• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வேதம் அத்யயனம் செய்யவேணும்

Status
Not open for further replies.
வேதம் அத்யயனம் செய்யவேணும்

தாஸன்.

நாம் ஜீவனகாலத்தில் ஸம்ஸாரஸாகரத்தி்ல் உழன்று தெரிந்தும் தெரியாமலும் நிறைய தவறுகளை செய்து பாபத்தை மூட்டை மூட்டையாக சேர்த்துள்ளோம்.
அதடியாக நிறைய துக்கத்தை அனுபவித்தும் வருகிறோம்., பாபத்தை போக்கடிக்க ப்ராயச்சித்தமாக நிறைய கர்மாக்களை செய்ய வேணுமென
வேதம் கூறுகிறது .அதையும் செய்யமுடியவில்லை ,செய்வதுமில்லை. வேதம் நம்மிடம் தயையுடன் கூறுகிறது, கர்மாக்களை செய்யாவிடினும் அந்த மந்த்ரங்களை சொன்னாலும் பலன் கிடைக்குமென.
யம் யம் க்ரதுமதீதே தேந தேநாஸ்யேஷ்டம் பவதி அந்தந்த மந்த்ரத்தை பாராயணம் செய்வதாலேயே அதன் பயனை பெறலாமென.
ஸ்ரீமான் ரகுவீரதயாள ஸ்வாமி ஸமீபத்தில் புநஃப்ரகாசனம் செய்தமஹான்களின் சரித்ரத்தில் காஞ்சியில்
ஸ்ரீமதித்யாதி சதுர்வேத சதக்ரது
நரஸிம்ஹ தாதயார்ய மஹாதேசிகன்
(நாவல்பாக்கம் ஸ்வாமி)
அத்யயனம் பண்ணினவர்களிடம் விசேஷாபிமானம்:வேத ஸம்பன்னர்களைக் கண்டால் கட்டுக்கடங்கா மகிழ்ச்சி. ஏதேனும் ஸ்வல்பமாவது ஸ்வீகரிக்கச் செய்தாலல்லது ஸ்வரூபந்தரியார். யம் யம் க்ரது மதீதே தேந தேநாஸ்யேஷ்டம் பவதி’ (யாகத்தை போதிக்கும் வேத பாகத்தை அத்யயனம் பண்ணின மாத்ரத்தாலேயே யாக பலன் உண்டாகிறது.) என்பவை போன்ற வேத வாக்யங்களை உதாஹரித்து கேழ்ப்போரை பரவசமடையச் செய்வது இயல்பாக அமைந்திருந்தது இவரிடம்.
என. இம்மாதிரியான மஹான்களின் உபதேசத்தாலும் ப்ரதி ஏகாதசி தினத்தி்ல்
அச்சித்ராச்வமேத பாகத்தை பாராயணம் செய்துவருகிறார்கள், அதையும் முழுவதுமாக பாராயணம் செய்ய அவகாசமில்லை. அதில் பல முக்யமான மந்த்ரங்கள் உள்ளன. அவைகளையாவது பாராயணம் செய்தால் நல்லது, அதன் பொருளை ஆஸ்திகர்கள் அறிந்தால் அவர்களுக்கு இந்த பாகத்தையாவது அத்யயனம் செய்ய வேணும் என்ற எண்ணம் வரும் என்பதால் ஒரு அனுவாகத்துக்கு மட்டும் பொருனை தாஸனுக்கு கிட்டிய சிறிய சக்தியை கொண்டு ஆச்ர்யர்களின் அனுக்ரஹத்துடன் இந்த ஏகாதசி தினத்தில் வி்ஞ்ஞாபிக்கிறேன். தோஷங்களை க்ஷமிக்கவும்.

यद्देवा देवहेडनं । देवासस्चकृमा वयम्। आदित्यास्तस्मान्मामु़ञ्चत। ऋतस्यर्तेन मामुत।।

1 அதிதியின் புத்ரர்களான தேவதைகளே, நாங்கள் தேவதைகளுக்கு கோபத்தை உண்டுபண்ணுகிற எந்த கார்யத்தை செய்தோமோ, அப்படிப்பட்ட அபராதத்தில் நின்றும் என்னை நீங்கள் விடுவிக்கவேணும், மேலும் யாகஸம்பந்தமாக இந்த ஹோமத்தாலும் விடுவிக்கவேணும்,

देवा जीवनकाम्या यत्। वाचानृतमूदिम। अग्निर्मा तस्मादेनसः। गार्हपत्यः प्रमुञ्चतु। दुरिता यानि चकृम। करोतु मामनेनसम्।।

2. ஹே தேவதைகளே,எங்களுடய ஜீவனத்தை விரும்பி வாயினால் எந்த பொய்யை கூறினோமோ,அதாவது உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு ப்ரியத்தை கூற நினைத்து நிறையபொய்யை கூறினோம், அப்படி பொய்யை பேசுவதால் உண்டான பாபத்தின் நின்றும் கார்ஹபத்யன் என்கிற அக்னிதேவன் என்னை விடுவிக்கட்டும், இதுபோல் மற்றும் உள்ள பாபத்தில் நின்றும் என்னை
விடுவித்து பாபமில்லாதவனாகச்செய்யட்டும்.

ऋतेन द्यावापृथिवी। ऋतेन त्वं सरस्वति। ऋतान्मामुञ्चतांहसः.। यदन्यकृतमारिम।।

3.ஹே த்யாவாப்ருதிவி லோகங்களே, ஹே ஸரஸ்வதி, குறையுடன் கூடின யாகத்தால் எந்த பாபம் என்னை அடைந்ததோ அந்த பாபத்தில் நின்றும் என்னை விடுவிக்கவேணும், மேலும் வேறுவழியில் எந்த பாபத்தை செய்தோமோ, அதில் நின்றும் விடுவிக்கவேணும்,

सजातशंसादुत वा जामि शंसात्। ज्यायसश्शंसादुत वा कनीयसः। अनाज्ञातं देवकृतं यदेऩः। तस्मात्त्वमस्माज्जातवेदो मुमुग्धि।।

4.ஞாதிகள்,நண்பர்கள், பெண்டாட்டி,தமையன் தம்பி இவர்களின் ப்ரஸம்சையினால் கர்வமடைந்த என்னால் என்னிஷ்டப்படி தேவர்கள் விஷயத்தில் தெரியாமல் நிறைய பாபம் ஸ்மபாதிக்கப்பட்டுள்ளது, ஹே ஜாதவேதனான அக்னிதேவனே நீ அவைகளில் நின்றும் என்னை விடுவிக்கவேணும்,
यद्वाचा यन्मनसा। बाहुभ्यामूरुभ्यामष्ठीवद्भ्यां। शिश्नैर्यदनृतं चकृमा वयम्। अग्निर्मा तस्मादेनसः।
5. வாக்கு மனஸ்,கைகள் தொடைகள் முட்டிகள் மற்றும் புருஷ இந்த்ரியங்களால் லோகவிருத்தமாயும் வேதவிருத்தமாயும் உள்ள வ்யாபாரங்களை- க்ரியைகளை செய்துள்ளோம், அக்னிதேவன் இந்த
பாபத்தில் நின்றும் என்னை விடுவித்து பாபமில்லாதவனாகச்செய்யட்டும்.

यद्धस्ताभ्यां चकर किल्बिषाणि। अक्षाणां वग्नुमुपजिघ्नमानः।दूरे पश्या च राष्ट्रभृच्च। तान्यफ्सरसावनुदत्तामृणानि।।
6.அயலாரின் த்ரவ்யங்களை எனது கைகளினால் அபகரித்துள்ளேன்
காணத்தகாததை கண்களால் காண்பதாகிற பாபத்தை செய்துள்ளேன், இம்மாதிரியான பாபங்களை தூரே பச்யா என்றும், ராஷ்ட்ரப்ருத் என்கிற பெயருள்ள அப்ஸரஸ்ஸுகள் எங்களிடம் இல்லாமல் செய்யட்டும்..

अदीव्यन्नृणं यदहं चकार। यद्वादास्यन् संजगारा जनेभ्यः। अग्निर्मा तस्मादेनसः।

7.நான் நேர்மையாக இல்லாமல் கபடமாக அயலாரின் வஸ்துவை க்ரஹித்துள்ளேன்- எடுத்துள்ளேன், இதுபோல் அயலாருக்கு கொடுக்கவேண்டியதை கொடாமல் நானே நன்கு அனுபவித்துள்ளேன், அக்னிதேவனே நீ அவைகளில் நின்றும் என்னை விடுவிக்கவேணும்,

यन्मयि माता गर्भे सति। एनश्चकार यत्पिता। अग्निर्मा तस्मादेनसः।

8, நான் எனது தாயின் கர்பத்தில் வாசம் செய்யும் காலத்தில் எனது தாய் வேறுபுருஷர்களுக்கு ஸேவை செய்வது முதலான பாபத்தை செய்தாளோ, அதுபோல் எனது தந்தையும் சாஸ்த்ரநிஷித்ததினத்தில் மைதுனாதி பாபத்தை செய்தாரோ, அக்னிதேவனே நீ அவைகளில் நின்றும் என்னை விடுவிக்கவேணும், (இதுதான் போலும் மாதாபிதாக்கள் செய்வது மக்களுக்கு வரும் என்பது.ஆக மாதா பிதாக்கள் தவறு செய்தால் பாபம் பிள்ளைகளுக்கு வரும் என்பதாகிறது)
यदापिपेष मातरं पितरम्। पुत्रः प्रमुदितो धयऩ्.। अहिंसितौ पितरौ मया तत्। तदग्ने अनृणो भवामि।।
9.நான் குழந்தை பருவத்தில் ஸந்தோஷத்தால் தாய்பால்குடிக்கும் ஸமயத்தில் தாயை ஹிம்ஸித்திருப்பேன், இதுபோல் தகப்பனையும் கை மற்றும் கால்களினால் உபத்ரவித்தித்திருப்பேன், ஆயினும் அவர்கள் அதை ஹிம்ஸையாகவும் உபதக்ரவமாகவும் நினைத்திருக்கமாட்டார்கள், ஆயினும் அவர்கள் விஷயத்தில் ப்ரத்யுபகாரம் செய்யமுடியாததால் கடனாளியாக உள்ளேன், அக்னிதேவனே நீ அவைகளில் நின்றும் என்னை விடுவிக்கவேணும், நான் கடனில்லாதவனாக ஆகக்கடவேன்.

यदन्तरिक्षं पृथिवीमुतद्याम्। यन्मातरं पितरं वा जिहिंसिम। अग्निर्मा तस्मादेनसः।


10.மூன்று லோத்தில் உள்ளவர்களுக்கும் மாதாபித்ருக்களுக்கும் விருப்பமில்லாததான ஹிம்ஸையை செய்துள்ளேன், அக்னிதேவனே நீ அவைகளில் நின்றும் என்னை விடுவிக்கவேணும்,






यदाशसा निशसा यत्पराशसा। यदेनश्चकृमा नूतनं यत्पुराणम्। अग्निर्मा तस्मादेनसः।

11, நேரடியாகவும் மறைமுகமாகவும் மிகவும் கொடுமையானதும் ஹிம்ஸையை செய்துள்ளேன், இதுபோல் தற்சமயத்தி்ல முன்காலத்தில் நிறைய பாபத்தை செய்துள்ளேன், ஹே அக்னிதேவனே நீ அவைகளில் நின்றும் என்னை விடுவிக்கவேணும்,

अतिक्रामामि दुरितं यदेनः। जहामि रिप्रं परमे सधस्थे। यत्र यन्ति सुकृतो नापि दुष्कृतः। तमारोहामि सुकृत्न्नु लोकम्।

12,துர்கதிக்கு காரணமான பாபத்தை அக்னியின் அனுக்ரஹத்தால் கடப்பவனாவேன்,வித்வத்ஸபை முதலிய உயர்ந்த ஸ்தானத்தில் செய்யப்பட்ட பாபத்தின் நின்றும் அக்னியின் அனுக்ரஹத்தால் விடுபட்ட பிறகு, புண்யம் செய்தவர்கள் எந்த லோகத்துக்குச்செல்கிறார்களோ ,பாபம் செய்தவர்கள் எங்கு செல்வதில்லையோ அப்படிப்பட்ட புண்யம் செய்தவர்கள் செல்லும் லோகத்துக்கே மிகவும் வேகமாக ஏறுவேன்,
त्रिते देवा अमृजतैतदेऩः। त्रित एतन्मनुष्येषु मामृजे। ततो यदिकिञ्चिदानशे। अग्निर्मा तस्मादेनसः। गार्हपत्यः प्रमुञ्चतु। दुरिता यानि चकृम। करोतु मामनेनसम्।।


