• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

கேளுங்கள் தரப்படும்! தட்டுங்கள் திறக்கப&

Status
Not open for further replies.
கேளுங்கள் தரப்படும்! தட்டுங்கள் திறக்கப&

கேளாததனால் சிலவற்றை இழக்கின்றோம!
முயலாததனால் பலவற்றை இழக்கின்றோம்!

முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.
முயற்சி திருவினை ஆக்கும் என்பது உண்மை.

தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.

முயல்வோம்! வெல்வோம்! வாழ்வோம்!
 
முடியாததில்லை.



நூதன நோயால் துன்புற்ற மகனின்
வேதனை தாள இயலாத தந்தை,
வியாதிக்கு ஒரு மருந்தைக் கேட்டு
வியப்பிலே ஆழ்ந்து போய்விட்டான்.

மனிதனின் மண்டை ஓடு ஒன்றிலே,
மழை நீரும், நாகப் பாம்பின் விஷமும்,
சுவாதி நட்சத்திரத்தின் உச்சத்தில்
சேகரித்துக் கொடுக்க வேண்டுமாம்!

யாரால் செய்ய இயலும் இவைகள்,
பாரில் அந்தப் பரந்தாமனைத் தவிர?
“சிறுவனைக் காக்க நீதான் எனக்கு
ஒரு வழி காட்ட வேண்டும் ஐயனே!”

மறுநாள் காலையில் உச்சத்தை
சுவாதி நட்சத்திரம் அடையுமாம்.
மற்றவற்றுக்கும் அந்த மாலவனே
சுலப வழிகளைக் காட்ட வேண்டும்!

காலையிலே பிரார்த்தனைகளுடன்
சென்றவன் கண்டான் மண்டையோடு;
காலத்துக்குத் தேடினாலுமே எளிதில்
சென்ற இடத்தில் கிடைக்காத ஒன்று!

மேலும் பிரார்த்திக்கையில் அங்கே
மழை பெய்யத் தொடங்கியது பாரீர்!
“தேவை இன்னும் ஒன்றே ஒன்றுதான்;
தேவன் அதுவும் எனக்கு அருளுவான்!”

மழையில் நனைய வெளியே வந்தது
மண்டூகம் ஒன்று, சப்தமிட்டபடியே.
பாம்பு அதைக் கவ்வ முயன்றபோது,
பாம்பிடம் மாட்டாது, தாவியது தவளை.

விஷம் விழுந்தது, மண்டை ஓட்டில்
விழுந்து கொண்டிருந்த மழை நீரிலே!
“இறைவா! உன் கருணையே கருணை!”
இறையருளால் சிறு மகன் பிழைத்தான்.

முடியுமா, நடக்குமா என்றெல்லாம்,
மனத்தைக் குழப்பிக் கொள்ளற்க!
முயற்சி, நம்பிக்கை ஒன்றானால்,
முடியாதது எது? நடக்காதது எது ?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
[h=1]உன்னை அறிவாய்[/h]

உன்னை அறிந்தால், நீ உலகுக்கு அஞ்சவேண்டாம்.
உண்மையே பேசினால், மன உறுத்தல் வேண்டாம்.

தன்னை அறிந்தவன், மனத்துயர் அடைவதில்லை.
தன்னையே எண்ணித் இராத்துயில் இழப்பதில்லை.

நன்மையை விதைத்தால், நன்மையே விளைந்திடும்.
நம் நலம் விழைவோரை, நாம் நம்பிட வேண்டும்.

எய்தவன் இருக்க வெறும் அம்பை நோவதுபோல,
பொய் ஆகக் பிறர்மேல் கோபம் கொள்ள வேண்டாம்.

நல்லதை அன்றி அல்லதை எதிர்கொண்டாலும்,
அல்லல் பட்டு மனம் சற்றும் உழல வேண்டாம்.

நடப்பது எல்லாம் நன்மைக்கே என்று நம்பி,
குடமாடும் கோவிந்தன் தாள் சரண் புகுவோம்.

நடமாடும் தெய்வம் அவன், நாடகமும் ஆடுவான்.
திடமாக நம்புவோர்க்கு, அவன் தன்னையே தருவான்.

வாழ்க வளமுடன்.
விசாலாக்ஷி ரமணி
 
[h=1]வாழ்வாங்கு வாழ[/h]

நல்லவனாக இரு, ஆனால் ஏமாளியாக அல்ல;
வல்லவனாக இரு, ஆனால் போக்கிரியாக அல்ல.

அறிந்தவனாக இரு, அலட்டிக்கொள்பவனாக அல்ல;
தெரிந்தவனாக இரு, தனிமைப்பட்டவனாக அல்ல.

கொடுப்பவனாக இரு, கொடுக்கும் இன்பதிற்காகவே;
தடுப்பவனாக இரு, தவறான செயல்களை மட்டுமே.

உதவி செய்பவனாக இரு, உதவியை எதிர்பார்த்து அல்ல;
ஊருக்கு நன்மை செய், பேரும் புகழும் அடைவதக்கு அல்ல.

துணிவுடையவனாக இரு, துயர்களைத் துடைப்பதற்கு;
பணிவுடயவனாக இரு, பதவியை எதிர் பார்த்து அல்ல.

சிந்தனை செய்பவனாக இரு, சீரிய முன்னேற்றத்திற்காக;
வந்தனை செய்பவனாக இரு, வானவர் அருள் பெறவே.

சக்தி உடையவனாக இரு, சாதித்து வெல்வதற்கு;
புத்தி உடையவனாக இரு, பகுத்து அறிவதற்காக.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
முற்பிறப்பு.



முந்தைய பிறவியில் நாரத முனிவர்
தந்தையில்லாமல், தாய் ஒருத்தியின்,
துறவியரை அண்டிப் பிழைப்பவளின்,
வறுமையில் வாடும் மகனாக இருந்தார்.

மாரிக் காலத்தில் நான்கு மாதங்களும்
வேறிடம் செல்லார் துறவியர் எவரும்;
தாயுடன் சேர்ந்து தானும் உதவினான்
மாயையை வென்ற அம்முனிவர்களுக்கு.

அவர்கள் புசித்து எஞ்சிய உணவை
அருள்மிகு பிரசாதமாகவே உண்டும்;
அவர்கள் பேசும் மொழிகளை எல்லாம்
அமர்ந்து கேட்டும் ஞானம் பெற்றான்.

சிறுவனின் தீவிர சிரத்தையைக் கண்டு,
மறை முனிவர்களும் மனம் மிக மகிழ்ந்து
போதனை செய்தனர் இறைபக்தியையும்,
சாதனை செய்யும் சில முறைகளையும்.

பால் கறக்கச் சென்ற அன்னையை
பாம்பு ஒன்று தீண்டிக் கொல்லவே;
பாலகன் பாரினில் தனியன் ஆனான்,
கால் போன போக்கில் திரியலானான்.

ஒரு நாள் தியானம் செய்யும்போது
ஒரு திருவுருவம் மனக்கண்ணில் தோன்ற,
மீண்டும் மீண்டும் அதைத் தான் காண
வேண்டும் வேண்டும் என ஆவல் மிகுந்தது.

“பற்றை முற்றும் விடாதவர்களும், மனப்
பக்குவம் சிறிதும் அடையாதவர்களும்,
காண இயலாது என்னை அறிவாய்! நீ
காண இயலும் உன் அடுத்த பிறவியில்”

அசரீரியாக அவன் மட்டும் கேட்டான்,
அதிசயமான இனிய வார்த்தைகளை!
விசனப்பட்டான் இன்னும் எத்தனை நாள்
விரும்பாத இது போன்ற வாழ்க்கை என?

மின்னல் வெட்டியது போலச் சரிந்தது
முன்னர் பெற்ற அவனது ஸ்தூலதேகம்,
விண்ணில் பறந்தது அவன் சூக்ஷ்மதேகம்,
விஷ்ணுவின் மூச்சுடன் உள்ளே புகுந்தது.

பிரமனின் செய்த அடுத்த படைப்பினில்
பிரமனின் அற்புத மானச புத்திரனாகத்
தோன்றினார் நம் தேவமுனி நாரதர்,
மூன்று உலகமும் பக்தியுடன் சஞ்சரிக்க.

பாமரப் பணிப்பெண் ஒருவளின் மகன்
பார்புகழும் தேவமுனிவர் ஆகிவிட்டதன்
ரகசியம் எது என அறிந்திடுவோம் நாம்,
விகசித்த அவர் பக்தியினால் அன்றோ?

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி
 
துருவ நட்சத்திரம்



மன்னன் உத்தான பாதனுக்கு
மனைவியர் இருந்தனர் இருவர்;
மிகவும் பிரியமானவள் சுருசி,
மிகுந்த கர்வம் கொண்டவள்.

ஆதரவை இழந்து விட்ட சுநீதியோ
அதிக இறை பக்தி கொண்டவள்.
மகன் துருவனையும் தன் போன்றே
மாதவன் பக்தனாக வளர்த்தாள்.

சுருசியின் மகன் உத்தமனே
மன்னனின் செல்லப் பிள்ளை;
சுநீதியின் மகன் துருவனோ என்றும்
மன்னனை நெருங்கவும் முடியாது.

மன்னன் மடியில் அமர விரும்பியவனை
மாற்றாந்தாய் தொல்லைகள் செய்யவே,
தாயின் சொற்படி இறை அருள் வேண்டி
ஏகினான் கானகம் பச்சிளம் பாலகன்.

முனி நாரதரிடம் உபதேசம் பெற்று
மது வனத்தில் துவங்கினான் தவம்.
அன்னம், ஆகாரம், நீர், காற்று, உறக்கம்
என்று படிப்படியாகக் குறைத்து விட்டான்.

ஐந்து வயது பாலகன் செய்து வந்த
ஐந்து மாதத் தவத்தின் சுவாலை
அனைத்து உலகங்களையும் வாட்ட,
அருள் செய்ய விரைந்தான் பெருமான்.

கண்ணுக்குள் இருந்த அழகிய உருவம்
காணமல் போய்விடவே துணுக்குற்றுக்
கண்களைத் திறந்த துருவன் கண்டது
கண் முன்னேயும் அதே உருவத்தை!

புளகம் அடைந்து பேச்சற்றுப்போன
துருவன் கன்னங்களை, மெல்லவே
புன் சிரிப்புடன் வருடினான் தன்
வெண் சங்கத்தால் நம் இறைவன்!

துருவன் தவத்தை மெச்சி, அவனைத்
துருவ நட்சத்திரமாக ஆக்கிவிட்டான்!
அன்று மட்டும் அல்ல, இன்றுவரையில்
அனைவருக்கும் வழி காட்டுவது துருவனே!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

 
[h=1]பிரஹலாதன்[/h]

செந்தாமரை சேற்றில் வளர்ந்தாலும்,
வந்தனை செய்ய அவசியம் தேவை.
தாமரை மலரின்றி பூஜைகள் ஏது,
தாமரைக் கண்ணன் இறைவனுக்கு?

கர்வத்தில் உச்சியில் இருந்து கொண்டு
கடவுள் நானே என்று அறைகூவல் இட்ட
அரக்கர்களின் அரசன் இரண்யகசிபுவின்
அருமை மகனே பக்தப் பிரஹலாதன்.

மணி வயிற்றில் குடி இருந்தபோதே
மணிவண்ணன் மேல் பக்தி கொண்டு,
மாறாமல் உறுதியாக நின்று, இறுதியில்
மாதவனின் அருள் பெற்ற ஒரு குழந்தை.

பிஞ்சுக் குழந்தையாக இருந்தபோதிலும்,
நஞ்சு கோப்பைக்கு அவன் கொஞ்சமும்
அஞ்சவில்லை; எடுத்து அருந்தினான்.
கெஞ்சவோ அன்றிக் கொஞ்சவோ இல்லை.

மலை உச்சியில் இருந்து உருட்டிய போதும்,
மன்னன் பட்டத்து யானை இடற வந்தபோதும்,
கல்லுடன் கட்டிக் கடலில் வீசப்பட்டபோதும்,
கனலில் இறங்கி நடக்கச் செய்தபோதும்,

ஹரியின் திருநாமத்தைத் தவிர வேறு ஏதும்
அறியவும் இல்லை, இயம்பவும் இல்லை.
ஹரி பக்தர்களைக் காப்பாற்றுவது அந்த
ஹரி பரந்தாமனின் கடமை அன்றோ?

இறுதியில் தன் பக்தன் வாக்கை மெய்ப்பிக்க,
வெறும் கல் தூணிலிருந்து தோன்றினான்,
தேவர்களும் காண அரும் தவம் இருக்கும்
தேவாதி தேவனான ஹரி நாராயணன்.

குப்பையில் கிடக்கும் மாணிக்கத்தையும்,
சிப்பியில் விளையும் நல்ல முத்தையும்,
சேற்றில் மலர்ந்த செந்தாமரையையும்
போற்றுவோம்; என்றுமே இகழமாட்டோம்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
[h=1]முக்திக்கு வழி[/h]
இறைவன் காண்பதற்கு மிக அரியவன்,
இறைவன் அடைவதற்கும் மிக அரியவன்;
இறையருள் இன்றி எந்த முயற்சிகளும்,
இயலாது செய்வதற்கு, எந்த மனிதனாலும்!

விக்கித்து நின்று, இப்படிக் கூறும் நாம்,
முக்திக்கு முயற்சி செய்வதும் இல்லை.
இறைவன் மிகவும் அரியவன் ஆயினும்,
அடைவது இயலும், நாம் முயன்றால்!

உணவு, உடைகள், உறையுள் என்பவை,
உலகில் மனிதரின் தேவைகள் என்பார்.
இது பற்றிச் சற்றுச் சிந்தித்தால் புரியும்,
எது உயிர் வாழ மிகவும் தேவை என்பது!

