Downloads: KAMATCHI VIRUTHAM

KAMATCHI VIRUTHAM

Rate this File
Uploaded by geetha.r - 17-12-2014
Author Author Unknown
File Size File Size Unknown Size
Downloads Downloads 96
+ Download
கணபதி காப்பு

மங்களம் சேர் கச்சிநகர் மன்னு காமாக்ஷி மிசைதுங்கமுள நற்பதிகம் சொல்லவே திங்கட்புயமருவும் பணி அணியும் பரமன் உள்ளந்தனில் மகிழும்கயமுகன் ஐங்கரன் இருதாள் காப்பு.

சுந்தரி சௌந்தரி நிரந்தரி துரந்தரிஜோதியாய் நின்ற உமையே

சுக்கிர வாரத்தில் உனைக் கண்டு தரிசித்தவர்கள்துன்பத்தை நீக்கிவிடுவாய்

சிந்தைதனில் உன்பாதம் தன்னையே தொழுபவர்கள்துயரத்தைப் மாற்றிவிடுவாய்

ஜெகமெலாம் உன் மாயை புகழவென்னாலாமோசிறியனால் முடிந்திடாது

சொந்தவுன் மைந்தனாம் எந்தனை ரக்ஷிக்கசிறிய கடன் உன்னதம்மா

சிவசிவ மஹேஷ்வரி பரமனிட ஈஷ்வரிசிரோன்மணி மனோன்மணியும் நீ

அந்தரி துரந்தரி நிரந்தரி பரம்பரிஅனாத ரக்ஷகியும் நீ

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்அம்மை காமாக்ஷி உமையே. [2]பத்து விரல் மோதிரம்

எத்தனை ப்ரகாசமதுபாடகம் தண்டை கொலுஸும்

பச்சை வைடூரியம் இச்சையாய் இழைத்திட்டபாதச் சிலம்பினொளியும்

முத்து மூக்குத்தியும் ரத்தினப் பதக்கமும்மோஹன மாலை அழகும்

முழுவதும் வைடூரியம் புஷ்பராகத்தினால்முடிந்திட்ட தாலி அழகும்

சுத்தமாய் இருக்கின்ற காதினில் கம்மலும்செங்கையில் பொன் கங்கணமும்

ஜெகமெலாம் விலை பெற்ற முகமெலாம் ஒளிவுற்றசிறுகாது கொப்பின் அழகும்

அத்தி வரதன் தங்கை சத்தி சிவரூபத்தைஅடியனால் சொல்ல திறமோ

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்அம்மை காமாக்ஷி உமையே! [3]கெதியாக வந்துன்னைக்

கொண்டாடி நினது முன்குறைகளைச் சொல்லி நின்றும்

கொடுமையாய் என் மீதில் வறுமையை வைத்து நீகுழப்பமாய் இருப்பதேனோ

சதிகாரி என்றுதான் அறியாமல் உந்தனைச்சதமாக நம்பினேனே

சற்றாகிலும் மனது வைத்து எனை ரக்ஷிக்கசாதகம் உனக்கில்லையோ

மதி போல ஒளியுற்ற புகழ் நெடுங்கரமுடையமதகஜனை ஈன்ற தாயே

மாயனுடை தங்கையே பரமனது மங்கையேமயானத்தில் நின்ற உமையே

அதிகாரி என்று நான் ஆசையாய் நம்பினேன்அன்பு வைத்து எனை ஆள்வாய்

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்அம்மை காமாக்ஷி உமையே. [4]பூமியிற் பிள்ளையாய்ப்

பிறந்தும் வளர்ந்தும் நான்பேரான ஸ்தலமும் அறியேன்

பெரியோர்கள் தரிசனம் ஒருநாளும் நான்போற்றிக் கொண்டாடி அறியேன்

வாமியென்றே சிவகாமியென்றே உன்னைச் சொல்லிவாயினாற் பாடி அறியேன்

மாதா பிதாவினது பாதத்தைவணங்கி ஒருநாளுமே அறியேன் சாமியென்றே எண்ணிச் சதுரருடன்

கைகூப்பிச்சரணங்கள் செய்தும் அறியேன்

சற்குருவின் பாதார விந்தங்களைக் கண்டுசாஷ்டாங்க தெண்டன் அறியேன்

ஆமிந்தப் பூமியில் அடியேனைப் போல் மூடன்ஆச்சி நீ கண்டதுண்டோ?

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்அம்மை காமாக்ஷி உமையே. [5]

பெற்ற தாய் என்றுன்னை மெத்தவும் நம்பி நான்பிரியனாய் இருந்தனம்மா

பித்தலாட்டக்காரி நீ என்று அறியாது உன்புருஷனை மறந்தனம்மா

பத்தனாய் இருந்தும் உன் சித்தம் இரங்காமல்பராமுகம் பார்த்திருந்தால்

பாலன் நான் எப்படி விசனமில்லாமல்பாங்குடனே இருப்பதம்மா

இத்தனை மோசங்கள் ஆகாது ஆகாதுஇது தருமம் அல்லவம்மா

எந்தனை ரக்ஷிக்க சிந்தனைகள் இல்லையோஇது நீதியல்லவம்மா

அத்திமுகன் ஆசையால் இப்புத்திரனை மறந்தையோஅதை எனக்கு அருள்புரிகுவாய்.

