• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

உறவுகள் தொடர்கதை - நாவல் - அனாமிகா

Status
Not open for further replies.

anamika

Active member
உறவுகள் தொடர்கதை - நாவல் - அனாமிகா

அத்தியாயம் - 1*************பொழுது புலர்ந்து வெகுநேரமாகிவிட்டது. தூக்கம் கலைந்து எழுந்த அரவிந்தன், மணியைப் பார்த்தான்.கடிகாரம் எட்டரை மணியைக் காட்டியது.ஞாயிற்றுக்கிழமைதான் என்றாலும் அதற்கு மேல் அவனால் தூங்கமுடியவில்லை. எழுந்து வேலைகளை முடித்துக் கொண்டு, வீட்டைப் பூட்டிக் கொண்டு காலைச் சிற்றுண்டிக்காக உணவகத்தை நோக்கி நடந்தான்.உணவு முடிந்ததும் திரும்பி வீட்டுக்கு வந்தான். தொலைக்காட்சியை இயங்க வைத்துப் பார்த்தான். சில சானல்களில் பக்தி அலைகள் பெருகி வழிந்தன; சிலவற்றில் திரைப்படம், அவை சார்ந்த பாடல்கள், விமரிசனம் - எதையுமே பார்க்கப் பிடிக்காமல் நிறுத்தினான்.வானொலியை இயக்க, மணிவிழா கண்ட ஒரு பிரபலமான தம்பதியைப் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தனர்."உங்கள் இல்லறத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன?" பேட்டியாளர் கேட்டார்."விட்டுக் கொடுத்து வாழ்வது" என்று இருவரும் ஒரே நேரத்தில் பதிலளித்தனர்.அரவிந்தன் பல்லைக் கடித்தான். "ச்சே! வேறு வேலை கிடையாது. பேட்டி எடுக்கறாங்க பேட்டி!"கோபத்தோடு வானொலியை நிறுத்தினான். அன்றைய தினசரியைக் கையில் எடுத்தான்.கொலை, கொள்ளை, விபத்து, கற்பழிப்பு என்று சோகச் செய்திகள் நிறைந்து கிடந்தன. இவை போதாவென்று அங்கங்கே அரசியல்(வி)வாதிகளின் அறிக்கைப் போர்கள்!அன்றைய ஞாயிறு மலரின் சிறப்புக் கட்டுரை: "பெருகி வரும் விவாகரத்துகள்" பலதரப் பட்டவர்களையும், சமூக சேவகிகள், வழக்கறிஞர், விவாகரத்து பெற்று வாழ்ந்து கொண்டிருப்போர், மனநல மருத்துவர் என்று அனைவர் கருத்துகளும் அலசப்பட்டிருந்தன.தலைப்பைப் பார்த்ததும் அரவிந்தனுக்குக் கோபம் எகிறியது."யார் யாரை விவாகரத்து செய்தால் இவர்களுக்கு என்ன வந்தது? பெரிசா கட்டுரை எழுத வந்துட்டாங்க..."திட்டிக்கொண்டே அந்தப் பேப்பரைத் தூக்கி வீசினான். தண்ணீர் குடித்து விட்டு வந்து மறுபடி படுத்துக் கொண்டான்.மறுபடியும் மறுபடியும் நினைவுகள் பொங்கின. அவன் யாரை மறப்பதற்குப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறானோ, மீண்டும் அதே நினைவு."ரஞ்சனி இருந்திருந்தால்...இப்படி எனக்குப் போரடிக்குமா?"கோபம் போய் துக்கம் வந்தது.மற்ற நாள்களில் எல்லாம் ஏழு மணிக்கு எழுப்பினால் கூட எழுந்திருக்காத ரஞ்சனி, ஞாயிறு என்றால் போதும், காலை ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்து விடுவாள்.பத்து நிமிஷம் வரை பொறுத்துப் பார்த்துவிட்டு, அரவிந்தனை எழுப்பிவிட்டு விடுவாள்.*******************************************************************"எழுந்திருங்க டாடி! மணி ஆறாயிடுச்சு. எழுந்திருங்க...."அரவிந்தன் மகளைக் கொஞ்சிப் பார்ப்பான்."இதப் பாரும்மா கண்ணா! முதல்ல அம்மாவை எழுப்பி காபி போடச் சொல்லு. பின்னாலேயே அப்பா வருவேன். போம்மா..."ரஞ்சனியை லேசில் ஜெயிக்க யாராலும் முடியாது."அம்மா அப்பவே எழுந்துட்டாங்க. நீங்க தான் இன்னும் தூங்கறீங்க. சீக்கிரம் வாங்க. கார்ட்டூன் பார்க்கலாம்."ஞாயிறு முழுதும் அரவிந்தனுக்கு மகளோடு தான் இருக்க வேண்டும். மற்ற நாள்களிலெல்லாம் அரவிந்தன் தன் அலுவலகத்தில் இருந்து வரும் முன்பே ரஞ்சனி தூங்கி விடுவதால், ஞாயிறு தான் இருவருக்குமே 'ஸ்பெஷல்'.ரஞ்சனி முதல் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள். ஞாயிறன்று அப்பாவோடு உட்கார்ந்து பேசுவாள், பேசுவாள், அப்படி என்னதான் பேசுவார்களோ என்று சமயத்தில் அரவிந்தனின் மனைவி சாந்திக்குக் கூட சந்தேகம் வரும்."அப்பாவும் பெண்ணும் என்ன தான் பேசுவீங்களோ?""அம்மா! இதெல்லாம் எனக்கும் அப்பாவுக்கும் மட்டும் உள்ள ரகசியம். உங்களுக்குச் சொல்ல முடியாது. இல்லையா அப்பா?" என்று வெறுப்பேற்றுவாள்.அந்த வாரம் ரஞ்சனியின் பள்ளியில் நடந்த விஷயங்களைதான் சொல்லிக் கொண்டிருப்பாள். சாந்திக்கு அதையெல்லாம் உட்கார்ந்து கேட்க நேரமும் இல்லை; பொறுமையும் போதாது. அரவிந்தனுக்கு ரஞ்சனி சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். விழிகள் விரிய உணர்ச்சி பாவங்களோடு அவள் காயத்ரியோடு சண்டை போட்டது, பிறகு பழம் விட்டது, நரேன் டீச்சரிடம் அடி வாங்கியது, சுகன்யா பென்சிலைத் தொலைத்தது, மேத்ஸ் மிஸ் ரஞ்சனியை 'வெரிகுட்' சொன்னது, அந்த வாரம் சொல்லிக் கொடுத்த பாட்டு, விளம்பரத்தில் வரும் புது சாக்லேட்- இன்னும் அனுமான் வால் போல வளர்ந்து கொண்டே போகும்.திடீரென்று பார்த்தால் அதற்குள் சாயங்காலம் ஆகியிருக்கும். படம் பார்க்க அமர்ந்தால் ரஞ்சனியின் கேள்விகளுக்கு பதில் சொல்லி மாளாது. அதனால் சாந்தியை படம் பார்க்க விட்டு விட்டு, இவர்கள் இருவரும் வெளியே புறப்பட்டு விடுவார்கள்.********************************************************************மகள் நினைவு வந்ததும் கண்கள் கலங்கின. ஆயிற்று, ரஞ்சனியைப் பிரிந்து இரண்டாண்டுகள் முடியப் போகின்றன. கூடவே விவாகரத்து வாங்கிச் சென்ற மனைவி சாந்தியும் நினைவில் வந்தாள்.அரவிந்தன் எவ்வளவோ முயற்சி செய்தும் ரஞ்சனி பெண் குழந்தையானதால் தாயுடன் வளர்வதே முறை என்று நீதிபதி ரஞ்சனியை சாந்தியின் பாதுகாப்பில் அளித்து தீர்ப்பு கூறிவிட்டார்.அரவிந்தனுக்கு ரஞ்சனியிடம் எவ்வளவு பிரியம் இருந்ததோ, அதே அளவு வெறுப்பு சாந்தி மீது ஏற்பட்டிருந்தது. அதனாலேயே இருவரும் மனமொத்து 'மியூச்சுவல் கன்ஸென்ட்' அடிப்படையில் விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.வாழ்க்கையை விரக்தியும் வேதனையுமாய் நகர்த்திக் கொண்டிருந்தான். அதைப் புரிந்து கொள்ளாத நண்பர்கள், 'இன்னமும் சாந்தியை மறக்க முடியவில்லையா? அதனால் தான் மறுபடி கல்யாணம் செய்து கொள்ளவில்லையா?' என்று அடிக்கடி கேட்கத் தொடங்கினர்.அவர்கள் வாயை மூட வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காகவே அரவிந்தன் மறுமணம் செய்து கொள்ளத் தீர்மானித்திருந்தான். அவன் கொடுத்திருந்த "மணமகள் தேவை" விளம்பரமும் சென்ற வாரம் பத்திரிகையில் வந்திருந்தது.சிறிது நேரத் தேடலுக்குப் பிறகு, அரவிந்தனுக்கு அந்தப் பத்திரிகை கிடைத்தது. தான் கொடுத்திருந்த விளம்பரத்தை ஒருமுறை படித்துப் பார்த்தான்."இந்து, 32 வயது, அரசு வேலை, கை நிறையச் சம்பளம், 170 செ.மீ உயரம், அவிட்டம், முதல் மனைவியை சட்டப்படி பிரிந்து விட்ட வரனுக்கு மணமகள் தேவை. ஒரு பெண் குழந்தை (7 வயது) அன்னையின் கவனிப்பில் உள்ளது. எந்த வில்லங்கமும் இல்லை. நற்குணமுடைய,அழகான, அடக்கமான, அனுசரிக்கத் தெரிந்த, குடும்பப்பாங்கான, வேலைக்குச் செல்லும்/ செல்லாத பெண் தேவை. ஜாதி, மதம் தடையில்லை. விதவை, விவாகரத்தானோர் விண்ணப்பிக்க வேண்டாம். ஆதரவற்ற பெண்களும் தொடர்பு கொள்ளலாம்."விளம்பரத்தின் கீழே அவனுடைய பெயரும் வீட்டு முகவரியும், தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டிருந்தன."இது வரை எந்த பதில் கடிதமும் வரவில்லை, பார்க்கலாம்" எனத் தனக்குள்ளே யோசித்துக் கொண்டிருந்த அரவிந்தனை அழைப்பு மணியின் ஒலி கலைத்தது."யாரது? என்னைப் பார்க்க வந்திருப்பது?" கதவைத் திறக்க, அந்தப் பெண் புன்சிரிப்போடு வணக்கம் சொன்னாள்.'அமுதம்' பத்திரிகையில் வந்த விளம்பரம் சம்பந்தமாப் பார்க்க வந்திருக்கேன். மிஸ்டர் அரவிந்தன் இருக்காரா?"(உறவுகள் தொடரும்.....)
 