உணவே இல்லாமலும் கூட ஒரு மனிதன்,
உணர்வுடன் இருப்பான் நீண்ட நாட்கள்.
உழைத்திடும் உடைகளும் உறுதியாகவே,
கிழிந்து, நைந்து கீழே விழும் வரையில்.

உறையுள் என்பது வெறும் பகல் கனவே,
தெருவில் உறங்கும் பல மனிதருக்கே.
இவை அன்றித் தேவை ஓர் உயிர் வாழ,
சுவை மிகு நீரும், சுத்தமான காற்றுமே!

நீர் நம் உடலுக்கு அவசியம் ஆயினும்,
நீர் அருந்தாமல் வாழ இயலும் பல நாள்;
காற்றுத்தான் மனிதனின் பிராண சக்தி;
காற்று இன்றி எத்தனை நேரம் வாழஇயலும்?

மூழ்கிய நீரில் மனிதன் ஒருவன், தன்
மூச்சு காற்றுக்குத் தவிப்பது போலவே,
பக்தியுடன் பரமனை எண்ணிப் பரிதவித்தால்,
முக்தி அளிப்பான் நமக்கு அவன் நிச்சயம்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

 
[h=1]கஜேந்திரன் கதை[/h]

பாண்டிய மன்னன் இந்திரத்யும்னன்,
பாற்கடலில் பாம்பணையின் மீது
பள்ளி கொண்ட பரந்தாமனின் பக்தன்;
பரமன் நினைவிலே திளைத்திருப்பவன்.

மலய பர்வதத்தில் ஆழ்ந்த தியானத்தில்
அமர்ந்து இருந்தவன் உணரவில்லை,
குறுமுனி அகத்தியர் தன்னை நாடி
ஒரு விருந்தினராக வந்ததையே!

கண்டும் காணாதது போல இருந்ததைக்
கண்டதும் முனிவர் கொண்ட கோபத்தால்,
கஜேந்திரனாகச் சென்று பிறக்கும்படிக்
கண நேரத்தில் ஒரு சாபம் அளித்தார்.

மறு பிறவியிலும் மாறாத பக்தியும்,
இறை நினைவும் பெற்றிருந்த யானை,
பெரும் யானைக் கூட்டத்தின் அரசனாக,
பெரு வலிவுடைய கஜேந்திரனாக ஆயிற்று!

கந்தர்வன் ஹூ ஹூ, முனிவர் தேவலர்
கால்களை நீரில் மூழ்கிப் பற்றி இழுக்க,
கோபம் கொண்ட முனிவர் கொடுத்தார்
சாபம் ஒரு பெரிய முதலை ஆகும்படி!

இருவரின் சாப விமோசனமும் அன்று
இருந்ததோ ஒரே இறைவன் கையில்!
இருந்தான் பரந்தாமனும் தகுந்த நேரம்
வரும் வரையிலும் காத்துக் கொண்டு!

ஆனையின் காலை முதலை இழுக்க,
ஆயிரம் ஆண்டுகள் இழுபறி நிலைமை!
தன் முயற்சியில் தோல்வியுற்ற யானை
முன் ஜன்ம பக்தியை நினைவு கூர்ந்தது!

தாக்கும் முதலையிடம் இருந்து காக்க,
காக்கும் கடவுள் தாமரைக் கண்ணனைத்
தூக்கிய துதிக்கையில் பற்றிய மலருடன்
நோக்கி அழைத்தது “ஆதி மூலமே” என!

சடுதியில் ஏறினான் தன் கருடன் மீது;
கடுகி விரைந்தான் மடுவின் நீரிடம்;
விடுத்த சக்கரம் பறந்து சென்றது;
அடுத்த நொடியில் முதலை மடிந்தது!

அடைந்தான் ஹூ ஹூ தன் சுய உருவம்;
அடைந்தான் கஜேந்திரன் சாருப்ய முக்தி;
கிடைத்தது மனித குலத்துக்கு உறுதி ஒன்று,
கிடைக்கும் உறுதியாக இறை உதவி என்று!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

 
தவத்தில் வெல்லலாம்




கல்லை மலை மேலே ஏற்றுவது கடினம்,
கல் நழுவிக் கீழே விழுவது எளிது;
உலகில் எல்லா முயற்சிகளும் இங்ஙனமே,
உயர்வது கடினம், நழுவுதல் எளிது.

ஆத்ம தரிசனத்தை விரும்புகின்றவர்,
தவம், தியானம் செய்வது வழக்கம்;
ஆத்மத் தேடலில் பலவிதமான,
தடங்கல்கள் நாடி வருவதும் வழக்கம்!

தடைபட்ட யோகம் என்ன ஆகும்?
தடுக்கப்பட்ட இடத்திலேயே நிற்குமா?
முழுவதும் நழுவிக் கீழே விழுந்து விடுமா?
குழப்புகின்ற கேள்விதான் என்றுமே!

கண்ணன் என்ன சொன்னான் பார்போம்.
பண்ணின தவம் என்றுமே வீணாகாது;
விட்ட இடத்திலிருந்தே மீண்டும் ஒருவர்,
தொட்டுத் தவத்தைத் தொடரலாம் என்றான்.

தடைபட்ட தவத்தினர் மீண்டும், மீண்டும்
தவமுடையோர் இல்லத்திலேயே வந்து
தவறாமல் பிறப்பார்! தடைபட்ட தனது
தவத்தைத் தொடர்ந்து, முடிவில் வெல்லுவார்.

பாதிக் கிணறு தாண்டினால், எவரும்
நீரில் விழுந்து விடுவார் நிச்சயமாக;
பாதி யோகத்தில் தடைபட்டவரோ எனில்,
மீதியைத் தொடருவார், மீண்டும் பிறந்து!

அரைகுறை முயற்சியேதான் என்றாலும்,
அதுவும் ஒருவருடைய சாதனையே.
விடாமல் தொடர்ந்தால் வெற்றி நிச்சயம்,
விமலன் அருட்பார்வை கிடைப்பதாலே!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி

 
“உன் அண்ணன்.”




உருவமும், அருவமும் ஆக விளங்கும்
கருநிறக் கண்ணன், கார்மேக வண்ணன்;
வருவான் அவனை விரும்பி அழைத்தால்,
சிறுவன் ஜடிலனின் கதை இதை உணர்த்துமே!

பண்டைய நாட்களில் பள்ளிகள் குறைவு;
எண்ணிவிடலாம் ஒரு கை விரல்களால்!
படிப்பதென்றால் பல காத தூரம் தனியே
நடந்து சென்றிட வேண்டும் மாணவர்கள்.

