• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கன்யாகுமரியில் புகழ்மிகு சிலைகள்

Status
Not open for further replies.
கன்யாகுமரியில் புகழ்மிகு சிலைகள்

Kanyakumari Vivekananda.jpg

kanyakumari-vivekanadha.jpg

வீர கர்ஜனை செய்து இந்துமதத்தின் புகழினை இமயமலை உயரத்துக்குக் கொண்டுசென்ற சுவாமி விவேகாநந்தர் சிலையும், தேனினும் இனிய தெள்ளு தமிழில் திருக்குறள் என்னும் கல்கண்டை வழங்கிய வான் புகழ் வள்ளுவனின் சிலையும் கன்யாகுமரியில் கண்ணுக்கு விருந்தாய் அமைந்ததை நாம் அனைவரும் அறிவோம்.

நீலத்திரைக் கடல் ஓரத்திலே (பார்வதி/பகவதி அம்மன்) நின்று நித்தம் தவம் செய்யும் குமரி எல்லையில் முக்கடலும் கூடும் சங்கமத்தில் இரு சிலைகளும் அமைந்தது எவ்வளவு பொருத்தம்!

முப்பால் என்னும் 1330 அருங் குறட் பாக்கள் மூலம் பாரதப் பண்பாட்டின் கொள்கைகள் அனைத்தையும் முக்கனிகளின் சாறு போல பிழிந்து தந்த தமிழர்களுக்குப் புகழ் சேர்த்தான் வள்ளுவன்.

சிகாகோ நகரில் உலக மதங்களின் மாநாட்டு அறையில் “அமெரிக்க நாட்டின் சகோதர சகோதரிகளே” என்று முழங்கி உலக சகோதரத்துவத்தையும் “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற தமிழ் கொள்கையையும் நிலை நாட்டினான் விவேகாநந்தன்.

அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகுத்தியது போல இரண்டு வரிக் குறட்களில் உலகப் பொதுமறையை வழங்கினான் வள்ளுவன்.

உணர்ச்சி மிகு ஆங்கிலப் பெரு முழக்கத்தால் இந்து மத எதிரிகளை மண்ணைக் கவ்வச் செய்தான் விவேகாநந்தன். எழுமின்! விழிமின்! குறிக்கோளை அடையும் வரை நில்லாது செல்மின் என்று முழங்கினான்.

வள்ளுவனோ எனில் அகர முதல எழுத்துப் போல உலகத்துக்கு ஆதி பகவனே முதல்வன் என்று கூறி தெய்வமே இல்லை என்று கூறியோருக்கு ஆப்பு வைத்தான்.

வள்ளுவன் தெய்வப் புலவன், விவேகநந்தன் தெய்வ தூதன். இருவரின் சிலைகளையும் கண்டு ஊற்றுணர்ச்சி பெற, சில அடிப்படைக் குறிப்புகள் கீழே உள்ளன:

இருப்பிடம்: அரபிக் கடல், வங்காள விரி குடா, இந்து மகா சமுத்திரம் ஆகிய முக்கடலும் சங்கமிக்கும் இடத்தில் கடல் நடுவே இரண்டு பாறைகள் இருக்கின்றன. பெரிய பாறையில் சுவாமி விவேகநந்தரின் ஒன்பது அடி வெண்கலச் சிலையும், சிறிய பாறையில் வள்ளுவனின் 133 அடி உயரச் சிலையும் உள்ளன.

விவேகாநந்தர் சிலை மண்டபத்துக்குள்ளும் வள்ளுவன் சிலை அமெர்க்க சுதந்திர தேவி சிலை போல வானத்தையே கூரையாகவும் கொண்டு அமைக்கப்பட்டன.
விவேகாநந்தர் பாறைக்கு 6000 டன் கற்களும் வள்ளுவன் சிலைக்கு 7000 டன் கற்களும் பயன்பட்டன.

இரண்டு இடங்களும் ஏறத் தாழ 500 மீட்டர் தூரத்தில்கடல் நடுவே இருப்பதால் படகில் செல்லலாம்.

திருவள்ளுவர் சிலை

“கற் சிலையின் உயரம்95 அடி
பீடத்தின் உயரம்38 அடி
முகத்தின்10 அடி
உடல்30 அடி
கால்20 அடி
முன் கை10 அடி
துவங்கிய ஆண்டு2000
தோள்களின் அகலம்30 அடி
முடியின் நீளம்5 அடி
மொத்த எடை7000 டன்கள்

விவேகாநந்தர் சிலை விவரம்

பாறையின் பரப்பு: 534க்கு 426 அடி
கடல் மட்டத்திலிருந்து உயரம் 55 அடி
பாறையிம் மொத்த பரப்பு 4 ஏக்கர்
வெண்கலச் சிலையின் உயரம் 9 அடி
துவங்கிய ஆண்டு 1970
மண்டபங்களுக்குப் பயன்பட்ட கல் 6000 டன்

விவேகானந்தா மண்டபம்அளவுகள்180’-11½” x 56’
சிகரம்65’-6”
சபா மண்டபம்அளவுகள்130’-1½” x 56’
கூரை14’
தியான மண்டபம் அளவுகள்39’-10” x 57’-10”
கூரை14’
முக மண்டபம்அளவுகள்17’ x 11’
கூரை20’-10”
ஸ்ரீபாத மண்டபம்: இங்கு தேவியின் திருப்பாதங்களைக் காணலாம்அளவுகள்71’-10” x 71’-10”
கூரை9’-3”
கலசம்20’
பிரதட்சிண மண்டபம்பிரகாரம்1266’
பதையின் அகலம்10’

சுவாமிநாதன் எழுதிய வேறு கட்டுரைகள்:

1. வள்ளுவனுடன் 60 வினாடிப் பேட்டி,
2. வள்ளுவன்,சிவன் ,சாக்ரடீஸ் மர்மத் தொடர்பு,
3. Three Apples that Changed the World
4. Two Little Animals that Inspired Indians and
5. Two Mangoes that Changed the Tamil World
6. 60 Second Interview with Swami Vivekananda
7. Two Statues that Inspired the World

*****************
 
Sir,
Some more facts about Kanyakumari.

About 7 km from Kanyakumari there is a small hill called marunthuvazhmalai. At that place a saint by name Nainar swamigal lived. He was considered to be an amsa of Lord Hanuman. His samadhi temple is there. It is beleived that when Lord Hanuman carried Sanjivani hills to revive Lakshmana, a small portion of it fell here and there are some medicinal plants here.

In Kanyakumari itself Devi Mayamma lived. She is hailed as an avatar of Adi
Parasakthi. She lived almost adjacent to the Kanyakumari temple. She was always
surrounded by dogs with whom she used to share the food given by the shop-
keepers. Mayamma Samajam is situate just opposite to the Light house.
 
Thanks for interesting information about great Siddhas of Kumari area.
I visited three beautiful places in Kanyakumari district after visiting Kumari.
Every Hindu must visit Sucheendram and see the beautiful sculptures and 18 ft Anjaneya.
The Padmanabhapuram palace is mostly made of wood and kept in very good condition with rare wooden sculptures.
Another place is full of natural beauty-Thiruvattaru with a big Vishnu statue.
It will remain ever green in your mind once you see this place.
 
Not far away from Kanyakumari, we have chathuragiri hills where many siddhas
live. There are two Siva temples on top of the hills. There are wild animals
enroute. Many devotees have visited this hill and could see some siddhas. It
is mentioned that there is an underground tunnel from this hill to Kolli hills.
Lot of mystery about this place.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top