Tamil Brahmins
Page 761 of 761 FirstFirst ... 261661711751757758759760761
Results 7,601 to 7,604 of 7604
 1. #7601
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  60,525
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  2. இயமம்

  2. இயமம் = தீயவற்றைச் செய்யாது இருத்தல்


  #553 & #554

  #553. நால்வருக்கு உரைத்தான் சிவன்

  எழுந்து நீர் பெய்யினும் எட்டு திசையும்
  செழுந்தண் நியமங்கள் செய்மினென் றண்ணல்
  கொழுந்தண் பவளக் குளிர் சடையோடே
  யழுந்திய நால்வர்க் கருள் புரிந்தானே.


  எட்டுத் திசைகளிலும் மேகங்கள் குழுமிக் கன மழை பொழிந்தாலும் நன்மை தரும் இயமங்களைத் தவறாமல் செய்யுங்கள்! என்று கொழுவிய, குளிர்ந்த, பவள நிறச் சடையுடைய சிவபெருமான் சனகர் முதலான நால்வருக்கும் உரைத்தான்.

  #554. இயமத்தில் நீக்க வேண்டியவை


  கொல்லான், பொய்கூறான், களவுஇலான், எண் குணன்
  நல்லான் அடக்கம் உடையான் நடுசெய்ய
  வல்லான் பகுத்து உண்பான் மாசு இலான் கள் காமம்
  இல்லான் இமயத்து இடை நின்றானே.


  ஒரு உயிரையும் கொல்லாதவன், பொய் சொல்லாதவன், களவு செய்யாதவன், ஆராய்ச்சி செய்யும் தன்மை உடையவன், நல்லவன், பணிவு கொண்டவன், நீதி நேர்மைகளிலிருந்து பிறழாதவன், தன் உடமைப் பொருட்களைப் பிறருக்குப் பகிர்ந்து அளிப்பவன், குற்றமற்றவன், கள் காமம் இல்லாதவனே இயமத்தை மேற்கொள்ளத் தகுதி உடையவன் ஆவான் 2. #7602
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  60,525
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  3. நியமம்

  3. நியமம் = நல்லவற்றைச் செய்தல்

  #555 to #557

  #555. நியமத்தில் செய்ய வேண்டியது

  ஆதியை வேதத்தின் அப்பொருளானைச்
  சோதியை அங்கே சுடுகின்ற அங்கியைப்
  பாதியுள் மன்னும் பராசக்தி யோடு உடன்
  நீதி உணர்ந்து நியமத்தனாமே.


  நியமத்தை மேற்கொள்பவன் பழமையான சிவனை, நாத வடிவானவனை, பேரொளி வீசுபவனை, மூலாதாரத்தில் அக்கினி வடிவமாக இருப்பவனை, பிரிவில்லாமல் சக்தியுடன் கலந்து நிற்பவனின் இயல்பினை அறிந்து உணர்தல் வேண்டும்.

  #556. நியமத்தில் நிற்பதற்குத் தேவையானவை


  தூய்மை அருளூண் சுருக்கம் பொறைசெவ்வை
  வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றிவை
  காமம் களவு கொலையெனக் காண்பவை
  நேமி யீரைந்து நியமத்தானாமே.


  நியமத்தில் நிற்பவன் மேற்கொள்ள வேண்டிய பத்து குணங்கள் இவை :
  தூய்மை, அருள், சுருங்கிய உண்டி, பொறுமை, நேர்மை, உண்மை, உறுதியுடைமை என்ற நல்ல குணங்களை வளர்க்க வேண்டும். காமம், களவு, கொலை இவற்றைத் தவிர்க்க வேண்டும்.

  #557. நியமத்தில் செய்ய வேண்டியவை


  தவம் செபம். சந்தோடம் ஆத்திகாந் தானம்
  சிவன்றன் விரதமே சித்தாந்தக் கேள்வி
  மகஞ்சிவ பூசையொண் மதி சொல்லீர் ஐந்து
  நிவம்பல செய்யின் நியமத்தனாமே.


  நியமத்தில் உள்ளவன் செய்ய வேண்டியவை இவை:
  தவம், செபம், மகிழ்ச்சி, தெய்வ நம்பிக்கை, கொடைத்தன்மை, சிவ விரதம், சிந்தாந்த சிரவணம், வேள்வி செய்தல், சிவபூசை, பேரொளி தரிசனம் என்னும் பத்து ஆகும்


 3. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 4. #7603
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  60,525
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  4. ஆதனம்

  4. ஆதனம் = இருக்கை
  இதில் யோகத்தை மேற்கொள்வதற்குத் தகுந்த இருக்கை நிலைகள்
  மற்றும் அவற்றின் பயன்கள் பற்றிக் கூறப்படும்.