காட்டு வழியே தன்னந் தனியே தினம்,
காட்டு விலங்குகளின் பீதியில் செல்லும்,
சிறுவன் ஜடிலன் தன் ஏழைத் தாயிடம்,
மறுகியவாறே ஒருநாள் உரைத்தான்,

“கள்ளிக் காட்டைக் கண்டாலே அச்சம்.
பள்ளி செல்லவோ மிகவும் விருப்பம்.
எனக்குத் துணையாக யார் வருவார்கள்?
எனக்கு ஒரு பதில் கூறுங்கள் அம்மா!”

“கண்ணன் இருக்கும் போது நமக்கு
என்ன பயம் சொல், என் கண்ணே” என்ற
தாயிடம் கேட்டான் “யார் அந்தக் கண்ணன்?”
தாய் சொன்னாள், “அவன் உன் அண்ணன்.”

பாதி வழியில் சிம்ம கர்ச்சனை கேட்டு,
பீதியில் உறைந்த சிறுவன் ஜடிலன்,
“கண்ணா! கண்ணா! உடனே வா! என்
அண்ணா! அண்ணா!” என்று ஓலமிட,

மனத்தை மயக்கும் மோகனச் சிரிப்புடன்,
முன்னே வந்து நின்ற அழகிய சிறுவன்,
“வா தம்பி! நாம் பள்ளிக்கு போவோம்” என
வழி காட்டி நடந்தான் ஜடிலன் முன்னே.

பள்ளியை அடைந்ததும் ஜடிலனிடம்,
“பள்ளி விட்டதும் கூப்பிடு, வருவேன்” எனப்
பகர்ந்து மறைந்தவன் யார் என்பதை அந்தப்
பாலகன் அறியான், நாம் அறிவோமே!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி

 
[h=1]பூரண சரணாகதி.[/h]

ஒரு சிறந்த இறை பக்தனுக்கும்,
ஒரு சலவைத் தொழிலாளிக்கும்

வலுத்து விட்ட வாக்குவாதம்
வம்புச் சண்டையில் முடியவே;

துவைக்கலானான் அப்பக்தனையும்
துணிகளைப் போலவே வண்ணான்.

“கண்ணா! கண்ணா!” என்று பக்தன்
கதறுவது கேட்டதும் எழுந்தான்,

ஒய்யாரமாக வைகுண்டத்திலே
ஓய்வு எடுத்துக்கொண்டிருந்தவன்.

நான்கடிகள் நடந்து சென்றவன்,
மீண்டும் வந்து அமர்ந்துவிடவே,

நாயகனிடம் விவரம் கேட்டாள்,
நானிலம் வணங்கும் இலக்குமி.

“நானே செல்ல வேண்டியதில்லை;
தானே திருப்பி அடிக்கத் துணிந்தவன்,

தன்னையே காத்துக் கொள்வான்;
என்னை எதிர்பார்க்க மாட்டான்!”

சரணாகதியும் பலன்கள் தரும்
பூரணமாக இருந்தால் மட்டுமே.

போராடியவரை பாஞ்சாலிக்குமே
புடவைகள் தரவில்லையே கண்ணன்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

 
[h=1]பக்தி,பகுத்தறிவு.[/h]


மூவுலக சஞ்சாரியான நாரதர்
முன் நிற்கக் கண்டார் இருவரை.

இருவருமே நல்ல தபஸ்விகள்,
இறையைக் காண விழைபவர்கள்.

“வைகுண்டத்திலிருந்தா வருகின்றீர்?
வைகுண்டநாதன் என்ன செய்கின்றார்?”

நாரதர் சிரித்துவிட்டுச் சொன்னார்,
“நாரணனுக்கு எல்லாமே விளையாட்டு!

யானைகளையும், ஒட்டகங்களையும்,
யாராலுமே செய்ய முடியாதபடி, அவர்

ஊசியின் சிறு கண்ணின் வழியே
உள்ளே புகச் செய்கின்றார், ஆஹா!”

முதலாம் யோகி பரம பக்தர்,
முழு விசுவாசம் உடையவர்.

“செய்வார்! செய்வார்! அவர்தான்
செய்ய வல்லவர் அற்புதங்களை!”

இரண்டாமவர் பகுத்தறிவுவாதி;
இளநகை புரிந்தார் அப்போது.

“யானையாவது? ஊசிக் காதாவது?
யாருக்கு காது குத்துகின்றீர்கள்?”

“முடியும்” என்றால் எல்லாம் முடியும்;
“முடியாது” என்றால் எதுவும் முடியாது!

“உருவம்” என்றால் உண்டு உருவம்;
“அருவம்” என்றால் வெறும் அருவமே.

நாம் விரும்புகின்றபடியே தன்னை,
நமக்குக் வெளிக்காட்டுவான் இறைவன்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

 
[h=1]இறைவழிபாடு.[/h]
“இறை வழிபாட்டால் நன்மைகள்
இருக்கின்றனவா இல்லையா?”

தொன்று தொட்டு கேட்கப்படும்,
இன்று நேற்று அல்ல, இக்கேள்வி!

நண்பர்கள் இருவர் நடந்தனர்
நண்பகலில் ஒரு தனிவழியில்.

தென்பட்டது இறைவனின் ஆலயம்,
என்றோ எவராலோ கட்டப்பட்டது.

“வணங்கி வழிபடுவோம் வா” என
வருந்தி அழைத்த நண்பனிடம்,

“நான் வரவில்லை கோவிலுக்கு!
நான் இங்கே நிற்பேன் நீ செல்!”

என்றவன் நின்றான் வெளியே
நன்று எனச்சென்றான் மற்றவன்.

இறைவனை வழிபட்டவனை
கருந்தேள் கடித்து விட்டது!

வெளியே நின்றவனுக்கு ஒரு
வெள்ளிப் பணம் கிடைத்தது!

நினைக்க நினைக்க தாளவில்லை,
நிற்காமல் குருவிடம் சென்றான்.

“வணங்கிய எனக்கு தேள்கடியாம்,
வணங்காமுடிக்கு வெள்ளிப்பணம்!

குருவே இது என்ன நியாயம்?
இறைவனின் செயல்களிலே?”

கண்டார் ஞானதிருஷ்டியில் குரு,
கண்களால் காணமுடியாதவற்றை.

“மகனே! உனக்கு இன்று
மரணம் நிகழ இருந்தது.

இறை வழிபாட்டினாலேயே,
பாம்புக்கடி தேள்கடியாயிற்று!

உன் உயிரும் பிழைத்தது
உன் தெய்வ பக்தியினாலே!

வெளியே நின்ற நண்பனுக்கு
வெகு யோகமான நாள் இன்று!

புதையல் கிடைக்கும் யோகம்,
பூரணமாகப் பொருந்தியிருந்தாலும்,

இறைவழிபாடு இல்லாததால்,
சிறு வெள்ளிப் பணமே பரிசு!

ஆண்டவன் செயல்களை நாம்
ஆராய்ந்து அறிய முடியுமா?

நம்பிக்கையை இழக்காதே நீ!
தும்பிக்கையான் கைவிடான்”

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி

 
[h=1]இறை பக்தி.[/h]



கனவான் வீட்டில் பூஜை செய்தவர்,
காரியமாக வெளியூர் சென்றார்.

பூஜையை நிறுத்தக் கூடாது என்று
பூஜையை மகனிடம் ஒப்படைத்தார்.

தினமும் தவறாமல் இறைவனுக்குத்
திருஅமுது செய்விக்கச் சொன்னார்.

சிறுவன் திருஅமுதை வைத்துவிட்டு,
பொறுமையாக அங்கே காத்திருந்தான்.

இறைவன் இறங்கி வரவுமில்லை!
இறைவன் அதை உண்ணவுமில்லை!

எத்தனை நேரம் இருந்தாலும்,
எதுவுமே அங்கு நடக்கவில்லை.

“தந்தையார் அளித்தால் உண்கின்றீர்;
நான் செய்த பிழை என்ன கூறும்” என

விம்மி விம்மி அவன் அழுது புரளவே,
நிம்மதி இழந்தார் நம் இறைவனும்

மனித உருவில் இறங்கி வந்து,
மனிதக் குழந்தைக்காக உண்டார்.

“பிரசாதம் எங்கே?” என வீட்டார் கேட்க,
“பிரசாதம் இறைவன் புசித்துவிட்டார்!”

சிறுவனுக்கு இரங்கிய இறை பெரிதா?
இறை பக்தியால் சிறுவன் பெரியவனா?

விடையினை நீங்களே கூறுங்கள்!
விடை எனக்கு எட்டவேயில்லை!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
[h=1]பக்தனின் பக்தன்.[/h]
நாபாகன் என்னும் மன்னனின் மகன்,
நானிலம் புகழும் மன்னன் அம்பரீசன்.
பிராமண சாபத்தை வென்று, புகழ் பெற்ற
பரம பாகவதன், பக்தன், ஞானி, அரசன் .

பக்தியுடன், சம நோக்கும் கொண்டு,
யுக்தியுடன் அரசாண்டு வந்தவனின்
விவேக, வைராக்கியங்களைக் கண்டு,
விஷ்ணு அளித்தார் தன் சுதர்சனத்தை.

பகைவர்களிடமிருந்து கணம் தவறாது,
பாதுகாத்து வந்தது சுதர்சனச் சக்கரம்.
பசுதானமும், துவாதசி விரதமும் செயும்
விசுவாச அரசனிடம் துர்வாசர் வந்தார்!

உணவு உண்ண அழைத்ததும், முனிவர்
உணவுக்கு முன்பு நீராடச் சென்றார்.
விரதம் முடிக்கும் வேளை வரவே,
அரசன் தண்ணீரைப் பருகி முடித்தான் .

தம் ஞான திருஷ்டியால் கண்ட முனிவர்,
தம் கோபம் பொங்கி எழ, அக்கணமே
ஏவினார் அவனை அழித்துவிட, ஒரு
பேயினை ஜடையில் தோற்றுவித்து.

ஊழித்தீயைப்போல அழிக்க வந்த பேயை,
ஆழிச் சக்கரம் சினந்து அழித்துவிட்டது.
ஓட ஓட விரட்டிச் சென்று, முனிவரை
ஓடச் செய்தது மூவுலகமும், சுதர்சனம்.

பிரமனைச் சென்று அடைந்தார் முனிவர்.
பிரமனோ நாரணனை அஞ்சுபவர் அன்றோ?
கைலாசம் சென்றாலும் பலன் இல்லையே!
கைலாசபதியும் நாரணனிடமே அனுப்பினார்.

நாராயணணும் கை கொடுக்கவில்லையே!
“நான் செய்வது ஒன்றுமில்லை முனிவரே!
பக்தனின் பக்தன் நான் என்று நீர் அறியீரா?
பக்தனின் பாதம் சென்று பற்றுங்கள்” என்றான்.

காலடியில் வீழ்ந்த பெருந்தவ முனிவரின்
கோலம் கண்டு மனம் பதைத்த மன்னன்,
சக்கரத்திடம், “இவரை விட்டு விடு!” என,
சக்கரமும் அங்கிருந்து அகன்று சென்றது.

பிராமணசாபம் என்றால் உலகே அஞ்சும்!
பிராமணரையே அஞ்ச வைத்த ஒருவன்,
சாபத்தை வென்று, இறைவனின் நல்ல
நாமத்தின் புகழை நிலை நிறுத்தினான்.

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.

 
[h=1]ஆத்ம தரிசனம்.[/h]




மரம் வெட்டி விற்று, அந்த
வருமானத்தில் வாழ்ந்தான்
சிரமம் நிறைந்த வாழ்க்கை,
சிறு விறகு வெட்டி ஒருவன்.

மகான் கூறினார் அவனிடம்,
“மகனே! நீ காட்டுக்குள் செல்;
செல்வம் கொழித்து, நல்லதோர்
செல்வந்தனாய் ஆகிவிடுவாய்!”

அடுத்த நாள், அந்த விறகுவெட்டி
அடர்ந்த காட்டுக்குள் சென்றபோது,
விலையுயர்ந்த மரக் கூட்டங்களைத்
தொலை தூரம் வரையில் கண்டான்.

தினமும் சிறிது வெட்டி விற்று,
மனம் மகிழ்ந்து வாழலானான்.
“இன்னும் உள்ளே சென்றால்,
என்னென்ன உள்ளதோ?” என்று

கண்டறியச் சென்றான், ஒரு முறை
பண்டு செல்லாத பகுதிகளுக்கு!
தாமிரச் சுரங்கத்தைக் கண்டான்;
கோரிய பொருளைப் பெற்றான்.

இன்னமும் உள்ளே சென்றால்,
இருந்தது வெள்ளிச் சுரங்கம்!
அள்ளிக் கொண்டு வந்தவனுக்கு,
கொள்ளை கொள்ளை மகிழ்ச்சி!

இன்னும் உள்ளே சென்றவன்,
பொன்னும், வைரக்கற்களும் கூடி
மின்னும் சுரங்கத்தைக் கண்டான்.
இன்னும் வேறு என்ன வேண்டும்?

சித்திகள் எட்டும் இவ்வகையே.
யத்தனம் நாம் செய்யச் செய்ய,
புத்தம் புதிதாகக் கிடைக்கும்;
மொத்தமாக அல்ல, என்றுமே!

சக்திகளில் மயங்கி நிற்காமல்,
யுக்தியுடன் தொடர்ந்து சென்றால்,
கிடைக்கும் ஆத்ம தரிசனமும்;
கிடைக்கும் இறையின் தரிசனமும்!

வாழ்க வளமுடன்,
விசாலாக்ஷி ரமணி.
 
கால் மாறி ஆடியது.
உடல் வேதனை!

ராஜசேகரனுக்கு மகுடம் சூட்டி அவனை
ராஜா ஆக்கினான் விக்கிரம பாண்டியன்;
சிவபெருமானின் தாமரைத் திருவடிகளில்
கவலையின்றிக் கலந்து விட்டான் அவன்.


