• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கிரேக்க மொழியில் தமிழ் சொற்கள்- பகுதி 3

Status
Not open for further replies.
கிரேக்க மொழியில் தமிழ் சொற்கள்- பகுதி 3

greece.jpg


Tamil-Greek Link- Part 3

மேலும் சில தமிழ்-கிரேக்க சொற்கள் ஒற்றுமை

Chaire= siri சிரி rejoice
Manual= பனுவல் panuval in Tamil. The English etymological dictionaries give a wrong derivation. It is actually a Tamil word. It happens according to M=P/B=V changes found in many of the languages.
Palli-ative- வலி நிவாரண (P=V)
Minoan Civilization = மீனவன் miinavan
Dorian= திரையன் thiraiyan (sea people)
Terra= தரை tharai , tharaNi (earth)
Terra cotta= தரை tharai + சுட்ட cotta/sutta= sutta tharai= சுடு மண் சிற்பம் sutuman sirpam
Ophis / ophites/ Oviya/ஓவியர் குடி (tamil word for Nagas)
Ophites in Gk is snake worshippers
Uros- uraka/snake ( Uragapuram, Alaway)
Tholoi (mycenean) = Thazi (Tam)- long mud urn
Patni = பத்தினி வழிபாடு
Poly=பல
Bottle=புட்டில் (ஓலைக் கூடை)
Pangaea=பங்கஜம்/ பங்கயம் (தாமரை) gaia=geo=jaya
Athlete=அடலர், Victory=வெற்றி
Greek greeting: Haritu-tay (May Hari Bless You) ஹரி தூ தே

Greek rulers and philosophers:

Pantikapaion= பாண்டிகாபயன் (மகாவம்சத்தில் பண்டுகாபயன் என்ற மன்னன்)
Agamemnon=அகமெம்னொன்=அஜ மன்னன்
Atreus=ஆத்ரேயஸ்= ஆத்ரேய (கோத்ரம்)
cybel= சிங்க ரதத்தில் ஸ்ரீ பலி (கேரள கோவில்களில் இப்போதும் ஸ்ரீ பலி வலம் வருதல் உண்டு)
Demerites= Deva Mitras= a friend/Bhakta of God= தேவ மித்ரன்
Socrates=Su Kruta=a man of meritorious conduct= சாக்ரடீஸ்/ சுக்ருத
Alexander=Laksyendra= the Lord of Gods= லக்ஷ்யேந்திர
Menander=Meena Indra=Lord of fishes (matsyavatara or Pandyan name)=மீனேந்திர
Aristotle=Arishta Tal= God as the averter of obstacles or calamites=அரிஸ்ட தள
Parthea= Partha’s Desa=Land of Partha/ Arjuna= பார்த்த தேச

கிரேக்கர் பெயரிடும் முறை

இந்தியாவைப் போல கிரேக்க நாட்டிலும் பெயரிட்டனர். தசரதன் பிள்ளையை தாசரதி (ராமன்) என்றும் காந்தார நாட்டுப் பெண்ணை காந்தாரி என்றும் மிதிலை நகரப் பெண்ணை மைதிலி என்றும் கேகய நாட்டுப் பெண்ணை கைகேயி என்றும் அழைப்பதைப் போலவே கிரேக்க நாட்டிலும் பெயரிட்டனர்.

காளை பிடித்தல்
தமிழ்நாட்டு ஜல்லிக் கட்டு போலவே கிரேக்க நாட்டிலும் நடந்தது. கி.மு.1500 தங்கக் கோப்பை ஒன்றில் காளை பிடிக்கும் காட்சிகள் புடைக்கப்பட்டுள்ளன. ஸ்பார்டா அருகில் ஒரு கல்லறையிலிருந்து கண்டு பிடிக்கப் பட்ட இந்தக்கோபை ஏதென்ஸ் தேசிய அருங்காடசியகத்தில் உள்ளது

தந்தச் சிற்பம்
தலையில் கவசத்துடன் ஒரு வீரனின் தந்தச் சிற்பம் ஆர்டெமிஸ் கோவிலி கண்டு பிடிக்கப்பட்டது. இது டெலோஸ் என்னும் இடத்தில் மியூசியத்தில் உள்ளது. பொதுவாக தந்தச் சிற்பங்கள் தென் இந்தியாவிலிருந்தே உலகம் முழுதும் போயின. அவன் எண் எட்டு (8) வடிவில் ஒரு கேடயத்தையும் தூக்கிச் செல்கிறான். இதன் காலம் கி.மு.1400.

