை பார்வையை மாற்றிச் சிரசின் மேல் உள்ள சஹஸ்ரதளத்தில் பொருந்தி இருக்கும்படிச் செய்வர் சிவ யோகியர். அதனால் அவர்கள் எப்போதும் சிவத் தியானத்திலேயே பொருந்தி இருப்பர்.

  #858. சந்திர மண்டலம் காணும்


  அங்கியில் சின்ன கதிர் இரண்டு ஆட்டத்துத்
  தங்கிய தாரகை ஆகும் சசி பானு
  வாங்கிய தாரகை ஆகும் பரை ஒளி
  தங்கு நவச் சக்ரம் ஆகும் தரணிக்கே
  .

  மூலாதாரத்தில் உள்ள அக்கினி, இடைகலை, பிங்கலைகளின் அசைவினால் ஒளிரும். சந்திரக் கலைகள், சூரியக் கலைகள் நாதத்தை எழுப்பிக் கொண்டு உடலில் மேலே செல்லும். அப்போது அவை நாள்மீன்களைப் போலத் ஒளியுடன் தோன்றுவதால் அங்கே சந்திர மண்டலம் போலக் காட்சி அளிக்கும்.

  #859. பிரணவம் என்னும் பெருநெறி


  தரணி சலம் கனல் கால் தக்க வானம்
  அரணிய பானு, அருந்திங்கள் அங்கி
  முரணிய தாரகை முன்னிய ஒன்பான்
  பிரணவம் ஆகும் பெருநெறிதானே.


  நிலம், நீர், ஒளி, வளி, வெளி, சூரியன், சந்திரன், அக்கினி, சீவ ஒளி என்னும் ஒன்பதும் பிரணவம் என்னும் பெருநெறியாகும்.
 17. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 18. #7700
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  64,336
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  #860 to #862

  #860. வளர்பிறை, தேய்பிறை வேறுபாடு.

  தாரகை மின்னும் சசிதேயும் பக்கத்துத்
  தாரகை மின்னா சசிவளர் பக்கத்துத்
  தாரகைப் பூவில் சகலத்து யோனிகள்
  தாரகை தாரகை தான் ஆம் சொரூபமே.

  தேய் பிறையில் சந்திரன் கீழ் முகமாகப் போகும். அப்போது மூலாதாரத்தில் ஒளி பிரகாசமாகும். வளர் பிறையில் சந்திரன் மேல் முகமாகப் போகும் போது மூலாதாரம் பிரகாசிக்காது. மூலாதாரத்தில் உள்ள ஒளியில் எல்லா யோனிகளும் இருக்கின்றனன. சீவனின் வடிவம் மூலாதாரச் சக்கரத்துக்குக் காரணமான ஒளியைப் பொறுத்து அமையும்.

  தேய்பிறையில் மூலாதாரத்தின் சக்தி அதிகரிக்கும்
  வளர்பிறையில் மூலாதாரத்தின் சக்தி குறையும்.
  அப்போது சீவனின் மனம் மேல் நிலையை நாடும்.


  #861. வளர்பிறை அறிந்தால் திருவடி சேரலாம்


  முற்பதி னைஞ்சின் முளைத்துப் பெருத்திடும்
  பிற்பதி னைன்சிற் பெருத்துச் சிறித்திடும்
  அப்பதி னைஞ்சு மறிய வல்லார்க்குச்
  செப்பரி யான்கழல் சேர்தலு மாமே.


  சந்திரனின் கலைகள் முதல் பதினைந்து நாட்கள் சிறிது சிறிதாக வளர்ந்து முழுமை அடையும். அடுத்த பதினைந்து நாட்கள் சிறிது சிறிதாகத் தேய்ந்து குறைந்து விடும். அ என்ற எழுத்தால் குறிக்கப்படும் நிலவின் வளர்பிறையை நன்கு அறிந்தவர் செப்பரிய பெருமை வாய்ந்த சிவன் அடிகளைச் சேரவும்.

  #862. பிரணவம் ஒளிரும்


  அங்கி எழுப்பி அருங்கதிர் ஊட்டத்துத்
  தங்கும் சசியால்; தாமம் ஐந்தும் ஐந்து ஆகிப்
  பொங்கிய தாரகையாம் புலன் போக்கு அற,
  திங்கள், கதிர், அங்கி சேர்கின்ற யோகமே.


  மூலாதாரத்தில் உள்ள தீயை எழுப்ப வேண்டும். அது கதிரவன் மண்டலத்தைத் தாண்டி சந்திர மண்டலத்தை அடையும் போது அ , உ , ம நாதம், விந்து என்ற ஐந்தும் கலந்த பிரணவம் விளங்கும். ஐம் புலன்கள் வழியே செல்லாமல் சந்திர, சூரிய, அக்கினி மண்டலங்கள் இணைகின்ற நல்ல யோகம் வாய்க்கும்.
 19. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •