• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Kaveri pushkaram 2017

Status
Not open for further replies.
kaveri pushkaram

sir, you can take bath in the river cauvery. you can have darshan of gods there in the thula kattam. no archanai, no donation..
 
Namaskaram sir and thank you very much for providing clarification. You have been very patient in answering all my questions, sashtanga namaskarams to you.
 
தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மண்டலத்தில் பூமியைச் செழிக்கச் செய்யத் தவழ்ந்துவரும் காவிரியை மக்கள் தாயாக நினைத்து வழிபடுவார்கள். அங்கே மகாநதியாகப் போற்றப்பட்டு துலாக்காவிரி கட்டம் என்ற பெருமையையும் பெற்று ஜீவநதியாகவும் திகழ்கிறது காவிரி.


வரும் செப்டம்பர் 12 முதல் 24-ம் தேதிவரை இந்தத் தெய்வ நதிக்கு மாபெரும் புஷ்கர திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படவிருக்கிறது.


புஷ்கரம் என்பது குருபகவான் ஒவ்வோர் ஆண்டும் ஒரு ராசியிலிருந்து வேறொரு ராசிக்கு இடம் மாறும்போது அந்த ராசிக்குரிய நதிகளில் நடைபெறுகிற விழா. மூன்றரை கோடி தீர்த்தங்களுக்கு அதிபதியான பிரம்ம தேவனின்

கமண்டலத்தில் வாசம் செய்யும் புஷ்கரமானவர், குருப்பெயர்ச்சி நடக்கும் காலகட்டத்தில் 12 தினங்கள் வாசம் செய்யவதாக வரலாறு. நம் நாட்டில் ஏராளமான நதிகள் இருந்தாலும் 12 ராசிகளைப் பெற்ற கங்கை முதலிய முக்கிய நதிகளுக்கு மட்டுமே புஷ்கர விழா எடுக்கும் தெய்வீகத்தன்மை உண்டு.


காவிரி நதியின் ராசி துலாம் ஆக இருப்பதாலும் 144 ஆண்டுகளுக்குப் பிறகு வருவதாலும் இந்த புஷ்கரவிழா மகத்துவம் வாய்ந்தது. முன்பு 1860-ம் ஆண்டில் மாயூரம் காவிரியில் புஷ்கரவிழா நடந்துள்ளது. பிரம்மன் மற்றும் அஷ்ட லட்சுமிகள் சம்பந்தப்பட்டிருப்பதால் இப்புனித நீராடல் நற்பெயரும் திருமகள் அருள் பார்வையும் தரும் என்பது ஐதீகம்.


துலாக்காவிரி மகாத்மியம்


ஆயிரம் ஆனாலும் மாயூரம் ஆகாது என்பர். புஷ்கரம் நடக்கிற புண்ணிய காலத்தில் சிவன் , விஷ்ணு, பிரம்மா, தேவர்கள், மகரிஷிகள், சப்தகன்னிகள் வாசம் செய்வதால் அங்கே புனித நீராடுவதால் மூன்றரை கோடி தீர்த்தங்களில் ஸ்நானம் செய்த பலனும், ஆடைதானம், அன்னதானம் சிவயாகம் செய்த பலனும் கிடைக்கும். மேலும்

இக்காலகட்டத்தில் நீராடி முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து திதி செய்வதால் குடும்பத்தில் பிதுர் தோஷங்கள் விலகி சௌபாக்கியமான வாழ்க்கை கிடைக்கும்.


