• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

Sri AshtaLakshmi Stotram With Lyrics

Status
Not open for further replies.
Sri Astalakshmi Stotram with Lyrics


AshtaLakshmi Stotram With Lyrics in English - YouTube





1.சுமனஸவந்தித சுந்தரி மாதவி சந்த்ர சஹோதரி ஹேமமயே முன
ிகண மண்டித மோக்ஷ ப்ரதாயினி மஞ்சுள பாஷிணி வேதனுதே பங்கஜ வாசினி தேவஸு பூஜித சத்குண வர்ஷிணி சாந்தியுதே ஜெயஜெய ஹே மதுசூதன காமினி ஆதிலக்ஷ்மி சதா பாலயமாம்.



உத்தமர் போற்றிடும் உத்தமியே எழில் சுந்தரியே எங்கள் மாதவியே பொன்னென ஒளிர்ந்திடும் பூவிழியே தூய பால்வெள்ளைச் சந்திரன் சோதரியே முனிவர்கள் சூழ்ந்திடத் திகழ்பவளே உயர் முக்தியினை யளித் தருள்பவளே கனிமொழியால் உள்ளம் கவர்பவளே நால் வேதமும் புகழ்ந்திடும் நல்லவளே பங்கய மலரினில் வசிப்பவளே உயர் வானவர் வணங்கிடும் வசுந்தரியே நற்குணம் நல்கிடும் நாயகியே நல் லமைதியின் உருவெனத் திகழ்பவளே மதுசூதனனின் காதலியே என்றும் ஜய ஜய ஜய ஜய ஜய முனக்கே அன்புடன் உன்னடி பணிகின்றோம் எமை ஆதிலக்ஷ்மியே காத்தருள்வாய்!



2.அயிகலி கல்மஷ நாஷினி காமினி வைதிக ரூபிணி வேதமயே க்ஷீர சமுத்பவ மங்கள ரூபிணி மந்த்ர நிவாஸினி மந்த்ரனுதே மங்கள தாயினி அம்புஜ வாஸினி தேவ கணாஷ்ரித பாதயுதே ஜெயஜெய ஹே மதுசூதன காமினி தான்யலக்ஷ்மி சதா பாலயமாம்.





கலியுக தோஷங்கள் களைபவளே பக்தர் உள்ளங்கள் கவர்ந்திட்ட காமினியே நான்மறை களின் எழில் வடிவினளே நான் மறைகளும் போற்றிடும் தேவியளே பாற்கடல் கடைகையில் அதன் நடுவினிலே உதித்திட்ட மங்கள ரூபிணியே மந்திரங்களிலே இருப்பவளே அம் மந்திரங்கள் போற்றும் மாதவியே மங்கள வடிவாய்த் திகழ்பவளே எழில் பங்கய மலரினில் வசிப்பவளே தேவர்கள் அனைவரும் பணிபவளே அவர்க் கடைக்கலம் தந்து காப்பவளே மதுசூதனனின் காதலியே என்றும் ஜய ஜய ஜய ஜய ஜய முனக்கே அன்புடன் உன்னடி பணிகின்றோம் எமை தான்யலக்ஷ்மியே காத்தருள்வாய்!



3. ஜெயவர வர்ஷிணி வைஷ்ணவி பார்கவி மந்த்ர ஸ்வரூபிணி மந்தரமயே ஸுரகண பூஜித ஷீக்ர ஃபலப்ரத ஞான விகாஸினி ஷாஸ்த்ரனுதே பவபய ஹாரிணி பாப விமோசனி சாது ஜனாஷ்ரித பாதயுதே ஜெயஜெய ஹே மதுசூதன காமினி தைர்யலக்ஷ்மி சதா பாலயமாம்.



வெற்றிகளை அளித் தருள்பவளே மா விஷ்ணுவின் சக்தியாய் இருப்பவளே பிருகுவின் புதல்வியாய்ப் பிறந்தவளே நல்ல மந்திர ரூபிணி நாயகியே தேவரும் வணங்கிடும் தேவியளே நற் பலன்களை விரைந்தளித் தருள்பவளே ஞானத்தின் ஒளியினைத் தருபவளே அருஞ் சாத்தி ரங்களும் தொழுபவளே பிறவியின் பயங்களைக் களைபவளே எந்தப் பாபமும் போக்கி அருள்பவளே துறவியர் வணங்கிடும் மோட்சத்தை அளித்திடும் தாமரைப் பாதங்கள் கொண்டவளே மதுசூதனனின் காதலியே என்றும் ஜய ஜய ஜய ஜய ஜய முனக்கே அன்புடன் உன்னடி பணிகின்றோம் எமை தைர்யலக்ஷ்மியே காத்தருள்வாய்!



துர்கதி நாஷினி காமினி ஸர்வ ஃபலப்ரத ஷாஸ்த்ரமயே ரதகஜ துரகபதாதி ஸமாவ்ருத பரிஜன மண்டித லோகனுதே ஹரிஹர ப்ரஹ்ம ஸுபூஜித சேவித தாப நிவாரிணி பாதயுதே ஜெயஜெய ஹே மதுசூதன காமினி கஜலக்ஷ்மி ரூபேண பாலயமாம்4. ஜெயஜெய .