Last edited:
dear anamika,

welcome back with another novel. good start.

two points.

please space your sentences, with lines, paras more often. makes it easier to read.

second: which kid uses the honorfic 'neengal' in any tamil group? is it not nee?

hope you dont mind the feedback. good ending for chap 1. :)
 
உறவுகள் தொடர்கதை***********************அத்தியாயம் - 1****************பொழுது புலர்ந்து வெகுநேரமாகிவிட்டது. தூக்கம் கலைந்து எழுந்த அரவிந்தன், மணியைப் பார்த்தான்.கடிகாரம் எட்டரை மணியைக் காட்டியது.ஞாயிற்றுக்கிழமைதான் என்றாலும் அதற்கு மேல் அவனால் தூங்கமுடியவில்லை. எழுந்து வேலைகளை முடித்துக் கொண்டு, வீட்டைப் பூட்டிக் கொண்டு காலைச் சிற்றுண்டிக்காக உணவகத்தை நோக்கி நடந்தான்.உணவு முடிந்ததும் திரும்பி வீட்டுக்கு வந்தான். தொலைக்காட்சியை இயங்க வைத்துப் பார்த்தான். சில சானல்களில் பக்தி அலைகள் பெருகி வழிந்தன; சிலவற்றில் திரைப்படம், அவை சார்ந்த பாடல்கள், விமரிசனம் - எதையுமே பார்க்கப் பிடிக்காமல் நிறுத்தினான்.வானொலியை இயக்க, மணிவிழா கண்ட ஒரு பிரபலமான தம்பதியைப் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தனர்."உங்கள் இல்லறத்தின் வெற்றிக்குக் காரணம் என்ன?" பேட்டியாளர் கேட்டார்."விட்டுக் கொடுத்து வாழ்வது" என்று இருவரும் ஒரே நேரத்தில் பதிலளித்தனர்.அரவிந்தன் பல்லைக் கடித்தான். "ச்சே! வேறு வேலை கிடையாது. பேட்டி எடுக்கறாங்க பேட்டி!"கோபத்தோடு வானொலியை நிறுத்தினான். அன்றைய தினசரியைக் கையில் எடுத்தான்.கொலை, கொள்ளை, விபத்து, கற்பழிப்பு என்று சோகச் செய்திகள் நிறைந்து கிடந்தன. இவை போதாவென்று அங்கங்கே அரசியல்(வி)வாதிகளின் அறிக்கைப் போர்கள்!அன்றைய ஞாயிறு மலரின் சிறப்புக் கட்டுரை: "பெருகி வரும் விவாகரத்துகள்"பலதரப் பட்டவர்களையும், சமூக சேவகிகள், வழக்கறிஞர், விவாகரத்து பெற்று வாழ்ந்து கொண்டிருப்போர், மனநல மருத்துவர் என்று அனைவர் கருத்துகளும் அலசப்பட்டிருந்தன.தலைப்பைப் பார்த்ததும் அரவிந்தனுக்குக் கோபம் எகிறியது."யார் யாரை விவாகரத்து செய்தால் இவர்களுக்கு என்ன வந்தது? பெரிசா கட்டுரை எழுத வந்துட்டாங்க..."திட்டிக்கொண்டே அந்தப் பேப்பரைத் தூக்கி வீசினான். தண்ணீர் குடித்து விட்டு வந்து மறுபடி படுத்துக் கொண்டான்.மறுபடியும் மறுபடியும் நினைவுகள் பொங்கின. அவன் யாரை மறப்பதற்குப் பாடுபட்டுக் கொண்டிருக்கிறானோ, மீண்டும் அதே நினைவு."ரஞ்சனி இருந்திருந்தால்...இப்படி எனக்குப் போரடிக்குமா?"கோபம் போய் துக்கம் வந்தது.மற்ற நாள்களில் எல்லாம் ஏழு மணிக்கு எழுப்பினால் கூட எழுந்திருக்காத ரஞ்சனி, ஞாயிறு என்றால் போதும், காலை ஐந்தரை மணிக்கெல்லாம் எழுந்து விடுவாள்.பத்து நிமிஷம் வரை பொறுத்துப் பார்த்துவிட்டு, அரவிந்தனை எழுப்பிவிட்டு விடுவாள்.*******************************************************************"எழுந்திருங்க டாடி! மணி ஆறாயிடுச்சு. எழுந்திருங்க...."அரவிந்தன் மகளைக் கொஞ்சிப் பார்ப்பான்."இதப் பாரும்மா கண்ணா! முதல்ல அம்மாவை எழுப்பி காபி போடச் சொல்லு. பின்னாலேயே அப்பா வருவேன். போம்மா..."ரஞ்சனியை லேசில் ஜெயிக்க யாராலும் முடியாது."அம்மா அப்பவே எழுந்துட்டாங்க. நீங்க தான் இன்னும் தூங்கறீங்க. சீக்கிரம் வாங்க. கார்ட்டூன் பார்க்கலாம்."ஞாயிறு முழுதும் அரவிந்தனுக்கு மகளோடு தான் இருக்க வேண்டும். மற்ற நாள்களிலெல்லாம் அரவிந்தன் தன் அலுவலகத்தில் இருந்து வரும் முன்பே ரஞ்சனி தூங்கி விடுவதால், ஞாயிறு தான் இருவருக்குமே 'ஸ்பெஷல்'.ரஞ்சனி முதல் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தாள். ஞாயிறன்று அப்பாவோடு உட்கார்ந்து பேசுவாள், பேசுவாள், அப்படி என்னதான் பேசுவார்களோ என்று சமயத்தில் அரவிந்தனின் மனைவி சாந்திக்குக் கூட சந்தேகம் வரும்."அப்பாவும் பெண்ணும் என்ன தான் பேசுவீங்களோ?""அம்மா! இதெல்லாம் எனக்கும் அப்பாவுக்கும் மட்டும் உள்ள ரகசியம். உங்களுக்குச் சொல்ல முடியாது. இல்லையா அப்பா?" என்று வெறுப்பேற்றுவாள்.அந்த வாரம் ரஞ்சனியின் பள்ளியில் நடந்த விஷயங்களைதான் சொல்லிக் கொண்டிருப்பாள். சாந்திக்கு அதையெல்லாம் உட்கார்ந்து கேட்க நேரமும் இல்லை; பொறுமையும் போதாது. அரவிந்தனுக்கு ரஞ்சனி சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். விழிகள் விரிய உணர்ச்சி பாவங்களோடு அவள் காயத்ரியோடு சண்டை போட்டது, பிறகு பழம் விட்டது, நரேன் டீச்சரிடம் அடிவாங்கியது, சுகன்யா பென்சிலைத் தொலைத்தது, மேத்ஸ் மிஸ் ரஞ்சனியை 'வெரிகுட்' சொன்னது, அந்த வாரம் சொல்லிக் கொடுத்த பாட்டு, விளம்பரத்தில் வரும் புது சாக்லேட்- இன்னும் அனுமான் வால் போல வளர்ந்து கொண்டே போகும்.திடீரென்று பார்த்தால் அதற்குள் சாயங்காலம் ஆகியிருக்கும். படம் பார்க்க அமர்ந்தால் ரஞ்சனியின் கேள்விகளுக்கு பதில் சொல்லி மாளாது. அதனால் சாந்தியை படம் பார்க்க விட்டு விட்டு, இவர்கள் இருவரும் வெளியே புறப்பட்டு விடுவார்கள்.*********************************************************************மகள் நினைவு வந்ததும் கண்கள் கலங்கின. ஆயிற்று, ரஞ்சனியைப் பிரிந்து இரண்டாண்டுகள் முடியப் போகின்றன. கூடவே விவாகரத்து வாங்கிச் சென்ற மனைவி சாந்தியும் நினைவில் வந்தாள்.அரவிந்தன் எவ்வளவோ முயற்சி செய்தும் ரஞ்சனி பெண் குழந்தையானதால் தாயுடன் வளர்வதே முறை என்று நீதிபதி ரஞ்சனியை சாந்தியின் பாதுகாப்பில் அளித்து தீர்ப்பு கூறிவிட்டார்.அரவிந்தனுக்கு ரஞ்சனியிடம் எவ்வளவு பிரியம் இருந்ததோ, அதே அளவு வெறுப்பு சாந்தி மீது ஏற்பட்டிருந்தது. அதனாலேயே இருவரும் மனமொத்து 'மியூச்சுவல் கன்ஸென்ட்' அடிப்படையில் விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.வாழ்க்கையை விரக்தியும் வேதனையுமாய் நகர்த்திக் கொண்டிருந்தான். அதைப் புரிந்து கொள்ளாத நண்பர்கள், 'இன்னமும் சாந்தியை மறக்க முடியவில்லையா? அதனால் தான் மறுபடி கல்யாணம் செய்து கொள்ளவில்லையா?' என்று அடிக்கடி கேட்கத் தொடங்கினர்.அவர்கள் வாயை மூட வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காகவே அரவிந்தன் மறுமணம் செய்து கொள்ளத் தீர்மானித்திருந்தான். அவன் கொடுத்திருந்த "மணமகள் தேவை" விளம்பரமும் சென்ற வாரம் பத்திரிகையில் வந்திருந்தது.சிறிது நேரத் தேடலுக்குப் பிறகு, அரவிந்தனுக்கு அந்தப் பத்திரிகை கிடைத்தது. தான் கொடுத்திருந்த விளம்பரத்தை ஒருமுறை படித்துப் பார்த்தான்."இந்து, 32 வயது, அரசு வேலை, கை நிறையச் சம்பளம், 170 செ.மீ உயரம், அவிட்டம், முதல் மனைவியை சட்டப்படி பிரிந்து விட்ட வரனுக்கு மணமகள் தேவை. ஒரு பெண் குழந்தை (7 வயது) அன்னையின் கவனிப்பில் உள்ளது. எந்த வில்லங்கமும் இல்லை. நற்குணமுடைய, அழகான, அடக்கமான, அனுசரிக்கத் தெரிந்த, குடும்பப்பாங்கான, வேலைக்குச் செல்லும்/ செல்லாத பெண் தேவை. ஜாதி, மதம் தடையில்லை. விதவை, விவாகரத்தானோர் விண்ணப்பிக்க வேண்டாம். ஆதரவற்ற பெண்களும் தொடர்பு கொள்ளலாம்."விளம்பரத்தின் கீழே அவனுடைய பெயரும் வீட்டு முகவரியும், தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டிருந்தன."இது வரை எந்த பதில் கடிதமும் வரவில்லை, பார்க்கலாம்" எனத் தனக்குள்ளே யோசித்துக் கொண்டிருந்த அரவிந்தனை அழைப்பு மணியின் ஒலி கலைத்தது."யாரது? என்னைப் பார்க்க வந்திருப்பது?" கதவைத் திறக்க, அந்தப் பெண் புன்சிரிப்போடு வணக்கம் சொன்னாள்.'அமுதம்' பத்திரிகையில் வந்த விளம்பரம் சம்பந்தமாப் பார்க்க வந்திருக்கேன். மிஸ்டர் அரவிந்தன் இருக்காரா?"(உறவுகள் தொடரும்.....)
 
Sorry, it's a mistake; actually though I posted the first post with proper spacing and para, it has appeared as a whole; I tried it again with no success. still to find the errorWelcome with ur feedback and comments, Kunjuppu Sir!AFAIK, except in our Tambram community, Parents are addressed with due respect!Anamika
anamika,post #3, repeat of post #1? ...or am i seeing 'things'? :)
 
