Tamil Brahmins
Page 751 of 764 FirstFirst ... 251651701741747748749750751752753754755761 ... LastLast
Results 7,501 to 7,510 of 7633
 1. #7501
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  60,925
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  12. அந்தணர்

  #224 to #228


  #224. அந்தணர்

  அந்தணர் ஆவோர் அறுதொழில் பூண்டுள்ளோர்
  செந்தழல் ஓம்பி முப்போதும் நியமம் செய்
  தம் தவ நற்கருமத்து நின்றுஆங்கு இட்டுச்
  சந்தியும் ஓதிச் சடங்கு அறுப்போர்களே.


  பிறவிப் பிணியை ஒழிக்கும் தொழில் செய்பவர் அந்தணர். அவர்கள் அக்கினி காரியங்களைத் தவறாமல் செய்பவர்கள்; மூன்று வேளைகளிலும் தமக்கு விதிக்கப்பட்ட வற்றைத் நாள் தவறாமல் செய்து வருபவர்கள் அந்தணர்கள். சந்தி கால நியமங்களையும் தவறாமல் செய்து வருபவர்கள்.


  #225. துரிய நிலையை அடைவர்


  வேதாந்தம் கேட்க விருப்பொடு முப்பதப்
  போதந்தமான பிரணவத் துள்புக்கு
  நாதாந்த வேதாந்த போதாந்த நாதனை
  ஈதாந்தம் எனாது கண்டு இன்புறுவோர்களே.


  அந்தணர் வேதாந்தம் ஆகிய உபநிடத்தின் உண்மையை அறியவதற்கு விரும்புவார்கள்.”தத் த்வம் அஸி” என்ற மூன்று சொற்கள் கூறும் மெய்ப் பொருளை உணர்ந்து; பிரணவத்தில் புகுந்து; நாதாந்த, வேதாந்த, போதாந்த நாதனைக் கண்டு; இதுவே முடிவு என்று எண்ணிவிடாமல்; எப்போதும் தூய துரிய நிலையில் விளங்குவார்கள்.


  #226. காயத்திரி


  காயத்திரியே கருது சாவித்திரி
  ஆய்தற்கு வப்பர் மந்திரம் ஆங்கு உன்னி
  நேயத்தேர் ஏறி நினைவுற்று நேயத்து ஆய்
  மாயத்துள் தோயா மறையோர்கள் தாமே.


  ஒளியை வேண்டிக் கதிரவனை வணங்குவதற்காக அந்தணர் அதற்குரிய காயத்திரி மந்திரத்தை விருப்பத்துடன் ஜபம் செய்வர். அன்பாகிய தேரில் ஏறி அமர்ந்து கொண்டு அந்தணர்கள் சிவம் என்னும் அறிய வேண்டிய பொருளுடன் பொருந்துவார். உடல், உலகம் என்னும் காரியங்களை வென்று விளங்குவர்.


  #227. அந்தணர் இயல்பு


  பெருநெறியான பிரணவ மோர்ந்து
  குருநெறி யாலுரை கூடிநால் வேதத்
  திருநெறியான கிரியை இருந்து
  சொரூபமதானோர் துகளில் பார்ப் பாரே.


  குற்றம் அற்ற அந்தணர்களின் இயல்புகள் இவை. முக்தி தரும் பிரணவத்தைத் தெளிவாக அறிவார்கள். குரு உபதேசத்தால் ‘தத்வமசி’ என்ற வாக்கியம் உணர்த்தும் பொருளைப் புரிந்து கொள்வார்கள். அத்வைத நெறியில் நிலை பெற்று நிற்பார்கள்.
  அகவழிபாட்டால் பிரம்ம ஸ்வரூபம் அடைவார்கள்.


  #228. பந்தம் அறுத்தல்


  சத்திய மும்தவம் ‘தான் அவன் ஆதலும்’
  எய்த்தகும் இந்தியம் ஈட்டியே வாட்டலும்
  ஒத்த உயிர்கள் உண்டாய் உணர்வற்றுப்
  பெத்தம் ஆறுத்தலும் ஆகும் பிரமமே.


  பிரம்மமாகவே மாறும் வழி இதுவே அறிவீர். சத்தியம் தவறாமை, உடலால் தவம் புரிதல், தற்போதத்தை அகற்றி விட்டு நடப்பவை எல்லாம் சிவன் செயல் என்று எண்ணுதல், அலைந்து திரிந்து களைப்படையும் இந்திரியங்களைப் புலன்களின் வழிப்போகாமல் தடுத்து நிறுத்துதல்; இருவினைகள் அற்றவர்களாக ஞானத்தை அடைதல், மற்றும் பந்தங்களை நீக்குதல் என்பவை ஆகும். 2. #7502
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  60,925
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  #229 to #233

  #229. வேதாந்தம்

  வேதாந்தம் கேட்க விரும்பிய வேதியர்
  வேதாந்தங் கேட்டுந்தம் வேட்கை யொழிந்திலர்
  வேதாந்தமாவது வேட்கை யொழிந்திடம்
  வேதாந்தம் கேட்டவர் வேட்கையை விட்டாரே.