துர்கதி மாற்றி அருள்பவளே திரு மாலவன் காதலில் கனிந்தவளே கேட்டவை எல்லாம் கொடுப்பவளே நல்ல சாத்திரங்களின் வடிவானவளே ரதகஜ துரக பதாதிகள் சூழ்ந்திட திகழ்ந்திடும் பாற்கடல் நாயகியே அண்ட சராசர உயிர்கள் அனைத்துமே அன்புடன் பணிந்திடும் தேவதையே அரியுடன் பிரம்மனும் அரனுடன் தேவரும் அடி பணிந்தேத்திடும் அன்னையளே தாபங்கள் அனைத்தையும் நீக்கியே காத்திடும் தாமரைப் பாதங்கள் கொண்டவளே மதுசூதனனின் காதலியே என்றும் ஜய ஜய ஜய ஜய ஜய முனக்கே அன்புடன் உன்னடி பணிகின்றோம் எமை கஜ லக்ஷ்மியே காத்தருள்வாய்!


5. அயி ககவாஹினி மோஹினி சக்ரிணி ராகவி வர்தினி ஞானமயே குணகண வாரிதி லோக ஹிதைஷிணி ஸ்வரஸப்த பூஷித கானனுதே சகல சுராசுர தேவ முனீஷ்வர மானவ வந்தித பாதயுதே ஜெயஜெய ஹே மதுசூதன காமினி சந்தானலக்ஷ்மி த்வம் பாலயமாம்.



கருடனில் வலம் வரும் மோகினியே கையில் சக்கரம் ஏந்திடும் நாயகியே உலகத்தின் பந்தங்கள் பற்றுகள் நீக்கி ஞானமளித்திடும் உத்தமியே நற் குண இருப்பிடமானவளே இந்த அகிலத்திற் அருள் தரும் திருமகளே இதயத்திற் கிதம் தரும் இன்னிசை தந்திடும் ஏழு ஸ்வரங்களும் பணிபவளே வானவர் யாவரும் தானவர் அனைவரும் வணங்கிடும் எங்களின் வசுந்தரியே தவத்தினில் சிறந்திட்ட முனிவரும் மனிதரும் பணிந்திடும் பாதங்கள் உடையவளே மதுசூதனனின் காதலியே என்றும் ஜய ஜய ஜய ஜய ஜய முனக்கே அன்புடன் உன்னடி பணிகின்றோம் எமை சந்தான லக்ஷ்மியே காத்தருள்வாய்!


6. ஜெய கமலாசனி ஸத்கதி தாயினி ஞான விகாஸினி கானமயே அனுதின மர்ச்சித குங்கும தூசர பூஷித வாஸித வாத்யனுதே கனகதா ராஸ்துதி வைபவ வந்தித ஷங்கர தேசிக மான்யபதே ஜெயஜெய ஹே மதுசூதன காமினி விஜயலக்ஷ்மி சதா பாலயமாம்.



இதயமாம் கமலத்தில் வசிப்பவளே மேல் உலகத்தில் சத்கதி அளிப்பவளே நாதத்தின் வடிவாய் இருப்பவளே அஞ் ஞானத்தை நீக்கி அருள்பவளே அனுதினம் அர்ச்சிக்கும் குங்குமத்தாலே அழகுடன் சிவந்து திகழ்பவளே மங்கள வாத்யங்கள் மந்திரமுடனே பூசைகள் ஏற்று மகிழ்பவளே கனகதாரா என்னும் துதியினில் மகிழ்ந்து கனக மழை பொழிந்த கண்மணியே சங்கரர் தேசிகன் தோத்திரங்களிலே மனங் குளிர்ந்த ருளிய மாதவியே மதுசூதனனின் காதலியே என்றும் ஜய ஜய ஜய ஜய ஜய முனக்கே அன்புடன் உன்னடி பணிகின்றோம் எமை விஜய லக்ஷ்மியே காத்தருள்வாய்!



7. ப்ரணத ஸுரேஷ்வரி பாரதி பார்கவி சோக விநாஷினி ரத்னமயே மணிமய பூஷித கர்ண விபூஷண ஷாந்திஸமாவ்ருத ஹாஸ்யமுகே நவநிதி தாயினி கலிமல ஹாரிணி காமித ஃபலப்ரத ஹஸ்தயுதே ஜெயஜெய ஹே மதுசூதன காமினி வித்யாலக்ஷ்மி சதா பாலயமாம்.



தேவர்கள் வணங்கிடும் தேவியளே பிருகுவின் புதல்வியே பாரதியே சோகங்கள் யாவும் தீர்ப்பவளே எழில் இரத்தி னம்போல ஒளிர்பவளே செவிகளில் தாடங்கம் விளங்கிடவே பொன்னா பரணங்கள் ஒளிர்ந்திடவே சாந்தியின் இருப்பிட மானவளே மலர்ப் புன்னகை வதனம் கொண்டவளே நவ நிதிகளையும் அளிப்பவளே கொடும் கலியிடமிருந்து காப்பவளே கரங்களில் அபய வரதங்கள் தாங்கி விரும்பிய யாவும் தருபவளே மதுசூதனனின் காதலியே என்றும் ஜய ஜய ஜய ஜய ஜய முனக்கே அன்புடன் உன்னடி பணிகின்றோம் எமை வித்யா லக்ஷ்மியே காத்தருள்வாய்!