ஆய கலைகள் என்னும் அறுபது நான்கினில்
தூய பரதம் மட்டும் பயிலவில்லை மன்னன்,
முக்தி அளிக்கும் நாயகன் நடனத்தில் அவன்
பக்தி கொண்டிருந்ததே அதன் மெய்க் காரணம்.


அரசு புரிந்து வந்தான் அதே காலத்தில்,
கரிகால் பெருவளவன் சோழ நாட்டினில்;
அறுபது நான்கு கலைகளையும் கற்றவன்,
அரசர்களில் தன்னிகரில்லாது விளங்கினான்.


விழா ஒன்றில் பங்கு கொள்ள வந்தது கவிஞர்
குழாம் ஒன்று பாண்டிய நாட்டுக்கு அப்போது.
“சகல கலா வல்லவர் கரிகாலர் ஆவார்;
சகல கலா வல்லவர் நீர் அல்லர்!” என்றது!


“இதுவும் அரனின் விருப்பம் தானோ?” என
அதுவரை பயிலாத பரத கலை பயின்றான்;
புகழ் பெற்ற ஆசிரியர்களை வரவழைத்து,
மகிழ்வித்து பொன், பொருள், வாரி அளித்து!


சுவைகள் ஒன்பது, மெய்ப்பாடுகள் பத்து;
வகைகள் அபிநயத்தின் இருபது நான்கு;
தாளங்கள் ஏழு, கதிகள் ஐந்து இவற்றைத்
தாளாத காதலுடன் பயின்றான் ராஜசேகரன்.


நடனம் ஆடிய பிறகு அவனுக்கு ஏற்பட்டது,
உடல் வலிகள் தவறாமல் தினம் தினம்;
ஒரு காலில் நிற்கும் சிவபெருமானுக்குத்
திரு நடம் புரிவதில் எத்தனை வேதனையோ?


மனம் கனிந்தான் மன்னன் ராஜசேகரன்;
தினம் ஊன்றி ஆடும் காலை மாற்றினால்,
இனம் தெரியாத உடல் வலிகளிலிருந்து,
கனம் குழையான் சற்றே விடுபடலாமே!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
கால் மாறி ஆடியது.

சிவ ராத்திரியன்று நிகழ்ந்தன பல வகை
சிவ ஆராதனைகள் நான்கு ஜாமங்களும்;


வெள்ளி அம்பலவாணனின் திரு நடனம்
உள்ளம் களிப்புற்றுக் குளிரச் செய்தது.


“ஒரே காலைத் தூக்கியும், எப்போதும்
ஒரே காலைப் பதித்தும் ஆடும் அரசே!


வேதனை தரும் இந்தகைய அரிய
சாதனையின் அவசியம் என்னவோ?


பதித்த திருவடியை மேலே தூக்கியும்,
தூக்கிய திருவடியைக் கீழே பதித்தும்,


கால் மாறி ஆட வேண்டும் என் அரசே!
இல்லையெனில் நான் உயிர் தரியேன்!”


தன் உடைவாளை நாட்டி அதன் மேல்
தன் ரத்தம் சிந்தித் தன் உயிரை விடவும்


தயார் ஆகிவிட்டான் ராஜசேகரன்;
தாயுமானவன் மனம் கனிந்தான்.


அன்புக்கு மட்டுமே சிறைப்படும் சிவன்,
இன்னொரு காலைத் தூக்கி ஆடினார்!


இடது பதம் பதித்தார் – தூக்கியிருந்ததை!
வலது பதம் தூக்கினார் – பதித்திருந்ததை!


இறக்கும் எண்ணத்தைக் கைவிட்டுப்,
பிறவிப் பயன் எய்தினான் மன்னன்.


கவலையும், வருத்தமும் மறைந்தன;
கன்மம், ஆணவம், மாயை விலகின.


மனம், மெய், மொழிகளால் துதித்தான்,
கனம் குழையான் மலரடிகளை மன்னன்.


பாண்டியன் ஆடல் அரசன் அரனிடம்,
வேண்டினான் ஒரே ஒரு வரம் தருமாறு;


“கண்டு களிக்க வேண்டும் கால் மாறியதைத்
தொண்டர்களின் கூட்டம் என்றென்றும்! ”


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
Last edited:
கரிக்குருவிக்கு உபதேசம்

பாண்டியன் ராஜராஜனுக்குப் பிறகு,
பாண்டியன் சுகுணன் முடி சூடினான்;


கர்ம வினையால் வலியவன் ஒருவன்,
கரிக் குருவியாகப் பிறவி எடுத்தான்.


காக்கை முதலிய வலிய பறவைகள்
யாக்கையைக் கொத்தித் துன்புறுத்தின.


குருதி வழியும் தலையுடன், பெரும்
அவதிக்கு உள்ளானது கரிக் குருவி.


பல தினங்கள் நகர வாசம் செய்தது;
பலன் இன்றிப் பின் காடு திரும்பியது!


மலர்கள் குலுங்கும் மரக்கிளையில்,
மன வருத்ததோடு அமர்ந்திருந்தது!


தீர்த்த யாத்திரை செல்பவர், மரத்தைப்
பார்த்தவுடன் அங்கேயே அமர்ந்தார்.


நல்லுபதேசம் அவர் மற்றவர்களுக்குச்
சொல்லும் போது அவர் குரல் கேட்டது.


“உலகிலேயே உன்னதமான இடம் எனக்
கலக்கம் இன்றிச் சொல்வேன் மதுரையை!


பொற்றாமரைக் குளத்தின் தீர்த்தம்
மற்றெல்லாவற்றையும் பின் தள்ளும்!


வல்லவருக்கு வல்ல ஈசன் என்பவர்
எல்லோரும் வணங்கும் சோமசுந்தரர்!


ஸ்தலம், தீர்த்தம், மூர்த்தி என்னும்
பல சிறப்புகள் பெற்றுள்ளது மதுரை!”


ஞானம் பிறந்தது கரிக் குருவிக்குத் தன்
ஈனப் பிறவிக்குக் காரணம் புரிந்தது!


பிறவிப் பிணியை ஒழித்துக் கட்டிட
ஒரே வழி உடனே மதுரை செல்வதே!


பறந்து சென்றது மதுரையை நோக்கி!
சிறந்த பொற்றாமரைக் குளத்தில் முங்கி,


சோமசுந்தரரின் விமானம் வலம் வந்து,
தாமதம் இன்றிச் செய்தது மானஸபூஜை.


அன்னை கேட்டாள் அண்ணலிடம்,
“என்ன காரணத்தால் இக்கரிக்குருவி


இத்தனை சிரத்தையோடும், உம்மை
சித்த சுத்தியோடும் பூஜிக்கின்றது?”


வரலாற்றைக் கூறினான் தேவிக்கு,
பரம தயாபரன் சோமசுந்தரேச்வரன்;


ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தையும் ஈசன்
ம்ருத்யுபயத்தை போக்க உபதேசித்தான்.