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்அம்மை காமாக்ஷி உமையே. [6]மாயவன் தங்கை நீ

மரகதவல்லி நீமணிமந்த்ரகாரி நீயே

மாயாசொரூபி நீ மகேஷ்வரியுமான நீமலையரசன் மகளான நீ

தாயே மீனாக்ஷி நீ சற்குணவல்லி நீதயாநிதி விசாலாக்ஷியும் நீ

தாரணியில் பெயர் பெற்றபெரியநாயகியும் நீ

அத்தனிட பாகமதில் பேறு பெறவளர்ந்தவளும் நீ

ப்ரணவ சொரூபி நீ ப்ரஸன்னவல்லி நீபிரிய உண்ணாமுலையும் நீ

ஆயி மகமாயி நீ ஆனந்தவல்லி நீஅகிலாண்டவல்லி நீயே

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்அம்மை காமாக்ஷி உமையே. [7]பொல்லாத பிள்ளையாய்

இருந்தாலும் பெற்ற தாய்புத்திகளைச் சொல்லவில்லையோ

பேய்பிள்ளையானாலும் தான் பெற்றபிள்ளையைப்பிரியமாய் வளர்க்கவில்லையோ

கல்லாகிலும் மூச்சு நில்லாமல் வாடும் கதறிநான் அழுத குரலில்

கடுகுதனில் எட்டிலொரு கூறு அதாகிலும்காதினில் நுழைந்ததில்லையோ

இல்லாத வன்மங்கள் என்மீதில் ஏனம்மாஇனி விடுவதில்லை சும்மா

இருவரும் மடிபிடித்துத் தெருதனில் வீழ்வதும்இது தருமம் இல்லையம்மா

எல்லோரும் உன்னையே சொல்லி ஏசுவார்இது நீதி அல்லவம்மா

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்அம்மை காமாக்ஷி உமையே. [8]முன்னையோர்

ஜென்மாந்திரம் என்னென்ன பாவங்கள்மூடன் நான் செய்தனம்மா

மெய்யென்று பொய் சொல்லி கைதனில் பொருள் தட்டிமோசங்கள் பண்ணினேனோ

என்னமோ தெரியாது இக்க்ஷணம்தனிலேஇக்கட்டு வந்ததம்மா

ஏழை நான் செய்த தாய் பிழைத்து அருள் தந்துஎன் கவலை தீருமம்மா

சின்னங்கள் ஆகாது ஜெயமில்லையோ தாயேசிறுநாணம் ஆகுதம்மா

சிந்தனைகள் என் மீது வைத்து நீ நல்பாக்கியம் அருள்சிவசக்தி காமாக்ஷி நீ

அன்ன வாஹனமேறி ஆனந்தமாக அடியேன்என் முன் வந்து நிற்பாய்

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்அம்மை காமாக்ஷி உமையே [9]எந்தனைப் போலவே

ஜெனனம் எடுத்தவர்கள்இன்பமாய் வாழ்ந்திருக்க

யான் செய்த பாவமோ இத்தனை வறுமையில்உன்னடியேன் தவிப்பதம்மா

உன்னையே துணையென்று உறுதியாய் நம்பினேன்உன் பாதம் சாக்ஷியாக

உன்னையன்றி வேறு துணை இனி யாரையும் காணேன்உலகந்தனில் எந்தனுக்குப்

பின்னையென்று நீ சொல்லாமல் வறுமை போக்கடித்துஎன்னை ரக்ஷி பூலோகம் மெச்சவே

பாலன் மார்க்கண்டன் போல் பிரியமாய்க்காத்திடம்மா

அன்னையே இன்னமும் அடியேனை ரக்ஷிக்கஅட்டி செய்யாதேயம்மா

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்அம்மை காமாக்ஷி உமையே. 10பாரதனில் உள்ளளவும்

பாக்கியத்தோடென்னைப்பாங்குடன் ரக்ஷிக்கவும்

பக்தியாய் உன் பாதம் நித்தம் தெரிசித்தபாலருக்கு அருள் புரியவும்

சீர் பெற்ற தேகத்தில் சிறுபிணிகள் வாராமல்செங்கலியன் அணுகாமலும்

சேயனிடம் பாக்கியங்களைத் தந்து ஜெயம் பெற்றுவாழ்ந்து வரவும்

பேர் பெற்ற காலனைப் பின் தொடர வொட்டாமல்பிரியமாய்க் காத்திடம்மா

பிரியமாய் உன்மீதில் சிறியேன் நான் சொன்னகவிபிழைகளைப் பொறுத்து ரக்ஷி

"ஆறதனில் மணல் குவித்து அரிய பூசை செய்தஎன் அன்னை ஏகாம்பரி நீயே"அழகான காஞ்சியில்

புகழாக வாழ்ந்திடும்அம்மை காமாக்ஷி உமையே. 11எத்தனை ஜெனனம் எடுத்தேனோ

தெரியாதுஇப்பூமி தன்னிலம்மா

இனியாகிலும் கிருபை வைத்து ரக்ஷியும் இனிஜெனனம் எடுத்திடாமல்

முத்தி தர வேணும் என்றுன்னையே தொழுது நான்முக்காலும் நம்பினேனே

முன்பின்னும் தோணாத மனிதரைப் போலவே நீமுழித்திருக்காதேயம்மா

வெற்றி பெற உன் மீதில் பக்தியாய் யான் சொன்னவிருத்தங்கள் பதினொன்றையும்

விருப்பமாய்க் கேட்டு நீ அளித்திடும் செல்வத்தைவிமலனர் ஏசப்போறார்

அத்தனிட பாகமதை விட்டுவந்தே என் அரும்குறையைத் தீருமம்மா

அழகான காஞ்சியில் புகழாக வாழ்ந்திடும்அம்மை காமாக்ஷி உமையே.12

Images

None

Comments

ramachandran girija
17-01-2017 at 05:04 PM
nice sharing. thank you....
VINU VINOD
06-07-2017 at 04:06 PM
please share it in enlidh also...because i dont know tamil to read, i know only to understand and talk.
aishsri
01-02-2018 at 11:26 AM
Superb and many thanks for the Kamatchi Virutham.