8. திமிதிமி திந்திமி திந்திமி திந்திமி துந்துபி நாத ஸுபூர்ணமயே குமகும கும்கும கும்கும கும்கும ஷங்கநி நாதஸு வாத்யனுதே வேத புராண திஹாச ஸுபூஜித வைதிக மார்க ப்ரதர்ஷயுதே ஜெயஜெய ஹே மதுசூதன காமினி தனலக்ஷ்மி ரூபேண பாலயமாம்.



திம்திமிதிம்திமிதிம்திமிதிம்திமி திம்திமிதிம்திமிஎன்றொலிக்கும் துந்துபிநாதங்கள்முழங்கிடவே எழில்பூரணியாகத்திகழ்பவளே கும்குமகும்குமகும்குமகும்கும கும்குமகும்குமஎன்றொலிக்கும் சங்கத்தின்கம்பீரநாதத்தின்நடுவில் மங்களவடிவாய்த்திகழ்பவளே வேதபுராணதிகாசங்களெல்லாம் பணிந்திடத்திகழும்பங்கயமே அடியவர்க்கெல்லாம்சத்கதிமார்க்கத்தைக் காட்டியருளிடும்அன்னையளே மதுசூதனனின்காதலியே என்றும்ஜயஜயஜயஜயஜயமுனக்கே அன்புடன்உன்னடிபணிகின்றோம் எமைதனலக்ஷ்மியேகாத்தருள்வாய்!








Source :

Krishnamoorthi Balasubaramanian



For English please scroll down:


Song: Ashtalakshmi stotram (sumanasa vandita)

1 Adilakshmi

sumanasavandita sundari maadhavi
chandra sahodari hemamaye .
munigaNamaNDita mokshapradaayini
manjuLabhaashhiNi vedanute ..

pankajavaasini devasupuujita
sadguNavarshhiNi shaantiyute .
jayajaya he madhusuudana kaamini
aadilakshmi sadaa paalaya maam.h

2 Dhaanyalakshmi

ahikali kalmashhanaashini kaamini
vaidikaruupiNi vedamaye .
kshiirasamudbhava mangalaruupiNi
mantranivaasini mantranute ..

mangaladaayini ambujavaasini
devagaNaashrita paadayute .
jayajaya he madhusuudana kaamini
dhaanyalakshmi sadaa paalaya maam.h

3 Dhairyalakshmi

jayavaravarNini vaishhNavi bhaargavi
mantraswaruupiNi mantramaye .
suragaNapuujita shiighraphalaprada
gnaanavikaasini shaastranute ..

bhavabhayahaariNi paapavimocani
saadhujanaashrita paadayute .
jayajaya he madhusuudana kaamini
dhairyalakshmi sadaa paalaya maam.h

4 Gajalakshmi

jayajaya durgatinaashini kaamini
sarvaphalaprada shaastramaye .
rathagaja turagapadaadi samaavR^ita
parijanamaNDita lokanute ..

harihara brahma supuujita sevita
taapanivaariNi paadayute .
jayajaya he madhusuudana kaamini
gajalakshmi ruupeNa paalaya maam.h

5 Santaanalakshmi

ahikhaga vaahini mohini chakriNi
raagavivardhini gnaanamaye .
guNagaNavaaridhi lokahitaishhiNi
svarasapta bhuushhita gaananute ..

sakala suraasura devamuniishvara
maanavavandita paadayute .
jayajaya he madhusuudana kaamini
santaanalakshmi tvaM paalaya maam.

6 Vijayalakshmi

jaya kamalaasani sadgatidaayini
gnaanavikaasini gaanamaye .
anudinamarchita kuNkumadhuusara\-
bhuushhita vaasita vaadyanute ..

kanakadharaastuti vaibhava vandita
shankara deshika maanya pade .
jayajaya he madhusuudana kaamini
vijayalakshmi sadaa paalaya maam.h

7 Vidyaalakshmi

praNata sureshvari bhaarati bhaargavi
shokavinaashini ratnamaye .
maNimayabhuushhita karNavibhuushhaNa
shaantisamaavR^ita haasyamukhe ..

navanidhidaayini kalimalahaariNi
kaamita phalaprada hastayute .
jayajaya he madhusuudana kaamini
vidyaalakshmi sadaa paalaya maam.

8 Dhanalakshmi

dhimidhimi dhi.ndhimi dhi.ndhimi dhi.ndhimi
dundubhi naada supuurNamaye .
ghumaghuma ghu.nghuma ghu.nghuma ghu.nghuma
shankhaninaada suvaadyanute

vedapuraaNetihaasa supuujita
vaidikamaarga pradarshayute .
jayajaya he madhusuudana kaamini
dhanalakshmi ruupeNa paalaya maam.


Goddess Sri.Lakshmi Bless you all.

P J
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top