• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

A poem a day to keep all agonies away!

bhagavathy bhaagavatam - skanda 9

9#49b. சுரபி (2)

சுரபி ஆகும் லக்ஷ்மி தேவியின் ஸ்வரூபம்;
சுரபி ஆகும் ராதாதேவியின் ஒரு பிரிய சகி.

சுரபி ஆகும் பசுக்களின் சிறந்ததோர் தலைவி;
சுரபி ஆகும் பசுக்களின் அதிஷ்டான தேவதை.

சுரபி மக்கள் அனைவருக்கும் அன்பான தாய்;
சுரபி தருவாள் பாலை, பரிசுத்த ஆகாரத்தை.

பிரியப்படும் சர்வ காமங்களையும் தருவாள்;
பிரபஞ்சங்களையும் தூய்மைப் படுத்துவாள்.

ஒருமுறை காமதேனு அடக்கிக் கொண்டது
சுரக்கின்ற பாலை விஷ்ணுவின் மாயையால்.

வருந்திய தேவர்கள் துதித்தனர் பிரமனை;
அறிவுறுத்தினான் காமதேனுவைத் துதிக்க.

துதித்தான் இந்திரன் காமதேனுப் பசுவை;
துதித்தனர் தேவர்கள் காமதேனுப் பசுவை.

நெகிழ்ச்சி அடைந்தது காமதேனு துதிகளால்;
மகிழ்வுடன் வரம் தந்து சென்றது கோலோகம்.

தந்தன பசுக்கள், பாலைக் குடம் குடமாக!
தந்தது பால் – தயிர், வெண்ணை, நெய்யை!

யாகங்கள் செய்தனர் மனிதர்கள் இவற்றால்;
தேவர்கள் மகிழ்ந்தனர் யாக, யக்ஞங்களால்.

இந்திரன் செய்த துதியுடன் – பசுக்களை
வந்தனை செய்கின்ற மனிதன் அடைவான்

செல்வம், கோசம்பத்து, பரவிய புகழ்;
புண்ணிய நதியில் நீராடலின் பயன்கள்.

இம்மையில் அடைவான் இக இன்பம்;
மறுமையில் ஆவான் பிரம்ம குமாரன்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்

9#49b. Surabhi (2)


Worshiping Surabhi:

“You are Lakshmi! You are the chief companion of RAdhA Devi! You are the first cow and the source of all the other cows. You are holy! You fufil the desires of your devotees. You purify the whole universe. So I meditate on You.”

He who worships Surabhi with devotion on the morning after DiwAli night, will be worshiped by all the others in this world.

Once Surabhi did not yield milk under the influence of VishNu MAyA. The Devas became very worried. They went to the Brahmaloka and consulted Brahma Devan. He advised them to chant hymns in praise of Surabhi.

Hearing the praise sung by Indra, Surabhi was pleased and appeared in the Brahmaloka. After granting boon to Mahendra, Subrabhi went back to the Goloka. The Devas went back to their own abodes.

Now milk started flowing like a river. The whole world was now full of milk. Butter and clarified butter were obtained from the milk. Sacrifices were performed and the Devas got their share of havisu and they became very pleased.

He who recites this holy Stotra on Surabhi with devotion, gets cows, other wealth, name, fame and worthy sons. The reciting of this Stotra gives the same merits obtained by taking bath in the holy rivers.

He who recites this strotra will enjoy happiness in this world and in the afterlife he will become a Brahma KurmAran.

 
SEkkizhArin Periya PurANam

#28g . திரு ஞானசம்பந்தர் பெருமான் (7)

கூறினார் குரவர் "சம்பந்தரின் மடத்தை எரியூட்ட வேண்டும்!"
குறிக்கோள் இல்லாத கூன் பாண்டியன் உடனே உடன்பட்டான்.

உறக்கம் பிடிக்கவில்லை தவறு செய்த கூன்பாண்டியனுக்கு;
உரக்கக் கூறிவிட்டான் தன் அரசியிடம் தான் செய்த தவற்றை.

வேதனைப் பட்டாள் இதைக் கேட்ட பாண்டிய அரசி - சொன்னாள்
"சோதனை செய்வோம் சமணரையும், சைவரையும் வாதப்போரில்"

ஏற்றுக் கொண்டான் கூன் பாண்டியன் அவள் கூறிய கருத்தை
"ஏற்றுக் கொள்வோம் வாதத்தில் வெல்பவர் நெறியினை நாம்"

மந்திரத்தால் மடத்துக்கு எரியூட்ட முடியவில்லை - அதனால்
தந்திரத்தால் எரியூட்டினர் சம்பந்தரின் மடத்துக்குக் குரவர்.

அறிவித்தனர் இந்த உண்மையை அடியவர்கள் சம்பந்தருக்கு;
அறிந்த ஆளுடைய் பிள்ளை அடைந்தார் அளவற்ற வேதனை.

பாடினார் பக்தியுடன் பதிகங்கள் ஆலவாய் அண்ணல் மீது,
பாடினார் "சமணர் இட்ட நெருப்பு மன்னனைச் சாரட்டும்" என.

பற்றியது வெப்பு நோய் பாண்டிய மன்னனை அப்போதே.
கொற்றவனின் உயிர் வெப்பத்தால் துன்புற்று ஊசலாடியது

விரைந்து ஓடி வந்தனர் சமணக் குரவர்கள் சிகித்சை தர;
உரைத்தனர் தமக்குத் தெரிந்த பல சமண மந்திரங்களை.

எரிச்சலைக் குறைக்கத் தடவினர் மயில் பீலிகளால்;
எரிந்து சாம்பலாயின அவர்கள் தடவிய மயில் பீலிகள்!

உபயோகித்தனர் தம் பிரம்புகளைச் சிகித்சை செய்ய;
உபயோகித்த பிரம்புகள் வெப்பத்தில் தீய்ந்து போயின!

குறையவில்லை கூன் பாண்டியனின் வெப்பு நோய் சிறிதும்;
வெறுப்பேறிய மன்னன் வெளியேறும்படிக் கட்டளை இட்டான்.

உரைத்தனர் அரசியும் அமைச்சரும் கூன் பாண்டியனிடம்,
"விரைவில் அகற்ற வல்லவர் சம்பந்தர் வெப்பு நோயை" என

சம்மதம் தந்தான் வேறு வழியில்லாத பாண்டிய மன்னன்;
சம்மதம் தந்தான் வெப்பு நோயைப் போக்குபவரை ஏற்க.

அழைத்து வந்தனர் சம்பந்தரை பாண்டிய மன்னனிடம்;
அழைக்காமல் வந்தனர் சமணக் குரவர்களும் மன்னனிடம்.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#28g. Thiru JnAna Sambandhar (7)

The Jain gurus suggested to the King "Let us burn down the mutt where Sambandhar is staying with his disciples". The King was under their power and agreed to enact this evil act. But the Conscience of the King was troubling him and he had difficulty in falling asleep.

He disclosed to his loving queen the wicked plot of the Jain gurus and his own consent given to that wicked plot. The queen felt very sad on hearing this. She suggested to the king," Let us have a debate between JnAna Sambandhar and the Jain gurus. It will show us who is to be followed.We will accept the religion of the winner. " The king agreed to this plan.

The Jain gurus could not burn down the mutt by chanting mantras. So they became treacherous and set fire to the mutt. The disciples of Thiru JnAna Sambandhar could put out the fire before it could spread and engulf people or property. They reported the matter to Thiru JnAna Sambandhar. He was duly shocked by the treachery and enmity of the Jains.

Thiru JnAna Sambandhar sang a padhigam saying that "May the fire lit by the Jains afflict the king!" The king developed high fever (Veppu Noi). He suffered from the burning high temperature. The Jain gurus ran to him to treat him of his malady. They chanted all the mantras they had learned but in vain.

Next they gently passed their peacock feathers on the king's body, but these just got charred due to the intense heat of the body. Next they employed the canes they carried to treat the fever. The canes too got charred due to the intense body heat.

Their treatment did not give any relief to the king. The high temperature of the king still remained very high. The king ordered the gurus to leave him alone and go away.

Now the queen and the chief minister suggested that may be Thiru JnAna Sambandhar would be able to reduce the high temperature of the king. The king had nothing to lose but everything to gain - in case Thiru JnAna Sambandhar could bring down his soaring temperature.

So Thiru JnAna Sambandhar was brought to the palace with due honors. The Jain gurus returned by themselves not to get left out of the interesting developments.








 
I thank the readers of this thread for the increase in the traffic to 360+ in the past 24 hours.You are welcome to use and share the links given below.

Kandapuranam blogs:

1. Kanda Puraanam (Urppathik Kaandam)

2. Kanda Puraanam (Asura Kaaandam)


3. Kanda Puraanam (Mahendra Kaandam)

4. Kanda Puraanam (Por Puri Kaandam)

5. Kanda Puraanam (Deva Kaandam)

6. Kanda Puraanam (Daksha Kaandam)


துய்யதோர் மறைக ளாலும் துதித்திடற் கரிய செவ்வேள்
செய்ய பே ரடிகள் வாழ்க சேவலும் மயிலும் வாழ்க
வெய்ய சூர் மார்பு கீண்ட வேற்படை வாழ்க அன்னான்

பொய்யில் சீர் அடியார் வாழ்க வாழ்க இப்புவனம் எல்லாம்.


 
Bhagavathy Bhaagavatam blogs:

1. Introduction on Devi

2. Bhagavathy Bhaagavatam Skanda 1

3. Bhagavathy Bhaagavatam Skanda 2

4. Bhagavathy Bhaagavatam Skanda 3

5. Bhagavathy Bhaagavatam Skanda 4

6. Bhagavathy Bhaagavatam Skanda 5

7. Bhagavathy Bhaagavatam Skanda 6

8. Bhagavathy Bhaagavatam Skanda 7

9. Bhagavathy Bhaagavatam Skanda 8

10. Bhagavathy Bhaagavatam Skanda 9

11. Bhagavathy Bhaagavatam Skanda 10


12. Bhagavathy Bhaagavatam Skanda 11

13. Bhagavathy Bhaagavatam Skanda 12


எந்த தேவியை வணங்கியதால் மும்மூர்த்திகள்
சொந்தப் பணியாற்றும் வல்லமை பெற்றனரோ;

எந்த ஆதி பராசக்தியின் வடிவம் எப்போதும்,
எல்லோருக்கும் தியானத்துக்கு உகந்ததோ;

எந்தப் பராசக்தியைத் தத்துவ ஞானிகள் கூடி
இந்த உலகத்தின் காரணம் என்கிறார்களோ;

அந்தப் பராசக்தியை; உலகின் அன்னையை;
அனைத்தையும் தருபவளை; வணங்குகிறேன்.

எந்த மகாசக்தி குழந்தையின் விளையாட்டாகவே
இந்த உலகைப் படைத்துக் காத்து அழிக்கிறாளோ;

எந்த தாக்ஷாயணி மலையரசன் மகளாக வந்து
சொந்த முயற்சியால் சிவனை அடைந்தாளோ;

எந்த தேவியைத் தன் துணைவியாக உடலிலும்,
பாதங்களை இதயத்திலும் சிவன் சுமக்கிறாரோ:

அந்த தேவியே, உலகத்தின் ஒரே அன்னையே,
இந்த உலகைத் தீமைகளிலிருந்து காக்கட்டும்
 
bhagavathy bhaagavatam - skanda 9

9#50a. ராதிகா தேவி (1)


பிராணன் புத்திகளுக்கு அதிஷ்டான தேவதை;
பிரகிருதியாகக் காத்தும், தண்டித்தும் வருவாள்.

இயக்குகிறாள் விராட் புருஷனை இந்த சக்தி;
இயக்குகிறாள் எல்லா ஜீவன்களை இந்த சக்தி.

சித்திக்காது முக்தி நிலை இவள் அருளின்றி;
சித்திக்கப் பூஜிக்க வேண்டும் இந்தத் தேவியை.

ஆறு அக்ஷரம் கொண்டது ராதிகா மந்திரம்;
அறம், பொருள், இன்பம், வீடு தரவல்லது.

மந்திரம் இதுவே மாயைக்கு பீஜம் ஆகும்;
சிந்தித்தவற்றைத் தரும் சிந்தாமணியாகும்.

விவரிக்க இயலாது இதன் பெருமையை;
விவரிக்க இயலாது இதன் அவசியத்தை.

உபதேசித்தாள் மூல தேவி கிருஷ்ணனுக்கு;
உபதேசித்தார் கிருஷ்ணன் விஷ்ணுவுக்கு;

உபதேசித்தார் விஷ்ணு பிரம்ம தேவனுக்கு;
உபதேசித்தார் பிரம்ம தேவன் விராட்டுக்கு.

ராதிகாவை பூஜிக்கின்றனர் மக்கள் – இல்லை
ராதிகா பூஜை இல்லாமல் கிருஷ்ண பூஜை!

நீங்குவதில்லை ராதிகா தேவியைக் கிருஷ்ணன்;
தாங்குகின்றான் தன் பிராணனாகத் தலைவியாக.

‘ராதனம்’ என்றால் பேறுகளைச் சித்திக்க வைப்பது;
‘ராதா’ என்பவள் பேறுகளைச் சித்திக்க வைப்பவள்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்

9#50a. RAdhikA Devi (1)


RAdhikA is the presiding deity of PrANa and Buddhi. She protects or punishes the Jeevas, as an amsam of Prakriti Devi. VirAt purushan is controlled by this powerful Devi. All the living things are controlled by this powerful Devi.

Mukti or total liberation is not attainable without the grace of RadhikA. She must be worshiped for attaining the liberation.

The mantra of RadhikA has six letters in it. It can bestow on the devotee the chatur vidha purushArtam namely Dharma, Artha, KAma and Moksha.

This mantra is the seed of the MAyA. It is the ChintAmaNi which can give the devotee whatever he wishes for.

It is not possible to relate the greatness of this mantra. It is not possible to relate the inevitability of this mantra.

Moola Prakruti Devi did the upadeasam of this mantra to Sri KrishNa who then did the uadesam to VishNu. VishNu did the upadesam to BrahmA who in turn did the upadesam to the VirAt Purushan.

All the three worlds worship RAdhikA Devi. Worshiping Lord KrishNa is not possible without worshiping RAdhikA along with him. Krishna does not leave RadhikA even for a second. He cherishes her as his PrAna Shakti and is happy to be ruled by her.

‘Radhanam’ means ‘That which bestows the siddhis on a person!’ RAdhikA is the Devi who bestows on her devotees all the siddhis.

 
SEkkihArin Periya PurANam

#28h. திரு ஞானசம்பந்தர் பெருமான் (8)

பங்கு போட்டனர் அரசன் உடலைச் சமணக் குரவர்கள் - அந்தப்
பங்கின்படி வலப்பக்கம் சைவருக்கு, இடப்பக்கம் சமணருக்கு.

தடவினர் இடப்பக்கம் தம் மயில் பீலிகளால் சமணக் குரவர்கள்;
உடனே மயில் பீலிகள் தீய்ந்தன; வேந்தனின் வேதனை கூடியது!

தடவினார் வலப்பக்கம் தூய திருநீற்றைச் சம்பந்தர் பெருமான்;
உடனே குறைந்து விட்டது வலப்பக்கத்தில் இருந்த வெப்பு நோய்!

"மந்திரமாவது நீறு" என்ற சம்பந்தரின் அழகிய திருப்பதிகத்தால்
மாறிவிட்டது வெறும் வெண்ணீறு நோயை நீக்கும் நல்ல மருந்தாக.

வேண்டினான் கூன்பாண்டியன் இடப்பக்கமும் நலம் தருமாறு;
மீண்டும் பூசிய திருநீறு அகற்றியது இடப்பக்க வெப்பு நோயை.

வணங்கினான் கூன்பாண்டியன்; சம்பந்தரை அங்கீகரித்தான்;
பிணங்கினர் சமணக் குரவர்கள் அரசனின் மன மாற்றத்தால்

உரைத்தனர் வேந்தனிடம் விரைந்து தம் விண்ணப்பத்தை;
"உரைகல் ஆகும் இதற்கு அனல் வாதம், புனல் வாதமே!" என

"எரியும் நெருப்பில் இடுவோம் நம் கொள்கை ஏடுகளை ;
எரியாமல் மிஞ்சுவதே உண்மையான கொள்கை ஆகும்."

எரியில் இட்டார் சம்பந்தர் தன் பதிகம் ஒன்றை - அங்ஙனமே
எரியில் இட்டனர் சமணக் குரவர் தம் கொள்கை ஏடு ஒன்றை.

எரிந்து சாம்பல் ஆகிவிட்டது சமணர்கள் இட்ட கொள்கை ஏடு
எரியாமல் மிஞ்சியது சம்பந்தர் இட்ட திருப்பதிகம் மட்டுமே.

அழைத்தனர் சம்பந்தரைப் புனல் வாதத்துக்கு அடுத்ததாக;
அழைத்தனர் கொள்கை ஏடுகளை ஓடும் நதி நீரில் எறிந்திட.

நதி நீரோட்டத்தோடு அடித்துச் செல்வது பொய் கொள்கை ஏடு.
நதி நீரோட்டத்தை எதிர்த்து நீந்திச் செல்வது மெய் கொள்கை!

இட்டனர் தத்தம் கொள்கை ஏடுகளை ஓடும் நதி நீரினில்;
இட்டதும் நதி நீருடன் சென்றுவிட்டன சமணர்கள் ஓலைகள்.

நதி நீரை எதிர்த்து நீந்திச் சென்றது சம்பந்தரின் ஏடு மட்டும்;
தீர்மானமாகியது எந்தச் சமய நெறி உண்மையானது என்று!