காவிரியின் மகிமை


கவேரரின் மகளாக வந்ததாலும் காகம் வடிவத்தில் வந்த கணேசரின் செயலால் வழிந்தோடியதாலும் காவிரி என்ற பெயர் பெற்றாள் இந்த மகாநதி. காவிரியில் புனித நீராடிவிட்டால் நமது ஆயுள் உள்ளவரை சேரும் பாவங்களை உடனே அகன்றுவிடும் என்கிறது தர்ம சாஸ்திரம். ஒரு சமயம் கன்வ மகரிஷியைக் கருமை நிறமுடைய மூன்று

பெண்கள் சந்தித்தார்கள். “நாங்கள் மூவரும் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகள். மக்கள் அனைவரும் தங்கள் பாவங்களை எங்களிடம் வந்து கரைத்துவிட்டுச் செல்வதால் கருமை நிறமடைந்துவிட்டோம். இதற்குத் தீர்வு என்ன?” என்று கேட்டனர். “தென் மண்டலத்தில் மாயூரம் காவிரி துலாக்கட்டத்தில் புனித நீராடினால் நலம் பெறுவீர்கள்” என்று கன்வ மகரிஷி ஆசி கூறி அனுப்பினார்.


மாயூரத்தில் ரிஷப தீர்த்தம்


தனது தர்மபத்தினியான பார்வதியைக் காண சிவன் வந்தபோது அவரைச் சுமந்து வந்த ரிஷபம், தன்னால்தான் சிவனால் வேகமாக மாயூரம் வந்தடைய முடிந்தது என ஆணவன் கொண்டது. அதன் ஆணவத்தைத் தன் ஞானக் குறிப்பால் உணர்ந்த சிவன், தன் கேசத்தில் இருந்து ஒரு முடியை எடுத்து அதன் முதுகில் வைத்து அழுத்தினார்.

பாரம் தாங்க முடியாமல் கீழே விழுந்த ரிஷபம் தன் செயலை உணர்ந்து, சிவனிடம் மண்டியிட்டு விமோசனம் கேட்டது. தென்மண்டல பூமியில் மாயூர காவிரி துலாக்கட்டத்தில் ஐப்பசியில் தினமும் புனித நீராடி சிவலிங்கம் செய்து வில்வதனங்களால் அர்ச்சனை செய்து தன்னைத் துதித்துவந்தால், குருவடிவாக அமர்ந்துள்ள தலத்தில் தவம்புரிந்தால்

பாவ விமோசனம் கிடைக்கும் என்று கூறினார். ரிஷபமும் அவ்வாறே செய்து தன்னுடைய பாவங்களைப் போக்கி அவருடன் சேர்ந்துக்கொண்டது. ரிஷபம் பூஜை செய்த சிவன் ஆலயம் இன்று வள்ளலார் கோயில் என்று புகழ்பெற்று விளங்குகிறது. துலாக்கட்டத்திற்கு ரிஷப தீர்த்தம் என்று தன் பெயரையும் நிலைபடச் செய்துகொண்டது.


புஷ்கர விழா கோலாகலம்


குருவின் துலாம் ராசிப் பிரவேசத்தால் காவிரிக்கு மகா புஷ்கர விழா நடைபெறும் தருணத்தில் 12 ராசியினரும் இத்தலத்துத் துலாக்கட்டத்தில் பரிகார வழிபாடுகள் செய்து பலன் பெறலாம். குறிப்பாகக் கன்னி, துலாம், விருச்சிக ராசிக்காரர்கள் அவசியம் செய்ய வேண்டும். மேஷம், மிதுனம், கும்பம், மீனம் ராசிக்காரர்கள் பரிகாரம்

செய்துகொள்வது நலம் தரும். வரும் 12-ம் தேதி கொடியேற்றத்துடன் புஷ்கர விழா தொடங்குகிறது.


துலாக்கட்டத்தில் புஷ்கர நீராடுதல் விதி


மகிமைகள் நிறைந்திருக்கும் மாயூரம் என்னும் மயிலாடுதுறையைச் சுற்றியுள்ள கோயில்களிலிருந்து உற்சவ மூர்த்திகள் புறப்பட்டு துலாக்கட்டத்தில் தீர்த்தம் அருள்வார்கள். குறிப்பாக ஸ்ரீ அபயாம்பிகா உடனுறையும் மயூரநாத ஈஸ்வரனும், ஞானாம்பிகா உடனுறையும் ஸ்ரீ வதான்யேஸ்வரரும் பஞ்சமூர்த்திகள் சகிதமாக அஸ்திரதேவருடன்

தீர்த்தம் அருள்வார்கள். அந்த நேரத்தில் துலாக்கட்டம் ரிஷப தீர்த்தத்தில் புனித நீராடுதல் வேண்டும். தொடர்ந்து நீங்கள் எந்த நாளில் நீராடினாலும் முழுப்பலனும் கிடைக்கும். நீராடிய பிறகு மகாசங்கல்பம் செய்து வேத பண்டிதர்கள், சிவாச்சார்யர் பட்டர்களுக்கு ஆடைதானம் தாம்பூலத்தில் அளித்து ஏழைகளுக்கு தம்மால் இயன்ற தானங்களைச் செய்ய வேண்டும்.