பாம்பு ராணி, சிங்க ராணி
சிந்து சமவெளியிலும் சுமேரியாவிலும் சீறிப் பாயும் இரண்டு மிருகங்களைச் சமாளிக்கும் முத்திரைகள் கிடைத்தன. இதே போல முத்திரைகள் கிரீஸிலும் கிடைத்துள்ளன. இவற்றின் காலம் கி.மு.1500. மைசீனிய நாகரீகத்தைச் சேர்ந்த இது ஏதென்ஸ் மியூசியத்தில் இருக்கிறது.
அதே மியூசியத்தில் கி.மு.1600ஐச் சேர்ந்த குதிரை ரதமும் காணப்படுகிறது.
ஒரு பெண் தெய்வத்தின் இரு புறத்திலும் இரு கைகளிலும் பாம்புகள் அல்லது சிங்கங்கள் இருக்கும். அவைகளை அவர் அடக்கி ஆள்வது போல காட்டப் பட்டிருக்கும். அதர்வ வேதத்தில் அலிகி, விளிகி என்று குறிப்பிடப்படும் இவர்கள், சுமேரிய இலக்கியத்திலும் வருகிறது. இந்த நாகர்களை ரிக் வேதம்மும் மறைமுகமாக குறிப்பிடுகிறது. சர்ப்பராக்ஞா/ சர்ப்பராணி என்று ரிக் வேதம் குறிப்பிடும்.

ஐம்பால் கூந்தல்
சங்கத் தமிழ் பாடல்களில் பெண்களின் ஐம்பால் கூந்தல் பற்றிப் படிக்கிறோம். கி.மு.ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த பெண் தெய்வம் இப்படி முடியுடன் காணப் படுகிறது. அவருக்கு அருகில் ஒரு ஆண் தெய்வமும் அவர்களுக்கு சேவல் காணிக்கை தரும் இரண்டு உருவங்களும் உள்ளன. அந்த தெய்வங்களின் நாற்காலிக்கு ஒரு பாம்பு குடை பிடிக்கிறது.

டெல்பி ஆரக்கிள்- சதுக்க பூதம்- யக்ஷப் ப்ரஸ்னம்- விக்ரம் வேதாளம்
டெல்பி என்னும் இடத்திலுள்ள கிரேக்க நாட்டு தெய்வம் அப்பலோவும் அங்கே சாமி ஆடி குறி சொல்லும் பெண்ணும் மிகவும் பிரசித்தமானவர்கள். 2700 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய இந்த குறி கேட்கும் வழக்கம் ஆயிரம் ஆண்டுகளுக்குத் தொடர்ந்து நடைபெற்றது. உலகப் புகழ் பெற்ற சாக்ரடீஸ், அரிஸ்டாடில், அலெக்ஸாண்டர், அவரது தந்தை பிலிப், ஹெரொடோட்டஸ் இன்னும் புகழ்பெற்ற அத்தனை கிரேக்க தலைவர்களும் ரோமானிய மன்னர்களும் கூட தங்கள் எதிர்காலத்தை அறிய குறி கேட்டுள்ளனர். இது நம் ஊரில் மாரியம்மன், காளியம்மன் கோவில் பூசாரிகள், பூசாரினிகள் இன்றும் கடைப் பிடிக்கும் வழக்கம். இது சிலப்பதிகாரத்தில் வரும் சதுக்க பூதம், மஹாபாரதத்தில் வரும் யக்ஷப் ப்ரஸ்னம், விக்ரமாதித்யன் கதையில் வரும் வேதாளம் ஆகியவற்றின் கேள்வி பதிலகளை நினைவு படுத்தும்.

பத்தினி வழிபாடு:
கிரீஸில் பத்தினி என்ற சொல் கி.மு.1600ல்பெண் தெய்வத்தின் பெயராக இருக்கிறது.

சிம்மாசனம்:
மினோவன் அரண்மனைக்குப் போகும் வழியில் இரண்டு பெரிய கல்லாலான சிங்கங்கள் இருக்கின்றன. இதுவும் இந்திய தொடர்பைக் கட்டுகின்றது. சிங்கத்தைக் கட்டுராஜாவாக பஞ்ச தந்திரக் கதையிலும் காளிதாசன் காவியங்களிலும் படிக்கிறோம். இறக்குமதியான ஒரு விஷயம் இப்படி நாடு தழுவிய அளவில் இருக்க முடியாது. ஆகவே இது நம்முடையதே.

கிரேக்க புராணக் கதைகள்:
ஹெர்குலீஸ் என்பவன்தான் கிரேக்க நாட்டின் மாபெரும் வீரன். இவனுடைய செயல்கள் (12 legendary labours of Hercules) எல்லாம் கிருஷ்ண பரமாத்மாவின் செயல்களை ஒத்து இருக்கும். ஹெர்குலீஸ் என்ற பெயரையே ஹரி குல ஈசன் என்று சொல்லுவோரும் உண்டு. இந்தக் கதைகள் எல்லாம் இந்தியப் புராணக் கதைகளின் சிதைந்த வடிவங்கள் என்று மாக்ஸ்முல்லர் கூறுவார். ஹெர்க்குலீசின் 12 வீரதீரச் செயல்கள் எல்லாம் கண்ணனின் வீரச்செயல் (லீலை) களைப் போல இருக்கின்றன.

கிரேக்க நூலில் கன்னடம்:
எகிப்து நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு கிரேக்க நாடகத்தில் கன்னட மொழிச் சொற்கள் இருக்கின்றன. இது இரண்டாவது நூற்றாண்டைச் சேர்ந்தது. ஒரு கிரேக்க அழகி கர்நாடக துறைமுகமான மால்பியின் நாயகனிடம் சிக்கும் நகைச்சுவை நாடகம் இது. அந்த கிரேக்க அழகியை நாயகன், சந்திரன் கோவிலுக்குக் காணிக்கையாக விடும்போது, கிரேக்க நாட்டிலிருந்து ஒரு குழு அவளைத் தேடி வருகிறது. அதில் ஒரு கோமாளியும் உண்டு. மால்பி நகர நாயகனுக்கு கிரேக்கர்கள் நிறைய மது பானத்தைக் கொடுக்கவே அவன் போதையில் விழுகிறான். அப்போது கிரேக்க அழகி தப்பி ஓடிவிடுகிறாள்.

அசுரர் பெயர்கள்
அசுரர் பெயர்கள்: நம் புரணக் கதைகளில் மஹிசாசுரன், தாரகாசுரன் என்று அசுரர் பெயர்கள் வருவது போல கிரேக்க நாட்டிலும் ‘அசுர்’ என்று அசுரர் பெயர்கள் முடியும் (Minotaur, Centaur).

(Ophites= Nagas/Oviyar in Tamil): ஓவியர்/நாகர்கள்
நாகர் இனத்தவருக்கு தமிழில் ஓவியர், அருவாளர், நாகர் என்று பல பெயர்கள் உள்ளன. ஒரு வேளை அவர்கள் அந்த இனத்திலுள்ள பல பிரிவினராக இருக்கலாம். ஒபைட்ஸ் என்பவர்களை கிரேக்க எழுத்தாளர்கள் பாம்பை வழிபடுவோர் என்பதிலிருந்து ஓவியர் என்ற நாகர்களையே அவர்கள் அப்படி அழைக்கின்றனர் என்பது தெளிவாகின்றது.
Ophir—Oviyar--- Chitra---Painter-- is another name of Nagas. Probably they wore Tattoos of snakes on their bodies. Ophites (snake worshippers) is mentioned in Greek literature. Hippolytus and Clement of Alexandria mention this sect.

கிரேக்க மொழி சிவலிங்க கல்வெட்டு
உத்தரப் பிரதேச மானில பதேபூர் மாவட்ட ரே நகரில் பிராமி எழுத்தில் பொறிக்கப்பட்ட கிரேக்க மொழிக் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. இது ஒரு சிவலிங்கத்துடன் உள்ளது. அலெக்சாண்டருக்குப் பின்னர் வடமேற்கு இந்தியாவை ஆண்ட மெனாந்தர் (மீன இந்திரன்) கல்வெட்டு இது. “மஹாராஜச ராஜ ராஜச மகாம் தச திராதாரச காச ஜயந்தச காப்ர ஜதாச மினாந்தரச”-- என்ற விருதுகளுடன் கல்வெட்டு துவங்குகிறது. இதன் பொருள்: மாமன்னன், மன்னாதி மன்னன், மாபெரும் பாது காவலன், மினாந்தரன். மேலும் இது அவனை வெற்றித் திருமகன், வெல்லமுடியாத மாவீரன் என்றும் வருணிக்கிறது (தினமணி செய்தி 11-04-1980).