  வேதத்தின் முடிவான உள்ளவை உபநிடதங்கள். வேதாந்தம் எனப்படுவவை இவையே ஆகும். வேதாந்தத்தைக் கேட்க விரும்பிய அந்தணர்கள் வேதாந்தத்தைக் கேட்ட பின்னும் ஆசைகளை விடவில்லை. வேதாந்தத்தின் முடிவு என்பது ஆசைகளின் அழிவு ஆகும். வேதந்தந்தின் பொருளை அறிந்தவர் ஆசைகளைத் துறந்தவர்.


  #230. நூலும், சிகையும்


  நூலுஞ் சிகையும் நுவலின் பிரமமோ
  நூலது கார்ப்பாச நுண்சிகை கேசமாம்
  நூலது வேதாந்த நுண்சிகை ஞானமாம்
  நூலுடை யந்தணர் காணு நுவலிலே.


  பூணூலும், குடுமியும் வைத்துக் கொள்வதால் மட்டும் ஒருவன் அந்தணன் ஆகிவிட முடியமா என்ன? பூணூல் என்பது வெறும் பருத்தியின் பஞ்சு ஆகும். குடுமி (சிகை) என்பது வெறும் தலை மயிர் ஆகும். இடகலை, பிங்கலை, சுழுமுனை என்னும் உடலின் மூன்று நாடிகளையும் ஒன்றாக ஆக்கி உணரவேண்டும். அதுவே ஆகும் முப்புரி நூலாகிய மெய்யான பூணூல்.


  #231. அந்தணன் அன்று


  சத்திய மின்றித் தனிஞானந் தானின்றி
  ஒத்தவிடயம் விட்டோரும் உணர்வின்றிப்
  பக்தியும் இன்றிப் பரனுண்மை இன்றிப்
  பித்தேறும் மூடர் பிராமணர் தாமன்றே.


  மெய்ப் பொருளைப் பற்றிய அறிவு இல்லாதவர்கள், தன்னைப் பற்றிய அறிவும் சிறிதும் இல்லாதவர்கள், ஆசைகளைத் துறந்து அதன் மூலம் உண்மையை உணரும் உணர்வு சிறிதும் இல்லாதவர்கள்; உண்மையான பக்தி என்பது இல்லாதவர்கள்; மேலான உண்மைப் பொருள் ஒன்று உண்டு என்ற மனத் தெளிவும் இல்லாதவர்கள்;அறியாமையிலே ஆழ்ந்திருப்பவர்கள் இவர்கள் உண்மையான அந்தணர்கள் ஆக மாட்டார்கள்.


  #232. புறக் கிரியைகள்


  திரநெறி ஆகிய சித்துஅசித்து இன்றிக்
  குரநெறி யாலே குருபதம் சேர்ந்து
  கரும நியமாதி கைவிட்டுக் காணும்
  துரிய சமாதியாம் தூய மறை யோர்க்கே.


  அறிவு, அறியாமை, இரண்டும் இல்லாதவர்கள்; குருவின் உபதேசத்தால்
  திருவடி அடைந்தவர்கள், பிரணவ நெறியில் நின்று அருட்செல்வம் ஈட்டியவர்கள், புறக்கிரியைகளை விட்டு துரிய நிலையில் பொருந்தி நிற்பார்.


  #233. வேதம் மட்டுமே ஓத வேண்டும்


  மறையோ ரவரே மறையவ ரானால்
  மறையோர்தம் வேதாந்தம் வாய்மையில் தூய்மை
  குறையோர் தன் மற்றுள்ள கோலாகலமென்று
  அறிவோர் மறைய தெரிந்தணராமே.


  வேதங்களின் பொருளை உணர்ந்து ஓதுகின்றவரே அந்தணர். தூய்மையானது மறைகளின் முடிவாகிய வேதாந்தமே ஆகும். வேதத்தைத் தவிர்த்து மற்ற நூல்கள் அனைத்தும் குறையுடையவை. அவற்றைக் கற்பதனால் எந்த விதப் பயனும் இல்லை. அந்தணர்கள் வேதத்தை மட்டுமே ஓத வேண்டும். ஆரவாரமான மற்றவற்றைத் தவிர்த்து விட வேண்டும். 3. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 4. #7503
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  60,925
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  #234 to #237

  #234. உண்மை அந்தணர்

  அந்தண்மை பூண்ட அருமறையந்தத்துச்
  சிந்தைசெய் அந்தணர் சேருஞ் செழும்புவி
  நந்துத லில்லை நரபதி நன்றாகும்
  அந்தியும் சந்தியும் ஆகுதி பண்ணுமே.