தீர்த்தக் கட்டத்தில் வழிபாடுகள் முடிந்ததும் மயிலாடுதுறை ஈஸ்வரனான மயூரநாதசுவாமியையும் தேவிஸ்ரீ அபாயம்பிகையையும் தரிசித்து, வழிகாட்டும் வள்ளல் பெருமானாகிய வதான்யேஸ்வரரையும் அங்குள்ள ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்தியையும் வழிபட வேண்டும்.


அங்கிருந்து மூன்று கி.மீ. தொலைவில் உள்ள திருஇந்தளூர் என்னும் திவ்யதேசத்தில் ஸ்ரீ பரிமள ரங்கநாதப் பெருமாளையும் சேவிக்க வேண்டும். புஷ்கர காலத்தில் நீராட முடியாதவர்கள் நவம்பர் 16-ல் கடைமுகம் சென்று தரிசித்து வரலாம்.


Read more: http://periva.proboards.com/thread/14386/kaveri-pushkaram-sakala-papa-nivrithi?page=1#ixzz4sLiJSa89
 
Nine ancients wells discovered while digging the land near the Thula-Gattam – Surprised Citizens


People were astonished to see nine ancient wells discovered while digging the land at the Thula-Gattam near Mayiladuthurai.


The Kaveri Maha-Pushkaram is celebrated once in 144 years and this year it will be celebrated between 12th September and 24th September. To facilitate the devotees in taking Holy Bath during the Pushkaram in Kaveri River, huge water-tanks are

being constructed near the Thula-Gattam at the cost of Rs 2 crores. Huge tanks measuring 100 metres in length and 17 Metres in breadth are being constructed at the Thula-Gattam with the help of Huge Machines. While digging the earth near the Nandi-Temple, situated in the middle of the Kaveri River, 9 ancient wells were found at the depth of just 3 feet.

The digging is now proceeding around those wells without causing any damage to these ancient structures. Plastic wastes were found inside these well which have now been removed and filled with sand. These wells could have been to earmark the river where the devotees would have taken the Holy Bath earlier.


The people say there could be several such ancient wells right from the banks of Thiru-Vazhundur to Dharumapuram. It is the belief of the Devotees that taking a Holy Bath at the Thula Gattam will confer happiness and also erase all our sins. People

living in various parts take bath in the rivers nearest to them for cleansing their sins. In course of time these rivers lose their purity and they come to the Thula-Gattam to cleanse their impurity and return after regaining their lost glory.


These wells were constructed as an alternate to the rivers for taking Holy Bath. Further the Engineers involved in this work say that these wells could have been constructed by our ancestors to help in conserving the ground water level.


Now the work of constructing the water-tank is progressing well without disturbing these ancient wells. These ancient wells are now drawing a lot of people who come to see and return after prostrating to these wells.
es you to Cauvery Pushkaram – Sep 12 to Sep 24


Read more: http://periva.proboards.com/thread/14327/kaveri-pushkaram#ixzz4sLpojHr4
 
மிக்க நன்றி

மிகவும் பயனுள்ள தகவல், மிக்க நன்றி, நமஸ்காரம்.

திருவெங்காடு புதன் ஸ்தலத்திலும் ஸ்னானம் செய்தல் சிறப்பு என்று மற்றொரு இடத்தில் குறிப்பிட்டிருந்தது. மாயவரம் (காசி விஸ்வநாதர் கோயில், மயூரநாதஸ்வாமி கோயில், வள்ளலார் கோயில், ரங்கநாதர் பெருமாள் கோவில்) மற்றும் திருவெங்காடு செல்ல திட்டம், உங்கள் புண்யம். நமஸ்காரம்.
 