நிமிர்ந்து விட்டது பாண்டியனின் முதுகு சம்பந்தரின் பதிகத்தால்.
நொடியில் மாறிவிட்டான் கூன்பாண்டியன் சுந்தர பாண்டியனாக!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#28h. Thiru JnAna Sambandhar (8)

The Jain gurus decided that Thiru JnAna Sambandhar could try to treat the right side of the king's body while they themselves would try to treat the left side of the king's body. They passed their peacock feathers over the left side of the king's body. The feathers got charred and the suffering of the king seemed to increase.

Thiru JnAna Sambandhar smeared the holy ash on the right side of the king's body. He sang a padhigam "Manthiram aavathu neeru". The holy ash now acted like a potent medicine and reduced the fever in the right side of the king's body.

The king requested Thiru JnAna Sambandhar to treat the left side of the body as well. Thiru JnAna Sambandhar obliged and the king got cured of his soaring high temperature. The king became very happy and paid his respects to Thiru JnAna Sambandhar.

But the Jain gurus would not let the matters end there. Now they suggested that they must arrange for the ordeals by fire and water. The religion of the winner is the truth and the loser must end his life by getting impaled.

They told Thiru JnAna Sambandhar," Let us drop the palm leaves with our principles written on them in to a pit of burning fire. The one which does not get charred belongs to the winner." The leaves dropped in by the Jain burned to ash but the leaf with a padhigam written by Thiru JnAna Sambandhar survived the ordeal by fire.

Next they dropped their palm leaves in a flowing river. The leaves which go with the flow belong to the loser. The leaf of the winner would swim against the flow of the river. The leaves dropped by the Jain went with the flowing water and got lost. The leaf dropped by Sambandhar swam opposite to the flow of the river swollen by water.

It was proved beyond any doubt that the principles laid by Saivism were the true ones. Thiru JnAna Sambandhar sang a padhigam and the king's bent back got straightened. He stood tall and handsome. In one moment he had transformed from a Koon pANdiyan to a handsome Sundara pANdiyan.











 
bhagavathy bhaagavatam - skanda 9


9#50b. ராதிகா தேவி (2)

நிறத்தில் வெண் ஷண்பக மலர் இவள்;
முகத்தில் ஒளிரும் சரத்காலச் சந்திரன்;

உதடுகள் இரு புதிய கோவைப் பழங்கள்;
இடையினில் ஒலிக்கும் இனிய மேகலை;

மயக்கம் தரும் நிதம்பம் உடையவள்;
குருந்த மொட்டுப் பற்கள் உடையவள்;

தவழும் முகத்தில் இனிய புன்னகை;
தனங்களோ யானையின் மத்தகங்கள்;

பன்னிரண்டு வயதைத் தண்டாதவள்;
இரத்தின பூஷணங்கள் அணிந்தவள்;

சிருங்கார ரச வடிவான மங்கை;
மங்காத அருள் புரிவாள் பக்தருக்கு;

மல்லிகை, மாலதி அணிந்த கூந்தல்;
மெல்லிய உடலோ செந்தளிர் மேனி;

ராஸ மண்டலத்தில் வசிக்கும் தேவி
ஆசியுடன் அளிப்பாள் வரதம், அபயம்.

சாந்தம் நிறைந்த மனத்தினள் இவளைத்
தாங்கும் அழகிய இரத்தின சிம்ஹாசனம்.

கோபிகைகளின் பிரியமான தலைவி;
கோபால கிருஷ்ணனின் பிரியமான சகி.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K
. ராமன்

9#50b. RAdhikA Devi (2)


Her color is that of the white Champaka flowers.
Her face puts to shame the full moon in Sarat rutu.

Her lips are redder than the fresh Bimba fruits.
Her waist is adorned by a beautiful tinkling Mekala.

Her waist causes intoxication by its sheer beauty.
Her teeth are two rows of the buds of kurunda flowers.

A lovely smile adorns her lovely face.
Her breasts are like the frontal globe of an elephant.

She is not a day older than twelve years.
She is adorned with several gem studded ornaments.

She is the personification of amorous love.
She blesses her devotees without any hesitation.

Her hair is decorated with Jasmine and MAlati.
Her body is very soft as well as tender.

She lives in the RAsa MaNdalam in Golokam.
She grants boons and fearlessness to her devotees.

She is of calm peaceful temperament.
She occupies a gem studded gold throne.

She is the leader of all the GopikAs and
She is the beloved of GopAla KrishNan.

 
SEkkizhArin Periya PurANam

#28i . திரு ஞானசம்பந்தர் பெருமான் (9)

தங்கியது நீந்திச் சென்ற சைவ ஏடு திருவேடகத் தலத்தில் - அது
தங்கும்படியாக "வன்னியும் மந்தமும்" என்ற பதிகம் பாடியதும்.

ஏட்டைத் துரத்திச் சென்றார் குலச்சிறையார் குதிரை மீது;
ஏட்டுச் சுவடியை மீட்டுத் தந்தார் சம்பந்தர் பெருமானிடம்.

"தோற்றவர் கழுவேற வேண்டும்" என்று கூறியிருந்தனர் முன்பே
"வென்றவர் மதமே மெய்யனாது" என்று கூறியிருந்தனர் முன்பே.

உயிர் நீத்தனர் தோற்று விட்ட சமணர்கள் தாம் செய்த சபதப்படி
உயிர் நீத்தனர் உயிரைக் குடிக்கும் கழுமரங்களில் தாமே ஏறி!

எண்ணிக் கலங்கினான் பாண்டிய மன்னன் தன் தவற்றை;
மண்ணில் புகழ் பெற்றான் 'நின்ற சீர் நெடுமாறன் நாயனாராக'

தரிசித்தார் பாண்டியநாட்டின் திருத்தலங்களைச் சம்பந்தர்;
பிரியாவிடை பெற்றுச் சென்றார் மீண்டும் சோழ நாட்டுக்கு.

முள்ளிவாய்க் கரையை அடைந்தார் சம்பந்தர் குழுவுடன்;
வெள்ளம் பெருகி ஓடியதால் செல்லவில்லை ஓடங்கள்!

திருக்கொள்ளம்புதூர் இறைவனைத் தரிசிக்க விழைந்தார்;
பெருமான் அருளால் ஓடம் தானே அடைந்தது அக்கரையை!

போதி மங்கையை அடைந்தனர் சம்பந்தர் குழுவினர்;
பௌத்தர்கள் முறையிட்டனர் தலைவன் புத்தநந்தியிடம்;

சினந்த சம்பந்தர் சபித்தார் "புத்த நந்தியின் மேல் இடி விழ!"
கணத்தில் மாண்டான் புத்த நந்தி பேரிடியால் தாக்கப்பட்டு!

வாதில் வெல்ல நினைத்தான் சாரிபுத்தன் என்னும் தலைவன்;
வாதில் வென்றார் சம்பந்தர்; தோற்றுப் போனான் சாரிபுத்தன்.

தொடர்ந்தது சம்பந்தரின் திருத் தலயாத்திரை மீண்டும்;
அடைந்தது சம்பந்தர் அடியார் குழு திருப்பூந்துருத்தியை;

சந்தித்தனர் நாவுக்கரசரும், சம்பந்தரும் அத்திருத்தலத்தில்;
வந்தனை செய்தனர் திருப்பூந்துருத்திப் பெருமானை பாடி.

தொடர்ந்தார் சம்பந்தர் தம் திருத் தலயாத்திரையை - சென்று
கடந்தார் சீர்காழி, தில்லை, காஞ்சி, திருவோத்தூர் தலங்களை.

சந்தித்தார் திருத் தொண்டர் ஒருவரைச் சம்பந்தர் - வருந்தினார்
"நிந்திக்கின்றனர் சமணர்கள் என் பனைகளை ஆண்பனைகள் என"

"பூ தேர்ந்தாய் என்ற பதிகத்தைப் பாடினார் ஞான சம்பந்தர்;
பூ விட்டுக் குலைகளும் தள்ளின ஆண் பனைகள் அப்போது.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#28i. Thiru JnAna Sambandhar (9)

The palm leaf which swam against the flow of water went on and on. Thiru JnAna Sambandhar sang a padhigam "Vanniyum manthamum" and the leaf stopped its journey in Thiru vedagam.

Kulach chiraiyAr the chief minister went on his horse back chasing the leaf. He brought back the leaf and returned it to Thiru JnAna Sambandhar. The Jain kept their promise. They willingly gave up their life by getting impaled.

The king felt sorry for his monumental mistake and begged the pardon of Thiru JnAna Sambandhar. The king now had earned a new title "Nindra Seer NedumAran nAyanAr".

Thiru JnAna Sambandhar visited many kshethrams in PANdya kingdom. He returned to the Chozha kingdom after taking leave of the PANdya King. Then Thiru JnAna Sambandhar and his group reached the bank of the river MuLLivAikkarai.

The river was flooded and the boatmen refused to take his group across the river which was in spate. Thiru JnAna Sambandhar along with his disciples got into a boat let loose in water and safely reached the other bank - to get a dharsan of the lord in Thiru KoLLam puththoor.

When Thiru JnAna Sambandhar reached BOdhi Mangai, the Buddhists reported it to their chief Buddha Nandhi. The disciples of Thiru JnAna Sambandhar felt hurt by the behavior of the Buddhists and reported this to him.

He cursed so that Buddha Nandhi was struck by a lightning and got killed. SAri Buddhan wanted to win over Thiru JnAna Sambandhar in a debate but he was miserably defated by Thiru JnAna Sambandhar.

Their pilgrimage continued and the group reached Thiru Poonthuruthi. Thiru JnAna Sambandhar met Thiru Navukkarasar there. They were happy to meet once again. They sang the praise of the lord in Thiru Poonthuruthi.

Thiru JnAna Sambandhar visited SeerkAzhi, Thillai Chidambaram, KAncheepuram, ThiruvOththur etc. Thiru JnAna Sambandhar met a devotee of Siva who had this complaint.

He had a few palm trees in his land but none of them ever bore any fruits. The Jains were mocking them as Male palm trees which would never bear any fruits. Thiru JnAna Sambandhar sang a padhigam "Poo thernthaai" and the palm trees flowered and bore fruits in no time.








 
bhagavathy bhaagavatam - skanda 9


9#50c. ராதிகா தேவி (3)

வேதத்தில் போற்றப் படுபவள் இவள்;
தேவி பரமேஸ்வரியின் ஓரம்சம் இவள்.


செய்ய வேண்டும் ஆவாஹனம் தேவியை;
செய்ய வேண்டும் ஆசனாதி உபசாரங்கள்.


வரிசையாகக் கிழக்கிலிருந்து ஈசானம் வரை
வணங்க வேண்டும் இவர்களைத் தளங்களில்.


மாலாவதி, மாதவி, இரத்தின மாலை, சுசீலை
சசிகலை, பாரிஜாதை, பராவதி, சுந்தரியரை


வரிசையாக அவரவர் ஸ்தானங்களில்
வணங்கவேண்டும் அஷ்ட திக் பாலகரை.


செய்ய வேண்டும் எல்லா ராஜ உபசாரங்களை.
செய்ய வேண்டும் ஆயிரம் நாம அர்ச்சனையை.


இருப்பாள் ராதிகா எப்போதும் அருகிலே – தன்
பிறந்த நாளை மறவாது கொண்டாடுபவனுக்கு.


மூன்று காலம் ராதிகா தேவிவைத் தொழுபவன்
சென்று அடைவான் கோலோகம், ராச மண்டலம்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


9#50c. RAdhikA Devi (3)


This Devi is praised by the Vedas. She is the amsam of Moola Prakruti Devi. She is one of the most important Pancha Prakriti Devis.


We have to do the AavAhanam of this Devi and offer her Asanam and the other upachAram. We must offer her nivedanam prepared with milk and ghee.


We must worship these eight Devis starting from the East and ending in the EsAnam. MAlAvati, MAdhavi, RatnamAlA, SuseelA, SasikalA, PArijAtA, ParAvati and Sundari.


We must worship the Ashta Dik PAlakAs in their sthAnams. We must offer the kingly upachArams and perform the Sahasra nAma archana.


RadhikA remains close to the devotee who worships her on her birthday. The person who worships RadhikA thrice a day will surely reach the RAsa MaNdala in Goloka after the end of his life on earth.




 
SEkkizhArin Periya PurANam

28j . திரு ஞானசம்பந்தர் பெருமான் (10)

அடைந்தார் சம்பந்தர் காஞ்சி மாநகரைக் குழுவுடன்;
அளித்தனர் பூர்ண கும்பங்களுடன் நல்ல வரவேற்பு.

அலங்கரித்தனர் மாநகரை அழகிய பல பந்தல்களால்;
மலர்களால், வண்ணக் கோலங்களால், விளக்குகளால்.

தொழுதார் சம்பந்தர் காமாக்ஷித் தாயை, பிரானை;
தொழுதார் பல சிவன் சன்னதிகளுக்கும் சென்று.

சென்றார் திரு காளத்திமலை மற்றும் திருவொற்றியூர்.
அன்றாடம் வழிபடத் தங்கிவிட்டார் திருவொற்றியூரில்.

வள்ளல் சிவநேசன் வாழ்ந்திருந்தார் திரு மயிலையில்
வணிகர் குலத்தவர்; அடியார்க்கு அடியார் ஆவார் அவர்.

பெரும் பொருள் ஈட்டினார் நேர்மையான வணிகத்தில்;
அருந்தவத்தை உணர்ந்து நடத்தினார் தன் வாழ்வை.

பூம்பாவை ஆவாள் சிவநேசனின் செல்வத் திருமகள்;
பூமகளின் பொலிவும், நாமகளின் அறிவும் உடையவள்.

உறுதி பூண்டிருந்தார் சிவநேசர் - தன்னிடம் இருக்கும்
உயரிய பொருட்களை எல்லாம் சம்பந்தருக்கு அளிக்க.

வளர்த்தார் பூம்பாவையைக் கன்னி மாடத்தில் வைத்து;
வளர்த்தார் அவளைச் சம்பந்தருக்கு அளிப்பதற்காகவே.

தீண்டிவிட்டது ஒரு விஷநாகம் பூம்பாவையை -அவள்
மீண்டு வர இயலாத இடத்துக்குச் சென்று விட்டாள்.

மந்திரம் தந்திரம், மாந்திரீகம், வைத்தியம் எதுவும்
எந்த ஒரு பயனையும் அளிக்கவில்லை! அந்தோ!

குடத்திலிட்டார் பூம்பாவையின் சாம்பலை, எலும்புகளை;
மடத்தில் வைத்தார் ; அதற்கு காப்பிட்டார் தந்தை சிவநேசன்

வந்திருந்தார் சம்பந்தர் திருவொற்றியூர் அவ்வமயம்
வரவேண்டும் திருமயிலை என்று விண்ணப்பித்தார்

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#28j. Thiru JnAna Sambandhar (10)

Thiru JnAna Sambandhar reached KAnchipuram with his disciples. The people of KAnchipuram gave him a befitting welcome with poorNa kumbham. The city was decorated with pandhals, flowers, floral designs drawn on the floor and rows of lamps kept lit.

Thiru JnAna Sambandhar paid obeisances to Devi KAmkshi and EkAmbrEswarar. He visited many other sannadhis as well. He visited Thiru KALahasthi giri and stayed on at ThiruvOtriyoor.

SivanEsar was a generous merchant living in Thiru Mayilai. He was a devotee of the devotees of Lord Siva. He had amassed a large wealth by doing his business honestly. He lived a life devoted to the austerities. He had a beautiful daughter named PoompAvai.

PoompAvai was as intelligent as Saraswathi Devi and as rich as Lakshmi Devi. He was determined to get her married to Thiru JnAna Sambandhar- to whom he wanted to offer all his best possessions. She was brought up in a house built for virgins (kanni mAdam) very carefully.

Unfortunately PoompAvai got bitten by a poisonous snake and died. Nothing could revive her - neither medicines, nor mantras, nor thanthras. Her bones and ash were put in an urn and kept safe.

Thiru JnAna Sambandhar was at Thiru vOtriyoor at that time. SivanEsan requested him to visit Thiru maliyai.







 
bhagavathy bhaagavatam - skanda 9

9#50d. துர்க்கா தேவி (1)

நினைத்த மாத்திரத்தில் அகற்றி விடுவாள் – நம்
அனைத்துத் துன்பத்தையும் அன்னை துர்க்கை.

உகந்தவள் துர்க்கை பூஜித்து வழிபடுவதற்கு;
உகந்தவள் துர்க்கை உபாசித்து வழிபடுவதற்கு.

வடிவம் ஆகும் சிவ சக்தியரின் வடிவம்;
வடிவம் ஆவாள் அற்புதச் சிறப்புக்களின்!

அதி தேவதையாவாள் ஜீவர்களின் புத்திக்கு,
அந்தர்யாமியாவாள் எல்லா ஜீவன்களுக்கும்.

துரத்தி விடுவாள் துக்கம் என்னும் துன்பத்தை!
துர்க்கை என்ற பெயர் பெறக் காரணம் இதுவே.

மூலப் பிரகிருதியின் உருவம் இவள்;
முத் தொழில்களையும் செய்பவள் இவள்.

சிறப்புக்கள்:

ரிஷிகள்: பிரம்மன், விஷ்ணு, ருத்திரன்.

சந்தஸ்ஸுகள் : காயத்ரி, உஷ்ணிக், அனுஷ்டுப்

தேவதைகள்: மஹா காளி, மஹா லக்ஷ்மி, சரஸ்வதி

பீஜங்கள்: ரக்த தந்திகா, துர்க்கா, பிரமரி

சக்தியர்: நந்தா, சாகம்பரி, பீமா

விநியோகம்; அறம், பொருள், இன்பம், வீடு

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்

9#50d. DurgA Devi (1)


The moment we think of DurgA Devi, she will remove all our hardships and worries. DurgA Devi is worthy of being worshiped by us. She is Siva-Shakti in her form. She is the personification of many rare powers.

DurgA Devi is the presiding deity of Intellect. She resides in every jeevA as the AntaryAmi. She drives away all our sorrows. That is precisely why she is called as DurgA Devi.

DurgA Devi is the Moola Prakruti Devi herself. DurgA Devi is responsible for the creation, preservation and destruction of everything.

The nine lettered DurgA mantra is a Kalpa Taru for the devotees. It yields and fulfills all their wishes and desires.

The three Rushis are Brahma, VishNu and Rudran

The three chandhassu are Gayatree, UshNik and Anushtup

The three DhevatAs are MahA KAli, MahA Lakshmi and Saraswati

The three beejams are Raktha DantikA, DurgA, Bramari.

The three sakthis are NandA, Saksmbaree and BheemA

The four purposes are Dharma, Artha, KAma and Moksha

 
SEkkizhArin Periya PurANam

#28k . திரு ஞானசம்பந்தர் பெருமான் (11)

அடைந்தார் சம்பந்தர் திருமயிலையைக் குழுவினருடன்;
படைத்தார் பதிகங்கள் அம்பிகையைப் பிரானைப் போற்றி,

கொண்டு வரச் சொன்னார் பூம்பாவையின் சாம்பற்குடத்தை;
கொண்டு வைக்கச் சொன்னார் அதைச் சிவிகையின் அருகில்.

பதிகங்கள் பாடத் தொடங்கினார் ஞானசம்பந்தர் பெருமான்;
பதிகத்தில் விளித்தார் அந்தத் திருமகளைப் "பூம்பாவாய்" என.

எட்டுப் பதிகங்கள் சம்பந்தர் தொடர்ந்து பாடும் பொழுதினில்
எட்டி விட்டாள் பன்னிரண்டு ஆண்டு அகவையைப் பூம்பாவை.

குடம் உடைந்து விட்டது; குமரிப் பெண் எழுந்து நின்றாள்!
உடன் வணங்கினாள் இறைவனையும், சம்பந்தரையும்.

விண்ணப்பித்தார் சிவநேசன் சம்பந்தரிடம் மகளை மணந்திட;
"மன்னிக்க வேண்டும் இப்போது இவள் எனக்கும் மகள் !" என

திரும்பிச் சென்றாள் பூம்பாவை தன் கன்னி மாடத்துக்கு;
அருந்தவம் செய்தாள் பூம்பாவை; அடைந்தாள் அரனடியை.

திருத்தல யாத்திரைகள் தொடர்ந்தன மீண்டும் ஒருமுறை;
திருத்தல யாத்திரை இறுதியில் முடிவுற்றது தில்லையில்.

திரும்பினார் சம்பந்தர் சீர்காழிக்கு முத்துச் சிவிகையில்;
வருகை தந்தனர் சீர்காழிக்குப் அநேக சிவனடியார்கள்.

மணம் செய்துகொள்ளும்படி வற்புறுத்தினர் பெற்றோர்;
இணங்கினார் சம்பந்தர் இறுதியாகத் திருமணத்துக்கு.

பெருமண நல்லூர் நம்பியாண்டார் நம்பியின் மகளை
திருமண மகளாகத் தேர்வு செய்தனர் பெற்றோர்கள் .

குறிக்கப்பட்டது நல்ல நேரத்தில் அந்தத் திருமணம் ;
அளிக்கப்பட்டன மண ஓலைகள் உற்றம் சுற்றத்துக்கு.

குழுமி விட்டனர் அனைவரும் ஏழு நாட்களுக்கு முன்னரே;
முழு ஏற்பாடுகளும் முடுக்கி விடப்பட்டன முழு வேகத்தில்

முத்து வளைவுகள், அலங்கரிக்க மாவிலைத் தோரணங்கள்
புத்தம் புது மலர் மாலைகள்; பரந்து உயர்ந்த பல பந்தல்கள்

வண்ண வண்ண ஓவியங்கள்; ஒளி வீசும் தீப வரிசைகள்;
வண்ண வண்ணக் கோலங்கள்; ஒளிரும் பொற்கலசங்கள்;

அலங்கரித்தன நல்லூர் பெருமணத்தை அமராவதி என
அலங்கரித்தன சம்பந்தரின் திருமண நிகழ்ச்சியை ஒட்டி.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#28k. Thiru JnAna Sambandhar (11)


Thiru JnAna Sambandhar reached Thiru Mayili with his disciples. He sang many pAsurams on Devi KarpagAmbAL and KapAleeswarar. He requested SivanEsan to bring the urn containing the mortal remains of PoompAvai and keep it near his palanquin.

Thiru JnAna Sambandhar then started singing the padhigams. In the very first padhigam, he called out the name of PoompAvai. By the time he was singing the eighth padhigam, PoompAvai had reached twelve years of age. The urn broke into many pieces and PoompAvai stood up alive and well.

She fell at the feet of God and Thiru JnAna Sambandhar. SivanEsan requested Thiru JnAna Sambandhar to accept his daughter's hand in marriage. But Thiru JnAna Sambandhar refused firmly. He said,"Now PoompAvai is like a daughter to me. I can't marry her".

PoompAvai went baak to her Kanni mAam. She spent the rest of her life in penance and easily reached the lotus feet of Lord Siva. Thiru JnAna Sambandhar continued his pilgrimage once again. He visited Thilai Chidhambaram and returned to SeerkAzhi.

Many devotees of Siva and many NAyamAr visited him at SeerkhAzhi at that time. Now Sambandhar was sixteen years of age. His parents pressurized him to get married. Finally he had to give in to their constant demands.

The daughter of Thiru PerumaNa Nalloor Nambi ANdAr Nambi was selected as the suitable bride. An auspicious date, day and time were selected for the marriage. Invitations were sent out to the relatives and family friends.

The guests started arriving in PerumaNa Nalloor seven days before the wedding. All the arrangement went ahead in full swing. The whole venue was decorated with arches made of pearls, thOraNs of mango tree leaves, garlands of fresh flowers, tall pandhals, beautiful pictures, rows of shining lamps burning bright, colorful designs drawn on the floor and rows of sparkling gold pots filled with holy water.








 
bhagavathy bhaagavatam - skanda 9


9#50e. துர்க்கா தேவி (2)

நியாசிக்க வேண்டும் இவற்றை முறையே
தலை, முகம், இருதயம், ஸ்தனங்களில்.

நியாசம் செய்ய வேண்டும் பீஜங்களால் சிகை,
கண், காது, மூக்கு, முகம், புஜத்தில்.

கட்கம், சக்கரம், கதை, பாணம், சர்ப்பம்,
பரிகம், சூலம், பிஜுண்டி,சிரசு, சங்குடன்.

தியானிக்க வேண்டும் மஹாகாளி வடிவமாக;
தியானிக்க வேண்டும் முக்கண் உடையவளாக.

தியானிக்க வேண்டும் ஆபரணங்கள் அணிந்தவளாக;
தியானிக்க வேண்டும் அலங்காரம் புனைந்தவளாக.

தியானிக்க வேண்டும் கருமேகத் திரளின் பிரகாசத்தோடு!
தியானிக்க வேண்டும் பத்துத் திருமுகங்கள் உள்ளவளாக!

ஜபமாலை, மழு, கதை, பாணம்;
வஜ்ரம், தாமரை, வில், குண்டிகை;

தண்டம், சக்தி, கத்தி, கவசம், மணி;
சுரா பாத்திரம், சூலம், பாசம், சுதர்சனம்;

சிவந்த காந்தியுடன் ஒளிர்ந்து கொண்டு;
செந்தாரையில் வசிக்கின்ற அன்னையாக;

மாயா ஸ்வரூபிணியை, மஹிஷனை அழித்த
மஹா லக்ஷ்மியைத் தியானிக்க வேண்டும்.

உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்

9#50b. DurgA Devi (2)


NyAsA must be done on the head, face, heart and the chest. NyAsA must be done on the hair, eye, ear, nose, face and shoulder.

Devi must be meditated upon as MahA KALi wielding the Kadga (axe), Chakra (disc), GadA (club), BANA (arrows), ChApa (bow), Parigha, Soola (trident), BhushuNdi, KapAla, and the Conch in her ten hands.

She must be meditated as having three eyes; decorated with many ornaments and jewels; shining like the black rain clouds and having ten faces and ten arms.

DhyAnam of MahA Lakshmi is done as the destroyer of MahishAsura. Devi is meditated as holding a japamAlA (Rosary), Paras’u (Axe), GadA (Mace), Ishu (Arrows), Kulisa (Thunderbolt), PadmA (Lotus), Dhanu (Bow), KuNdika (Water pot), DaNda (Rod), Shakti (Spear), Asi (Sword), charma (Armor), GhantA (Bell), SurA pAtrA ( Pot of liquor), SoolA (Trident); PAsA (Noose) and Sudarsana (Discus).
She is of the color of the rising sun and is seated on a red lotus
.
 
SEkkizhArin Periya PurANam

#28L . திரு ஞானசம்பந்தர் பெருமான் (12)

திருக்காப்பு நாணை அணிவித்தனர் மணமகனுக்கு;
திருமண நாள் தொடங்கின திருமணச் சடங்குகள்.

ஓங்கி முழங்கின தேவ துந்துபிகள் திருமணத்துக்காக;
ஓங்கி முழங்கின அவற்றுடன் மங்கல இசைக் கருவிகள்.

திருமஞ்சனம் செய்வித்தனர் அந்தணர்கள் சம்பந்தருக்கு;
நறுமணச் சந்தனக் கலவையினைப் பூசினர் சம்பந்தருக்கு.

அணிவித்தனர் வெண்பட்டாடைகள், இரத்தின வளைகள்;
மணிவடங்கள், முத்து ஆபரணங்கள், பலவித ஹாரங்கள்.

அடைந்தனர் அனைவரும் நம்பியாண்டார் நம்பி இல்லத்தை;
அமர்ந்தார் சம்பந்தர் முத்துக் குடையின் நிழலில், பீடத்தில்.

செய்வித்தனர் பெண்ணுக்கு உரிய திருமணச் சடங்குகளை;
செய்வித்தனர் பெண்ணுக்கு அலங்காரம் பொன்மகள் போல.

அமர்ந்தனர் மணமக்கள் ஆதிபூமி என்னும் மணவறையில்;
அளித்தனர் கன்னிகாதானம் தாரை வார்த்துப் பெற்றோர்.

வலம் வந்தனர் ஓம குண்டத்தை கரம் பற்றிய மணமக்கள்;
வளர்ந்தது சம்பந்தருள் பேரின்ப வாழ்வை அடையும் ஆவல்;

பாடினார் "
நல்லூர் பெறுமணம்" என்னும் திருப்பதிகம்;
நாடிய பயன் கிடைத்தது அங்கிருந்த எல்லோருக்குமே!

அடைந்தார் பெருமான் அளவற்ற ஜோதியின் வடிவை;
"அடைவீர் என்னை அனைவரும் ஜோதியின் வழியாக!" என

இருந்தது ஒரு நுழைவாயில் அந்த எல்லையற்ற ஜோதியில்;
இருந்தது எல்லையற்ற ஜோதி மூவுலகங்களும் ஒளிர்ந்திட .

பாடினார் சம்பந்தர் "காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி"
என்று
"புகுவீர் இப்பேரொளியில் பிறவிப் பிணி நீங்கிட!' என்றார்

புகுந்தனர் ஜோதியில் குழுமியிருந்த அனைவரும் !
புகுந்தனர் சிவனருட் செல்வர்களும் அதே ஜோதியில்!

பணிகள் செய்ய வந்தவர்களும் புகுந்தனர் ஜோதியில்!
பணிந்து வணங்கிடும் முனிவரும் புகுந்தனர் ஜோதியில்!

கரம் பற்றி வலம் வந்தார் புது மனைவியுடன் ஜோதியை;
அரன் நாமத்தை முழக்கியபடிப் புகுந்தனர் ஜோதியில்!

மூடிக் கொண்டு விட்டது அந்த ஜோதியின் நுழைவாயில்;
விடை மீது தோன்றினார் நம் அண்ணலும் அன்னையும்.

பேரொளி புகுந்தவர் எல்லோரும் பிறவிப்பிணி நீத்தனர்!
நேராகச் சென்று அடைந்தனர் ஈசன் இணையடி நீழலை!

"எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் "

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#28aL. Thiru JnAna Sambandhar (12)

The rituals of the wedding were started at the auspicious time. The protective Thiurk kAppu nAN was tied on the wrist of the groom Thiru JnAna Sambandhar. Then the groom's party reached the wedding mandapam. Thiru JnAna Sambandhar traveled in his pearl palanquin.

Deva dhundhubis blared along with many other auspicious musical instruments. Brahmins gave Thiru JnAna Sambandhar the holy bath (thiru manjanam) and decorated him with white silk clothes, bangles studded with Carbuncles, rows of stringed precious gems, pearl ornaments, hAramas, bracelets of pearls, wasit ornament, poonool, rows of pearls, diamond rings, anklets made of pearls etc. Thiru JnAna Sambandhar sat under the pearl umbrella on a seat made of gold.

The bride was decorated and the appropriate rituals were performed . She was decorated like Lakshmi Devi herself. Now the bride and groom sat in the wedding pandal called Aadhi Bhoomi. The bride's parents did the kanyA dhAnam by pouring dhara of water as it had been prescribed. The bride and groom held hands and went round the fire in the homa kuNdam.

Suddenly a desire for the life at a higher level (pErinba vAzhvu) surged in the heart of Thiru JnAna Sambandhar. He really had no wish to be tied down in SamsaAram like everyone else. He sang a padhigam "Nalloor PerumaNam" and everyone gathered there reaped the benefits along with Thiru JnAna Sambandhar.

An unending illumination appeared in front of them with an opening forming an entrance. A voice was heard from the sky. It said," You may reach me by entering the illumination". The illumination lit up all the three worlds. Sambandhar now sang the padhigam "KadhalAgik kasinthu kaNNeer malgi"

He told the people gathered there,"You may enter the illumination to put an end to the samsAram and reach the lotus feet of Siva" Everyone present there happily entered the opening in the illumination.

The nAyanmArs entered in it; The wedding guest entered in it, the servants and cooks entered in it, the rushis entered in it. Finally Thiru JnAna Sambandhar went entered it with his wife with the name of his lord on his lips.

The entrance of the illumination now closed. Siva and Uma appeared on Nandhi Devan. Every one who had the good fortune of being present there reaped the benefit and reached the lotus feet of Siva easily.








 
bhagavathy bhaagavatam - skanda 9

9#50f. துர்க்கா தேவி (3)

“மணி, சூலம், கலப்பை, சங்கு;
உலக்கை, சக்கரம், தனுசு, பாணம்;


கரங்களில் தாங்கி சும்பாசுரனை அழித்தொழித்த
சச்சிதானந்த ஸ்வரூபிணி, வாணீ, பீஜ ரூபிணி


சரஸ்வதியை தியானிக்கின்றேன்!” என்று கூறி
சரஸ்வதி தேவியைத் தியானிக்க வேண்டும்.


ஸப்தஸதீ ஸ்தோத்திரத்துக்குச் சமமானது
சத்தியமாக வேறு இல்லை மூவுலகிலும்!


மகிழ்ச்சியடைவதில்லை வேறு துதியால் தேவி
மகிழ்ச்சி அடைவதைப் போல இந்தத் துதியால்.


அடைவர் அறம், பொருள், இன்பம், வீடு;
இடைவிடாது தேவியைத் துதிக்கும் அன்பர்.


தேவரும், மூவரும் துதிக்கின்றனர் துர்க்கையை;
தேவியர் குழுமித் துதிக்கின்றனர் துர்க்கையை;


ஞானியர், யோகியர் துதிக்கின்றனர் துர்க்கையை;
முனிவர், மனிதர்கள் துதிக்கின்றனர் துர்க்கையை!


பிறவிப் பயனைத் தருபவள் அன்னை துர்க்கை;
பிறவிப் பயன் ஆகும் துர்க்கையின் ஸ்மரணை!


பலன்கள் அடைந்தனர் தேவியைத் துதித்து
பதினான்கு மனுக்களும், பிற தேவர்களும்.


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K . ராமன்


9#50c. DurgA Devi (3)

Saraswati is meditated upon as holding a bell, a pickaxe, a plough (Hala), a Conch shell, a Mushala (a club), Sudarsana chakram, a bow and arrows.


She is the one who destroyed Sumbasura. She is the Sath-Chit-Aananda swaroopiNi. She is the VANi Beeja RoopiNi. (the source of knowledge and speech)


There is no other stuti which can please Devi as much as Sapta Sathee. Those who worship chanting this stuti will attain Dharma, Artha, KAma and Moksha.


The Devas and the Trinity worship Devi. All the amsams of Devi worship her. The JnAnis, Yogis, Rushis and men worship Devi.


DurgA Devi will confer success on the purpose of one’s life. It is nothing but remembering Devi all the time. The fourteen Manus as well as the Devas attained whatever they wished for by worshiping Devi.




 
SEkkizhArin Periya PurANam

#29a. ஏயர்கோன் கலிக்காம நாயனார் (1)

அமைந்திருந்தது பெருமங்கலம் என்னும் திருநகரம்
அழகிய வளம் மிகுந்த சோழ நாட்டின் ஒரு பகுதியாக.

வகித்தனர் படைத்தலமையை ஏயர் குலத்தினர்
மகிமை மிகுந்திருந்த சோழகுல மன்னர்களிடம்.

அன்பில் சிறந்தவராக, அழகே வடிவானவராக,
அன்று விளங்கியவர் ஏயர்கோன் கலிக்காமர்.

மானக் கஞ்சாற நாயனாரின் மகளைக் கலிக்காமர்
மணந்து நடத்தினார் சிறந்த இல்லற வாழ்க்கையை.

நொந்தார் மனம்; வருந்தினார் மிகவும் கலிக்காமர்
சுந்தரர் பரவையிடம் பிரானைத் தூது அனுப்பியதால்.

'காண்டற்கரிய ஆண்டவனும் வெறும் தூதுவனோ?
தொண்டன் தன் தலைவனை ஏவுதலும் முறையோ?

தேரோடும் திருவீதிகளிலே சுந்தரர் ஆணைப்படித்
தூய திருவடிகள் தேய நம் ஐயன் அன்று நடந்தாரே!"

துன்பக் கடலில் மூழ்கினார் மனம் நொந்த கலிக்காமர்;
துன்புற்றார் சுந்தரரும் கலிக்காமர் உறும் துயர் கேட்டு.

பிரான் மனம் கனிந்து திருவுளம் கொண்டார் - தன் இரு
பிரிய பக்தர்களைச் சிறந்த நண்பர்களாக ஆக்குவதற்கு.

கொடிய சூலை நோய் பற்றியது ஏயர்கோன் கலிக்காமரை;
கொடிய நாகத்தின் விடம் போலத் தீராத் துன்பம் தந்தது.

"வன்றொண்டன் சுந்தரன் ஒருவனே தீர்க்க வல்லவன்
உன்றன் கொடிய சூலை நோயை!" என்றார் பெருமான்.

ஏவினார் பெருமான் சுந்தரரை - தன் அடியவனை
மேவிய சூலை நோயைப் போக்கிடும் படிக் கூறி.

சுந்தரர் சென்றார் பெருமங்கலத்துக்கு - அதுவே
வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல ஆனது

"ஆவியைப் போக்கிக் கொள்வேன் வன்றொண்டன் என்
சூலை நோய்யைப் போக்கும் முன்பே!" என்றார் கலிக்காமர்

உருவினார் உடைவாளை! பாய்ச்சினார் தன் வயிற்றில்;
பிரிந்தது ஆவி! மனைவியும் தன் உயிர் விடத் துணிந்தாள்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#29. Eyar KOn KalikkAma nAyanAr


Perumangalam was a city situated in the fertile ChOzha Kingdom. The people of the 'Eyar' race served as the generals of the king's army. Eyar KOn KalikkAmar belonged to this family. He was as valorous as he was kind and as good looking as he was brave.

He married the beautiful daughter of the MAnak KanchARa nAyanAr and lead a fruitful life. But one thing was bothering him all along...the mean and degrading way in which Sundara moorthi had treated Lord Siva as a mere messenger. He had made Lord Siva walk on the streets of ThiruvAroor. "Can a servant of the God treat the God as his servant?"

Sundaramoorthi heard of this and felt very sorry for KalikkAmar. Lord Siva wanted to put an end to this enmity between two of his doting devotees. He caused 'Soolai Noi' in KalikkAmar. It hurt him like the poison of snake and KalikkAmar suffered intensely.

Siva told him that only Sundaramoorthi could make his Soolai Noi disappear. But KalikkAmar did not wish to be treated by Sundarar - who he considered as his enemy. Siva told Sundaramoorthi to go to Perumangalam and cure the Soolai Noi of KalikkAmar.

Sundarar reached Perumanagam but it caused the same pain as piercing with a spear an area already scalded by fire does. KalikkAmar said, " I will rather give up my life than get treated by Sundara moorthi". He grabbed his sword and pierced his stomach with it. He fell down in a pool of blood and died!








 
bhagavathy bhaagavatam - skanda 9

9#50g. துர்க்கா தேவி (4)

பயன்கள்:

கூறப்பட்டன பஞ்சப் பிரகிருதியரின் அவதாரம்;
கூறப்பட்டன பஞ்சப் பிரகிருதியிரின் அம்சங்கள்.


அடைவான் இதைக் கேட்கும், படிக்கும் ஒருவன்
அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கையும்.


அடைவர் ஒவ்வொருவரும் தாம் விரும்புவதை;
அடைவர் இக பரங்களில் விரும்பும் நல்வாழ்வு.


பாராயணம் செய்ய வேண்டும் இதனைப்
பராசக்தியின் சன்னதியில், நவராத்திரியில்.


அடைவாள் மிகவும் மகிழ்ச்சி பராசக்தி.
அடைவாள் பக்தனின் வசம் பராசக்தி!


உலகம் உய்ய வேண்டும்! விசாலம். K. ராமன்


ஓம் தத் ஸத்! ஓம் தேவ்யை நம:

ஒன்பதாவது ஸ்கந்தம் முற்றுப் பெற்றது


9#50d. DurgA Devi (4)


“Thus I have described to you the very sacred and secret histories of the Five Prakritis and explained their avatars. The four objects of all human pursuits viz Dharma, Artha, KAma and Moksha are obtained by hearing this.


He who wishes for sons will get good sons; He who wishes to become learned will become learned; Whatsoever whosoever wishes for will be given to him if he listens to this.


The Devi becomes pleased with him who reads this for nine nights in front of her in a temple. She becomes favorably disposed towards such a devotee.


The ninth Skanda of Bhagavathy BhAgavatam ends here.


On Tat Sath. Om Devyai nama:



 
SEkkizhArin Periya PurANam

#29b . ஏயர்கோன் கலிக்காம நாயனார்

விருந்தோம்பல் இல்லாளின் கடமை அன்றோ?
சிறிதும் கடமையில் வழுவவில்லை அம்மையார்!

வந்து சேர்ந்தார் சுந்தர மூர்த்தியார் பெருமங்கலம்;
வரவேற்பார் அவரை இன்முகத்துடன் அம்மையார்!

மறைத்து வைத்து விட்டார் கலிக்காமரின் உடலை;
அலங்கரித்தார் மாளிகையை மிகவும் நேர்த்தியாக.

மணி விளக்குகள் நின்றன வாயில்கள் தோறும்!
மணம்வீசும் நீர்க்கலசங்கள் இருந்தன ஆங்காங்கே!

தொங்கின நறுமண மலர்மாலைகள் தோரணங்களாக!
தோன்றின தரையில் வண்ண வண்ணக் கோலங்கள்!

வரவேற்றார் சுந்தரரைக் கலிக்காமரின் மனைவி;
சிறப்பான பாத பூஜை செய்தார் சுந்தர மூர்த்திக்கு.

காண விரும்பினார் சுந்தரர் கலிக்காமரை - ஆனால்
காணக் கிடைத்தது குருதி வெள்ளத்தில் அவர் உடல்.

துடி துடித்தார் சுந்தரர் இந்தக் கொடுமையைக் கண்டு
முடிவு செய்தார் தன உயிரையும் மாய்த்துக் கொள்ள.

எடுத்தார் சுந்தரர் கலிக்காமரின் உடைவாளை;
கொடுப்பார் தன் இன்னுயிரை தன் நண்பருக்காக.

எழுந்தார் அப்போது கலிக்காமர் உயிருடன் மீண்டும்!
பறித்தார் தன் உடைவாளைச் சுந்தரர் கரத்தில் இருந்து.

"அறியாமையால் பகைமை பூண்டேன் நான் - இந்த
அறிவிலியை மன்னித்து ஏற்பீரா உம் நண்பனாக?"

வீழ்ந்து வணங்கினார் கலிக்காமரின் மனைவியார்;
ஆழ்ந்தனர் அனைவரும் சிவபக்தியில் முழுமையாக.

நண்பர்கள் ஆகிவிட்டனர் இரு தொண்டர்களும் இப்போது;
அன்புடன் தொழுதனர் அம்பலவாணனை அனைவருமே.


துதித்தனர் திருப்புன்கூர் திருத்தலத்தில் சிவபெருமானை;
துதித்தனர் திருவாரூர் திருத்தலத்தில் சிவபெருமானை;

பல்லாண்டுகள் வாழ்ந்தனர்; பல தொண்டுகள் செய்தனர்;
பரமன் திருவடிகளை அடைத்து உய்ந்தனர் அடியார்கள்.

"ஏயர்கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்"

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி

#29b. Eyar KOn KalikkAma nAyanAr (2)

Sundaramoorthi arrived in Perumangalam. KalikkAmar's wife had decided to end her life when her husband fell down dead. But she had to receive Sundaramoorthi who had already reached Perumangalam. She would not fail in her duty of receiving the athiti (guest)

She hid her husband's body with the help on her maids. She got the house decorated. Shining lamps lit bright stood in rows. Kalasams (metal pots) filled with fragrant water were kept at the appropriate spots. Garlands of fresh flowers hung as thOraNs. Many colorful designs were drawn on the floor.

KalikkAmar's wife received Sundaramoorthi with due honors. She performed pAdha poojai for him. Sundarar expressed his wish to meet KalikkAmar but all he was shown was the dead body lying in a pool of blood.

Sundarar suffered by this unexpected development and decided to end his own life as well. He picked up the sword used by KalikAmar and was about tip kill himself.

KalikkaAmar was resurrected by the grace of Lord Siva. He got up quickly and grabbed his sword from the hands of Sundarar. "I had imagined that you were enemy due my utter ignorance. Can you please pardon me and accept me as your friend?"

He along with his wife fell at the feet of Sundarar. They were all immersed in the deep ocean called devotion to Siva. The two nAyanmArs became bosom friends from that time. They praised their lord in Thirupunkoor and ThiruvAroor.

KalikkAmar continued to serve Lord Siva and his devotees as before for a long time. Finally he merged with the lotus feet of Lord Siva.




 
bhagavathy bhaagavatam - skanda 10

10#1a. ஸ்வாயம்பு மனு (1)

பிறந்தான் பிரமன் நாரணன் நாபியிலிருந்து;
பிறந்தான் ஸ்வாயம்பு பிரமன் மனதிலிருந்து.


பிரிந்தான் ஸ்வாயம்பு மனு இரு உருவங்களாக;
பிறந்தாள் பெண் சதரூபை இடப் புறத்திலிருந்து.


திருப்பாற்கடற்கரை சென்று மண்ணினால் – தேவி
திரு உருவினைச் சமைத்தான் ஸ்வாயம்பு மனு.


பிரதிஷ்டை செய்தான் தேவியின் திரு உருவை;
புறக்கணித்தான் அன்னம், பானம், நித்திரையை.


விரதங்களால் ஒடுக்கினான் தன் இந்திரியங்களை;
விரதங்களால் அடக்கினான் அந்தக் கரணங்களை.


ஜெபித்தான் ‘வாக்பவம்’ என்னும் மந்திரத்தை – தவம்
செய்தான் ஒற்றைக் காலில் நின்று நூறு ஆண்டுகள்.


காட்சி தந்தாள் தேவி பராசக்தி ஸ்வாயம்பு மனுவுக்கு;
“கேட்டால் தருவேன் கோரும் வரங்களை!” என்றாள்.


ஆனந்தம் அடைந்தான் ஸ்வாயம்பு மனு இது கேட்டு;
அன்னையிடம் கேட்டான் இந்த அரிய வரங்களை.


“அழகிய விழிகளை உடைய என் ஜகதன்னையே!
அனைவரின் இதயங்களிலும் என்றும் உறைபவளே!


எவராலும் பூஜிக்கத் தகுந்த தேவி நீயே – இந்த
புவனங்கள் அனைத்தையும் தாங்குபவளே!”


உலகம் உய்ய வேண்டும் ! விசாலம். K . ராமன்


10#1a. SWAyambu Manu

From the lotus on navel of the four armed VishNu, BrahmA the creator of the Universe was born. The four faced BrahmA, produced from His mind SwAyambhuva Manu and Manu’s wife SataroopA appeared from SwAambhuva’s left side.


SvAyambbuva Manu, the mind-born son of BrahmA, was given the task of creating and multiplying. He made an image of the Devi, on the beach of the Ocean Of Milk. He started worshiping Her and began to repeat the mystic mantra of ‘VAgbhava’ or the Deity of Speech.


Thus engrossed in his worship, SvAyambhuva Manu conquered his breath, hunger and thirst. He observed Yama, Niyama and other vows and became famished, very lean and thin. For one hundred years he stood on one leg and successfully controlled his six passions of the mind.


Pleased by his Tapas Devi, the Mother of the Universe, appeared before him and said “O King! Ask for divine boons from Me and I shall grant them to you.”


Manu said, “Oh Devi with large beautiful eyes! Victory to You who is residing in the heart of everyone! You are honored! You are worshiped! O Devi! You Uphold the world!”




 
SEkkizhArin Periya PurANam

#30a . திரு மூலர் நாயனார் (1)

பசுபதியார் எழுந்தருளிய திருவாடுதுறைத் தலம் - உமை
பசுவின் கன்றாக வடிவம் பூண்டு தவம் செய்த திருத்தலம்.

நந்திதேவர் கயிலையில் முதற் பெருங்காவலர் - அவரது
நான்மறைச் சிவயோகிச் சீடருள் சிறந்தவர் சுந்தர நாதர்.

விரும்பினார் இவர் அகத்தியருடன் அளவளாவிட;
இருந்தார் அகத்தியர் தெற்கே பொதிகை மலையில்.

கயிலையிலிருந்து புறப்பட்டார் சுந்தர நாதர் - ஈசன்
கமல மலர்பாதங்களை அன்புடன் பணிந்து விட்டு.

திருக்கேதாரம், நேபாளம், திருசைலம், திருக்காளத்தி,
திருவாலங்காடு, காஞ்சி, தில்லை வழியாகச் சென்றார்.

திருவாடுதுறையை அடைந்தார் நீண்ட யாத்திரை செய்து.
அருகில் உள்ள திருத்தலங்களையும் சென்று தரிசித்தார்.

காவிரி ஆற்றங்கரை வழியே சென்றார் சுந்தர நாதர்;
கண்டார் ஆநிரைகள் மேய்க்கும் இடையன் மூலனை.

கருணை உள்ளம் கொண்ட ஒரு நல்லவன் மூலன்.
வருமானம் தந்தது ஒரு நிறைவான வாழ்க்கையை.

தன்னை மறந்து நின்று விட்டார் சுந்தர நாதர் அங்கே;
தன் நினைவிழந்து விழுந்து இறந்து விட்டான் மூலன்.

கூட்டமாக நின்றன பசுக்கள் மூலனைச் சுற்றிலும்;
கூடிக் கண்ணீர் வடித்தன அன்பை வெளிப்படுத்தி.

கதறின; பதறின; சிதறி ஓடின இங்கும் அங்கும்;
கதறிய ஆநிரையைக் கண்டு துயருற்றார் அவர்.

"இறந்து போய்விடுமோ ஆநிரைகள் எல்லாம்
இறந்து போன மூலன் பிரிவுத் துயரில் வாடி?

நேசம் மிகுந்துள்ளன இந்தப் பசுக்களின் கூட்டம்.
ஈசன் திருவருளால் தீர்ப்பேன் இவற்றின் துயரை!"

கூடு வீட்டுக் கூடு பாயும் வித்தை அறிந்தவர் அவர்;
நொடியில் புகுந்தார் மூலனின் உடலில் சிவயோகி.

கண் விழித்து எழுந்தான் இடையன் மூலன் - கண்டு
கன்றுகள் பசுக்கள் குதித்தன; கொண்டன பேருவகை.

மாலையில் திரும்பின பசுக்கள் தத்தம் இல்லம்.

மூலனின் இல்லம் செல்ல வில்லை சிவயோகி.

வழிமேல் விழிவைத்துக் காத்திருந்தாள் மனைவி;

வெளியே சென்று தேடினாள் கணவன் மூலனை.

வாழ்க வளமுடன் , விசாலாக்ஷி ரமணி

#30a. Thiru Moolar nAyanAr (1)

The God residing in ThiruvAduthurai is Pasupathi nAthar. Uma Devi is said to have assumed the form of a calf of a cow to do penance here.

In Mount Kailash, Nandhi Devan is the foremost protector. He had many disciples who had mastered all the four Vedas. Of them Siva yOgi Sundhara nAthar was the foremost.

Sundhara nAthar wished to meet Sage Agasthya and to have intellectual conversations with him. So he wished to reach Podhigai malai where Sage Agasthya was residing

Sundhara nAthar traveled to the South through Kedharam, Nepalam, Sree Sailam, Thiru KAlahasthi, ThiruvAlangAdu, KAnchi, Thillai and reached ThiruvAduthurai.

One fine day he was walking by the side of river Kaveri. He saw a cowherd named Moolan grazing a herd of cows and calves. Moolan was very gentle and kind to those animals. They too loved him very much. He got a decent income and lived a life of contentment.

Sundhara nAthar stood fascinated watching the cows grazing. Quite suddenly Moolan just dropped down dead. The cows and calves now stood around their dead cowherd and shed copious tears.

They got scared and let out piteous moaning sounds. They got scared and started running hither and thither aimlessly.

Sundara nAthar was moved to pity by these sights and sounds. He was secretly scared that the cows and calves might end their lives pining for their loving cowherd. He decided to help those poor creatures.

He knew the technique of entering into another body leaving his own temporarily. So he cast aside his own body and entered into the body of the cowherd Moolan. So Moolan woke up very much alive.

The joy of the cows ans calves knew no bounds. They jumped and danced around him. When it was time to return to their homes, all the cows and calves went back but Moolan did not go with them.

Moolan's wife was waiting for him but he did not come. She grew very restless and went out looking for him.



 
Nice effort Mam. Thanks for sharing. BTW do yo have the complete details of all the 63 nayanars? I have heard about only a a few of them. Please share link if you already have posted somewhere in this thread.

Dear Mr Ganesh,

SEkkizhArin Periya PurANam blog has been launched on 17th July

The first 60+ posts have been made today. More will follow ASAP.

Welcome to visit the newest blog

https://sekkizharinperiyapuranam.wordpress.com/
 

Latest ads

Back
Top