  உண்மையான அந்தணர்கள் என்பவர் இவர்களே! எல்லா உயிர்களிடத்தும் கருணை உள்ளம் கொண்டவர்கள். வேதங்களின் முடிவாகிய சிவனை இடையறாது சிந்தை செய்பவர்கள். இவர்கள் இருக்கும் பூமி வளமானது ஆகும்; வளம் குன்றவே குன்றாது! இவர்கள் நாட்டை ஆளும் தலைவனும் நல்லவன் ஆவான். அந்தணர்கள் தினம் தவறாமல் இருமுறை ஆகுதி செய்வார்கள்.

  #235. முக்தியும், சித்தியும் எய்துவர்!


  வேதாந்த ஞானம் விளங்க விதி இலோர்
  நாதாந்த போதம் நணுகிய போக்கது
  போதாந்த மாம்பரன் பால்புகப் புக்கதால்
  நாதாந்த முத்தியும் சித்தியு நண்ணுமே.


  வேதாந்த ஞானம் பெறுகின்ற நல்வினைப் பயன் இல்லாதவர்கள் நாதாந்தத்தில் உள்ள முக்தியாகிய பதத்தினை அடைவார்கள். அறிவின் எல்லையாகிய ஞானம் அடைந்தவர்கள் அதன் மூலம் பரத்தை அடைந்தால் அடைவர் நாதாந்த முக்தியுடன் சித்தியும்.

  #236. சிவனை நாடுவர்


  ஒன்று மிரண்டு மொருங்கிய காலத்து
  நன்றும் இருந்தும் நலம்பல பேசினும்
  வென்று விளங்கும் விகிர்தனை நாடுவர்
  சென்று வணங்கும் திருவுடையோரே.


  பிராணன், உள்வாங்கும் மூச்சு, வெளிவிடும் மூச்சு இவை அடங்கும் போது நன்றாக இருந்து கொண்டு நல்லவற்றைப் பற்றிப் பேசிக் கொண்டு இருந்தாலும் எல்லாவற்றுக்கும் மேலான முக்தியை விழைபவர்கள் எல்லாவற்றையும் கடந்து விளங்கும் சிவனையே நாடுவார்கள்.

  #237. பற்று நீங்கும்


  தானே விடும் பற்று இரண்டும் தரித்திட
  நானே விடப்படும் ஏது ஒன்றை நாடாது;
  பூமேவு நான்முகன் புண்ணியப் போகனாய்
  ஓம் மேவும் ஓராகுதி அவி உண்ணவே.


  இறைவனை நினைக்க நினைக்க அகன்று விடும் நான் என்ற அகப் பற்றும், எனது என்ற புறப்பற்றும். அஹங்காரம் முற்றிலும் அழிந்து போகும். பிறகு பொருட்களில் உள்ள நாட்டம் போய்விடும். தாமரை மலரில அம்ர்ந்துள்ள பிரம்மனைப் போல புண்ணியம் ஒன்றையே நாடி ஆகுதிகள் செய்து, வேள்வி அவியை உண்டால் ஓம் ஆகிய சிவனே வந்து பொருந்துவான்.
 5. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 6. #7504
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  60,925
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  13. ராச தோடம் (அரசனின் குற்றங்கள்)

  #238 to #242


  #238. காலன் நல்லவன்!

  கல்லா அரசனும் காலனும் நேர் ஒப்பர்
  கல்லா அரசனிற் காலன் மிக நல்லன்
  கல்லா அரசன் அறம் ஓரான் கொல் என்பான்
  நல்லாரைக் காலன் நணுக நில்லானே.


  கற்க வேண்டியவற்றைக் கற்று அறியாத மன்னனும் உயிர்களைப் பறிக்கும் காலனும் ஒப்பானவர்கள் ஆவர். கல்வி அறிவு பெறாத மன்னனைவிடக் காலன் நல்லவன். கல்வி கற்காத மன்னன் அறவழியில் நில்லான். நல்லவர்களைக் கொல் என்று ஆணையிடுவான். காலன் நல்வழியில் நிற்பவர்களை அணுக மாட்டான்.


  #239. வளம் குறையும்


  நாள்தோறும் மன்னவன் நாட்டில் தவநெறி
  நாள்தோறும் நாடி அவநெறி நாடானேல்
  நாள்தோறும் நாடு கெட மூடம் நண்ணுமால்
  நாள்தோறும் செல்வம் நரபதி குன்றுமே.


  மன்னன் நாள்தோறும் நன்நெறியை ஆராய வேண்டும். நாள்தோறும் அவன் நீதி நெறிப்படி ஆட்சி செய்ய வேண்டும்.
  அப்படிச் செய்யத் தவறினால் அந்த நாட்டின் வளம் நாள் தோறும் குன்றிக் குறைந்து போய்விடும். மக்களிடம் அறியாமை பெருகிவிடும். மன்னனின் செல்வம் குறைந்து விடும்.


  #240. வேடமும் நெறியும்


  வேடநெறி நில்லார் வேடம்பூண்டு என்பயன்
  வேடநெறி நிற்போர் வேடம் மெய்வேடமே
  வேடநெறி நில்லார் தம்மை விறல்வேந்தன்
  வேடநெறி செய்தால் வீடுஅது ஆமே.


  ஏற்றக் கொண்ட வேடத்துக்கு ஏற்ப ஒருவனின் அகமும் புறமும் ஒத்து இருக்காவிட்டால் அவன் புனைந்து கொண்ட வேடத்தால் என்ன பயன்? ஏற்றுக் கொண்ட வேடத்துக்கு ஏற்ப நிற்பவர் வேடமே உண்மையில் அதற்கேற்ற பயனைத் தருவது கண்கூடுவேடத்துக்கு ஏற்ப நடக்காதவரைக் கண்டித்தும் தண்டித்தும் அவனை நல்வழியில் நிற்கச் செய்யும் மன்னனுக்கு வீடுபேறு கிடைக்கும்.


  #241. வேண்டாம் ஆடம்பரம்


  மூடங் கொடாதோர் சிகைநூல் முதற்கொள்ளில்
  வாடும் புவியும் பெருவாழ்வு மன்னனும்
  பீடொன் றிலனாகு மாதலாற் பேர்த்துணர்
  ந்து
  ஆடம் பரநூல் சிகையறுத் தானன்றே.


  அறியாமை நீங்கப் பெறாதவர்கள் அந்தணருக்குரிய சிகை, பூணூல் முதலியவற்றை கைக் கொண்டால் அந்தச் செய்கையால் வருந்தும் இந்த மண்ணுலகு! மன்னனின் பெருவாழ்வும், பெருமையும் அழிந்துவிடும். ஏற்கும் வேடத்தின் உண்மைத் தன்மையை நன்கு ஆராய்ந்து அறிந்துகொண்டு, வெறும் ஆடம்பரத்க்காக அணிந்து கொண்டுள்ள பூணூலையும், சிகையையும் துறந்து விடுவது நாட்டுக்கு நன்மை தரும்.


  #242. சோதிக்க வேண்டும்


  ஞானமி லாதார் சாடி சிகை நூல்நண்ணி
  ஞானிகள் போல நடக்கின் றவர்தமை
  ஞானிகளாலே நரபதி சோதித்து
  ஞானமுண் டாக்குதல் நலமாகும் நாட்டுக்கே.


  ஞானம் அடையாதவர்கள் வெறுமனே வேடம் அணிந்து கொண்டு, சடை, குடுமி, பூணூல் இவற்றுடன் ஞானிகள் போல நடமாடினால், அரசன் ஞானியரைக் கொண்டே அவர்களை நன்கு சோதிக்க வேண்டும். அவர்களை ஞானம் பெறுமாறு செய்வது நாட்டுக்கு நலம் பயக்கும். 7. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 8. #7505
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  60,925
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  #243 to #247

  #243. மீளா நரகம்

  ஆவையும், பாவையும், மற்றுஅற வோரையும்,
  தேவர்கள் போற்றும் திருவேடத் தாரையும்
  காவலன் காப்பவன்; காவது ஒழிவானேல்
  மேவும் மறுமைக்கும் மீளாநரகமே.


  ஆவினம், பெண்கள், அறவழியில் நிற்பவர்கள், தேவர்களும் தொழும் திருவேடம் புனைந்தவர்கள், இவர்களை ஒரு மன்னன் காப்பாற்ற வேண்டும். அங்ஙனம் காக்கத் தவறி விட்ட மன்னன் மீள முடியாத நரகத்தைச் சென்று அடைவான்.


  #244. ஆறில் ஒரு பங்கு


  திறம்தரு முத்தியும் செல்வமும் வேண்டின்
  மறந்தும் அறநெறியே ஆற்றல் வேண்டும்;
  சிறந்தநீர் ஞாலம் செய்தொழில் யாவையும்
  அறைந்திடில் வேந்தனுக்கு ஆறில் ஒன்று ஆமே.


  மறுமையில் முக்தியையும், இம்மையில் செல்வமும், பெற விரும்புகின்ற ஒரு மன்னன் செய்ய வேண்டியது இது. அவன் அறத்தையே எப்போதும் நிலை நாட்ட வேண்டும். கடல் சூழுலகில் மக்கள் செய்யும் நல்வினைகள் தீவினைகள் அனைத்திலும் ஆறில் ஒரு பங்கு அரசனையே சாரும்.


  #245. மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி!


  வேந்தன் உலகைக் மிக நன்று காப்பது
  வாய்ந்த மனிதர்கள் அவ்வழியா நிற்பர்;
  பேர்ந்து இவ்உலகைப் பிறர் கொள்ளத் தாங்கொள்ளப்
  பாய்ந்த புலி அன்ன பாவகத்தானே.


  மன்னன் உலகைக் காக்கும் திறன் மிகவும் நன்றாக உள்ளது. அவன் நாட்டு மக்களும் அவனைப் போலவே இருப்பார்கள். பகைமை பூண்ட அயல் நாட்டு மன்னன் இவன் நாட்டைக் கைப்பற்றுவான். அதே போன்று இவன் அயல் நாட்டைக் கைப் பற்றுவான். விளைவுகளை ஆராயாது பாய்கின்ற மன்னனுக்கும் காட்டுப் புலிக்கும் என்ன வேறுபாடு உள்ளது?


  #246. வேந்தர் கடன்


  கால்கொண்டு கட்டிக் கனல் கொண்டு மேலேற்றிப்
  பால் கொண்டு சோமன் முகம்பற்றி உண்ணாதோர்
  மால்கொண்டு தேறலை யுண்ணும் மருளரை
  மேல்கொண்டு தண்டஞ் செய்வேந்தன் கடனே.


  மூச்சுக் காற்றின் இயக்கத்தைத் தடுக்க வேண்டும். மூலாதாரத்தில் உள்ள கனலை மேலேற்ற வேண்டும். பால் போன்று நிலவும் வெண்ணிற ஒளியின் உதவியால் மதி மண்டலத்தைக் கண்டு கொள்ள வேண்டும். அங்கு பொழியும் ஆனந்தத் தேனைப் பருக வேண்டும். இதை விட்டு விட்டு ஆனந்தம் தரும் என்று மயங்கி, மயக்கம் தரும் கள்ளை அருந்தி மேலும் மயங்காமல், மக்களைக் காப்பது ஒரு நல்ல மன்னனின் கடமை ஆகும்.


  #247. சமயவாதிகள்


  தத்தம் சமயத் தகுதி நில் லாதாரை
  அத்தன் சிவன்சொன்ன ஆகம நூல்நெறி
  எத்தண் டமும்செயும் அம்மையில் இம்மைக்கே
  மெய்த்தண் டம்செய்வது அவ் வேந்தன் கடனே.


  தங்களுக்கு உரிய சமய நெறியில் நிற்காதவர்களைச் சிவபெருமான் ஆகம நெறிப்படி மறு பிறவியில் தண்டனை தந்து திருந்துவான். இந்தப் பிறவிலேயே தகுந்த தண்டனை தந்து அவர்களைத் திருத்துவது ஒரு நல்ல மன்னனின் கடமைகளில் ஒன்று ஆகும். 9. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 10. #7506
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  60,925
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  14. வானச் சிறப்பு.

  #248 and #249

  #248. அமுதூறு மாமழை

  அமுதூறு மாமழை நீரத னாலே
  அமுதூறும் பன்மரம் பார்மிசை தோற்றும்
  கமுகூறு தெங்கு கரும்பொடு வாழை
  அமுதூறுங் காஞ்சிரை ஆங்கது வாமே.


  அமுதம் போன்ற மழைப் பொழிவினால் உலகம் எங்கும் வளமையும் பசுமையும் பெருகும். சுவையான கனிகள் கொண்ட மரங்கள் வளரும். பாக்கு, இளநீர் தரும் தெங்கு, கரும்பு, வாழை இவற்றோடு சமாதி நிலைக்கான மூலிகை காஞ்சிரையும் தோன்றி வளரும்.


  #249. நுரையும் கரையும் இல்லை


  வரை இடைநின்றுஇழி வான்நீர் அருவி
  உரை இல்லை, உள்ளத்து அகத்து நின்று ஊறும்;
  நுரை இல்லை, மாசு இல்லை, நுண்ணிது தெள்நீர்;
  கரை இல்லை எந்தை கழுமணி ஆறே.


  சிவனின் தலை ஆகிய மலையில் இருந்து பெருகுவது ஒளிமயமான கங்கை. அதன் பெருமையை உரைப்பதற்கு இல்லைப் பொருத்தமான வார்த்தைகள் . உள்ளத்தில் அன்பினால் ஊறுவதனால் அதில் நுரை இருக்காது; மாசு இருக்காது; தெளிந்த அந்த நீர் கரையில்லாதது; பரந்து அகன்று ஓடுவது; பாவங்களை அழிப்பது. 11. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 12. #7507
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  60,925
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  15. தானச் சிறப்பு

  #250. ஒல்லை உண்ணன்மின்

  ஆர்க்கும் இடுமின் அவர் இவர் என்னன்மின்
  பார்த்து இருந்து உண்மின் பழம்பொருள் போற்றன்மின்
  வேட்கை உடையீர் விரைந்து ஒல்லை உண்ணன்மின்
  காக்கை கரைந்து உண்ணும் காலம் அறிமினே.