காவேரி ஆறும், காவேரி புஸ்கரமும்
================================
1873ல் ஆங்கிலேயர் ஆட்சியில் கொண்டாடிய புஷகர விழா இப்போது 2017ல் கொண்டாடபடுகிறது


இந்தியாவில் ஓடும் நதிகளை இமய நதிகள் என்றும், தீபகற்ப நதிகள் என்றும் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இமய நதிகள் இமய மலையில் உருவாகின்றன. சிந்து, கங்கை, பிரம்மபுத்திரா ஆகியவை இமய நதிகளில் முக்கியமானவை. இவற்றில் மழைக் காலத்தில் மழை நீர் ஓடும். கோடையில் பனிக்கட்டி உருகிக் இந்த நதிகளில் நீர் ஓடும். ஆண்டு

முழுவதும் இவற்றில் நீர் ஓடுவதால் இவற்றை ஜீவநதிகள் என்று கூறுகிறார்கள். இதேப்போல் தீபகற்ப நதிகள் என்பது மேற்குத் தொடர்ச்சி மலையில் உருவாகின்றன. கிருஷ்ணா, கோதாவரி, மகாநதி,காவிரி, வைகை, பீமா, தாமிரபரணி முதலியவை தீபகற்ப ஆறுகளில் முக்கியமானவை.
காவேரி ஆறு
--------------------
காவேரி ஆறு என்பது தென்னிந்தியாவில் பாயும் முக்கியமான ஆறுகளுள் ஒன்றாகும். கங்கை நதிக்கு அடுத்தப்படியாக புனிதமான நதியாக காவேரி கருதப்படுகிறது. காவேரி நீரிலும் நீரடி மணலிலும் தங்கத் தாது உண்டென்பதால், பொன்னி என்றும் அதற்கு ஒரு பெயர் உண்டு. மண்ணைப் பொன் கொழிக்கச் செய்யும் ஆறு என்றும் பொருள் கொள்ளலாம்.


காவேரி ஆறு முறையே கர்நாடக மாநிலத்திலுள்ள மேற்குத் சம மலையில் உள்ள குடகு மாவட்டத்தைச் சேர்ந்த தலக்காவேரி என்ற இடத்தில் 4400 அடி உயரத்திலிருந்து தோன்றுகிறது. இதன் நீளம் 800 கிமீ. கர்நாடகத்தில் குடகு,

ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூர் (ரூரல்), சாம்ராஜ் நகர் மாவட்டங்கள் வழியாகவும் தமிழ்நாட்டில் தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி , தஞ்சாவூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள் வழியாகச் சென்று பூம்புகார் என்னும் இடத்தில் வங்காள விரிகுடாக் கடலில் கலக்கிறது.
காவிரித் தடம்
----------------------
குடகு மாவட்டத்தில் உள்ள பிரம்மகிரி மலைப் பகுதியில் தலக்காவிரி என்ற இடத்தில் காவிரி பிறக்கிறது. காவேரி பிறந்த இடமாக கருதப்படும் தலக்காவேரி எனும் இவ்விடத்தில் தற்சமயம் ஒரு குளம் (தீர்த்தவாரி) உள்ளது. இந்த குளத்திற்கான நீரை கொண்டு வரும் சிறு பொய்கையாக காவேரி பிறக்கின்றது. பின்னர் அது தரைக்கடியில்

கீழிறங்கி வெகு தூரத்திற்கப்பால் காவேரி எனும் ஆறாக வெளிப்படுகிறது. இதனுடன் குடகு மாவட்டத்தில் ஹாரங்கி எனும் ஆறு காவிரியில் கலக்கிறது. பிறகு, காவிரி மைசூரு அருகே மாண்டியா மாவட்டத்தில் கண்ணம்பாடியில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கத்தை அடைகிறது. இங்கு ஹேமாவதி, லட்சுமணதீர்த்தம் ஆகிய இரு ஆறுகளும்

காவிரியில் கலக்கின்றன. கிருஷ்ணராஜ சாகரிலிருந்து வெளிப்படும் காவிரி, ஸ்ரீரங்கப்பட்டணம் தீவைத் தோற்றுவிக்கிறது. பின்பு கபினி, சொர்ணவதி ஆகிய ஆறுகள் காவிரியில் கலக்கின்றன. பின்பு, சிவசமுத்திரம் தீவைத் தோற்றுவிக்கும் காவிரி இரண்டாகப் பிரிந்து, வலப்புறம் ககனசுக்கி அருவியாகவும், இடப்புறம் பாறசுக்கி

அருவியாகவும் 100 மீட்டர் உயரத்திலிருந்து விழுகிறது. (ககனசுக்கி அருவியில் தான் 1902-ல் ஆசியாவின் முதல் நீர்மின் நிலையம் அமைக்கப்பட்டு, கோலார் தங்க வயலுக்கு மின்சாரம் வழங்கப்பட்டது.) இதன் பிறகு சிம்சா, அர்க்கவதி ஆறுகள் காவிரியில் கலக்கின்றன. இதையடுத்து ஆழமான குறுகிய பாறைகளின் வழியே காவிரி

தமிழ்நாட்டை அடைகிறது. இந்த இடத்திற்கு ஆடு தாண்டும் காவிரி (மேகேதாட்டு) எனப்படுகிறது. ஆடு கூட இங்கு காவிரியைத் தாண்டி விடலாம் என்பதால் இவ்விடத்திற்கு ஆடு தாண்டும் காவிரி என்று பெயர் . இவ்விடத்தை மேகேதாட்டு (Mekedatu) என்றும் அழைப்பர். இவ்விடத்திலிருந்து தமிழகத்தில் நுழையும் காவிரி, பிலிகுண்டு வழியாக

ஒகேனக்கல் அருவியை அடைகிறது. அருவி நீர் பாறையில் மோதி புகைபோல் எழுவதால், புகைக் கல் என்னும் பொருளில் ஒகேனக்கல் எனப் பெயர் வந்ததாம். ஒகேனக்கலுக்குப் பின் பாலாறு, சென்னாறு, தொப்பாறு ஆகிய சிற்றாறுகள் காவிரியில் கலக்கின்றன. காவிரி, மேட்டூர் அணையை அடைந்து ஸ்டான்லி நீர்த்தேக்கத்தில் நிறைந்து,

அங்கிருந்து தான் தமிழகத்தின் காவிரி நீர்ப்பாசனம் தொடங்குகிறது. மேட்டூரிலிருந்து புறப்பட்டு வரும் காவிரியுடன் பவானி ஆறு இணைகிறது. அத்துடன் ஆகாய கங்கையும் வந்து கலக்கிறது என்ற ஐதீகத்தின் பேரில், பவானி கூடுதுறைக்குத் திரிவேணி சங்கமம் என்ற பெயரும் உண்டு. பவானியிலிருந்து காவிரி ஈரோட்டை அடைகிறது.

ஈரோடு நகரை கடந்து செல்லும் காவிரியுடன் கொடுமுடி அருகேயுள்ள நொய்யலில் நொய்யலாறு காவிரியுடன் கலக்கிறது. கரூர் அருகேயுள்ள கட்டளையில் அமராவதி காவிரியுடன் கலக்கிறது. கரூர், திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் காவிரி விரிந்து செல்வதால் அகண்ட காவிரி என்று பெயர் பெறுகிறது. முசிறி, குளித்தலை

நகரங்களைத் தாண்டி திருச்சிக்கு சற்று முன்னர் உள்ள முக்கொம்பில் மேலணையை அடைகிறது காவிரி. அங்கு இரண்டாகப் பிரிந்து, ஒரு கிளை கொள்ளிடம் என்றும் மற்றொன்றுக்கு காவிரி என்றும் பெயர். வெள்ள காலத்தில் பெருகி வரும் நீரானது கொள்ளிடத்தில் திருப்பி விடப்பட்டு காவிரி டெல்டா பகுதி பாதுகாக்கப்படுகிறது. கொள்ளிடம் காவிரியின் வெள்ள வடிகாலாக இருப்பதால் பெரும்பாலும் வறண்டே காணப்படும். கொள்ளிடம் மற்றும் காவிரிக்கு