அத்தியாயம் - 2***************"உள்ளே வாங்க" என்ற அரவிந்தன், மனதுக்குள்ளேயே அந்தப் பெண்ணை எடை போட்டான்.வயது இருபத்தியைந்து இருக்கும். சிவப்பும், வெள்ளையுமாய் சின்ன சின்ன பூக்கள் தெளித்த சுடிதார் போட்டிருந்தாள். துப்பட்டாவை இடத்தோளின் மீது போட்டிருந்தாள். வலப்புறம் ஒரு சிறிய, அழகான கைப்பை ஊசலாடியது.அமைதியும், அடக்கமும் பொலியும் முகம். சிலரைப் பார்த்தால் அவர்களுடைய பரபரப்பும், கோபமும் நமக்கும் ஒட்டிக்கொள்ளும். வேறு சிலரைப் பார்த்தாலோ அவர்களுடைய நிதானமும், சாந்தமும் நம்மையும் அமைதிப்படுத்தும். இந்தப் பெண் இரண்டாம் வகையைச் சேர்ந்தவள். 'இவள் கணவன் அதிர்ஷ்டசாலி' என்று தனக்குள் எண்ணிக் கொண்டான்.அவள் உட்காராமல் இன்னும் நின்று கொண்டிருந்தாள்."நீங்க முதல்ல உட்காருங்க; அரவிந்தனைப் பார்க்கலாம்" என்று மீண்டும் வற்புறுத்திய பிறகு நாற்காலியில் அமர்ந்தாள்.அவள் எதிரே அமர்ந்த அரவிந்தன், "நான் தான் அரவிந்தன். என்ன விஷயம் சொல்லுங்க?" என்றான்.அவள் தயங்கியபடி தொடங்கினாள். வெட்கப்படுவது போல் தலை குனிந்திருக்க, "நான்....வந்து...என் பேர் சூர்யா. உங்க விளம்பரத்தைப் பார்த்து வந்திருக்கேன். வயது இருபத்தைந்து. படிப்பு பி.காம். பிரைவேட் கம்பெனியில் வேலை செய்யறேன்.""உங்களுக்காக என்னைப் பார்க்க வர்றதுக்கு...." அரவிந்தன் முடிப்பதற்குள், சூர்யா குறுக்கிட்டாள்."எனக்காக யாரும் இந்த உலகத்துல இல்லை.சின்ன வயதிலேயே அப்பா, அம்மாவை இழந்துட்டேன். அப்புறம் தூரத்து உறவுக்காரங்க வீடு, தெரிஞ்சவங்க உதவி, இப்படிக் கொஞ்சம் கொஞ்சமா போராடி வளர்ந்தேன். படிப்பு முடிஞ்சதும் என் சினேகிதியோட அப்பா சிபாரிசுல இந்த வேலை கிடைச்சுது. பிறகு கம்ப்யூட்டர் கோர்ஸ் படிச்சேன். இப்ப லேடீஸ் ஹாஸ்டல்ல தங்கியிருக்கேன்.""ஐ'ம் ஸாரி."அரவிந்தன் மெல்லிய குரலில் வருத்தப்பட்டான்."பரவாயில்லை, விடுங்க. வருத்தப்பட்டு என்ன லாபம்? உங்க அப்பா, அம்மா எங்கே இருக்காங்க?"அரவிந்தனின் குரல் இறுகியது."அவங்க ஊரில் இருக்காங்க. எனக்கு அவங்க இல்லாத மாதிரி தான்.""என்ன சொல்றீங்கன்னு புரியலை"'நானும், சாந்தியும் - அதாவது என் முதல் மனைவியும் - பிரியக் கூடாதுன்னு ரொம்ப முயற்சி செய்தாங்க. ஆனா நாங்க அவங்க பேச்சைக் கேட்காம 'டைவர்ஸ்' பண்ணிட்டோம். அப்ப கோபப்பட்டு ஊருக்குப் போனவங்கதான். அதுக்குப் பிறகு ஒரு தகவலுமில்லை; நான் கடிதம் எழுதினா பதிலும் வர்றதில்லை".சூர்யா என்ன சொல்வதென்று தெரியாமல் மௌனமாய் இருந்தாள்.அரவிந்தனே மீண்டும் தொடர்ந்தான்.'உங்களுக்கு வேற ஏதாவது விவரம் வேணும்னா கேளுங்க'"நீங்க எங்கே வேலை செய்யறீங்க?""சொல்லவே மறந்துட்டேன் பாருங்க" என்றவன் தான் வேலை செய்யும் அலுவலகம், அதில் தன்னுடைய பணி, தான் வாங்கும் சம்பளம், உள்ள சலுகைகள் எல்லாவற்றையும் விவரமாகக் கூறினான்."வந்து...கேட்கறேன்னு தவறா நினைக்காதீங்க. நீங்க எவ்வுளவு நாளாத் தனியா இருக்கீங்க?""நான் டைவர்ஸ் பண்ணி இரண்டு வருஷமாகுது. நானும், அவளும் சேர்ந்து முடிவெடுத்து வாங்கிய விவாகரத்து. ஒரே பொண்ணு, ரஞ்சனி- இப்ப மூணாவது படிக்கிறா. அவ கூடத் தான் இருக்கணும்னு கோர்ட்ல சொல்லிட்டாங்க" என்றவன் சற்று நேர இடைவெளி விட்டு, "எங்க விவாகரத்துக்குக் காரணம் என்னன்னா...""பிளீஸ்...நிறுத்துங்க" என்றாள் சூர்யா."ஏன் நிறுத்தச் சொல்லிட்டீங்க?" அரவிந்தன் வியப்புடன் கேட்டான்."உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில நான் தலையிட விரும்பலை. உங்களுக்கும், உங்க மனைவிக்கும் ஏதாவது பிரச்னை இருந்திருக்கலாம். நீங்க பிரிஞ்சுடலாம்னு தீர்மானிச்சீங்க, பிரிஞ்சுட்டீங்க. அந்தக் காரணத்தைத் தெரிஞ்சுக்கிட்டு நான் என்ன செய்யப்போறேன்? உங்க கடந்தகாலம் எனக்கு சம்பந்தம் இல்லாதது. அதைக் கேள்வி கேட்க எனக்கு எந்த உரிமையும் இல்லை."சூர்யாவின் மீதுள்ள மதிப்பு சட்டென்று மேலே ஏறியது."இன்னும் ஒரு சின்ன விஷயம், சொல்லட்டுமா? கடந்த காலத்தோட சோகமும், வருங்காலத்தைப் பற்றிய பயமும் சேர்ந்து மனத்தை நிரப்பிடுச்சுன்னா, நிகழ்காலம் நாம உணர்றதுக்குள்ள கரைஞ்சே போயிடும்.""நீங்க ரொம்ப அழகாப் பேசறீங்க!""நீங்க வேற, நான் இப்ப கடைசியா சொன்னது என் சொந்த வசனமில்லை. ஏற்கனவே யாரோ ஒரு மேதை சொன்னது. புத்தகத்துல பார்த்தேன். சட்டுனு மனசுல தங்கிடுச்சு. அதைத்தான் இப்ப சொன்னேன்."சூர்யா சிரிக்கும் போது கூடுதலான அழகாகத் தெரிவதை அரவிந்தன் கவனித்தான்."நானே பேசிட்டு இருக்கேன். உங்களுக்கு ஏதாவது கேட்கணும்னா கேளுங்க" என்று சூர்யா சொல்ல அரவிந்தன், "உங்களுக்கு பொழுதுபோக்கு என்ன?" என்றான்."சின்ன வயசில பெரிசா எதுவும் கத்துக்கிற மாதிரி சூழ்நிலை இல்லை. இப்ப சில வருஷங்களா புத்தகம் படிக்கிற பழக்கம் இருக்கு. ரொம்ப சீரியஸா படிக்க மாட்டேன். காமெடியா இருக்கிற கதைகள், சிறுகதைகள் படிப்பேன். சமீபமாத்தான் கொஞ்சம் கனமான விஷயங்களைப் படிக்கத் தொடங்கி இருக்கேன். டி.வி பார்க்கிறது உண்டு. அவ்வுளவு தான். நீங்க?""எனக்குப் படிக்கிறது பிடிக்கும். இந்த சப்ஜெக்ட்னு இல்லை. வேர்க்கடலை வாங்கினாக்கூட, அந்தக் காகிதத்தைப் பிரிச்சுப் படிப்பேன். சினிமாப் பத்திரிகையும் கூடப் படிப்பேன். ஒரேயொரு விஷயம் - இந்தக் குடும்பக் கதைகள் எழுதுவாங்களே, அதுமட்டும் படிக்க மாட்டேன். அதென்னவோ, அப்படி ஒரு அலர்ஜி" என்ற அரவிந்தன் தொடர்ந்து, " சரி, அதை விடுங்க. கல்யாணத்துக்குப் பிறகு பெண்கள் வேலைக்கு போறதைப் பத்தி உங்க அபிப்ராயம் என்ன?"'இதிலே பொதுவா அபிப்ராயம் சொல்ல முடியாதுங்க. கல்யாணத்துக்குப் பிறகும் குடும்பத்தேவை இருந்தா, பெண்களும் வேலைக்குப் போக வேண்டியதா ஆயிடுது. அப்படியில்லாம, ஒருத்தர் சம்பளமே போதும்னு ரெண்டு பேரும் முடிவெடுத்தா, அப்ப அந்தப் பெண் வேலையை விட்டுடலாம். உங்க அபிப்ராயம் என்ன?""பெண்கள் வேலைக்கு போறதுல எனக்கு ஆட்சேபணையே இல்லை. ஆனா, அவங்களுக்கு வேலையை விடவும் குடும்பம்தான் பெரிசா இருக்கணும். கணவன், குழந்தைகளைக் கஷ்டப்படுத்திக்கிட்டு 'தன் வேலை தான் பெரிசு'ன்னு பெண்கள் போறது எனக்குச் சுத்தமா பிடிக்காது."அரவிந்தன் நினைப்பில் சாந்தி இருந்ததால், கடைசி வாக்கியம் சற்று அழுத்தமாகவே விழுந்தது."ம்..சரி, நான் புறப்படறேன்" சூர்யா கிளம்பினாள்."இருங்க....ஏதாவது சாப்பிட்டுட்டுப் போகலாம்.""இல்லை. பரவாயில்லை.இந்தாங்க என்னோட நம்பர். உங்களுக்கு விருப்பமிருந்தா, ஃபோன் பண்ணுங்க. யோசிக்க ரெண்டு வாரம் போதுமா?'"ம்.. தாராளமாப் போதும்."புன்னகையோடு சூர்யாவை வழியனுப்பி வைத்தான் அரவிந்தன்.(உறவுகள் தொடரும்......)
 