  எல்லோருக்கும் கொடுங்கள். அவர் உயர்ந்தவர்! இவர் தாழ்ந்தவர் என்று வேறுபடுத்திப் பேசாதீர்கள். வரும் விருந்தாளியை எதிர் நோக்கி இருங்கள். அவருடன் சேர்ந்து உணவைப் பகிர்ந்து உண்ணுங்கள். பழைய உணவைப் போற்றிக் காவாதீர்கள். இம்மையிலும் மறுமையிலும் விருப்பம் கொண்டவர்களே! விரைவாக உணவை உண்ண வேண்டாம். காகங்கள் கூட உண்ணும் பொழுது தன் இனத்தைக் கரைந்து அழைத்து உணவைப் பகிர்ந்து உண்ணும் என்பதை அறிவீர்.


 13. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 14. #7508
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  60,925
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  16. அறம் செய்வான் திறம்

  #251. தாம் அறிவார்

  தாம் அறிவார் அண்ணல் தாள் பணிவார் அவர்
  தாம் அறிவார் அறம் தாங்கி நின்றார் அவர்;
  தாம் அறிவார் சில தத்துவர் ஆவார்கள்;
  தாம் அறிவார்க்குத் தமர் பரன் ஆமே.


  தம்மை அறிந்தவர் சிவபெருமானது திருவடிகளை வணங்குவர். தம்மை அறிந்தவர் அறத்தை மேற்கொண்டு செய்து செய்து வருவர். தம்மை அறிந்தவர் உண்மையை உணரும் தத்துவர்கள் ஆவர். தம்மை அறிந்தவர்க்கு இறைவனே உறவினன் ஆவான்.

  #252. செய்ய முடிந்தவை, செய்ய வேண்டியவை!


  யாவர்க்கும் ஆம் இறைவற்கு ஒரு பச்சிலை
  யாவர்க்கும் ஆம் பசுவுக்கு ஒரு வாயுறை
  யாவர்க்கும் ஆம் உண்ணும் போது ஒரு கைப்பிடி
  யாவர்க்கும் ஆம் பிறர்க்கு இன்னுரைதானே.


  எல்லோராலும் செய்ய முடிந்த செயல்கள் இவை. உணவு உண்ண அமரும் முன்னர் இறைவனுக்கு ஒரு வில்வத்தைச் சமர்பித்தல்; தினமும் ஒரு பசுவுக்கு ஒரு கைப்பிடி பச்சைப் புல்லை அளித்தல்; தான் உண்ணும் முன்னர் பிறர் ஒருவருக்கு ஒரு கவளம் உணவு அளித்தல், எல்லாரிடமும் இனிய சொற்களைப் பேசுதல். இவற்றை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும்.

  #253. பயன் அறியார்.


  அற்றுநின்றார் உண்ணும் ஊணே அரன்என்னும்
  கற்றன போதம் கமழ்பவர் மானிடர்
  உற்று நின்று ஆங்கு ஒரு கூவற் குளத்தினில்
  பற்றி வந்து உண்ணும் பயன் அறியாரே.


  அகப் பற்றும், புறப் பற்றும் நீங்கியவர்கள் சிவஞானியர். உணவை நாடி அவர்கள் எங்கும் செல்ல மாட்டார்கள்.
  அவர்களைத் தேடிச் சென்று நாம் அளிப்பதே உணவே அறம். இந்த உண்மையை அறிந்த பிறகும் கல்வியில் சிறந்து விளங்குபவர்கள் பலர் ஒரு கிணற்றங் கரையிலோ, குளத்தங் கரையிலோ தங்கி இருக்கும் ஞானியரை வருந்தி வருந்தி அழைத்து வந்து உணவு அளிப்பதிலையே!

  #254. அறம் செய்வீர்


  அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
  தழுக்கிய நாளில் தருமம் செய்வீர்
  விழித்திருந்து என் செய்வீர் வெம்மை பரந்து
  விழிக்க அன்று என் செய்வீர் ஏழை நெஞ்சீரே.


  மன மலங்களை அகற்றி அறிவைப் பெருக்கிக் கொள்ளவில்லை. செல்வம் இருந்தபோதிலும் அறச் செயல்களைச் செய்யவில்லை. உலகில் இப்படிக் காலத்தைக் கழிப்பதால் என்ன பயன் விளையும்? நெருப்பில் உடல் எரியும் போது அறம் செய்யாதவர் நிலை என்னவாகும்? அறம் செய்யும் உள்ளத்தைப் பெறாத மனிதர்களே! இதனைச் சிந்தியுங்கள்!

  #255. தவம் செய்வீர்.