நடுவில் திருச்சிக்கு (திருச்சிராப்பள்ளி) அருகே ஸ்ரீரங்கம் (திருவரங்கம்) தீவை உருவாக்கிய பின் காவிரியானது கல்லணையை அடைகிறது. கல்லணையிலிருந்து செல்லும் காவிரி பல சிறு கிளைகளாக பிரிந்து தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டாவை உருவாக்கி வங்கக்கடலில் கலக்கிறது.
புராண கதைகள் கூறும் காவேரி ஆற்றின் பெருமைகள்.
-------------------------------------------------------------------------------------
புராணக்கதைகளின் படி அகஸ்திய முனிவர் தன் கமண்டலத்தில் காவேரி ஆற்றை அடக்கி வைத்திருந்ததாகவும், விநாயக கடவுள் காக்கை ரூபம் கொண்டு அகஸ்திய முனிவர் தவத்தில் மூழ்கி இருந்த சமயம் அந்த கமண்டலத்தை சாய்த்து காவேரியை மலையிலிருந்து பெருக்கெடுத்து ஓட வைத்ததாகவும் கூறப்படுகிறது.



ஒரு முறை காவிரி நதி பகவான் விஷ்ணுவிடம் கங்கை நதியை விட தான் புண்ணிய நதியாக வேண்டும் என்று பிரார்த்தித்தாள். காவிரியின் கோரிக்கையைச் செவிமடுத்த விஷ்ணு, “கங்கை எனது திருவடிகளிலிருந்து பிறந்ததால், கங்கை புனிதமானது. காவிரியோ எனது மாலையாகி, எனது ஹிருதயத்திற்கு அருகில் இருப்பதால், காவிரி

கங்கையைவிட புனிதமானதாகும் “ – என்று விளக்கமளித்தார். இதன் காரணமாகவே விஷ்ணுவின் மூன்று புனிதத் ஸ்தலங்கள் காவிரிக் கரையில் இருக்கின்றன. ஸ்ரீரங்கப்பட்டிணம், சிவனசமுத்திரம், ஸ்ரீரங்கம் ஆகிய இடங்களில் முறையே ஆதி ரங்கா, மத்திய ரங்கா, அந்திய ரங்கா என்ற பெயர்களில் அந்த ஸ்தலங்கள் அமைந்துள்ளன.

இந்த ஒவ்வொரு இடங்களிலும் அமைந்துள்ள கோயில் காவிரி நதி சூழ்ந்து, ஒரு தீவாக அமைந்து, அதுவே புராண நம்பிக்கை உள்ளவர்களுக்கு ஒரு மாலைபோல் காட்சி அளிக்கிறது. மேலும் இன்னொரு புராண வரலாறும் உண்டு.

அதன் படி கங்கை தன் பாவத்தைப் போக்கிக் கொள்ள ஒவ்வொரு வருடமும், பூமியின் பாதாளம் வழியாக காவிரி நதிக்கு வந்து, குளித்து விட்டுப் போவதாக அந்த வரலாறு சொல்கிறது.



தன்னிடம் நீராடுபவர்களின் பாவங்களையும் அஞ்ஞானத்தையும் போக்கி சகல பாக்கியங்களையும் அளிப்பவள் காவிரி என்கிறது காவிரி புஜங்கம் என்னும் நூல்.


துலா மாதத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி முதலான பாரதத்தில் ஓடும் நதி தேவதைகள் அனைத்தும் காவிரியில் நீராடி, தங்களிடம் மானிடர்கள் கரைத்துச் சென்ற பாபக்கறைகளைப் போக்கிக் கொள்கின்றது என்று காவிரிள மகாத்மியம் என்னும் நூல் கூறுகிறது.