13,முன்பு தேவர்கள் நெல்லை குத்தி அதில் நின்றும் அரிசியை தயார் செய்து
அதை இடித்துமாவாக்கி ஹவிஸ்ஸை உண்டாக்கிய பின் அவர்களுக்கு ஒரு எண்ணம் தோன்றியது, அதாவது விதையை நாசம் செய்ததால் உண்டான பாபாத்தை எவரிடத்தில் கொடுப்பது என,,அங்கு அக்னிதேவன் என்னிடம் உங்களின் வீர்யத்தை கொடுங்கள், நான் உங்களுடயபாபத்தை தரிப்பவனை உண்டாக்குகிறேன் என, அக்னிதேவன் கூறியபடியே தேவதைகள் தங்களின் சரீரத்தை அவனிடம் கொடுத்தார்கள், அவன் எல்லோருடய வீர்யத்தை தரிக்கிற அங்காரனால் அப்-ஜலமாகிற தேவதையிடம் வீர்யத்தை கொடுத்தான்.அதிலிருந்து ஏகதன் என்ற பெயருடன் ஒருவன் உண்டானான், அவனிடத்தில் இதை கொடுக்க,அவன் த்விதன் என்பவனிடம் கொடுக்க, அவன் த்ரிதனிடம் கொடுக்க, இப்படியாக பாபத்தை தேவர்கள் ஜலத்தில் நின்றுமுண்டானவரிடம் கொடுக்க, ஜலத்தில் நின்றுமுண்டானவர்கள் அதை ஸூர்யோதயகாலத்தில் தூங்குபவனிடம் ஸூர்யபாபயுதிதே, சேர்த்தான், அவன் ஸூர்யாஸ்தமனகாலத்தில் தூங்குபவனிடத்தில்-ஸூர்யாபிநிம்ருக்தே
சேர்த்தான்,, ஆதலால் ஸூர்யோதயகாலத்தில் மற்றும் ஸூர்யாஸ்யமனகாலத்தில் தூங்ககூடாது என்பர், காரணம் முன்பு சொன்ன பாபத்தை அவர்களிடம் சேர்த்துவிடுவார்கள்
அவன் கோனலான நகத்தை உடையவனிடம் சேர்த்தான், அவன் காரையுடன் கூடிய பல்லை உடையவனிடம் சேர்த்தான், அவன் அக்காளிருக்க தங்கையை மணந்தவனிடம் -அக்ரதிதிஷுஃ சேர்த்தான், அவன் விவாஹம் செய்த தம்பியிருக்க விவாஹமாகாத ஜ்யேஷ்டன்-பரிவித்தன் இடம் சேர்த்தான், அவன் க்ஷத்ரியனை கொல்பவனிடம் அந்த பாபத்தை சேர்த்தான், அவன் ப்ராஹ்மணணை கொல்பவனிடம் சேர்த்தான், இந்த பாபம் அவனை விட்டு நீங்கவில்லை, காரணம், ஜலமானது தாழ்வான இடத்தையே சென்றடையும், அதுபோல் முன்பு கூறின பாபங்களில் மிகவும் கொடியது-தாழ்ந்தது ப்ரஹ்மஹத்தியாகும் , ஆதலால் அங்கு சென்றது, அதைவிட தாழ்வானது வேறு இல்லாததால் அங்கேயே நின்றுவிட்டது என வேறு இடத்தில் கூறப்பட்டுள்ளது.
இப்படி த்ரிதனிடத்தில் தேவர்கள் சேர்ப்பித்த பாபத்தை த்ரிதன் முன்பு கூறின
மனுஷ்யர்களில் சேர்த்தான், அதி்ல் நின்றும் சிறிது ஏதாவது என்னை அடைந்திருக்கலாம், ஹே அக்னிதேவனே நீ அவைகளில் நின்றும் என்னை விடுவிக்கவேணும்,

दिवि जाता अफ्सु जाताः। या जाता ओषधीभ्य़ः। अथो या अग्निजा आपः। तानश्शुन्धन्तु शुन्धनीः।।
14.த்யுலோகத்தில் உண்டானதும், கிணறுகளில் உண்டானதும், ஓஷதிகளில் நின்றும் உண்டானதும், மின்னலில் நின்றுமுண்டானதாய் எல்லா வஸ்துவையும் பரிசுத்தமாக்குகிற ஜலங்கள் எங்களை சுத்தமாக்கட்டும்.

यदापो नक्तं दुरितं चराम। यद्वा दिवा नूतनं यत्पुराणम्। हिरण्यवर्णास्तत उत्पुनीत नः।
15.ராத்ரியில் மற்றும் பகலில் செய்யப்பட்டதும், முன்பு செய்ததும் தற்சமயம் செய்ததுமான எல்லா பாபத்தில் நின்றும் ஹே தங்கவர்ணத்தில்
தேஜஸ்ஸோடு கூடின ஹே ஜலங்களே,நீங்கள் எங்களை பரிசுத்தமாக்கவேணும்.
इमं मे वरुण श्रुधी हवमद्या च मृडय। त्वामवस्युराचके।
16, ஹே வருணதேவனே, என்னுடய ஆஹ்வானத்தை கேளாய், கேட்டபிறகு எங்களை ஸுகமாக இருக்கச்செய்யவும், என்னை ரக்ஷிக்கவேண்டி விரும்பி
உன்னை எல்லா திசையிலும் ப்ரார்த்திக்கிறேன்.
तत्वायामि ब्रह्मणा वन्दमानस्तदाशास्ते यजमानो हविर्भिः।अहेडमानो वरुणेह होध्युरुश्स मा न आयुः प्रमोषीः।।
17.என்னுடய ரக்ஷணத்தின் பொருட்டு மந்த்ரத்தால் ஸேவிப்பவனாய் உன்னை அடைகிறேன்.இந்த யஜமானன் ஹவிஸ்ஸுகளால் ஆராதித்து ரக்ஷணத்தை ப்ரார்த்திக்கிறான், ஹே வருணதேவனே, கோபமில்லாதவனாய் இந்த கர்மாவில் எங்களின் வி்ஞ்ஞாபநத்தை அறிவாயாக,மிகுந்த தபஸ்ஸோடுகூடியவனே, எங்களுடய ஆயுஸ்ஸை நாசம் செய்யாதே.
त्वं नो अग्ने वरुणस्य विद्वान् देवस्य हेडोवयासिसीष्ठाः। यजिष्ठो वह्नितमस्शोशुचाऩो विश्वा द्वेषांसि प्रमुमुग्ध्यस्मत्।
18,ஹே அக்னியே, நீ எங்களுடய பக்தியை அறிபவனாய் வருணனுக்கு எங்கள்விஷயத்திலுள்ள கோபத்தை போக்குவாயாக, யாகத்தை நன்கு செய்பவனாய் ,தேவர்களின் ஹவிஸ்ஸை வஹிப்பவனாய், ப்ரகாசத்தோடு கூடியவனாய் இருந்து கொண்டு விரோதிகளால் செய்யப்பட்ட எல்லா த்வேஷங்களையும் எங்களிடமிருந்து போக்குவாயாக.
सत्वं नो अग्नेवमो भवोती नेदिष्ठो अस्या उषसो व्युष्टौ। अवयक्ष्व नो वरुणं रराणो वीहि मृडीकं सुहवो न एधि।
19,ஹே அக்னிதேவனே, அப்படிப்பட்ட நீ எங்களுக்கு ரக்ஷகனாக இரு, ப்ராதஃகாலத்தில் ஸமீபத்தில் நின்று வருணனால் செய்யப்பட்டதாய் எங்களின் அபீஷ்டங்களை தடுப்பதான பாபங்களை நாசம் செய்வாயாக,ஸந்தோஷத்துடன் ஸுகஸாதனமான நாங்கள் ஸமர்ப்பிக்கும் ஹவிஸ்ஸை சாப்பிடுவாயாக, எங்களால் ஸுகமாக கூப்பிடத்தகுந்தவனாக இரு.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top