Trying for a properly spaced version.....anamikaஅத்தியாயம் - 2***************"உள்ளே வாங்க" என்ற அரவிந்தன், மனதுக்குள்ளேயே அந்தப் பெண்ணை எடை போட்டான்.வயது இருபத்தியைந்து இருக்கும். சிவப்பும், வெள்ளையுமாய் சின்ன சின்ன பூக்கள் தெளித்த சுடிதார் போட்டிருந்தாள். துப்பட்டாவை இடத்தோளின் மீது போட்டிருந்தாள். வலப்புறம் ஒரு சிறிய, அழகான கைப்பை ஊசலாடியது.அமைதியும், அடக்கமும் பொலியும் முகம். சிலரைப் பார்த்தால் அவர்களுடைய பரபரப்பும், கோபமும் நமக்கும் ஒட்டிக்கொள்ளும். வேறு சிலரைப் பார்த்தாலோ அவர்களுடைய நிதானமும், சாந்தமும் நம்மையும் அமைதிப்படுத்தும். இந்தப் பெண் இரண்டாம் வகையைச் சேர்ந்தவள். 'இவள் கணவன் அதிர்ஷ்டசாலி' என்று தனக்குள் எண்ணிக் கொண்டான்.அவள் உட்காராமல் இன்னும் நின்று கொண்டிருந்தாள்."நீங்க முதல்ல உட்காருங்க; அரவிந்தனைப் பார்க்கலாம்" என்று மீண்டும் வற்புறுத்திய பிறகு நாற்காலியில் அமர்ந்தாள்.அவள் எதிரே அமர்ந்த அரவிந்தன், "நான் தான் அரவிந்தன். என்ன விஷயம் சொல்லுங்க?" என்றான்.அவள் தயங்கியபடி தொடங்கினாள். வெட்கப்படுவது போல் தலை குனிந்திருக்க, "நான்....வந்து...என் பேர் சூர்யா. உங்க விளம்பரத்தைப் பார்த்து வந்திருக்கேன். வயது இருபத்தைந்து. படிப்பு பி.காம். பிரைவேட் கம்பெனியில் வேலை செய்யறேன்.""உங்களுக்காக என்னைப் பார்க்க வர்றதுக்கு...." அரவிந்தன் முடிப்பதற்குள், சூர்யா குறுக்கிட்டாள்."எனக்காக யாரும் இந்த உலகத்துல இல்லை.சின்ன வயதிலேயே அப்பா, அம்மாவை இழந்துட்டேன். அப்புறம் தூரத்து உறவுக்காரங்க வீடு, தெரிஞ்சவங்க உதவி, இப்படிக் கொஞ்சம் கொஞ்சமா போராடி வளர்ந்தேன். படிப்பு முடிஞ்சதும் என் சினேகிதியோட அப்பா சிபாரிசுல இந்த வேலை கிடைச்சுது. பிறகு கம்ப்யூட்டர் கோர்ஸ் படிச்சேன். இப்ப லேடீஸ் ஹாஸ்டல்ல தங்கியிருக்கேன்.""ஐ'ம் ஸாரி."அரவிந்தன் மெல்லிய குரலில் வருத்தப்பட்டான்."பரவாயில்லை, விடுங்க. வருத்தப்பட்டு என்ன லாபம்? உங்க அப்பா, அம்மா எங்கே இருக்காங்க?"அரவிந்தனின் குரல் இறுகியது."அவங்க ஊரில் இருக்காங்க. எனக்கு அவங்க இல்லாத மாதிரி தான்.""என்ன சொல்றீங்கன்னு புரியலை"'நானும், சாந்தியும் - அதாவது என் முதல் மனைவியும் - பிரியக் கூடாதுன்னு ரொம்ப முயற்சி செய்தாங்க. ஆனா நாங்க அவங்க பேச்சைக் கேட்காம 'டைவர்ஸ்' பண்ணிட்டோம். அப்ப கோபப்பட்டு ஊருக்குப் போனவங்கதான். அதுக்குப் பிறகு ஒரு தகவலுமில்லை; நான் கடிதம் எழுதினா பதிலும் வர்றதில்லை".சூர்யா என்ன சொல்வதென்று தெரியாமல் மௌனமாய் இருந்தாள்.அரவிந்தனே மீண்டும் தொடர்ந்தான்.'உங்களுக்கு வேற ஏதாவது விவரம் வேணும்னா கேளுங்க'"நீங்க எங்கே வேலை செய்யறீங்க?""சொல்லவே மறந்துட்டேன் பாருங்க" என்றவன் தான் வேலை செய்யும் அலுவலகம், அதில் தன்னுடைய பணி, தான் வாங்கும் சம்பளம், உள்ள சலுகைகள் எல்லாவற்றையும் விவரமாகக் கூறினான்."வந்து...கேட்கறேன்னு தவறா நினைக்காதீங்க. நீங்க எவ்வுளவு நாளாத் தனியா இருக்கீங்க?""நான் டைவர்ஸ் பண்ணி இரண்டு வருஷமாகுது. நானும், அவளும் சேர்ந்து முடிவெடுத்து வாங்கிய விவாகரத்து. ஒரே பொண்ணு, ரஞ்சனி- இப்ப மூணாவது படிக்கிறா. அவ கூடத் தான் இருக்கணும்னு கோர்ட்ல சொல்லிட்டாங்க" என்றவன் சற்று நேர இடைவெளி விட்டு, "எங்க விவாகரத்துக்குக் காரணம் என்னன்னா...""பிளீஸ்...நிறுத்துங்க" என்றாள் சூர்யா."ஏன் நிறுத்தச் சொல்லிட்டீங்க?" அரவிந்தன் வியப்புடன் கேட்டான்."உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில நான் தலையிட விரும்பலை. உங்களுக்கும், உங்க மனைவிக்கும் ஏதாவது பிரச்னை இருந்திருக்கலாம். நீங்க பிரிஞ்சுடலாம்னு தீர்மானிச்சீங்க, பிரிஞ்சுட்டீங்க. அந்தக் காரணத்தைத் தெரிஞ்சுக்கிட்டு நான் என்ன செய்யப்போறேன்? உங்க கடந்த காலம் எனக்கு சம்பந்தம் இல்லாதது. அதைக் கேள்வி கேட்க எனக்கு எந்த உரிமையும் இல்லை."சூர்யாவின் மீதுள்ள மதிப்பு சட்டென்று மேலே ஏறியது."இன்னும் ஒரு சின்ன விஷயம், சொல்லட்டுமா? கடந்த காலத்தோட சோகமும், வருங்காலத்தைப் பற்றிய பயமும் சேர்ந்து மனத்தை நிரப்பிடுச்சுன்னா, நிகழ்காலம் நாம உணர்றதுக்குள்ள கரைஞ்சே போயிடும்.""நீங்க ரொம்ப அழகாப் பேசறீங்க!""நீங்க வேற, நான் இப்ப கடைசியா சொன்னது என் சொந்த வசனமில்லை. ஏற்கனவே யாரோ ஒரு மேதை சொன்னது. புத்தகத்துல பார்த்தேன். சட்டுனு மனசுல தங்கிடுச்சு. அதைத்தான் இப்ப சொன்னேன்."சூர்யா சிரிக்கும் போது கூடுதலான அழகாகத் தெரிவதை அரவிந்தன் கவனித்தான்."நானே பேசிட்டு இருக்கேன். உங்களுக்கு ஏதாவது கேட்கணும்னா கேளுங்க" என்று சூர்யா சொல்ல அரவிந்தன், "உங்களுக்கு பொழுதுபோக்கு என்ன?" என்றான்."சின்ன வயசில பெரிசா எதுவும் கத்துக்கிற மாதிரி சூழ்நிலை இல்லை. இப்ப சில வருஷங்களா புத்தகம் படிக்கிற பழக்கம் இருக்கு. ரொம்ப சீரியஸா படிக்க மாட்டேன். காமெடியா இருக்கிற கதைகள், சிறுகதைகள் படிப்பேன். சமீபமாத்தான் கொஞ்சம் கனமான விஷயங்களைப் படிக்கத் தொடங்கி இருக்கேன். டி.வி பார்க்கிறது உண்டு. அவ்வுளவு தான். நீங்க?""எனக்குப் படிக்கிறது பிடிக்கும். இந்த சப்ஜெக்ட்னு இல்லை. வேர்க்கடலை வாங்கினாக்கூட, அந்தக் காகிதத்தைப் பிரிச்சுப் படிப்பேன். சினிமாப் பத்திரிகையும் கூடப் படிப்பேன். ஒரேயொரு விஷயம் - இந்தக் குடும்பக் கதைகள் எழுதுவாங்களே, அதுமட்டும் படிக்க மாட்டேன். அதென்னவோ, அப்படி ஒரு அலர்ஜி" என்ற அரவிந்தன் தொடர்ந்து, " சரி, அதை விடுங்க. கல்யாணத்துக்குப் பிறகு பெண்கள் வேலைக்கு போறதைப் பத்தி உங்க அபிப்ராயம் என்ன?"'இதிலே பொதுவா அபிப்ராயம் சொல்ல முடியாதுங்க. கல்யாணத்துக்குப் பிறகும் குடும்பத்தேவை இருந்தா, பெண்களும் வேலைக்குப் போக வேண்டியதா ஆயிடுது. அப்படியில்லாம, ஒருத்தர் சம்பளமே போதும்னு ரெண்டு பேரும் முடிவெடுத்தா, அப்ப அந்தப் பெண் வேலையை விட்டுடலாம். உங்க அபிப்ராயம் என்ன?""பெண்கள் வேலைக்கு போறதுல எனக்கு ஆட்சேபணையே இல்லை. ஆனா, அவங்களுக்கு வேலையை விடவும் குடும்பம்தான் பெரிசா இருக்கணும். கணவன், குழந்தைகளைக் கஷ்டப்படுத்திக்கிட்டு 'தன் வேலை தான் பெரிசு'ன்னு பெண்கள் போறது எனக்குச் சுத்தமா பிடிக்காது."அரவிந்தன் நினைப்பில் சாந்தி இருந்ததால், கடைசி வாக்கியம் சற்று அழுத்தமாகவே விழுந்தது."ம்..சரி, நான் புறப்படறேன்" சூர்யா கிளம்பினாள்."இருங்க....ஏதாவது சாப்பிட்டுட்டுப் போகலாம்.""இல்லை. பரவாயில்லை.இந்தாங்க என்னோட நம்பர். உங்களுக்கு விருப்பமிருந்தா, ஃபோன் பண்ணுங்க. யோசிக்க ரெண்டு வாரம் போதுமா?'"ம்.. தாராளமாப் போதும்."புன்னகையோடு சூர்யாவை வழியனுப்பி வைத்தான் அரவிந்தன்.(உறவுகள் தொடரும்......)
 