  தன்னை அறியாது, தாம் நல்லார் என்னாது, இங்கு
  இன்மை அறியாது, இளையர் என்று ஓராது,
  வன்மையில் வந்திடும் கூற்றம் வருமுன்னம்
  தன்மையின் நல்ல தவம் செய்யும் நீரே.


  உயிர்களைக் கவரும் யமன் இவற்றைச் சிந்திக்க மாட்டான். உன் நிலைமையை பற்றி சிறிதும் சிந்திக்க மாட்டான். நீங்கள் மிகவும் நல்லவர் என்ற சிந்திக்க மாட்டான்.நீங்கள் வறுமையில் வாடுவதையும் சிந்திக்க மாட்டான். நீங்கள் வயதில் இளையவர் என்றும் சிந்திக்க மாட்டான். வலிமை உடைய யமன் வந்து சேரும் முன்பே நீங்கள் உடலை நிலைக்கச் செய்யும் அரிய தவத்தை மேற்கொள்வீர்!
  Last edited by Visalakshi Ramani; 17-09-2017 at 10:48 PM.
 15. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 16. #7509
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  60,925
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  #256 to #259

  #256. அறம் செய்யும் முறை

  துறந்தான் வழிமுதல் சுற்றமும் இல்லை;
  இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
  மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
  அறந்தான் அறியும் அளவு அறியாரே.


  அகப் பற்று புறப் பற்று இரண்டையும் துறந்து விட்டால் அவர்களுக்கு இல்லை எந்த விதமான உறவுமுறைகளும். இறந்து விட்டவர்களுக்கு இல்லை எந்த விதமான உலக இன்பமும். அறம் செய்ய மறந்தவனுக்கு வழித் துணையாக வரமாட்டான் ஈசன். இந்த மூன்று வகைப் பட்டவர்களுமே அறம் செய்யும் முறையை அறியார்.

  #257. உடலைப் பேணுவீர்!


  தான்தவம் செய்வது ஆம் செய் தவத்து அவ்வழி
  மான்தெய்வமாக மதிக்கும் மனிதர்கள்
  ஊன் தெய்வமாக உயிர்க்கின்ற பல்லுயிர்
  நான் தெய்வம் என்று நமன் வருவானே.


  அறிவைத் தெய்வமாக மதிக்கும் மனிதர்கள், தாம் முற்பிறப்பில் செய்த தவத்தின் பயனாக இப்பிறவியிலும் தவம் செய்து மேன்மை அடைவர். உடலே தெய்வம் என்று மதிக்கும் அறிவற்ற மனிதர்கள் தாமே தெய்வம் என்று எண்ணி அறம் செய்யாது வாழ்வர். யமன் வருவதை அறியாது வீணே அழிந்து போவர்.

  #258. மறுமைக்குத் துணை


  திளைக்கும் வினைக்கடல் தீர்வு உறுதோணி
  இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு;
  கிளைக்கும் தனக்கும் அக்கேடு இல் புகழோன்
  விளைக்கும் தவம் அறம் மேல்துணை ஆமே.


  நல்வினைகள், தீவினைகள் இரண்டும் கலந்து ஒரு பெரும் கடலாக மாறி நம்மை அதில் அமிழ்த்து விடும். அதில் மூழ்காமல் பத்திரமாகக் கரையேறுவதற்கு நமக்கும் நம் உறவுகளுக்கும் களைப்பைப் போக்கி உதவுகின்ற தோணிகளாக இரண்டு வழிகள் உள்ளன. அழியாப் புகழை உடைய இறைவனைப் பற்றிக் கொண்டு அறச் செயல்களைப் புரிந்து வாழ்வது ஒரு வழி. இல் வாழ்வில் இருந்து கொண்டே அறச் செயல்களைப் புரிந்து கொண்டு வாழ்வது மற்றொரு வழி. இரண்டுமே மறுமைக்குத் துணையாம்.

  #259. சிவன் செய்த வழி


  பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை
  அற்ற முரையான் அறநெறிக் கல்லது
  உற்றங்க ளாலொன்று மீந்தது வேதுணை
  மற்றண்ணல் வைத்த வழி கொள்ளு மாறே.


  உலகுக்கு ஆதாரமாக இருப்பவன் இறைவன். அவனைக் குற்றம் கூறாமல் இருத்தல் வேண்டும். அறநெறியை விடுத்துப் பிற நெறிகளில் செல்லாது இருக்க வேண்டும். மற்றவர்களுக்கு நாம் கொடுப்பதே நமக்குத் துணையாக மாறி வரும். இதுவே சிவன் நாம் முக்தி அடைவதற்கு ஏற்படுத்தியுள்ள வழியாகும்.
 17. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.
 18. #7510
  Join Date
  Sep 2010
  Location
  Coimbatore, India
  Posts
  60,925
  Downloads
  0
  Uploads
  0

  0 Not allowed!
  17. அறம் செய்யான் திறம்

  #260 to #264


  #260. பயன் அறியார்!