காவிரி தேவியை வணங்கி துதிப்பவர்கள் சொர்க்க லோகம் செல்லும் பாக்கியத்தைப் பெறுகிறார்கள். தன்னில் நீராடுபவர்களின் வேண்டுதல்களை நிறைவேற்றி வளமான வாழ்வு தருபவள் என்கிறது காவிரி புராணம்.

நதி தேவதைகளும், தேவர்களும், மானிடர்களும் துலா மாதத்தில் காவிரியில் நீராடி தங்களிடம் உள்ள பாபங்களைப் போக்கிக்கொண்டதும், அந்தக் கறைகள் அனைத்தையும் காவிரி போக்கிக் கொள்கிறாள் என்பது ஐதீகம்.
--------------------------------------------------------
காவேரி நதியில் புஷ்கர நீராடல் சிறப்பு புண்ணிய காலம்
இவ்வருடம் 2017 செப்-12 முதல் செப்-23 வரை புஷ்கர தொடக்கம். அடுத்த வருடம் 2018 செப்-30 முதல் அக்-11 வரை புஷ்கர முடிவு.


புஷ்கரம் என்றால் என்ன?


புஷ்கரர் என்பவர் படைப்புக் கடவுளான பிரம்மாவின் கமண்டலுவில் உள்ள புண்ணிய தீர்த்த அரசர். உலகில் உள்ள 3½ கோடி புண்ணிய தீர்த்த தேவதைகளுக்கு அதிபதி.


வியாழ பகவான் தேவ குரு என்று நாம் அறிவோம். அவர் ஒரு முறை பிரம்மாவை நோக்கி தவம் புரிந்தார். தவத்திற்கு மகிழ்ந்த பிரம்மா என்ன வரம் வேண்டும் என்று கேட்டார். அதற்கு வியாழனோ “நவ கிரகங்களுள் எனக்கு முக்கியத்துவமுள்ள பூஜைக்குரிய நிலை கிடைக்கவேண்டும். நான் அனைத்தும் அறிந்தவனாக ஆகவேண்டும்.

மேலும் உமது கமண்டலுவில் உள்ள இந்த புஷ்கரர் என்னிடம் வரவேண்டும்” என்று கேட்டார். பிரம்மா அப்படியே ஆகட்டும் என்று வரம் அருளினார். ஆனால் புஷ்கர தேவன் “நான் உம்மை விட்டுச் செல்ல விரும்பவில்லை” என்று பிரம்மாவிடம் வேண்டினார்.


பிரம்மாவோ “என் வாக்கு பொய்போகாது. ஆகையால் எனது உத்தரவுபடி நீர் குறிப்பிட்ட காலமாவது வியாழனுடன் இருக்கத்தான் வேண்டும்” என்று கூறினார். ஆகாயத்தில் உள்ள 12 ராசிகளில் வியாழன் ஒவ்வொரு ராசியிலும் இருக்கும் சுமார் 1 வருட காலத்தில் ஒவ்வொரு புண்ணிய நதியுடன் அவருக்கு தொடர்பு உண்டு.

ஆகவே அந்தந்த ராசியில் வியாழன் இருக்கும் பொழுது முதலில் 12 நாளும் இறுதியில் 12 நாளும் முழுவதும் புஷ்கரர் அந்தந்த நதியில் இருக்க வேண்டும் என்று பிரம்மா உத்தரவிட்டார். அதே போல் இடைப்பட்ட சுமார் 1 வருட காலத்திலும் நடுப்பகல் வேளையில் 2 முகூர்த்த நேரம் (96 நிமிடங்கள்) அந்தந்த நதியில் இருக்கவேண்டும் என்றும் கூறினார்.


தீபாவளியன்று அதிகாலை அனைத்து நீர்நிலைகள் மற்றும் நீரோட்டங்களிலும் கங்கை வந்து இருப்பதாக நமது ஐதீகம் உள்ளதல்லவா! இதே போல் நமது பாரத தேசத்தில் உள்ள பன்னிரண்டு பிரதான நதிகளில் அந்தந்த காலத்தில் புஷ்கர தேவன் வந்து இருக்கிறார். ஆகவே இச்சமயம் அந்தந்த நதிகளில் நீராடுவது உலகில் உள்ள 3½ கோடி புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதற்கு சமமான புண்ணியத்தை அளிக்கும், பாபங்களை விலக்கும்.



