• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Quiz on Hymns in English and Tamil

Status
Not open for further replies.
rams-puja.jpg

By London Swaminathan


You are a Master of Stotra Literature if you answer at least 14 questions correctly


1.Who composed 272 Slokas or Hymns including the famous Bhaja Govindam and Ganesa Pancharatnam in Sanskrit?
2.What Stotra or hymn did Agastya teach Ram to win the war against Ravana?
3.What did Adi Sankara recite that brought a shower of gold coins to cure the poverty of a poor woman?
4.What is the name of a long hymn with 1008 names that attracted a commentary from Adi Sankara?
5.What is the hymn that recited every morning to wake up Lord Venkateswara? Who was the author of the hymn?
6.What is the name of the Hymn with 100 stanzas that beautifully sings the glory and beauty of the goddess composed by Adi Sankara?
7.What is he meaning of the following words: Ashtakam, Ashtotram, Pancharatnam and Dasakam?
8.What is the word for a hymn with 100 stanzas?
9.In a Sahasranama how many names of the Lord you will find?
10.What is the most famous Vedic Mantra given by Vishvamitra?
11.What is the mantra that cures one the fear of death?
12.What hymn is used during bathing Shivalinga in the temples?
13.What is the name of the hymn composed by Jayadeva that is sung in the Sampradaya/traditional Bhajans?
14.What are the two leaves that have got hymns in their names?
15.What is the Sanskrit hymn that reverberated from the halls of the United nations General Assembly?
16.Who composed Thotakashtakam?
17.Who was the author of the famous Shyamala Thandakam?
18.What is the name of the sloka composed by Ravana on Lord Shiva?


ANSWERS: 1. Adi Sankara 2. Aditya Hrudayam in Sanskrit 3. Kanakadhara Stotra 4. Vishnu Sahasranama 5. Venkateswara Suprabatham by Prativati Bhayangara Annangaracharya also known as Anatacharyar 6. Soundarya Lahari of Adi Sankara. It is believed half of the hymn was composed by Sankara 7. Ashtakam: hymn with 8 stanzas, Ashtotram: 108 names of God, Pancharatnam: hymn with 5 stanzas and Dasakam: hymn with 10 stanzas. Normally one or two extra stanzas will give the benefits of reciting it.8.Satakam e.g Surya Satakam of Mayura, Kumaresa satakam, Bhartruhari’s Neeti Satakam 9. 1008 10. Gayatri Mantra 11. Mrutyunjaya Mantra 12. Rudram and Chamakam 13. Ashtapathi from Gita Govindam 14. Bilva and Tulsi- used for Puja of Shiva and Vishnu respectively 15.Maithreem Bhajatha composed by Kanchi Shankaracharya in Sanskrit and sung by M S Subbulakshmi 16.Totakacharya in Totaka metre 17. Kalidas 18. Shiva Thandava Stotra
For more of the same: contact [email protected] or [email protected]

hanuman-worships-rama.jpg


தமிழில் ஸ்தோத்திர க்விஸ்


By London Swaminathan
இருபது கேள்விகளுக்கு மேல் சரியான பதில் கொடுத்தால் நீங்கள் தோத்திர மன்னன் என்ற பட்டத்துக்குத் தகுதி பெறுவீர்கள்.