Can anybody suggest/ help why these posts are getting published as a whole? I can't solve this....ThanksAnamika
 
அத்தியாயம் - 2

"உள்ளே வாங்க" என்ற அரவிந்தன், மனதுக்குள்ளேயே அந்தப் பெண்ணை எடை போட்டான்.வயது இருபத்தியைந்து

இருக்கும். சிவப்பும், வெள்ளையுமாய் சின்ன சின்ன பூக்கள் தெளித்த சுடிதார் போட்டிருந்தாள். துப்பட்டாவை

இடத்தோளின் மீது போட்டிருந்தாள். வலப்புறம் ஒரு சிறிய, அழகான கைப்பை ஊசலாடியது.அமைதியும், அடக்கமும்

பொலியும் முகம். சிலரைப் பார்த்தால் அவர்களுடைய பரபரப்பும், கோபமும் நமக்கும் ஒட்டிக்கொள்ளும். வேறு சிலரைப்

பார்த்தாலோ அவர்களுடைய நிதானமும், சாந்தமும் நம்மையும் அமைதிப்படுத்தும். இந்தப் பெண் இரண்டாம்

வகையைச் சேர்ந்தவள். 'இவள் கணவன் அதிர்ஷ்டசாலி' என்று தனக்குள் எண்ணிக் கொண்டான்.அவள் உட்காராமல்

இன்னும் நின்று கொண்டிருந்தாள்."நீங்க முதல்ல உட்காருங்க; அரவிந்தனைப் பார்க்கலாம்" என்று மீண்டும் வற்புறுத்திய

பிறகு நாற்காலியில் அமர்ந்தாள்.அவள் எதிரே அமர்ந்த அரவிந்தன், "நான் தான் அரவிந்தன். என்ன விஷயம்

சொல்லுங்க?" என்றான்.அவள் தயங்கியபடி தொடங்கினாள். வெட்கப்படுவது போல் தலை குனிந்திருக்க,

"நான்....வந்து...என் பேர் சூர்யா. உங்க விளம்பரத்தைப் பார்த்து வந்திருக்கேன். வயது இருபத்தைந்து. படிப்பு பி.காம்.

பிரைவேட் கம்பெனியில் வேலை செய்யறேன்.""உங்களுக்காக என்னைப் பார்க்க வர்றதுக்கு...." அரவிந்தன்

முடிப்பதற்குள், சூர்யா குறுக்கிட்டாள்."எனக்காக யாரும் இந்த உலகத்துல இல்லை.சின்ன வயதிலேயே அப்பா, அம்மாவை

இழந்துட்டேன். அப்புறம் தூரத்து உறவுக்காரங்க வீடு, தெரிஞ்சவங்க உதவி, இப்படிக் கொஞ்சம் கொஞ்சமா போராடி

வளர்ந்தேன். படிப்பு முடிஞ்சதும் என் சினேகிதியோட அப்பா சிபாரிசுல இந்த வேலை கிடைச்சுது. பிறகு கம்ப்யூட்டர்

கோர்ஸ் படிச்சேன். இப்ப லேடீஸ் ஹாஸ்டல்ல தங்கியிருக்கேன்.""ஐ'ம் ஸாரி."அரவிந்தன் மெல்லிய குரலில்

வருத்தப்பட்டான்."பரவாயில்லை, விடுங்க. வருத்தப்பட்டு என்ன லாபம்? உங்க அப்பா, அம்மா எங்கே

இருக்காங்க?"அரவிந்தனின் குரல் இறுகியது."அவங்க ஊரில் இருக்காங்க. எனக்கு அவங்க இல்லாத மாதிரி தான்.""என்ன

சொல்றீங்கன்னு புரியலை"'நானும், சாந்தியும் - அதாவது என் முதல் மனைவியும் - பிரியக் கூடாதுன்னு ரொம்ப முயற்சி