கமலாதேவி கட்டுரை
Illustrated weekly of India 20 January 1980-My impressions of Greece by Kamaladevi Chattopadhyaya: கமலாதேவி சட்டோபாத்யாயா எழுதிய கட்டுரையில் கிரேக்க நாட்டில் ஒரு கிராமத்தில் 1980களில் கண்ட காட்சிகளை இந்தியாவுடன் ஒப்பிடுகிறார். பூக்குழி இறங்கல் (தீ மிதித்தல்), சாமிவந்து ஆடுதல், முகமூடி போட்டுக்கொண்டு ஆடுதல் (இமயமலைப் பகுதிகளில் இன்றும் நடக்கிறது, கேரள கதகளி ஆட்டத்திலும் உண்டு), இந்தியாவிலிருந்து வந்ததாகக் கருதப்படும் பாவாடை போட்டுக்கொண்டு ஆடுதல் ஆகியவற்றை மாசிடோனிய கிராமமான நவுச்சாவில் கண்டதை எழுதி இருக்கிறார். அந்த கிராம மக்களே அது இந்தியாவிலிருந்து ஆதிகாலத்தில் வந்தது என்று கூறியதாக எழுதுகிறார்.

டியோடரஸ் சிகுலஸ் (கி.மு 60) என்ற கிரேக்க வரலாற்று ஆசிரியர் ஹெர்குலீஸ் பற்றி பல அபூர்வமான தகவல்களைத் தருகிறார். ஹெர்குலீஸ் இந்தியாவில் பிறந்தவர் என்றும் இந்தியாவில் அவருடைய வாரிசுகள் ஆட்சி புரிவதாகவும் எகிப்திலும் அவர் வழிபடப் படுவதாகவும் அவர் இறந்தவுடன் வானத்தை வழிபடுவோரின் வழக்கத்துக்கிணங்க அவரை தகனம் செய்ததாகவும் எழுதியுள்ளார்.

சித்திர கவி தகடு
கிரீட் தீவில் பைஸ்டோஸ் என்னும் இடத்தில் கிடைத்த ஒரு வட்டமான களிமண் தகட்டில் 242 சித்திர எழுத்துகள் (The Phaistos disk ,1700 BC) காணப்படுகின்றன. இதிலுள்ள விஷயம் இதுவரை படிக்கப்படவில்லை. ஆனால் இந்த எழுத்து தேவநாகரி லிபி போல கடைசியில் சில குறிகளுடன் முடிவதாகவும் முன்னொட்டு விஷயத்தில் சம்ஸ்கிருத மொழியை ஒத்திருப்பதாகவும் அறிஞர்கள் கூறுகின்றனர். ரப்பர் ஸ்டாம்ப் போல முதல் முதலாக ஒவ்வொரு எழுத்தையும் அச்சுப் பொறித்ததில் உலகில் வேறு எங்கும் காணமுடியவில்லை என்றும் அறிஞர்கள் கூறுகின்றனர் இது சித்திர கவி எழுதியது போல வட்டமாக எழுதப்பட்டுள்ளது.

கடல் நீராடல்
கடலில் நீராடுவதை மஹாபாரதம், சங்க இலக்கியம் முதலியன குறிப்பிடும். கிரேக்க நாட்டிலும் கடலில் நீராடுவது புனிதம் என கருதப் பட்டதை கிரேக்க மொழி முதல் நூலான இலியட்—டில் (1: 312-317) காணலாம்.

இந்திர விழா
சாக்ரடீஸுக்கு விஷம் கொடுத்துக் கொல்லுவதைத் தாமதப்படுத்தியதற்குக் காரணம் அருகில் தீவில் நடந்த கோவில் விழாவாகும். அந்த விழா துவங்கிவிட்டால் அது முடியும் வரை மரணதண்டனை முதலியன நடைபெறாது. நம் ஊர்க் க்கோவில்களில் கொடி ஏற்றிவிட்டால் எல்லா காரியங்களையும் வெளியூர் பயணத்தையும் ஒத்திவைப்பது போல இது.
மத்தியதரைக் கடலில் இந்திர விழா (Nzegna Festival) போல கடல் விழாவும் கொண்டாடினர். ஆண்டுதோறும் சாரா என்பவள் நினைவாக மே 24ஆம் தேதி ஜிப்சி நாடோடி மக்கள் ஆயிரககணக்கில் கூடி சாராவின் சிலையைக் கடலில் கரைப்பார்கள். நாம் வினாயகர் , காளி சிலைகளைக் கரைப்பது போல இது.