  #558 to #560

  #558. சுவத்திகாசனம்

  பங்கயம் ஆதிப் பரந்தபல் ஆதனம்
  இங்குள வாம் இருநாலும் அவற்றினுள்
  சொங்கு இல்லை ஆகச் சுவத்திகம் என மிகத்
  தங்க இருப்பத் தலைவனும் ஆமே.


  பத்மாசனம் முதலிய பல ஆசனங்கள் உள்ளன. அவற்றில் எட்டு ஆசனங்கள் மிக முக்கியமானவை. சோர்வு அடையாமல் சுவத்திக ஆசனத்தில் பொருந்தி இருக்கும் திறமை பெற்றவன் ஒரு நல்ல தலைவன் ஆவான்.

  #559. பத்மாசனம்


  ஓரணை யப்பதம் ஊருவின் மேலேறிட்டு
  ஆர வலித்ததன் மேலவைத் தழகுறச்
  சேர்திகழ் கைகள் அதனைத்தன் மேல்வைக்கப்
  பார்திகழ் பத்மா சனமென லாகுமே.


  ஒரு பக்கம் அணைந்த காலை தொடையின் மேல் ஏற்றி நன்கு இழுத்து வலது தொடையில் இடது காலையும் இடது தொடையில் வலது காலையும் வைக்க வேண்டும். இரு தொடைகளின் நடுவில் இரு கைகளையும் மலர்ந்த நிலையில் வைக்க வேண்டும். இதுவே உலகம் போற்றும் பத்மாசனம் ஆகும்.

  (மூக்கு முனையில் பார்வையைப் பதித்து, மார்பில் முகவாய்க் கட்டையைப் பதிக்க வேண்டும்)

  #560. பத்திராசனம்


  துரிசுஇல் வலக்காலைத் தோன்றவே மேல் வைத்து
  அரிய முழந்தாளில் அங்கைகளை நீட்டி
  உருகியிடும் உடல் செவ்வே இருத்திப்
  பரிசு பெரும் அது பத்திராசனமே.


  குற்றம் இல்லாத வலக்காலை இடது பக்கம் தொடையின் மீது வைக்க வேண்டும். கைகளை முழங்கால்களின் மீது நீட்ட வேண்டும். தளரும் உடலைச் செம்மையாக இருத்த வேண்டும். இதுவே பத்திராசனம்.

 5. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 6. #7604
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  60,525
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  #561 to #563


  #561. குக்குட ஆசனம்


  ஒக்க அடி இணை உருவில் ஏறிட்டு
  முக்கி உடலை முழங்கைதனில் ஏற்றித்
  தொக்க அறிந்து துளங்காது இருந்திடில்
  குக்குட ஆசனம் கொள்ளலும் ஆமே.


  பத்மாசனத்தில் சொல்லப் பட்டது போல இரண்டு பாதங்களையும் தொடைகளின் மேல் ஏற்றி வைக்க வேண்டும். கணுக் காலுக்கும் தொடைக்கும் இடையே இரு கைகளையும் நுழைத்துத் தரையில் பதிக்க வேண்டும். முக்கி உடலை மேலேற்றி முழங்கை வரையில் தூக்க வேண்டும். சம நிலை அறிந்து கொண்டு உடல் அசையாதபடி இருத்தல் குக்குட ஆசனம் ஆகும்.


  #562. சிம்மாதனம்


  பாதம் முழந்தாளில் பாணிகளை நீட்டி
  ஆதரவோடும் வாய் அங்காந்து அழகுறக்
  கோது இல் நயனம் கொடி மூக்கிலே உறச்
  சீர்திகழ் சிங்காதனம் எனச் செப்புமே.

  அமர்ந்து பாத நுனிகளை நிலத்தில் ஊன்ற வேண்டும். கைகளை முழங் கால்களின் மீது நீட்ட வேண்டும். வாயை அகலத் திறந்து கொண்டு கண் பார்வையை மூக்கின் நுனியில் இருத்த வேண்டும். இதுவே சிங்க ஆசனம் ஆகும்.


  #563. ஆதனங்கள் பல


  பத்திரங் கோமுகம் பங்கயங் கேசரி
  சொத்திரம் வீரம் சுகாதனம் மோரேழும்
  உத்தமு மாமுது வாசன மெட்டெட்டுப்
  பத்தோடு நூறு பல்லாசனமே.

  பத்திரம், கோமுகம், பங்கயம், கேசரி, சோத்திரம், வீர, சுகாதனம் என்ற ஏழும் மேலானவை. இவ்வண்ணம் நூற்று இருபத்தாறு வகைப்பட்ட ஆசனங்கள் உள்ளன. 7. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •