• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஓ அமெரிக்கா ...

ஹாய்!

அமெரிக்காவில் ஜனித்ததால்,
அமெரிக்கக் குடிமகன் அவன்!

மரணம் என்பதன் தாக்கத்தை
உணர இயலாத ஒரு பாலகன்!

தாத்தாவின் மரணத்தால், தன்
தாயுடன் இங்கு வந்துள்ளான்!

துக்கம் விசாரிக்கச் சென்ற எம்
பக்கம் வந்த அவனிடம், தாய்

'ஹாய் சொல்லு' என்று கூற,
'ஹாய்!' என ஒரு சொல்லை,

தன் I Pad இலிருந்து சிறிதும்
தன் கண்களை நீக்கிவிடாது,

எந்திரன் போலக் கூறிவிட்டு,
அங்கிருந்து வெளியேறினான்!

பெரியவர்கள் எதிரிலிருந்தால்,
சிறியதாகப் புன்னகை செய்து,

வணக்கம் சொல்லுகிற நல்ல
வழக்கம் மறைந்துவிட்டதோ?


:pout:
 
hi

the personal relationship different in ABCD cases.....not much emotional attachments....its my personal observation...
 
.. the personal relationship different in ABCD cases.....not much emotional attachments....its my personal observation...
My concern is different, TBS Sir!

Their mothers don't teach the Indian way of greeting to these
ABCDs, even when they are in India! :sad:
 
விளையாட்டே வினையாகும்!

அவனுடைய வயது பதினொன்று;
அவனுக்கு உயிர்த் தோழி ஒன்று!

பதிமூன்று வயதான அவளுடைய
சதியால் உயிர் துறந்தான் அவன்!

அவள் இறந்ததாக ஓர் அறிவிப்பை,
அவள் சொல்லிச் சிலர் வெளியிட,

மனது உடைந்த சிறுவன், வருந்தித்
தனது இன்னுயிரையே மாய்த்தான்!

இளம் பிஞ்சுப் பிராயத்தில், அவனின்
உளம் உடைவது நியாயம் - ஆனால்

தற்கொலை ஒரு பாவச் செயல் எனக்
கற்பதை அவன் மறந்தேபோனானா?

:pout:

Using a cellphone he bought without his mother’s knowledge, Tysen on March 14 was reading texts and other messages

about the faked suicide and decided he would end his life too, his mother said. After seeing the posts about his girlfriend,

Tysen replied over social media that he was going to kill himself, and no one involved in the prank told an adult. ...
Source: US: 11-year-old boy hangs self after girlfriend posts suicide prank
 
Since these lines are relevant to this thread,

I am copy pasting it from another thread! :typing:


சுதந்திர தேவி இருக்கின்ற நாடு!

நம்ம ஊர்ப் பெண்கள் இந் நாட்டை விரும்புவது

தம்மைக் கட்டுப்படுத்த யாருமே இல்லாததால்!

வேண்டுமென்றால் சமைக்கலாம்; இல்லையேல்
வேண்டியபடி அனைத்து உணவுகளும் ரெடிமேட்!

சென்ற முறை அமெரிக்க விஜயத்தில், எங்களது
சொந்தக்காரரின் மகனைப் பார்க்கச் சென்றோம்.

அயல் நாட்டுப் பெண்ணை மணந்துள்ள அவனது
சமையல் அறை படு சுத்தமாக மிளிரக் காரணம்,

அவள் சமைப்பதே கிடையாது என்று அறிந்தேன்!
அவ
ள் பணிக்குச் செல்லுவதால், இதுவே எளிது!

சப்வே கடைகளில் மிக
க் குறைந்த விலையிலே
சான்ட்விச் வகைகள் பற்பல கிடைக்கு
ம்! மேலும்

டாகோபெல் சங்கிலி உணவு விடுதிகளில், நல்ல
டாப்பான சப்பாத்தி ரோல் போலவே கிடைக்கும்!

சுதந்திர தேவி இருக்கின்ற நாடல்லவா? அதனால்
சுதந்திரத்திற்குப் பஞ்சமே இல்லை பெண்களுக்கு!

:couch2:
 
Life has become unbearable for indian techies who have returned from abroad after masters or after few months of internship
.
Due to new visa regulations they are unable to return.

In india , if these are girls , parents are pressuring them to marry local indians thru arranged marriages.

Poor things , they are getting into bigger mess in india.

Our locals are hardly the dating material they have in mind.

Most of these girls want a relationship based on equality [more equal?] and respect for gender.

Where will they find these types in india?
 
If one has been fed on a diet of equality, liberty and right to decide as an adult, emotionally coercing these to accept the local monsters or duds on face value can be

painful.Where can they find another country for escape at the earliest?.

Singapore may not be bad.

Newzealand is still good.Not many hate crimes yet.
 
ஊக்குவித்தல்!

ஜண்டை வரிசை கற்கும் சிறுமி,
ஜரிகைப் பாவடை சட்டையுடன்,

தன் சக மாணவிகள் உடன் அமர,
தன் இசைத் திறமை காட்டினாள்!

ஸ்வர வரிசை கற்கும் பொழுதே
எப்படி மேடையேற வைக்கிறார்?

ஊக்குவித்தலில் இது ஒரு வகை;
நோக்கினேன் நான் அதிசயமாய்!

:cheer2:
 
hi

in USA....encouragement...ஊக்குவித்தல்....in every aspect of life....every part/acivity are always appreciated and encouraged...like

words..well done...keep it up...these are common words...always THANKS AND SORRY used in day to day life....we learned

WESTSERN DRESS....BUT NEVER LEARNED WESTERN GOOD CULTURE...sad to say...
 
ஸ்கைப் வகுப்பு!

இசை கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்து,
அதைக் கற்றுககொள்ளவும் விழைந்தால்,

குழுவாகக் கற்றுக் கொள்ள, ஒரு வகுப்புக்கு
முழுதாகத் தர வேண்டுமாம் 25 டாலர்கள்!

நீண்ட தூரம் பயணம் தேவை எனும்போது,
வேண்டுகின்றார் ஸ்கைப்பிலே பாடங்கள்!

அதே கட்டணத்திற்கு, இனிய இல்லத்தில்
அமர்ந்தபடியே, கற்றுக்கொள்ள இயலுமே!

இணையதளம் செய்கின்ற உதவி பெரிது!
இணையிலா இசை எளிதிலே பரவுகிறது!

இனி, ஆசிரியர் வீட்டைத் தேட வேண்டாம்!
பனி மழை பற்றிக் கவலையும் வேண்டாம்!!

:cool: ........... :couch2:
 
hi

in USA...my known gal leaning carnatic music from chennai by skpe...i saw in chennai last november...one carnatic teacher was

teaching music teaching through skpe in internet centre in chennnai...
 
நன்மை பயக்குமா?

வெண் தாடி வேந்தரின் அமெரிக்க விஜயம்,
எண்ணற்ற மக்களின் எதிர்பார்ப்பே ஆகும்!

அமெரிக்க வாழ் இந்தியர்களின் நிலைமை,
அமைதியாகத் தொடர்ந்திட உதவுமா, இது?

எந்த நேரத்தில் 'பிங்க்' சீட்டு வருமோ, என்று
இந்தியர் பலர் நடுங்கி இருக்கும் காலம் இது!

நன்மை எது பிறந்தாலும், இந்தியர்கள் மனம்
உண்மையான மகிழ்ச்சி எய்துவது உறுதியே!

:decision: ............... :dance:
 
For those with hi tech degrees, it is difficult to decide which is better.

Get overworked in india with irregular hours or try for US with its problems of visa and job insecurities.

But indians cope well whatever be the living conditions anywhere in the world.

Most indians have adjusted to trump rules unlike europeans who are wary of him.

Only Mexicans are like indians.

We can hug jews in israel,shias in iran and support saudis and live in saudi arabia.

We can collect citizenship of african countries and share power in govts in mauritius and british Guyana.
 
The academic mediocre/average youngsters from india flower when they leave the shores of india.

In open societies they do extremely well.

They adapt to the local culture , put up with hardships if they see a future for themselves.

Unless one is academically very proficient and well off , india is a miserable place for any youngster.