1.அம்பாளின் அழகை வருணிக்கும் 100 அற்புதமான கவிகள் அடங்கிய துதி எது?
2.ஷியாமளா தண்டகத்தை எழுதியவர் யார்?
3.சரஸ்வதி மீது சகல கலா வல்லி மாலையைப் பாடியவர் யார்?
4. எட்டு பாடல்கள், ஐந்து பாடல்கள் , பத்து பாடல்கள் உடைய ஸ்தோத்திரங்களுக்கு என்ன பெயர்?
5.ஒரு பாடல் முடியும் எழுத்தில் அல்லது சொல்லில் அடுத்த பாடல் துவங்கும் தொகுப்புக்கு என்ன பெயர்?
6.ஐ.நா.சபையிலிருந்து உலகம் முழுதும் ஒலித்த சம்ஸ்கிருத பாடல் என்ன? அதை இயற்றியவர் யார்?
7.தேவராய சுவாமிகள் பாடிய பிரபல துதி எது?
8.நமச்சிவாய வாழ்க என்று துவங்கும் மாணிக்கவாசகரின் துதி என்ன?
9.பஜகோவிந்தம் உள்பட 272 துதிகளை இயற்றியவர் யார்?
10.மழை பெய்வதற்காக சொல்லப்படும் துதியின் பெயர் என்ன?
11.முடி முதல் அடிவரை இருக்கும் உடல் உறுப்புகளைப் பாதுகாக்க சொல்லப்படும் துதியை என சொல்லால் குறிப்பார்கள்?
12. நூறு பாடல்கள் உடைய நீண்ட துதியை என்ன சொல்லால் அழைப்பர்?
13.பலஸ்ருதி என்றால் என்ன?
14. அஷ்டோத்தரம், சஹஸ்ரநாமம் ஆகியவற்றில் கடவுளின் எத்தனை பெயர்கள் இருக்கும்?
15.கேசாதி பாத ஸ்தோத்திரம் என்றால் என்ன?.
16.பதிகம் என்றால் என்ன?
17.ராவணனை வெல்ல ராமருக்கு அகத்தியர் கற்பித்த ஸ்லோகம் எது?
18.சிவ பெருமான் மீது ராவணன் பாடிய துதி என்ன?
19.ஏழைப் பெண்ணின் வறுமையைப் போக்க ஆதிசங்கரர் பாடிய தங்க நெல்லிக்காய் பாடலின் பெயர் என்ன?
20.ஆதிசங்கரர் பாஷ்யம் எழுதிய சஹஸ்ரநாமம் எது?
21.வேங்கட மலை இறைவனை எழுப்ப காலையில் பாடும் பாடலின் பெயர் என்ன? அதை எழுதியவர் யார்?
22.இறைவனை எழுப்ப காலையில் பாடும் துதியின் தமிழ்ப் பெயர் என்ன?
23.பாவை நோன்பு கடைப்பிடிக்கும் தமிழ்ப் பெண்கள் பாடும் இரண்டு பாடல் தொகுப்புகளின் பெயர் என்ன?
24.அமாவாசையைப் பவுர்ணமியாக்க அம்மனின் பக்தர் பாடிய பிரபல துதி எது?
25.முத்துசுவாமி தீட்சிதர் ஒன்பது கிரகங்களின் பீடைகள் நீங்கப் பாடிய பாடல் என்ன?
26.பாண்டிய நாடு போக வேண்டாம் என்று அப்பர் அறிவுரை கூறியவுடன் சம்பந்தர் பாடிய பதிகம் என்ன?
27.சிவன் கோவில்களில் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்யும்போது இசைக்கப்படும் வேதத்திலுள்ள துதி?
28.விசுவாமித்திர மஹரிஷி நமக்களித்த பெரிய மந்திரம் எது?
29.சைவ நிகழ்ச்சிகளில் இறுதியில் பாடப்படும் பஞ்ச புராணத்தில் என்ன என்ன பாடல்கள் இருக்கும்?
30.சம்ப்ரதாய பஜனைகளில் பாடப்படும் ஜெயதேவரின் பாடலின் பெயர்?

400px-family_doing_puja.jpg



ANSWERS FOR TAMIL QUIZ ON HYMNS/STOTRAS விடைகள்:

1. சவுந்தர்ய லஹரி ( இதில் பாதியை ஆதி சங்கரர் இயற்றியதாகக் கூறுவர்) 2. கவி காளிதாஸ் 3. குமர குருபர சுவாமிகள் 4. ஐந்து பாடல்கள்: பஞ்சரத்னம், எட்டு பாடல்கள்: அஷ்டகம், பத்து பாடல்கள்; பதிகம் அல்லது தசகம் 5. அந்தாதி எ.கா. அபிராமி அந்தாதி 6. மைத்ரீம் பஜத என்னும் காஞ்சி பரமாசார்ய ஸ்வாமிகளின் பாடல், எம்.எஸ். இதைப் பாடினார். 7. கந்த சஷ்டி கவசம் 8. சிவபுராணம் 9. ஆதி சங்கரர் 10. வருண ஜபம் 11. கவசம், எ.கா. விநாயக கவசம், கந்தசஷ்டி கவசம் 12. சதகம் 13. ஒரு துதிப் பாடலைப் படிப்பதால் ஏற்படும் பலன்களை எடுத்துச் சொல்லும் கடைசி பாடல் 14. அஷ்டோத்தரம் 108, சஹஸ்ரநாமம் 1008 15. இறைவனின் அழகை கேசத்திலிருந்து (முடி) துவக்கி பாதம் வரை வருணித்துப் பாடுவதாகும் 16. பத்து பாடல் உடைய துதி. 11ஆவது பாடல் பலன்களைச் சொல்லும். 17. ஆதித்ய ஹ்ருதயம் 18. சிவ தாண்டவ ஸ்தோத்திரம் 19. கனகதாரா ஸ்தோத்திரம் 20. விஷ்ணு சஹஸ்ரநாமம் 21. வேங்கடேச சுப்ரபாதம், எழுதியவர்-பிரதிவாதி பயங்கரம் அன்னங்கராசார்யார் 22. சுப்ரபாதத்தின் தமிழ்ப் பெயர் திருப்பள்ளி எழுச்சி 23. திருப்பாவை, திருவெம்பாவை 24.அபிராமிபட்டர் பாடிய அபிராமி அந்தாதி 25. நவாவரண கீர்த்தனைகள் 26. கோளறு திருப்பதிகம் 27. ருத்ரம் சமகம் 28. காயத்ரி மந்திரம் 29. பஞ்ச புராணம்: தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு,பெரிய புராணம், 30.கீத கோவிந்தத்தில் உள்ள அஷ்டபதி
For more of the same: contact [email protected] or [email protected]
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top