• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

திராவிடர்கள் யார்?

Status
Not open for further replies.
திராவிடர்கள் யார்?

vedaatasala.jpg


(இதுவரை எனது பிளாக்குகளுக்கு வருவோர் எண்ணிக்கை மூன்று லட்சத்தைத் தாண்டிவிட்டது. நாள் தோறும் 1200 ‘’ஹிட்ஸ்’’ வருகின்றன. உங்கள் ஆதரவுக்கு நன்றி).

‘’அன்பென்று கொட்டு முரசே — மக்கள்
அத்தனை பேரும் நிகராம்.
இன்பங்கள் யாவும் பெருகும் — இங்கு
யாவரும் ஒன்று என்று கொண்டால் ’’ (பாரதி)


‘’யாதும் ஊரே, யாவரும் கேளிர்‘’ (உறவினர்) என்ற கொள்கையை உடையவன் நான். ஆயினும் வெளிநாட்டு ‘’அறிஞர்களும்’’(?!?!), உள்நாட்டு அரசியல்வாதிகளும் செய்துவரும் பொய், பித்தலாட்ட, சூது, வாதுகளை அம்பலப்படுத்தவே இதை எழுதுகிறேன். ஆரிய-திராவிட வாதத்தை ஹரிஜன தலைவர் அம்பேத்கர், மஹாத்மா காந்தி, சுவாமி விவேகாநந்தர் போன்ற பெரியோர்கள் உடைத்துத் தகர்த்து எறிந்தபின்னரும் சிலர் உடும்புப் பிடியாகப் பிடித்திருக்கின்றனர் என்பதை நாம் அறிவோம்.


திராவிடர்கள் பிராமணர்களே ! பிராமணர்கள் திராவிடர்களே !!
திராவிடர்கள் யார்? தமிழ் நூல்களும் சம்ஸ்கிருத நூல்களும் வியப்பான பல தகவல்களைத் தருகின்றன!!

ஆதி சங்கரர் என்ற உலகம் வியக்கும் தத்துவ வித்தகரைப் பற்றித் தமிழ் அறிஞர்களும் வடமொழி அறிஞர்களும் ஒரு கருத்தை தயங்காமல் ஒத்துக் கொள்கின்றனர். அவர் காலத்தைக் கணிக்க முக்கியச் சான்றாகவும் அதைக் கருதுவர். அவர் எழுதிய சௌந்தர்ய லஹரி (அழகின் பேரலைகள்) என்னும் சம்ஸ்கிருதக் கவிதையில்/ துதிப்பாடலில் ஒரு இடத்தில் “திராவிட சிசு” என்ற ஒரு குறிப்பு வருகிறது. யார் இந்த திராவிடக் குழந்தை (சிசு)?

சிலர் இதை திருஞான சம்பந்தர் பற்றி ஆதிசங்கரர் குறிப்பிட்டது என்று சொல்லுவர். இதனால் ஆதி சங்கரரை சம்பந்தருக்குப் பின்னாலுள்ள காலத்தில் வைப்பர். இது உண்மையானால் “திராவிட” என்பது ஒரு பார்ப்பனச் சிறுவனைக் குறிக்கிறது. அதாவது சம்பந்தரை. ஆக, திராவிட என்பது பிராமணரைக் குறிக்கும்!


நான் ஆதி சங்கரர் பற்றி எழுதிய கட்டுரையில் இது பின்னால் வந்த அபினவ சங்கரர் என்பவர், அவருக்கு மிகவும் முந்திய ஆதி சங்கரரைப் பற்றிக் குறிப்பிட்டதாக இருக்கலாம் என்று எழுதினேன். அல்லது ஞான சம்பந்தர் எல்லா இடங்களிலும் தன்னையே குறிப்பிடுவது போல ஆதி சங்கரரே தன்னை இப்படி “திராவிட சிசு” என்று குறிப்பிட்டிருக்கலாம் என்றும் எழுதினேன். இந்த மூன்று விளக்கங்களில் எது சரியானாலும் திராவிட என்பது ஒரு பிராமணச் சிறுவனைக் குறிக்க பயன்படுத்தப் பட்டதே. சங்கரனும் சம்பந்தரும் பிராமணர்களே!
rahul_dravid.jpg