  எட்டி பழுத்த, இருங்கனி வீழ்ந்தன,
  ஒட்டோய நல்லறம் செய்யாதவர் செல்வம்
  வட்டிகொண்டு ஈட்டியே மண்ணில் முகந்திடும்
  பட்டிப் பதகர் பயன் அறியாரே.


  எட்டி மரம் பழுத்தது. பெரிய கனிகள் தரையில் வீழ்ந்தன. ஆனால் யாரும் அவற்றை நாடிச் செல்லவில்லை. வட்டி வாங்கி உலகில் பெரும் பொருள் சேர்ப்பவர் அதன் உண்மையான பயனை அறியார். அறம் செய்யார். அவர்கள் செல்வமும் எட்டிக் கனிகள் போன்று பயனற்றவையே.


  #261.அறம் அறியார்


  ஒழிந்தன காலங்கள்; ஊழியும்போயின;
  கழித்தன கற்பனை; நாளும் குறுகிப்
  பிழிந்தன போலத் தம் பேரிடர் ஆக்கை
  அழிந்தன கண்டும் அறம் அறியாரே.


  காலம் கழிந்து சென்றது. ஊழிகள் ஓடிச் சென்றன. கற்பனைகள் எல்லாம் கனவாகி மறைந்து விட்டன. வாழ்நாட்கள் குறுகின. உடல் சாறு பிழிந்த சக்கையானது. பலவிதத் துன்புற்ற பின்னர் அந்த உடல்கள் அழிந்து பட்டன. இவற்றை எல்லாம் கண்ட பிறகும் உலகத்தவர் அறம் என்பதையே அறியாதவர்களாக இருகின்றார்களே!


  #262. பிறப்பும், இறப்பும்


  அறம் அறியார், அண்ணல் பாதம் நினையும்
  திறம் அறியார், சிவலோக நகர்க்குப்
  புறம் அறியார் பலர் பொய்ம்மொழி கேட்டு
  மறம் அறிவார், பகை மன்னி நின்றாரே.


  அறம் என்பதையே அறியாமல் பலர் உலகில் வாழ்கின்றனர். இறைவனைத் துதிக்கும் திறன் என்பதையும் இவர் அறியார்.
  சிவலோகத்தின் பக்கமான சுவர்க்கம் போன்றவற்றையும் அறியார். லௌகீக வாழ்வில் பற்பல பொய்மொழிகளைக் கேட்கின்றனர். பலவிதமான பாவச் செயல்களை இவர்கள் செய்கின்றனர். அதனால் பிறப்பு இறப்பு என்றவற்றில் இவர்கள் பொருந்தி நிற்கின்றனர்.


  #263. அறம் செய்யாவிட்டால்


  இருமலும் சோகையும் ஈளையும் வெப்பும்
  தருமம் செய்யாதவர் தம்பாலது ஆகும்;
  உரும், இடி, நாகம், உரோணி, கழலை
  தருமம் செய்வார் பக்கல் தாழகிலாவே.


  அறம் செய்யாதவர்க்கு வந்து விளையும் இருமல், சோகை, கோழை, ஜுரம் போன்றவை. மின்னலும் , இடியும், பாம்பும், தொண்டை நோயும், கட்டிகளும் அறம் செய்பவர்களை ஒரு நாளும் அண்டாது.


  #264. நரகத்தே நிற்றிரோ?


  பரவப் படுவான் பரமனை ஏத்தார்,
  இரவலர்க்கு ஈதலை ஆயினும் ஈயார்,
  கரகத்தால் நீர் அட்டிக் காவை வளர்க்கார்
  நரகத்தே நிற்றிரோ நல்நெஞ்சி னீரே.


  தன் புகழையே என்றும் விரும்பி வாழ்வார். இறைவனைப் பணிந்து வணங்க மாட்டார். தன்னை அண்டி இரந்து நிற்பவற்கு ஏதும் ஈயார். குடத்தால் நீர் ஊற்றி வழிப் போக்கர்கள் தங்குவதற்குக் குளிர்ந்த சோலைகளையும் வளர்க்க மாட்டார்கள். இத்தகைய நல்ல மனம் படைத்தவர்களே! நீங்கள் நரகத்தில் நிலையாக இருக்க விரும்புகின்றீர்களோ? 19. All views expressed by the Members and Moderators here are that of the individuals only and do not reflect the official policy or view of the TamilBrahmins.com Website.
  If you are having a problem with a particular thread or user, please use the "REPORT POST" button beside the offending post to inform us or raise a complaint.

Posting Permissions

 • You may not post new threads
 • You may not post replies
 • You may not post attachments
 • You may not edit your posts
 •