நாம் கடலைக் கடைந்தபோது தெய்வங்களும் புனிதப் பொருட்களும் வெளியேறியதாக நம்புவதைப் போல அவர்களும் அப்ரதிரதி என்பவள் கடலில் இருந்து வந்ததாக நம்புகின்றனர்.
யுதக்ஷன் (Eudoxus) என்ற கிரேக்கன் இரண்டு முறை செங்கடலில் இருந்து இந்தியாவுக்கு வந்து நிறைய வாசனைத் திரவியங்களை ஏற்றிவந்ததாகவும் குறிப்புகள் இருக்கின்றன.

வாஹனங்கள்
இந்திய கடவுளர் போலவே கிரேக்க தெய்வங்களும் வாகனங்களில் பவனி வருவதையும் சில பெண் தெய்வங்கள் கையில் பறவை வைத்திருப்பதும் உண்டு. ஆர்டெமிஸ் தேவி மான் வாகனத்திலும் அதீனா சிங்க நாற்கலியிலும், நைகி 4 குதிரை பூட்டிய ரதத்திலும், ஸ்ரீபலி சிங்க ரதத்திலும்,போவதைக் காணலாம். இந்த உருவங்களோடு பல நகைகள், மோதிரங்கள் செய்யப்பட்டன. (Artemis = Stag vahana Athena =Lion stool
Nike =Four horse chariot, Goddess Cyprus and Aphrodite with bird, Kamadhenu)

வேதகால தெய்வங்கள்
கிரேக்க தெய்வங்கள் பல வேத கால தெய்வங்களை ஒத்திருப்பதை ஏராளமான ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர். அவர்கள் ஹெர்குலீஸ் மிகப் பழங்காலத்தில் இந்தியாவிலிருந்து எகிப்து வழியாக கிரீட் தீவுக்குச் சென்று குடி ஏறியிருக்கலாம் என்று கருதுகின்றனர். காரணம் என்ன வென்றால் ஹெர்குலீசை சிங்கத்தோல் (சிவனின் புலித்தோல்) போற்றி கையில் முட்கள் உள்ள கதையை வைத்திருப்பதாகவே சித்தரிகின்றனர். இது நாகரீக உடைகள் பரவாததற்கு முன் இருந்த உடைகள். கிருஷ்ணரைப் போல சங்கு சக்ர பீதாம்பர தாரியாகக் காட்டுவதில்லை. ஆக கிருஷ்ணருக்கும் ஹெர்குலீசுக்கும் ஒரே இந்திய மூதாதையர்கள் என்பதால் ஹரி குல ஈச= ஹெர்குலீஸ் என்பதாகவும் கருதுகின்றனர்.

ஒரு காரணமும் இல்லாமல் ஏஎராளமான கிரேக்க அறிஞர்கள் இந்தியாவை சம்பந்தப் படுத்தமாட்டார்கள். மிகப் பழங்காலத்தில் இருந்த தொடர்புகளை தற்போதைய கிரேக்க நாகரீகத்துக்கும் முந்திய மைசீனிய மினோவன் நாகரீகத்திலும் காணமுடிகிறது. சிவலிங்க வழிபாடு, தேவி வழிபாடு,பத்தினி வழிபாடு ஆகியவற்றுக்கான எண்ணற்ற தடயங்கள் உள்ளன.
வருந்ததக்க விஷயம் என்னவென்றால் துண்டு துண்டாக பலவேறு இடங்களில் சிதறிக் கிடக்கும் விஷயங்களை அணமைக் காலத்தில் யாரும் தொகுக்கவில்லை. 100 அல்லது 150 ஆண்டுகளுக்கு முன் சில வெளி நாட்டுக்காரர்கள் எழுதியதுடன் நாமும் வாளாவிருந்து விட்டோம்.