கிரிக்கெட் ஆடும் திராவிடன்
கிரிக்கெட் விளையாட்டு வீரர் ராஹுல் திராவிட் ஒரு மராட்டிய பிராமணர். இவருக்கு ஏன் திராவிட அடைமொழி வந்தது? ஏனெனில் இவர் ஒரு தெற்கத்திய பிராமணர். கர்நாடகம் முதல் மத்தியப்பிரதேசம் வரை குடியேறிய தெற்கத்திய பிராமணர்களை இப்படி அழைப்பர் (மேல் விவரங்களை விக்கி பீடியாவில் காண்க) இதே போல பாண்டிய நாட்டிலிருந்து குடியேறிய பிராமணர்களை குஜராத்தில் பாண்டியா என்று அழைப்பர். சோழ நாட்டுப் பிரமணர்களை சோழியர் என்று அழைப்பர். இதில் ஒரு முக்கிய விஷயமும் அடங்கி இருக்கிறது. பிராமணர்கள் வடக்கிலிருந்து வரவில்லை. தெற்கிலிருந்து நேபாள காத்மண்டு கோவில் வரை சென்று அர்ச்சகர் பதவியை ஏற்றனர். இலங்கை மகாவம்சம், இலங்கைப் பார்ப்பனர் பற்றிப் பேசும்.
இதைச் சொல்வதற்கு காரணம் என்னவென்றால், உண்மை இப்படி இருக்க, கடந்த நூறு ஆண்டுகளில் மதத்தைப் பரப்ப வந்தவர்களும், ஆட்சியைப் பிடிக்க வந்தவர்களும், ஆங்கிலேய ஆட்சிக்கு நிரந்தர சிம்மாசனம் கொடுக்கவேண்டும் என்று கட்சி நடத்தியவர்களும் “திராவிட “ என்ற சொல்லில் எவ்வளவு “விஷத்தைக்” கலந்து அர்த்தத்தை அனர்த்தமாக்கி விட்டார்கள் என்பதைக் காட்டத்தான்.


உண்மையில் ஆரிய என்ற சொல் பாண்பாடுமிக்க கனவான் என்றும் திராவிட என்பது தெற்கிலிருந்து வந்தவன் என்ற பொருளிலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. அதில் விஷத்தைக் கலந்து திராவிடன் ஒரு சப்பை மூக்கன், குட்டையன், சுருட்டை முடியன், ஆண்குறியை (லிங்கம்) வழிபடுபவன், சிந்துவெளியிலிருந்து ஓடிவந்த கோழை என்றெல்லாம் சிந்து சமவெளி ஆராய்ச்சிக்காரர்களும் வெள்ளைக்காரர்களும் எழுதி வைத்து விட்டார்கள்!.


இன்னும் சிலர் அகத்தியர் பெயரில் கதை அடித்டுள்ளனர். அகத்தியர்தான் பிராமணர்களை தெற்கே அழைத்துவந்தவர் என்றும்! உண்மையில் புறநானூற்றுக்கு உரை எழுதியோர் 18 குடி வேளிரை தெற்கே அழைத்துவந்ததாக எழுதியுள்ளனர். கோயபெல்ஸ் என்பவன் ஒரு பொய்யை பத்து முறை சொன்னால் உண்மை என்று நம்பிவிடுவார்கள் என்று சொல்லி ஹிட்லருக்கு பக்க பலமாக நின்றான். இங்கோ வெளி நாட்டு, உள்நாட்டு தேச விரோதிகளும் மத விரோதிகளும் தமிழ் ,சம்ஸ்கிருத இல்லாத விஷயங்களை உண்மைபோல நூறு முறை எழுதியுள்ளனர்.