செய்தாங்க. ஆனா நாங்க அவங்க பேச்சைக் கேட்காம 'டைவர்ஸ்' பண்ணிட்டோம். அப்ப கோபப்பட்டு ஊருக்குப்

போனவங்கதான். அதுக்குப் பிறகு ஒரு தகவலுமில்லை; நான் கடிதம் எழுதினா பதிலும் வர்றதில்லை".சூர்யா என்ன

சொல்வதென்று தெரியாமல் மௌனமாய் இருந்தாள்.அரவிந்தனே மீண்டும் தொடர்ந்தான்.'உங்களுக்கு வேற ஏதாவது

விவரம் வேணும்னா கேளுங்க'"நீங்க எங்கே வேலை செய்யறீங்க?""சொல்லவே மறந்துட்டேன் பாருங்க" என்றவன் தான்

வேலை செய்யும் அலுவலகம், அதில் தன்னுடைய பணி, தான் வாங்கும் சம்பளம், உள்ள சலுகைகள் எல்லாவற்றையும்

விவரமாகக் கூறினான்."வந்து...கேட்கறேன்னு தவறா நினைக்காதீங்க. நீங்க எவ்வுளவு நாளாத் தனியா இருக்கீங்க?""நான்

டைவர்ஸ் பண்ணி இரண்டு வருஷமாகுது. நானும், அவளும் சேர்ந்து முடிவெடுத்து வாங்கிய விவாகரத்து. ஒரே

பொண்ணு, ரஞ்சனி- இப்ப மூணாவது படிக்கிறா. அவ கூடத் தான் இருக்கணும்னு கோர்ட்ல சொல்லிட்டாங்க" என்றவன்

சற்று நேர இடைவெளி விட்டு, "எங்க விவாகரத்துக்குக் காரணம் என்னன்னா...""பிளீஸ்...நிறுத்துங்க" என்றாள் சூர்யா."ஏன்

நிறுத்தச் சொல்லிட்டீங்க?" அரவிந்தன் வியப்புடன் கேட்டான்."உங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில நான் தலையிட

விரும்பலை. உங்களுக்கும், உங்க மனைவிக்கும் ஏதாவது பிரச்னை இருந்திருக்கலாம். நீங்க பிரிஞ்சுடலாம்னு

தீர்மானிச்சீங்க, பிரிஞ்சுட்டீங்க. அந்தக் காரணத்தைத் தெரிஞ்சுக்கிட்டு நான் என்ன செய்யப்போறேன்? உங்க கடந்தகாலம்

எனக்கு சம்பந்தம் இல்லாதது. அதைக் கேள்வி கேட்க எனக்கு எந்த உரிமையும் இல்லை."சூர்யாவின் மீதுள்ள மதிப்பு

சட்டென்று மேலே ஏறியது."இன்னும் ஒரு சின்ன விஷயம், சொல்லட்டுமா? கடந்த காலத்தோட சோகமும்,

வருங்காலத்தைப் பற்றிய பயமும் சேர்ந்து மனத்தை நிரப்பிடுச்சுன்னா, நிகழ்காலம் நாம உணர்றதுக்குள்ள கரைஞ்சே

போயிடும்.""நீங்க ரொம்ப அழகாப் பேசறீங்க!""நீங்க வேற, நான் இப்ப கடைசியா சொன்னது என் சொந்த வசனமில்லை.

ஏற்கனவே யாரோ ஒரு மேதை சொன்னது. புத்தகத்துல பார்த்தேன். சட்டுனு மனசுல தங்கிடுச்சு. அதைத்தான் இப்ப

சொன்னேன்."சூர்யா சிரிக்கும் போது கூடுதலான அழகாகத் தெரிவதை அரவிந்தன் கவனித்தான்."நானே பேசிட்டு

இருக்கேன். உங்களுக்கு ஏதாவது கேட்கணும்னா கேளுங்க" என்று சூர்யா சொல்ல அரவிந்தன், "உங்களுக்கு

பொழுதுபோக்கு என்ன?" என்றான்."சின்ன வயசில பெரிசா எதுவும் கத்துக்கிற மாதிரி சூழ்நிலை இல்லை. இப்ப சில

வருஷங்களா புத்தகம் படிக்கிற பழக்கம் இருக்கு. ரொம்ப சீரியஸா படிக்க மாட்டேன். காமெடியா இருக்கிற கதைகள்,

சிறுகதைகள் படிப்பேன். சமீபமாத்தான் கொஞ்சம் கனமான விஷயங்களைப் படிக்கத் தொடங்கி இருக்கேன். டி.வி

பார்க்கிறது உண்டு. அவ்வுளவு தான். நீங்க?""எனக்குப் படிக்கிறது பிடிக்கும். இந்த சப்ஜெக்ட்னு இல்லை. வேர்க்கடலை

வாங்கினாக்கூட, அந்தக் காகிதத்தைப் பிரிச்சுப் படிப்பேன். சினிமாப் பத்திரிகையும் கூடப் படிப்பேன். ஒரேயொரு விஷயம்

- இந்தக் குடும்பக் கதைகள் எழுதுவாங்களே, அதுமட்டும் படிக்க மாட்டேன். அதென்னவோ, அப்படி ஒரு அலர்ஜி" என்ற

அரவிந்தன் தொடர்ந்து, " சரி, அதை விடுங்க. கல்யாணத்துக்குப் பிறகு பெண்கள் வேலைக்கு போறதைப் பத்தி உங்க

அபிப்ராயம் என்ன?"'இதிலே பொதுவா அபிப்ராயம் சொல்ல முடியாதுங்க. கல்யாணத்துக்குப் பிறகும் குடும்பத்தேவை

இருந்தா, பெண்களும் வேலைக்குப் போக வேண்டியதா ஆயிடுது. அப்படியில்லாம, ஒருத்தர் சம்பளமே போதும்னு

ரெண்டு பேரும் முடிவெடுத்தா, அப்ப அந்தப் பெண் வேலையை விட்டுடலாம். உங்க அபிப்ராயம் என்ன?""பெண்கள்

வேலைக்கு போறதுல எனக்கு ஆட்சேபணையே இல்லை. ஆனா, அவங்களுக்கு வேலையை விடவும் குடும்பம்தான்

பெரிசா இருக்கணும். கணவன், குழந்தைகளைக் கஷ்டப்படுத்திக்கிட்டு 'தன் வேலை தான் பெரிசு'ன்னு பெண்கள் போறது

எனக்குச் சுத்தமா பிடிக்காது."அரவிந்தன் நினைப்பில் சாந்தி இருந்ததால், கடைசி வாக்கியம் சற்று அழுத்தமாகவே

விழுந்தது."ம்..சரி, நான் புறப்படறேன்" சூர்யா கிளம்பினாள்."இருங்க....ஏதாவது சாப்பிட்டுட்டுப் போகலாம்.""இல்லை.

பரவாயில்லை.இந்தாங்க என்னோட நம்பர். உங்களுக்கு விருப்பமிருந்தா, ஃபோன் பண்ணுங்க. யோசிக்க ரெண்டு வாரம்

போதுமா?'"ம்.. தாராளமாப் போதும்."புன்னகையோடு சூர்யாவை வழியனுப்பி வைத்தான் அரவிந்தன்.

(உறவுகள் தொடரும்......)​
 
Dear Anamika,

Select advance option and copy paste your page.

Then double click 'enter' in the beginning of each line.

Always preview your page before posting!

Best wishes,
Raji Ram

 
.....................
second: which kid uses the honorfic 'neengal' in any tamil group? is it not nee? ............
Dear Sir,

Only in Tambram families and the (so called) SC, ST families, parents are addressed 'nee'.

I have seen in all Goundar families, even the kids are addressed 'neega' to develop them to talk the same way,

with respect! You can watch any kids' program on Tamil channels to confirm this statement.


FYI, during our school days, my dear brother brought one amendment...

Then we too started 'neenga' for our parents, which continues till date!!