இத்தகைய நதி நீராடலுக்கு உகந்ததான மிக உன்னதமான புண்ணிய காலமே புஷ்கரம் எனப்படுகிறது.
வியாழன் எந்தெந்த ராசிகளில் இருக்கும்பொழுது எந்தெந்த நதிகளில் புஷ்கரம்?


மேஷம் - கங்கை
ரிஷபம் - நர்மதை
மிதுனம் - ஸரஸ்வதி


கடகம் - யமுனை
சிம்மம் - கோதாவரி
கன்னி - கிருஷ்ணை


துலாம் - காவேரி
விருச்சிகம் - தாமிரபரணி
தனுசு - சிந்து


மகரம் - துங்கபத்ரை
கும்பம் - பீமா
மீனம் - பிரணீதா


நமது காவேரியில் புஷ்கரம்


நமது தமிழ்நாட்டில் வருடாவருடமும் துலா ராசியில் சூரியன் ஸஞ்சரிக்கும் ஐப்பசி மாதம் காவேரி நதி முழுதும் புண்ணிய தீர்த்த நீராடல் உண்டு என்பதை அறிவோம். மஹாமகம் என்பதாக பன்னிரண்டு வருடத்திற்கு ஒரு முறை வியாழன் சிம்ம ராசியில் இருக்கையில் மாசி மாதம் மக நக்ஷத்ரத்தில் ரிஷப லக்னத்தில் கும்பகோணம் மகாமகக்

குளத்தில் புண்ணிய நீராடல் உண்டு என்பதும் பிரசித்தமே. இதே போல் இந்த புஷ்கர புண்ய காலத்தில் இன்ன இடத்தில் தான் என்றில்லாமல் காவேரி நதி முழுதும் புண்ணிய நீராடல் செய்து பயன்பெறுவோம்.


நிகழும் ஹேமலம்ப ௵ ஆவணி ௴ 27 ௳ (2017-செப்-12) முதல் புரட்டாசி ௴ 7 ௳ (2017-செப்-23) வரை புஷ்கர நீராடல் ஆரம்பம். இச்சமயம் காலை மதியம் மாலை என்றில்லாமல் எப்பொழுது காவேரியில் நீராடல் செய்தாலும் சிறப்பானதே. அது தொடர்ந்து ஒரு வருட காலம் புஷ்கர வருடம். இச்சமயம் நடுப்பகலில் காவேரி நீராடல்

சிறப்பானது. இதன் நிறைவாக வரவிருக்கும் விலம்ப ௵ புரட்டாசி ௴ 14 ௳ (2018-செப்-30) முதல் அம்௴ 25 ௳ (2018-அக்-11) வரை புஷ்கர நீராடல் முடிவு. அச்சமயத்திலும் தொடக்கத்தில் போல் முழு நாளும் காவேரி நீராடலுக்கு சிறப்பானது.


பாபங்கள் மலிந்து புண்ணியங்கள் நலிந்திருக்கும் இக்கலிகாலத்தில் திருமூல நாயனார் -
யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.


என்றவாறு புஷ்கர நீராடல் போன்ற எளிமையான தர்மங்களையாவது செய்து வாழ்க்கையில் மேன்மையடைவோமாக!


தகவலுக்கு நன்றி :
#ஸ்ரீம்_மகேஷ்சுவாமிஜீ.
 
நமஸ்காரம் திரு kgoplan அவர்களே,


உங்கள் அறிவுரை படி மாயவரத்தில் காவேரி துலா கட்டத்தில் ஸ்னானம் செய்து பின்னர் காசி விஸ்வநாதர், மயூரநாதர், வதான்யேஸ்வரர் மற்றும் பரிமள ரங்கநாதரை தரிசிக்க அருள் பெற்றேன்.


தங்களுக்கு மிகவும் நன்றி.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top