திராவிடாசாரியா
அ.சிங்காரவேலு முதலியாரின் அருமையான நூல் ‘’அபிதான சிந்தாமணி’’, இன்னும் பல செய்திகளத் தரும்.:
பஞ்ச திராவிட என்ற சொற்றொடருக்கு சிங்காரவேலு முதலியார் தரும் விளக்கம்: கன்னடம், தெலுங்கு, மகாராஷ்டிரம், கர்நாடகம், கூர்ஜரம் என்னும் தேசத்துப் பிராமணர். கன்னடம், மைசூர் முதல் கோகொண்டா வரை; தெலுங்கு, காளத்தி முதல் கஞ்சம் வரை; மகராஷ்டிரம், கோல்கொண்டா முதல் மேற்குக் கடல் வரை; கர்நாடகம் (தமிழ்), கன்யாகுமரி முதல் காளத்தி வரை; கூர்ச்சரம், குசராத், முதல் டில்லி வரையிலுள்ள தேசங்களாம்.
(இந்த அற்புதமான விளக்கம், பஞ்ச திராவிடர் என்பது பிராமணரை மட்டுமே குறிக்கும் என்பதைக் கட்டுகிறது. கர்நாடக சங்கீதத்தை ஏன் கர்நாடக என்று சொல்கிறோம் என்பதையும் விளக்குகிறது)

அபிதான சிந்தாமணி வழங்கும் மேலும் பல விளக்கங்கள் இதோ:


திராவிடாசாரி என்பவர் வேதாந்த சூத்திரத்துக்குப் பாஷ்யம் செய்தவர். இவர் ஆதி சங்கரருக்கும் முன்னதாக அத்வைத கொள்கையைப் பரப்பியவர். இவரும் பிராமணரே.
திராவிடபூபதி என்பவன் அகத்தியர் கால திராவிட அரசன்.
திரவிடன் என்பவன் சூர்ய வம்சத்தரசன்
திவ்யப் ப்ரபந்தத்தை திராவிட வேதம் என்பர்.

நான் ஏற்கனவே எழுதிய கட்டுரையில் கி.மு 1320ல் ஆண்ட திராவிட ராணி குறித்து எழுதி இருக்கிறேன்.

3_veddahs.jpg


Veddahs classified as ''Dravidas''.

தெலுங்கு பிராமணர்களில் ஒரு பிரிவினருக்கு திராவிட என்ற ஜாதிப் பெயர் உண்டு. ஆக திராவிட என்பது பூகோளப் பெயரே அன்றே இனப் பெயர் அல்ல. தெற்கே பேசிய பாஷையை திராவிட பாஷை என்று அழைத்தனர். அது தமிழாகவும் இருக்கலாம், தெலுங்காகவும் இருக்கலாம்.

தென் இந்தியாவில் இருந்து வடகே போன எல்லோரையும் மதறாசி ( மட்ராஸ்காரன் ) என்று வடக்கத்தியர் சொல்லுவர். ஆனால் அவர்களில் பலர் தெலுங்கர், மலையாளிகள், கன்னடக்காரரகள்!!இதுபோலத்தான் திராவிடன் என்பதும்.


