• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கிரேக்க - தமிழ் மொழி தொடர்பு- பகுதி 2

Status
Not open for further replies.
கிரேக்க - தமிழ் மொழி தொடர்பு- பகுதி 2

AsokaKandahar.jpg

படத்தில் அசோகரின் கிரேக்க அராமிய மொழி கல்வெட்டு,காபூல் மியூசியம்
(Please read the first part of Greek-Tamil Connection before reading this)

கிரேக்க மொழியும் தமிழ், சம்ஸ்கிருத மொழிகள் போல அ-வில் துவங்கி ஒ-வில் முடிகிறது. முதல் எழுத்து ஆல்பா, கடைசி எழுத்து ஒமேகா.

தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் பெரிய புலவர்களுக்கு தெய்வ என்ற அடைமொழியைக் கொடுப்பார்கள். இலக்கண மா மேதை பாணிணியை பகவான் என்ற அடைமொழி போட்டு பதஞ்சலி அழைக்கிறார். நாமும் தெய்வப் புலவன் என்று வள்ளுவனை அழைக்கிறோம். ஹோமரையும் தெய்வ ஹோமர் (Homer Theis) என்று கிரேக்கர் புகழ்வார்கள்.

தமிழிலும் சம்ஸ்கிருதத்திலும் வலது பக்கத்தைப் புனிதமாகக் கருதுவார்கள். கடிகாரச் சுற்று முறையைக் கண்டு பிடித்தவர்களே இந்தியர்கள் என்பது எனது ஆய்வில் கண்ட முடிவு. கோவிலை வலமாகச் சுற்றவேண்டும். வலது காலை எடுத்து வைத்து வீட்டுக்குள் நுழைய வேண்டும் ( மண மகளே மண மகளே வா வா, உன் வலது காலை எடுத்து வைத்து வா வா என்ற சினிமா பாட்டை இப்பொழுதும் எல்லா திருமண அரங்குகளிலும் போடுகின்றனர்).
வலப் பக்கம் விழுந்த உணவைத்தான் புலி சாப்பிடும், இடப்பக்கம் விழுந்தால் சாப்பிடாது என்று சங்க இலக்கியத்தில் ஏராளமான இடங்களில் படிக்கிறோம். காளிதாசனும் தீ வலப் பக்கமாகச் சுழித்து எரிந்தது நல்ல சகுனம் என்று பாடுகிறான். ஹோமர் எழுதிய ஆடிசியிலும் வலது பக்கம் புனிதம் என்று (2-172) உள்ளது. லத்தீன் மொழியில் சினிஸ்டர் Sinister (இடது) என்றாலே தீயது என்று பொருள்.

பாண்டியோன் என்ற குழந்தையின் தலைமையில் வந்த ஒரு குழு ஏதென்ஸ் நகரில் குடி ஏறியதாக வரலாற்றின் தந்தை எனக் கருதப்படும் ஹெரொடோட்டஸ் (Herodotus) கூறுகிறார். அவர்கள் கிரீட் (Crete) என்னும் தீவிலிருந்து வந்ததாகவும் கூறுகிறார். கிரேக்க நாட்டின் பழங்குடி மக்கள் டெர்மிலை (Termilai) என்றும் அவர் கூறுவார். இது த்ரமிளர்=தமிழர் என்ற சொல்லைப் போல உள்ளது

பழந்தமிழகத்தில் குறிஞ்சி, முல்லை, நெய்தல், மருதம், பாலை ஆகிய ஐந்து நிலங்களுக்கும் தனிதனி பண்கள் இருந்தன. இவ் வழக்கம் கிரேக்கரிடையேயும் இருந்தது. அப்பண்களை தமிழ்ப் பண்களோடு ஒப்பிட்டவர்கள் சில ஒற்றுமை இருப்பதைச் சுட்டிக் காட்டியுள்ளனர். வாணிகத் தொடர்பினால் தமிழ்ப் பண்களைத் தழுவி அவர்கள் எட்டுக்கட்டி இருக்கலாம்.

இவை எல்லவற்றையும் ஒரு புறம் ஒதுக்கிவைத்துவிட்டு ஆங்கிலம்- தமிழ் மொழி ஒற்றுமையைப் பார்த்தால் ஆயிரக்கணக்கான சொற்கள் ஒரே மாதிரி இருப்பதை அறியலாம். ஆங்கிலமோ சம்ஸ்கிருதம் தொடர்புடைய இந்தோ ஐரோப்பிய குடும்பத்தைச் சேர்ந்த மொழி. தமிழுடன் எப்படி தொடர்பு வர முடியும்?

தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் ஒரே மூலம் இருந்தால்தான் இது நடக்க முடியும். அந்த மூலத்தைக் கண்டு பிடித்தால் பழைய மொழிக் கொள்கைகள் தகர்ந்துபோகும்.
(சாத்தூர் சேகரன் என்பவர் இது குறித்து ஆராய்ந்து பல புத்தகங்களில் எழுதியுள்ளார். அவரை 20 ஆண்டுகளுக்கு முன் பி.பி.சி. தமிழோசையில் பேட்டி கண்டேன். அப்போது இது பற்றி எழுப்பிய கேள்விகளுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக விடை கிடைத்து வருகிறது.)

உலகில் எல்லோரும் ஒரு கூரையின் கீழ் வாழ்ந்தபோது பேசிய மொழியின் மிச்ச சொச்சங்கள் இப்பொழுதும் ஒவ்வொரு மொழியிலும் இருக்கின்றன. இதனால் எந்த இரண்டு மொழிகளுக்கும் இடையே சில சொற்களாவது ஒரே மதிரியாக இருக்கும். ஆனால் எண்கள். உறவு முறைகள், நான், நீ, அவன் அவள் போன்ற சொற்கள், முக்கியமான வினைச் சொற்கள் ஆகியன ஒன்றாக இருந்தாதான் நெருக்கம் அதிகம் என்று கருத முடியும்.

ஹிப்பொக்ரடீஸ், பிதகோரஸ் (Hippocrates, Pythagoras) ஆகியோர் கி.மு ஐந்தாம் நூற்றாண்டிலேயே இந்திய மருத்துவ கணித சாத்திரங்களை அறிந்திருந்தனர். இதற்கான நல்ல ஆதரங்கள் கிடைத்துள்ளன.

பிதகோரஸ் மறு பிறப்பிலும் ஆத்மாவிலும் நம்பிக்கை உடையவர். அவருடைய பெயர் புத குரு என்று ஈ. போகாக் என்னும் அறிஞர் கூறுவார். அவர் எழுதிய ஆங்கிலப் (India in Greece by E Pococke published in 1851) புத்தகத்தில் நிறைய ஒப்புமைகளைக் காட்டுகிறார். அவர் இந்தியாவிலுள்ள பழங்கால இடப் பெயர்களை அதிகமாக ஒப்பிடுகிறார்.

ஒலிம்பிக்ஸ் (Olympics) போட்டி 2750 ஆண்டுகளுக்கு முன் கிரேக்கத்தில் துவங்கியது. ஆனால் அதற்கு முன்னரே நாம் ஜல்லிக்கட்டு நடத்தி பரிசு கொடுத்தோம். இந்திரப்பிரஸ்தம், ஹஸ்தினாபுரம் போன்ற இடங்களில் அரசர்கள் மட்டும் கலந்து கொள்ளும் போட்டிகள் நடந்தன. மகாபாரதத்தில் இது பற்றி விரிவான செய்திகள் இருக்கின்றன.

கிரேக்க தத்துவ ஞானி சாக்ரடீஸின் (Socrates) சீடர் பிளாட்டோ (Plato). அவருடைய சீடர் அரிஸ்டாடில்(Aristotle) . அரிஸ்டாடிலின் சீடர் அலெக்ஸாண்டர் (Alexander) . அவர் இந்தியா மீது படை எடுத்ததற்கு முக்கிய காரணங்கள் இந்தியாவின் செல்வச் செழிப்பும் தத்துவ ஞானச் சிறப்பும் தான் காரணம். இவை இரண்டிலும் அலெக்சாண்டருக்கு ஆர்வம் அதிகம். ஒரு சன்யாசியையாவது தன் நாட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும் என்று தலை கீழாக நின்றார்.
ஆனால் முடியவில்லை.

போரஸ் என்னும் மன்னனர் புருஷோத்தமனை வெல்லுவதற்குள் அவருக்குப் போதும் போதும் என்று ஆகிவிட்டது. உன்னை எப்படி நடத்த வேண்டும் என்று கேட்ட கேள்விக்கு அவன் கொடுத்த பதில் அலெக்ஸாண்டாரை ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியது. போரஸின் வேண்டுகோளின்படியே அவரை மன்னருக்குரிய மரியாதையுடன் நடத்தினார். இந்தியாவின் மீது அவருக்கு அவ்வளவு மதிப்பு.

**************
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top