Regards,
Raji Ram
 
Dear Raji ma'am,Thank you very much for the suggestion and for re-posting the chap 2. Still there's some problem in my posts '; RegardsAnamika
 
good observation revathi.

i was browing nilaacharal even a few days ago. this novel escaped my attention. good stuff :)
 
Hi All,

Sorry, Revathy - I took Ganeshrev as Ganesh.

Thanks, Raji Ma'am ! - you are always here to guide, correct and help people in this forum!!! When I registered for Tambram, my real name was not available and so I took the pen name 'Anamika'.

As the readers in both forums are common, I think continuing with this novel here will not have any interest ; Soon I may start another new novel/ thread in Tambram.

Hope you also agree with my views. Pls let me know in case you differ.

Kunjuppu Sir, thanx for your feedback posted .

Thanks

Anamika
 
Dear Hema,

Your pen name is a nice selection!

Yes... Now that the cat is out of the bag, readers of your thread would have started updating the story!

If we google search Nilacharal we get the web magazine and your story appears in தொடர்கதை section. It is as easy as that...
We are awaiting your next novel / story / poem soon! :ranger:

PS: (Important part of a lady's letter!! You can post your new write-ups simultaneously in both forums,

so that one google search will be less for us!)

Best wishes,
Raji Ram



 
Hi All,

Sorry, Revathy - I took Ganeshrev as Ganesh.

Thanks, Raji Ma'am ! - you are always here to guide, correct and help people in this forum!!! When I registered for Tambram, my real name was not available and so I took the pen name 'Anamika'.

As the readers in both forums are common, I think continuing with this novel here will not have any interest ; Soon I may start another new novel/ thread in Tambram.

Hope you also agree with my views. Pls let me know in case you differ.

Kunjuppu Sir, thanx for your feedback posted .

Thanks

Anamika

thank you anamika.

as you can imagine, i rushed through nilaa and went through all the 10 chapters in one setting :)

where would you like the comments?

interestingly i was also attracted enough, to read a few more short stories.

atleast the ones that i picked - appeared to have a common theme - ungrateful children or youth easily mislead by 'western' mores.

to confess, i am yet to see a parent here in the usa or canada, of my generation, who is not proud of his children.

after all , us parents are in a strange culture, bring up our children in a strange culture, and somehow, had made a good job of it. most of the time.

in contrast, i sense a feeling of insecurity among the current day parents - tamils - B or NB or otherwise. the youth appear to be misguided by the internet, apes the west for all the wrong reasons, and (biggest crime) ignores the aged parents, who quietly suffer and do not complain (except to the author i guess).

:)
 
thank you anamika.as you can imagine, i rushed through nilaa and went through all the 10 chapters in one setting :)where would you like the comments? interestingly i was also attracted enough, to read a few more short stories.atleast the ones that i picked - appeared to have a common theme - ungrateful children or youth easily mislead by 'western' mores.to confess, i am yet to see a parent here in the usa or canada, of my generation, who is not proud of his children.after all , us parents are in a strange culture, bring up our children in a strange culture, and somehow, had made a good job of it. most of the time.in contrast, i sense a feeling of insecurity among the current day parents - tamils - B or NB or otherwise. the youth appear to be misguided by the internet, apes the west for all the wrong reasons, and (biggest crime) ignores the aged parents, who quietly suffer and do not complain (except to the author i guess).:)
Hi Kunjuppu Sir,Glad to learn that you have read all the published chaps in one go; You can pls post ur comments here itself, i feel as this forum is more interactive. Keep reading and keep writing !RegardsAnamika
 
Dear Mrs. Anamika and all my Friends

First I would like to say that I read all the postings (stories) of Anamika with interest and also like the comments given by Shri. Kunjuppu!

Second, even though I read that her story has been published in another forum, I did not have the time to visit that forum! All my spare time is spent on one and only this forum :)

So, I would like to disagree with Anamika to take it for granted that all your followers would read/have read, the other chapter in the other forum :)

Please Anamika just for me (and maybe many other members who don't get to pen (type) it to you) please, please continue the story - please :)

Very Kind Regards
Valli
 
Dear Hema,

The ball is in your court! Hope you can space your pages with ease, if you decide to post them in this forum.

And....Please remember to post your new write-ups here, as soon as you do so in 'Nilacharal', since the

other forum does not publish already published work!

Best wishes,
Raji Ram :ranger:
 
Dear Valli Ma'am,

Thanks for your reply.

Nice to see that you are following the story, too. This novel will be over in a month's time in Nilacharal and so I have decided to continue it here after it is completed there; so that the flow will not be confusing; and as usual, our Kunjuppu Sir can have a chapter -wise discussion and comments, which really make the thread interesting and interactive! Pls wait for the story to continue!!

Raji ma'am,

I got the spacing problem fixed; it was with the browser I was using! Thanks!

Regards
Anamika



QUOTE=valli;88037]Dear Mrs. Anamika and all my Friends

First I would like to say that I read all the postings (stories) of Anamika with interest and also like the comments given by Shri. Kunjuppu!

Second, even though I read that her story has been published in another forum, I did not have the time to visit that forum! All my spare time is spent on one and only this forum :)

So, I would like to disagree with Anamika to take it for granted that all your followers would read/have read, the other chapter in the other forum :)

Please Anamika just for me (and maybe many other members who don't get to pen (type) it to you) please, please continue the story - please :)

Very Kind Regards
Valli[/QUOTE]
 
the end - part 18

Just finished anamika’s uravugal serialized in nilacharal in 18 parts

Not sure if hemamalini sundaram aka anamika, still follows this forum, but having diligently followed this story for about 12 weeks or so, I cannot but help, to pen a few comments.

The underlying theme of the story is divorce and reconciliation, one current time, and the other, a generation or so ago.

The public might (or not) remember that at the start of the story, the couple Aravindan and shanthi appear to have separated, living in different cities, their girl with the mother. Over the development of the story, we hear that shanthi, basically a good lady, was swayed in her opinion re women’s rights and liberation, by a colleague who was divorced herself and had still residual bitterness towards her husband and menfolk in general.

This hitherto happily married couple, separated, over an evening’s disagreement, as to relocate to Chennai as per aravindan’s new job and promotion demanded. Now single, in Chennai, Aravindan has put out an ad for a wife. Surya, a very pretty woman answers it.

How the estranged couple get together, and the role that the supporting characters play, is rest of the story.

The story is written simple tamil, with none of the flowery jargon. Also the author has made it a point, to leave us guessing at the end of each episode, much like, a rough draft for a TV serial.

What I could not understand, is the concept of divorce, as viewed in india, and as viewed by this author particularly. First of all, the reason for the divorce, appeared flippant. Agreed that these days, with two income families, the couple needs to sit together and view the cost/benefit if one of them is transferred, and the other forced to resign and seek a job. A fairly common occurrence in the west, and probably with increasing frequency in india too. over one evening, with the husband yet to provide the details of the transfer including money and position, the wife had already made up to leave him. With what has been an apparently happy marriage so far.

I am not finding fault with anamika, for she probably reflects the values of the society. Which is what I am amazed. I have seen a few break ups here in Canada, and also in my family elsewhere. The process of breakup is a long arduous one, especially when a child is involved. After all, there must have ben so many factors that brought the couple together into the bonds of matrimony in the first place. Whether it be love or arranged, I think, marriage is atleast thought about seriously and with some intense calculation. In this story, it was an arranged marriage, and that it could break up so easily, especially under the influence of a third party?

Another aspect of the story, which I do not want to reveal here, deals with the interference of strangers into our lives. In Canada, where I live, people do not bother into interfering with other people’s lives, especially friends. I do not think, anybody, strangers at that too, would go about mending a marriage or ‘do good’ wilfully into another household. I guess, we Indians are a curious society, as is evidenced, even when chance meeting in a bus or train, everyone is curious to know, what the others did. Also, people dish out advice without any inhibition, as I have seen it happen.

The last two paragraphs, above, should be incentive enough for anyone to go into nilacharal’s url, and now, can have the pleasure of reading from top to bottom, all 18 episodes in one sitting.

:)
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top