Thats why all run off at the earliest oppurtunity.
 
இர்மா என்றால் சும்மாவா?

செயற்கை வசதிகள் என்னதான் இருப்பினும்,
இயற்கையின் சீற்றத்தைத் தடுக்க இயலுமா?

பறக்கும் கூரைகள்; வேருடன் சாயும் மரங்கள்;
ஆறுகளாகும் சாலைகள்; போகும் பல உயிர்கள்!

மில்லியன் மக்களுக்கு மின்சாரமில்லை; பலரை
இல்லங்களைத் துறந்து ஓடவைத்த தொல்லை!

இயற்கைப் பேரிடர்கள் மீண்டும் தாக்காதிருக்க,
இறையை வேண்டுவோம்; வேறென்ன செய்ய?

:pray: ... :pray: ... :pray:
 
நவராத்திரி.

சொந்த மண்ணை விட்டுச் சென்று,
எந்த நாட்டில் வாழ்ந்தாலும் - நமது

பண்டிகைகளை மிக நேர்த்தியாகக்
கொண்டாடுவது, அற்புத விஷயம்!

அமெரிக்க நாட்டிலும், இல்லத்தில்
அமெரிக்கையாகக் கொலு வைத்து,

மொழி, இன வேறுபாடு பாராட்டாது,
தோழிகளைத் தோழர்களை விடாது

அழைத்து, இந்தியாவிலிருந்து வர-
வழைத்த, சிறு பரிசுகளை வழங்கி,

நவராத்திரியை விசேஷ நிகழ்வாக
நயம்படச் செய்வதற்குப் பாராட்டு!

:clap2:
நண்பர்கள் அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துக்கள்!
cheer2.gif
 
இந்த நாட்டிலுமா வதந்திகள்!

குறுந் தகவல் வந்து விழுறது, அலைபேசியில்;
குழம்பிய என்னவரின் சகோதரியிடமிருந்து!

சென்னை, நாகப்பட்டினம், இராமேஸ்வரத்தை,
செம்மையாகத் தாக்கும் ஆழிப் பேரலை என்று!

சிங்காரச் சென்னையில், செய்திச் சானல்களில்
எங்கும் காணவில்லை சுனாமி பற்றி அறிவிப்பு!

பதில் தகவல் அனுப்பினேன் எல்லாம் நலமென.
எதில் வந்தது பயங்கர அறிவிப்பு, என்று வினவ,

இச் செய்தி WhatsApp - இலே பரவியதாம் - தந்தது
இலங்கை வானொலி மையமென! அடக் கடவுளே!

தமிழ்நாட்டில் உள்ளது போலவே வதந்திகள் பரவி,
தமிழ் மக்களை அமெரிக்காவிலும் அதிர வைப்பதா?
 

கடும் பனிப் பொழிவு!


இரண்டு அங்குல மழைக்கே, சென்னையில்
இரண்டு நாட்கள் பள்ளிகளை மூடிடுவார்!

அமர்க்களமான எட்டு அங்குலப் பனியிலும்,
அமெரிக்காவில் விடுமுறையே கிடையாது!

இயற்கையுடன் இசைந்து வாழ்ந்திட, இந்த
இளைய சமுதாயம் சளைப்பதும் இல்லை!

தேவையான முன்னேற்பாட்டுடன், தமக்குத்
தேவையான கல்வியைக் கற்கின்றார்களே!

:clap2: .... :thumb:
 

கடும் பனிப் பொழிவு!


இரண்டு அங்குல மழைக்கே, சென்னையில்
இரண்டு நாட்கள் பள்ளிகளை மூடிடுவார்!

அமர்க்களமான எட்டு அங்குலப் பனியிலும்,
அமெரிக்காவில் விடுமுறையே கிடையாது!

இயற்கையுடன் இசைந்து வாழ்ந்திட, இந்த
இளைய சமுதாயம் சளைப்பதும் இல்லை!

தேவையான முன்னேற்பாட்டுடன், தமக்குத்
தேவையான கல்வியைக் கற்கின்றார்களே!

:clap2: .... :thumb:

hi

may be sometimes......school open after two hours late or early dismissal...
 

Latest ads

Back
Top