மந்திரத்தைக் கேட்ட உடனேயே தன்
சொந்த அறிவைப் பெற்றது குருவி.


தொந்தரவு செய்யும் பிற பறவைகளை
அந்த நேரத்தில் தெரிவித்தது ஈசனுக்கு.


“கொடிய பறவைகளுக்கு எல்லாம்
வலியவனாக ஆகிவிடுவாய் நீ!”


“மரபில் வரும் அத்தனை பறவைகளும்
வலியவராகத் திகழ வேண்டும் ஐயனே!”


ம்ருத்யுஞ்ஜய மந்திரத்தைச் சரிவர
உச்சரிக்க வேண்டிய விதிகளின்படி,


ம்ருத்யுஞ்ஜயனிடமே கற்றுக் கொண்டது,
வலியவனாகி விட்ட அந்தக் கரிக் குருவி!


இடைவிடாமல் ஓதி வாழ்ந்து விட்டு
விடையேறும் ஈசனின் அடி சேர்ந்தது !


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


 
நாரைக்கு பக்தி கொடுத்தது.

தாமரைக் குளம் என்னும் அழகிய ஊர்,
தாமரைகள் நிறைந்த தடாகங்களுடன்.


துள்ளி விளையாடும் வண்ண மீன்கள்;
அள்ளி விழுங்கும் அவற்றை நாரைகள்.


நீரின்றி வாழாது உலகும், உயிர்களும்;
நீரின்றிப் போய்விடும் வானம் பொய்த்தால்.


வானம் பொய்த்து விட்டது அங்கே!
வானம் பொழிய மறந்து விட்டது!


நீர்நிலைகள் முற்றும் வற்றலாயின!
நீரிலுள்ள மீன்கள் எங்கே போயின?


உணவும் இல்லை, நீரும் இல்லை!
உலர்ந்த இடத்தில் செய்வது என்ன?


நாட்டை விட்டுப் பறந்தது நாரை,
காட்டை அடைந்து சோர்ந்து விழுந்தது.


ஜீவன் முக்தர்கள் வாழ்ந்தனர் அங்கே,
ஜீவனை போஷிக்கும் வற்றாத தடாகம்!


‘அதோ தீர்த்தம்’ என்ற பெயர் அதற்கு.
அதில் தீர்த்தம் வற்றவே வற்றாதாம்!


படித் துறைகள் இருந்தன அங்கே
வடிவில் சதுரம், சீரிய முறையில்!


சந்தியா மடம் ஒன்று அங்கிருந்தது!
விந்தையான இடம், மரங்கள் சூழந்தது!


நல்ல பாதிரி, வேங்கை, வஞ்சி, மருது,
வெல்லும் மணம் வீசி மலர்ந்திருந்தன!


தண்ணீரிலே முங்கிக் குளிப்பார்கள்
தண்ணருள் பெற்ற ஜீவன் முக்தர்கள்.


முடிக் கற்றைகள் நீரில் புரளும் போது,
ஒளிந்து விளையாடும் மீன் கூட்டம்!


“புண்ணிய சீலர்களைத் தீண்டுவதற்கு
என்ன தவம் அவை செய்திருந்தனவோ?


உணவே இன்றி உயிரே போனாலும்
உண்ணக்கூடாது புண்ணியசாலிகளை!”


சந்தியா மடத்தில் நடக்கும் தினம்
சத்சங்கம் ஜீவன் முக்தர்களின்!


மதுரையைப் பற்றிப் பேசுவதற்கு
மதுரமான விஷயங்கள் எத்தனை?


மதுரைப் புராணத்தை ஓதுவார்,
மதுரையின் சிறப்பை அலசுவார்.


மூர்த்தி, தீர்த்தம், ஸ்தலம் என்னும்
கீர்த்திகள் பெற்றது மதுரையம்பதியே!


வயிற்றுக்கு உணவு இல்லாது போயினும்
செவிக்கு உணவு கிடைத்தது நிறையவே.


கேட்கக் கேட்க வயிற்றுப் பசி மறைந்து
கேட்கக் கேட்க அறிவுப்பசி நிறைந்தது!


அறியாமை இருள் அகன்று போயிற்று!
அறுந்து போனது இருவினைத் தொடர்பு!


கர்மவினைகளைத் தொலைத்து நாரை,
சர்வமும் அறிந்து சிவபக்தி பெற்றது!


வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
பிரம்மஹத்தி தோஷம்.

சுந்தர பாத சேகர மன்னனின் மகன்
வந்தனைக்குரிய வரகுண பாண்டியன்;
மன, மொழி, மெய்களில் தூயவன்;
குணக்குன்று, அழகன், பக்திமான்.

மன்னர்களின் ஒரு வீர விளையாட்டு
வனவிலங்குகளை வேட்டை ஆடுவது!
பன்றி, புலி, யானையை வேட்டையாடிக்
கொன்று, மதுரைக்கு விரைந்தான் மன்னன்.

கனவட்டம் என்னும் மன்னனது பரி
கண நேரத்தில் நன்கு மிதித்துவிட்டது,
கண் மூடி சயனித்து இருந்த அந்தணனை;
கண் மூடிவிட்டான் அவன் கண நேரத்தில்!

ஏதும் அறியாமலேயே மன்னன் விரைந்து
மதுரையம்பதி அரண்மனையை அடைந்தான்;
இறந்தவனின் உறவினர் சுமந்து வந்தனர்
இறந்த மறையவனின் சடலத்தை அங்கே!

அறியாமல் செய்த பிழை தான் அது!
பரியால் நிகழ்ந்த பாதகம் தான் அது!
கொலை செய்த பாவத்தை எப்படித்
தொலைப்பது என்று தெரியவில்லை!

பொன் பொருள் அளித்து, மனம் வருந்தி,
தன்னைப் பற்றிக் கொண்ட கொலைப்பழி
பிரம்ம ஹத்தியைப் நீக்கி விடுவதற்கு,
பிரம்ம பிரயத்தனம் செய்தான் மன்னன்.

தானம், தருமம், பரிஹாரம் செய்தான்,
மானம் மறைந்தது; தேஜஸ் குறைந்தது!
கண்களுக்கு நன்கு தெரியும் வண்ணம்
கணம் விடாமல் தொடர்ந்தது தோஷம்.

பெருகி வரும் தன் தோஷத்தைக் கண்டு
மறுகி வருந்துபவனிடம் வேதியர் கூறினர்;
“ஆயிரத்து எட்டு முறை வலம் வந்தால்
மாய்த்திடுவான் அரன் அத்தோஷத்தை!”

அம்மை அப்பனை வலம் வந்தான் தினம்,
செம்மை நிலையுடன் வரகுண பாண்டியன்;
பத்து நாட்கள் உருண்டு ஓடிவிட்டன!
அத்தனின் அருட்பார்வை கிட்டியது!

