• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ஸ்ரீவைஷ்ணவ பரிபாஷை - 1 new thread forked off from geneeral discussions as per sugges

Status
Not open for further replies.
S

samarapungavan

Guest
ஸ்ரீவைஷ்ணவ பரிபாஷை - 1 new thread forked off from geneeral discussions as per sugges

ஸ்ரீவைஷ்ணவ பரிபாஷை - 1

1. எம்பெருமான் - ஸ்ரீமந்நாராயணன்,விஷ்ணு
2. பெருமாள் - ஸ்ரீமந்நாராயணன், விஷ்ணு , சம்பிரதாய அர்த்தம் - ராமர்
3. பிராட்டி - ஸ்ரீதேவி, லக்ஷ்மி,பூதேவி,நீளாதேவி
4. தாயார் - ஸ்ரீதேவி, லக்ஷ்மி,பூதேவி,நீளாதேவி
5. நம்பெருமாள் - ஸ்ரீரங்கம் கோவில் உத்சவர்
6. பெரிய பெருமாள் - ஸ்ரீரங்கம் கோவில் மூலவர்
7. பெரிய பிராட்டி - ஸ்ரீரங்கநாயகி (ஸ்ரீதேவி)
8. தேவ பெருமாள் - காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்
9 மூலவர் - கோவிலிலேயே நிரந்தரமாக எழுந்து அருளும் மூர்த்தி
10. உத்சவர் - உத்சவங்களில் கோவிலுக்கு வெளியே வந்து அருளும் மூர்த்தி​
 
ஸ்ரீவைஷ்ணவ பரிபாஷை - 2



யாக பேரர் - உத்ஸவஙகளில் யாகஸாலையில் எழுந்து அருளும் உத்ஸவ மூர்த்தீ
கோவிலொழுகு - கோவில் வரலாறு
கோவில் - கோவில், ஸம்ப்ரதாய அர்த்தம் - ஸ்ரீரங்கம்
திருமலை - மலை,ஸம்ப்ரதாய அர்த்தம் - திருப்பதி
திருவேங்கடம் - திருப்பதி
திருவேங்கடத்தான் - திருப்பதி பெருமாள்
பெருமாள் கோவில் - விஷ்ணு கோவில், ஸம்ப்ரதாய அர்த்தம் - காஞ்சீபுரம் வரதன் ஸந்நிதி
திருமாலிருஞ்சோலை - மதுரை அழகர் கோவில்
சிங்கவேள் குன்றம் - அஹோபிலம் நவ நரஸிம்ஹ க்ஷேத்ரம்
 
ஸ்ரீவைஷ்ணவ பரிபாஷை - 3


கிடந்த திருக்கோலம் -ஸயநித்து எழுந்தருளும் ஸேவை
- பள்ளி கொண்ட பெருமாள்
வீற்றிருந்த திருக்கோலம் -நின்றோ அமர்ந்தோ எழுந்தருளும் ஸேவை
நின்ற திருக்கோலம் -நின்று எழுந்தருளும் ஸேவை

(திருநீர்மலை திவ்ய தேசத்தில் நான்கு திருக்கோலங்களை ஸேவிக்கலாம்:- நின்றான், நடந்தான், இருந்தான், பள்ளி கொண்டான்)
அபய ஹஸ்தம் - கீழ் (பாதம்) நோக்கிய கரம்(வலது கை)- உப்பிலியப்பன் முதலிய ஸன்னிதிகள்
வரத ஹஸ்தம் - மேல் நோக்கிய கரம்(வலது கை)- காஞ்சீபுரம் வரதன் ஸந்நிதி
 
ஸ்ரீவைஷ்ணவ பரிபாஷை - 4

ஆழ்வார் - பொதுவாக பன்னிரெண்டு ஆழ்வார்களை குறிக்கும், ஸம்பரதாயத்தில் நம்மாழ்வாரை குறிக்கும்.
கோவிலாழ்வார் - க்ருஹங்களில் ஸாளக்ராம ரூபமாகவோ விக்ரஹ ரூபத்திலோ உள்ள
பெருமாள் எழுந்தருளும் பெட்டி
இளைய பெருமாள் - இலக்குவன்,லக்ஷ்மணன்
பெரிய திருவடி - கருடன்
சிறிய திருவடி - ஹனுமான்
எம்பெருமானார் - ராமானுஜாசார்யார்
இளையாழ்வார் - ராமானுஜாசார்யார்
உடையவர் - ராமானுஜாசார்யார்
பாஷ்ய காரர் - ராமானுஜாசார்யார்
யதிராசர் - ராமானுஜாசார்யார்
யதீந்திரர் - ராமானுஜாசார்யார்
திருப்பாவை ஜீயர் - ராமானுஜாசார்யார்
லக்ஷ்மண முனி - ராமானுஜாசார்யார்
 
Very useful thread Sri Samarapungavan to understand Vaishnava Paribhasha! I hope you will write more on Saranagati Tatvam and Rahasysthrayasaaram in simple language! Thanks!
 
Thanks

Very useful thread Sri Samarapungavan to understand Vaishnava Paribhasha! I hope you will write more on Saranagati Tatvam and Rahasysthrayasaaram in simple language! Thanks!


SrimAn Kahanam,

Thanks.

I was planning a thread on Srimad Ramayanam with special reference to saranagathi. Now that you have suggested, I will try after this.

Thanks once again .
 
ஸ்ரீவைஷ்ணவ பரிபாஷை - 5

ஆழ்வான் - கூரத்தாழ்வான்

ஆண்டான் - முதலியாண்டான்

பட்டர் - ஸ்ரீ பராசர பட்டர்

வேதாந்தாசாரியார் - வேங்கடநாதன் என்னும் ஸ்வாமி தேசிகன்

ஸர்வ தந்த்ர ஸ்வதந்த்ரர் - ஸ்வாமி தேசிகன்

கவிதார்கிக ஸிம்ஹம் - ஸ்வாமி தேசிகன்

(மேல் உள்ள இரண்டு பட்டங்களும் பெரிய பெருமாள் அளித்தவை)
 
ஸ்ரீவைஷ்ணவ பரிபாஷை - 6



ஸ்ரீமதழகியசிங்கர் - ஸ்ரீந்ருஸிம்ஹன்

ஸ்ரீமதழகியசிங்கர் - ஸ்ரீ அஹோபிலமட ஜீயர்கள்(ஸந்யாஸிகள்)

இங்கே ஸ்ரீமதழகியசிங்கர் என்ற பெயர் ஸ்ரீந்ருஸிம்ஹன் மற்றும் ஸ்ரீ அஹோபிலமட ஜீயர்கள் இருவருக்கும் உடையது. முதன் முதலில் ஸ்ரீஅதிவண்சடகோபன் என்னும் ஜீயர் ஸ்வாமிக்கு
ஸ்ரீ அஹோபில ந்ருஸிம்ஹனே காஷாய த்ரிதண்டாதிகளை அளித்து ஸந்யாஸியாக்கினான்.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top