பிக்ஷு சமன்லால் எழுதிய “இந்தியா-உலகின் தாய்” INDIA-MOTHER OF US ALL என்ற நூலில் இந்திய-கிரேக்க உறவு பற்றி மிகப் பழங்காலத்தில் எழுதியோர் பட்டியலை மட்டும் தருகிறேன்.

LIST OF SCHOLARS

Garbe says that the doctrines of Indian Sankhya philosophy exerted great influence on Greek thinkers like Heraclitus, Empedocles, Anaxagorus, Democritus and Epicurus.

Hussar says the Eleatic philosophers of Greece were profoundly influenced by the Upanishads.
Max Mueller and others say that Pythagoras had contact with Indian scholars in Persia from whom he learnt forty seventh theory of the Euclidean geometry, which is found in Sulva sutras of Baudhayana.

Colebrook holds that the Pythagorians were indebted to their Indian instructors.
Schrader declares that India is the birth place of Pythagorean ideas.

Both Plato and Aristotle had contact with India through Persia. Max Mueller says Brahmins from India were in Greece in fifth century BC.

Urwick is convinced that India is the birth place of many of the ideas of Plato.

Hopkins says Plato is full of Sankhyan thought worked out by him but taken from Pythagoras.
Erdmann says that Plotinus, the founder of neo Platonist school, had deep knowledge of Indian mysticism and himself led the life of a Yogi

Zenob, a fourth century historian of Armenia, relates how in the second century BC, two Indian princes settled in Taron, west of lake Van, and erected temples for the worship of Giasne (Krishna).
Scheling, Schopenhauer, Mansel Milman, Vincent Smith, Winternitz, Max Mueller, historian Mahaffy, A.A.Macdonnell explain how the Buddhist philosophy, Jataka tales, Lalita Vistara and Asoka’s emissaries influenced Christianity in Europe.

In Autobiography of a Yogi by Paramahamsa Yogananda, one can read about Alexander- Dandamis meeting, Alexander- Calanus (Kalyanji) meeting. Dandamis and Calanus are corrupted Hindu names.

*************************
 
கரூர் தொன்மையான நகரங்களில் ஒன்று ஆகும்.
இது சேரர்களின் தலைநகராய் விளங்கியது. சங்ககாலத்திலேயே
நெசவுத் தொழிலும் வணிகமும் சிறப்புற்று இருந்தது. இதற்கு சான்றாக இன்றளவும் ரோமானிய நாணயங்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்படுகிறது. இங்கு ஓடும் அமராவதி ஆற்றின் வழியாகத்தான்
உரோமபுரிக்கு ஏற்றுமதி வணிகம் நடந்திருக்கிறது. அமராவதி ஆறு உரோமாபுரி வணிகர்களால் '' ஆம்புரா'' என்று அழைக்கப்பட்டதாக சரித்திர ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்
''The second point that emerges from this study is that Karur in Trichy district was undoubtedly the capital of the Cheras of the Sangam age. The third and perhaps the most crucial point that stands out is the date of Sangam classics. As some of the coins bear the names of the Chera rulers whose names are found in the Sangam classics could be placed only after the establishment of Roman trade on an impressive scale.''
 
கரூர் தொன்மையான நகரங்களில் ஒன்று ஆகும்.
இது சேரர்களின் தலைநகராய் விளங்கியது. சங்ககாலத்திலேயே
நெசவுத் தொழிலும் வணிகத்திலும் சிறப்புற்று இருந்தது. இதற்கு சான்றாக இன்றளவும் ரோமானிய நாணயங்கள் தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்படுகிறது. இங்கு ஓடும் அமராவதி ஆற்றின் வழியாகத்தான்
உரோமபுரிக்கு ஏற்றுமதி வணிகம் நடந்திருக்கிறது. அமராவதி ஆறு உரோமாபுரி வணிகர்களால் '' ஆம்புரா'' என்று அழைக்கப்பட்டதாக சரித்திர ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்
''The second point that emerges from this study is that Karur in Trichy district was undoubtedly the capital of the Cheras of the Sangam age. The third and perhaps the most crucial point that stands out is the date of Sangam classics. As some of the coins bear the names of the Chera rulers whose names are found in the Sangam classics could be placed only after the establishment of Roman trade on an impressive scale.''
 
Dear Sir

A place called AMphura in Tamilnadu is a news to me ! But I have read Roman Karur-- a book written by Dr R Nagasamy. A lot of new information is coming forth. We have to re write Indian History.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top