• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பயணக் க(வி)தைகள்...

கடல் கடந்த நான்காம் அனுபவம் - 48

எத்தனை வகை விடியோ விளையாட்டுக்கள் அங்கே!
அத்தனையும் ரசித்து, விளையாடி மகிழ்ந்தான் அவன்.


மற்றவர் அருகிலுள்ள சிற்றுண்டி உணவகத்திலிருந்து,
சற்றே பசியாற, சில பதார்த்தங்கள் வாங்கி வந்தோம்.

நொறுக்குத் தீனிகளில் பல வகைகளை உண்டு - சரீரம்
பெருத்துக் கஷ்டப்படும் பல மனித, மனிதிகள் உண்டு!

விளையாடிச் சலித்த பின், தொட்டி கிளாஸ் ஒன்றில்
விரும்பிய கோலாவும், ஃபிங்கர் சிப்ஸும் அவனுக்கு!

மீண்டும் இனிய இல்லம்; கொஞ்சம் ஓய்வு; அதன் பின்
மீண்டும் அழகிய பீச்சில் நடைப் பயிற்சி; இருட்டியது!

மாலுக்குச் செல்லாமல் இருக்கலாமோ? அருகிலுள்ள
மாலுக்கு, மறு நாள் காலை, பெண்கள் மட்டும் சென்று,

ஓடி வந்து அணைக்கும் குழந்தைகளுக்காக, அழகான
ஆடைகளை வாங்கி, காஃபி கடை விஜயமும் செய்து,

அன்றைய காலைப் பொழுதைக் கழித்தோம். மாலை
அங்கிருந்த பெரிய டிவியில், ட்யூப் கச்சேரிகள கேட்டு,

செவிக்கும் உணவளித்தோம்! அடுத்த நாள் விடியலில்,
சென்றனர் தம் ஊருக்கு, தங்கையும் அவர் கணவரும்.

எங்களை ஏர் போர்ட்டுக்கு, காரில் அழைத்துச் செல்ல,
தங்கை மகன் ஒப்புக் கொண்டான்; அதைச் செய்தான்.

தொடரும் .................. :plane:
 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 49

ஒரு விஷயம் சொல்ல மறந்தேன்! அந்த விஷயத்தை
ஒரு உணவகத்தில், ஒரு பெண்மணிதான் உரைத்தாள்.


Biker's day என ஒரு கோலாகலம் உண்டு இந்த நாட்டில்!
Bike களில் ஆண் - பெண் ஜோடிகள் ஏறி, படு வேகத்தில்,

கொத்துக் கொத்தாக ஊர்வலம் வரும் திருவிழா அது!
கொஞ்சம் சத்தம் போதாதே; எனவே ஸைலன்ஸர்கள்

அகற்றி, எறியப்படும்; பைக்குகளின் அதிரடி ஒலிகளை
அகம் மகிழக் கேட்டபடி, அந்த ஜோடிகள் உலவி வரும்!

ஒரு முறை, ஆடைகள் ஏதும் இன்றி, பிறந்த மேனியாக
ஒரு கூட்டம், அந்த உணவகத்தில் நுழைந்துவிட்டதாம்!

மிகக் கடினமாயிற்றாம் அவர்களைச் சமாளிக்க, என்று
முகத்தில் மிறட்சியுடன் கூறிப் பெரிதாய்ச் சிரித்தாள்!

நடிகர் திலகம் சிவாஜி கூட, இந்த மின்னல் வேகத்தில்
நடிப்புத் திறன் காட்ட மாட்டார், அவளின் முகம் போல்!

சுதந்திர தேவி உள்ள நாடுதான் எனினும், ஆடையின்றி
சுதந்திரமாகவா உலவி வருவார்கள்? மிகக் கொடுமை!

இஷ்டப்படி உடுத்துவார்கள்; நாம் அவர்களைக் காணக்
கஷ்டமெனில், வேறு திசையில் திரும்ப வேண்டியதே!

முன் இரவில் விமானம் ஏறினோம்; பாஸ்டன் அடைய
ப்
பின் இரவு ஆகிவிட்டது; மகன் எங்களை வரவேற்றான்!

தொடரும் .........................

 
hi

this bikers make a lot of problems...but one thing...snow days can't ride bike....they can't show their body tooo...many

are having HEAVY TATOOS in their bodies..
 
:lol:

dc5fa4ce8678afa049d61bab00181c74.jpg
 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 50

சங்கீதம் கற்றுக்கொள்ள ஆவல் கொண்ட குட்டிப் பெண்,
சங்கீத வகுப்புக்களுக்குத் தன் தோழியையும் அழைக்க,

நல்ல நாள் ஒன்றில் வகுப்பைத் தொடங்கியிருந்தேன்.
நல்ல ஆர்வத்துடன் குழந்தைகளும் பயின்றனர். ஆனால்,

ஸ்வர வரிசைகளே அஸ்திவாரம் என்று ஆரம்பித்தால்,
ஸ்வாரஸ்யமே இல்லாமல் போய்விடுமே அவர்களுக்கு!

ஒரு வரிசை முடிந்தவுடன், சில குட்டிப் பாடல்கள், என்று
இருவருக்கும் கற்பிக்க, மிக அழகாகப் பாடி மகிழ்ந்தனர்.

எங்களுக்கு ஆடியன்ஸும் சில நாட்களில் இருப்பார்கள்!
தங்கள் பேத்தி பாடுவதைக் கேட்க வருவார்கள் அவர்கள்.

சின்ன அரட்டைக் கச்சேரியும், வகுப்பு முடிந்ததும் உண்டு;
சின்ன தேநீர் பார்ட்டிகூட அதனுடன் தொடருவது உண்டு!

அழகான பாவடை சட்டை அணிவித்து, அலங்கரித்த பின்,
அழகான மேடையில் பாட வைக்க ஆவல் வந்துவிட்டது!

பன்னிரண்டு பாடல்கள் கற்ற பின்னரே, ஆலோசிக்கலாம்
சின்னதாக ஒரு கச்சேரி செய்வதை, என்று உரைத்தேன்!

அந்த நாளும் வந்துவிட்டது! குழந்தைகள் ஆவலுடன் ரெடி!
அழகான ஒரு கார்பெட்டு சாப்பாட்டு மேஜை மீது படர்ந்தது!

குழந்தைகள் பாட, நான் கீ போர்டில் வாசிக்க, செவிகளில்
நுழைந்தது சங்கீதத் தேன்! ஆரவாரம் செய்து மகிழ்ந்தோம்!

தொடரும்.......................

 
நீண்ட இடைவெளி ஆகிவிட்டது!

விரைவில் மற்ற அனுபவங்கள் தொடரும்! :)
 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 51

இந்த ஊரில்தான் இரு ஜண்டை வரிசைகள் கற்ற உடனே,
அந்தக் குழந்தைகளை மேடை ஏற்றி ஊக்குவிக்கின்றாரே!

பன்னிரண்டு குட்டிப் பாடல்கள் போதாதா, அந்த இருவரும்
பக்தியுடன் ஒரு குட்டிக் கச்சேரி பாடி, எம்மை மகிழ்விக்க?

என் குருநாதர் கூறுவார் சின்ன வேடிக்கைக் கதை ஒன்றை!
தன் குருவிடம் ஜண்டை வரிசை கற்க ஆரம்பித்த சிஷ்யன்,

மறு நாளே, பழங்கள் நிறைந்த தட்டினை அவரிடம் அளித்து,
'குருவே! என்னை நன்றாக வளர ஆசீர்வதியுங்கள்!' என்றிட,

'ஆசீர்வாதம் எதற்கு? எதில் வளர்ச்சி?', என்று குரு விழித்திட,
'ஆசீர்வாதம் என் சங்கீதப் பள்ளியின் வளர்ச்சிக்கு' எனக் கூற,

'இப்போதுதானே இரண்டாவது வரிசைகளைக் கற்கின்றாய்?
இப்போதே உன் சங்கீதப் பள்ளியா?' என அவர் வியப்பிலாழ,

'முதல் பால பாடமான சரளி வரிசைகளைத்தான், இப்போழுது
முதல், என் புதுப் பள்ளியில் கற்பிப்பேன்!' என்றானாம் அவன்!

வேடிக்கையாகச் சொன்ன கதைதான் எனினும் இந்த நாட்டில்,
வேடிக்கையான மேடை நிகழ்ச்சிகள் சில இருக்கும். எனினும்,

'பால விஹார்' போன்ற அமைப்புக்கள், நம் குழந்தைகளிடம்,
இந்தியக் கலாச்சாரத்தைப் பரப்புவதைப் பாராட்ட வேண்டும்!

ஒரு நிகழ்ச்சியில், எட்டு வயதானவன், ஹனுமான் சாலீசாவை
ஒரு தடங்கலும் இல்லாது பாடியதை, என்றும் மறக்க இயலாது!

:thumb: ... :pray2:

தொடரும்.......................
 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 51

இந்த ஊரில்தான் இரு ஜண்டை வரிசைகள் கற்ற உடனே,
அந்தக் குழந்தைகளை மேடை ஏற்றி ஊக்குவிக்கின்றாரே!

பன்னிரண்டு குட்டிப் பாடல்கள் போதாதா, அந்த இருவரும்
பக்தியுடன் ஒரு குட்டிக் கச்சேரி பாடி, எம்மை மகிழ்விக்க?

என் குருநாதர் கூறுவார் சின்ன வேடிக்கைக் கதை ஒன்றை!
தன் குருவிடம் ஜண்டை வரிசை கற்க ஆரம்பித்த சிஷ்யன்,

மறு நாளே, பழங்கள் நிறைந்த தட்டினை அவரிடம் அளித்து,
'குருவே! என்னை நன்றாக வளர ஆசீர்வதியுங்கள்!' என்றிட,

'ஆசீர்வாதம் எதற்கு? எதில் வளர்ச்சி?', என்று குரு விழித்திட,
'ஆசீர்வாதம் என் சங்கீதப் பள்ளியின் வளர்ச்சிக்கு' எனக் கூற,

'இப்போதுதானே இரண்டாவது வரிசைகளைக் கற்கின்றாய்?
இப்போதே உன் சங்கீதப் பள்ளியா?' என அவர் வியப்பிலாழ,

'முதல் பால பாடமான சரளி வரிசைகளைத்தான், இப்போழுது
முதல், என் புதுப் பள்ளியில் கற்பிப்பேன்!' என்றானாம் அவன்!

வேடிக்கையாகச் சொன்ன கதைதான் எனினும் இந்த நாட்டில்,
வேடிக்கையான மேடை நிகழ்ச்சிகள் சில இருக்கும். எனினும்,

'பால விஹார்' போன்ற அமைப்புக்கள், நம் குழந்தைகளிடம்,
இந்தியக் கலாச்சாரத்தைப் பரப்புவதைப் பாராட்ட வேண்டும்!

ஒரு நிகழ்ச்சியில், எட்டு வயதானவன், ஹனுமான் சாலீசாவை
ஒரு தடங்கலும் இல்லாது பாடியதை, என்றும் மறக்க இயலாது!

:thumb: ... :pray2:

தொடரும்.......................
hi

im part of BALA VIHAR in our local temple....i am teaching hinduism in bala vihar...
 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 52

எண்ண அலைகள் நெடுந் தூரம் செல்லுமாம், அறிவேன்!
எண்ணம் நமக்குப் பிரியமானவரைப் பற்றிச் சென்றால்,

அவரிடமிருந்து தொலைபேசி அழைப்போ, ஈ மெயிலோ
தவறாது வந்துவிடுவதை அனுபவத்தில் அறிந்துள்ளேன்!

ஆனால், பாம்பும் கூட நான் எண்ணியதும் வருமா, என்ன?
ஆச்சரியமான சம்பவம் ஒரு நாள் விடியலில் நிகழ்ந்தது!

'செடிகளைச் சுற்றிக் குழந்தைகள் ஓடுகின்றனரே! பாம்பு
செடிக்குள் மறைந்திருந்தால் என்னவாகும்?', என எண்ணி,

அதே எண்ணத்தால் நடுங்கி, சன்னல் வழியாகப் பார்க்க,
அங்கு கண்டேன், கருப்பு - வெள்ளைக் கோடுகளுடன், ஒரு

வழவழப்பான, நீண்ட ஜந்து செடி மீது நெளிவதை! கடவுளே!
வந்து கண்களில் படுவது பாம்பேதான்! முதலிலே பயம்!

பின், தைரிய லக்ஷ்மியைத் துணை வருமாறு அழைத்து,
என் காமிராவுடன் வெளியே சென்றேன், கிளிக் செய்ய.

அதற்குள் 'அது' இலைகளுக்கு அடியில் சென்றுவிட்டது!
அதன் வருகைக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்.

வராந்தா உயரமாக இருப்பதால், அந்த ஜந்து மேலே ஏறி
வராது என்ற நினைப்பில் நின்றேன்; ஐந்து நிமிடங்களில்,

தரிசனம் மீண்டும் தந்தது! கிளிக்கினேன் அதன் அழகை;
தவறாது குழந்தைகளிடம் அதைக் காட்ட வேண்டுமே!

தொடரும் ..............................
 
Last edited:
அடுத்த அனுபவம் முந்தைய பயணத்தில் சென்ற Acadia National Park தான் ! :car:
 
கடல் கடந்த நான்காம் அனுபவம் - 53

செல்லக் குட்டிகள் இரண்டு எம்முடன் இருக்க - வெளியே
செல்ல அதிகம் ஆர்வமே இல்லாது போனது மிக நிஜமே!

அகாடியா நேஷனல் பார்க் செல்லலாம் எனத் தீர்மானித்து,
அதிரடியாகப் பிள்ளைகள் செய்தனர், பல வித ஏற்பாடுகள்!

வெளிச் சாப்பாடு அதிகம் வேண்டாம் என்பதால், சமையல்
எளிதாகச் செய்ய வசதியுள்ள மோட்டலைத் தேர்வு செய்து,

வேண்டிய மளிகைச் சாமான்களுடன், சமையலுக்கு எமக்கு
வேண்டிய குக்கர்கள் சகிதம், ஓர் அதிகாலை புறப்பட்டோம்!

சிற்றுண்டிக்காக ஒரு நிறுத்தம்; சான்ட்விச்சுடன் காபி எமக்கு;
சின்னப் பாக்கெட்டில் குழந்தைகள் உணவு பெண்ணரசியிடம்!

இன்னும் கொஞ்ச நேரப் பயணம்; அகாடியா அருகில் தங்கும்
சின்ன மோட்டலில், இரண்டு அறைகளில் தஞ்சமடைந்தோம்!

சின்ன ஓய்வுக்குப் பின், Thunder hole காணப் புறப்பாடு. அங்கு
சின்னக் குகை போன்ற அமைப்பில், கடல் நீர் வந்து மோதும்!

இடியை நிகர்த்த முழக்கத்துடன், நீர் வெடித்துச் சிதறும்! அந்த
இடியே வராமல், சிறு அலைகள் வந்து சில முறை ஏமாற்றும்!

பெரிய அலை வந்து, பெரிய சத்தத்தைக் கிளப்பினால், அங்கு
பெரிய ஆராவரமும், கைதட்டலும், ஓ' போடுவதும் அதிரும்!

அனைவருமே நனைந்துவிட்டோம், கடல் நீரின் சிதறலால்!
அனைவரின் எதிர்பார்ப்பும் கூட அதுதானே, அந்த இடத்திலே!

தொடரும் .........................

 
இசையில் மூழ்கியதால் நாட்கள் பறந்தது தெரியவில்லை!

விரைவில் தொடரும்.....
 

Latest ads

Back
Top