“சமருக்கு வருவான் காவிரிச் சோழன்,
அமர்க்களம் நீங்கி புறமுதுகு இடுவான்;
திருவிடைமருதூர் வரை துரத்திச் செல்!
திருவருளால் பிரம்மஹத்தி நீங்கிவிடும்!”

படை எடுத்தான் காவிரிச் சோழன்,
இடையிலேயே புறமுதுகு இட்டான்;
துரத்திய வரகுணன் சென்றடைந்தான்
நிரம்பிய காவேரி நதிக் கரையினை!

புனித நீராடிவிட்டு திருவிடைமருதூர்
புனிதன் மகாலிங்கத்தை தரிசிப்பதற்கு,
கிழக்குவாயில் வழியே உட்புகுந்தான்,
கிழக்கு வாயிலில் நின்றுவிட்டது தோஷம்.

பொற்பதங்கள் தொழுதெழுந்தவனிடம்
அற்புதநடனம் செய் நாதன் பணித்தான்,
“மேற்கு வாயில் வழியே வெளியே செல்!
மற்ற வாயிலில் நிற்கிறது தோஷம்!”

பல நற்பணிகளைச் செய்து முடித்தான்,
சில காலம் கழித்து நாடு திரும்பினான்,
பல சான்றோர்கள் கூறுவதைக் கேட்டான்,
உலகங்களில் சிறந்தது அந்த சிவலோகம்!

காண விழைந்தான் சிவலோகத்தினை!
பேண விழைந்தான் ஈசன் திருவடிகளை,
சிவ ராத்திரியன்று அடைந்தான் கோவில்,
சிவ லோக தரிசனத்தை விழைந்தபடி.

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
40b. சிவலோகம் காட்டியது.

“பெருமானே! அடியவர் சூழ நீவீர்
திருக்காட்சி தந்தருள வேண்டும்;
சிவலோகத்தில் இருப்பதைப்போலவே
இகலோகத்திலும் ஒரு முறையேனும்!”

பக்திக்கு எளியவனான பிரான் அவன்
பக்திக்கு மெச்சி திருவருள் புரிந்தான்;
ஐயனின் உள்ளக் கிடக்கையை அறிந்து
மெய்யாகவே இறங்கியது சிவலோகம்.

எங்கும் வீசியது தெய்வப் பேரொளி !
மங்கலம் பொங்கித் ததும்பியது எங்கும்;
நந்தி தேவனிடம் சொன்னார் சிவபிரான்,
“இந்த உலகை இவருக்குக் காட்டி அருள்க!”

கற்பனையைக் கடந்து விட்ட ஒரு
அற்புதமான உலகம் சிவலோகம்!
மந்த மாருதம் தொட்டுத் தழுவியது,
சிந்தையைக் கவரும் கற்பூர மணம்!

தேவ கானம் என்றால் என்ன என்று
தேவர்களின் கானம் தெரிவித்தது;
இணைந்து இசைத்த இசைக்கருவிகள்
இன்னிசை விருந்தைப் பரிமாறின.

கமலப்பூ உதித்த பிரமனின் லோகம்,
கமலப்பூ அமர்ந்த வாணியின் உலகம்,
கமலக் கண்ணன் திருமால் உலகம்,
கமலவாசினி அலைமகளின் இடம்.

ஏகாதச ருத்திரர்களின் நகரங்கள்,
ஏவாமல் காவல் செய் திக்பாலர்கள்,
ஏக போகனான இந்திரனின் உலகம்,
ஏற்றதுடன் காட்டினார் நந்திதேவர்.

சிவலோகத்திலேயே வசிக்கும்
சிவ சாரூப்யர்கள், சிவ பக்தர்கள்,
சிவபதம் அடைந்த மன்னர்கள்,
சிவனடியார்க்கு உதவிய சீலர்கள்!

வேதங்களும், ஆகமங்களும் நின்று
துதிபாடின மனித உருவில் அங்கே;
தும்புரு, நாரதர் இன்னிசை யாழுடன்,
ரம்பை ஊர்வசியின் நடன விருந்து!

ஆனைமுகன், ஆறுமுகன், வீர பத்திரன்,
ஆணைகள் நிறைவேற்றக் காத்திருக்க,
அரி, அயன், அஷ்ட திக்பாலகர்களுடன்,
மரியாதையாக நின்றான் இந்திரன்.

சோமசுந்தரர் அரியணையில் அமர,
உமா மகேஸ்வரி புன்னகை சிந்த,
“ஜெய ஜெய சங்கர! ஹர ஹர சங்கர!”
ஜெபித்தது அடியார்களின் குழாம்.

மெய் சிலிர்த்து, நாக் குழறி, தள்ளாடி,
மெய்ப்புளகம் அடைந்தான் வரகுணன்;
தன் மயமான பாண்டியனின் கண்களின்
முன்னே இருந்த சிவலோகம் மறைந்தது.

கண்முன் கண்டான் மதுரைக் கோவிலை!
கண் நிறைந்த அம்மையை, நம் அப்பனை!
“கொலை பாதகனின் பழியைத் துடைக்க
அருளலைகளை அனுப்பிய இறைவனே!

நாயேனுக்கும் அளித்தாய் உன்னருள்!
தீயேனின் பாவங்களைக் களைந்தாய்!”
இகலோகத்திலேயே சிவலோகம் காட்டியவன்,
‘பூலோக சிவலோகம்’ ஆக்கினான் மதுரையை!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.


 
மாதவன்

நந்தனத்தில் வாழ்ந்து வந்தான்,
அந்தணன் புரந்தரன் என்பவன்.

நன்கு தேர்ந்தவன் கல்வி, கேள்வியில்,
நல்ல மகன் இருந்தான் மாதவன் என்று.

தந்தையைப் போல உத்தமன் அவன்,
சந்திரரேகை அன்பு கொண்ட மனைவி.

தீர்த்த யாத்திரை சென்றனர் இருவரும்;
தீர்த்தமாடித் தரிசித்தனர் இறைவனை.

தங்கி இருந்தாள் மனைவி தடாக்கரையில்,
தான் மட்டும் சென்றான் கனிகள் கொணர!

புல்லறுக்க வந்த புலைச்சியைக் கண்டு,
மெல்ல அவளைத் தன் வசப்படுத்தினான்

உடன் வந்த மனைவியை மறந்து விட்டுத்
தொடர்ந்து போனான் புலைச்சி குடிசைக்கு.

அந்தணன் தான் என்பதை மறந்து விட்டான் ;
சொந்த குலஆசாரத்தைத் துறந்து விட்டான்;

வழிப்பறிக் கொள்ளைகள் செய்தான் – பின்பு
வழிப்பறியே வாழ்வாதாரம் ஆகி விட்டது!

காலம் செல்லக் கட்டுத் தளர்ந்தது மேனி;
காமக் களியாட்டம் கிழவனாக்கி விட்டது.

வழிப்பறி செய்ய உடல் வலிமை இல்லை;
வழியில் வந்த அவள் வழியோடு போனாள்!

வாழ்க வளமுடன், விசாலாக்ஷி ரமணி.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top