தமிழ் நாடு --- திராவிடம் அல்ல!!!!!
இதைவிட வியப்பான மற்றொரு செய்தியும் நமது இலக்கியங்களில் உள்ளது. ஆதி காலத்தில் திராவிடத்துக்கும் தமிழ் நாட்டுக்கும் சம்பந்தமே இல்லை!!!.இந்தச் சொல் பழந்தமிழ் இலக்கியத்தில் எங்கும் இல்லை. இந்தியாவில் இருந்த 56 தேசங்களில் சேர, சோழ, பாண்டிய, கேரள, கொங்கண தேசங்களுக்குப் பின்னர் திராவிட என்றும் ஒரு தேசம் குறிப்பிடப்படுகிறது. ஆக இது தமிழ்நாட்டின் பகுதி அல்ல. பழங்கால தேசப்பட புத்தகங்களிலும் தமிழ் நாட்டுக்கு வெளியேதான் திராவிடம் காட்டப்பட்டிருக்கிறது. தெலுங்கு தேசத்தில் ஒரு சிறிய பகுதிக்கு இப்படி பெயர் இருந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது. இன்னும் தோண்டத் தோண்ட செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.


நம்முடைய தெலுங்கு, கன்னட, மலையாள அரசியல்வாதிகள் (மேனன்கள், நாயக்கர்கள்) தமிழ் நாட்டில் உட்கார்ந்துகொண்டு “திராவிட” என்ற சொல்லைப் பயன்படுத்தி எல்லோரையும் ஏமாற்றுகையில் அழுவதா, சிரிப்பதா? என்று தெரியவில்லை. ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?


தமிழ் என்பதே திராவிடம் என்று மாறியது (தமிழ்=த்ரமிள=த்ரவிட=த்ராவிட) என்றும் ‘’இல்லை, இல்லை, த்ராவிடம் (த்ராவிட=த்ரவிட= த்ரமிள = தமிழ் ) என்பதிலிருந்தே தமிழ் வந்தது என்றும் முட்டி மோதிக் கொள்ளும் ஆராய்ச்சியாளர்களும் உளர்!!


தில்லான் என்னும் வடக்கத்திய பெயர் பற்றி காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அருமையான விளக்கத்தைக் கூறியுள்ளார்: த்ரிலிங்க தேசம் (தெலுங்கு) என்னும் இடத்திலிருந்து வடக்கே சென்றவர்கள் தில்லான் (த்ரிலிங்கன்) என்று அழைக்கப்பட்டனர் என்பார்.
திராவிட என்ற சொல் பழந்தமிழ் இலக்கியத்தில் கிடையாது. ஆனால் ஆரிய என்ற சொல் சங்கத் தமிழ் நூல்களிலேயே ஏழு இடங்களில் வருகிறது. இனத்தைக் குறிக்கும் பொருள் யாங்கனும் இல்லை. பிராமணர்கள் மட்டுமே திராவிடர்கள் என்று சொல்லவில்லை. திராவிட என்பது தெற்குத் திசையை மட்டுமே குறிகும் சொல் ஒரு இனத்தைக் குறிக்கவந்த சொல் இல்லை, இல்லாவே இல்லை என்று சொல்லவே இவ்வ்வளவும் எழுதினேன்.


வெளிநாட்டு ‘’அறிஞர்கள்’’ மேலும் பல வியப்பான விஷயங்களைச் சொல்லி குழப்பத்தை உண்டக்கிப் ,பிளவை உண்டாக்கப் பார்க்கின்றனர். தமிழன் மத்தியதரைக் கடல் பகுதியில் இருந்து வந்தவன். அவனுடைய மொழிக்கும் துருக்கிய மொழிக்கும், பின்லாந்துகாரர் மொழிக்கும் தொடர்பு உண்டு என்றும் வாதிக்கின்றனர். ஒருபக்கம் சிந்து வெளியில் இருந்து ஆரியர்கள் அடிக்குப் பயந்து ஓடிவந்தவன் என்றும் மறுபக்கம் எங்கோ உள்ள பின்லாந்துகாரனுடன் உறவு கொண்டவன் என்றும் சொல்லி குழப்புகின்றனர். தமிழர்களோ நாங்கள் குமரிக்கண்டவாசிகள் என்று எந்த ஆதாரமும் இல்லாமல் பேசிவருகின்றனர். இவை சரியில்லை என்பதையும் தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் இடையேதான் நெருங்கிய தொடர்பு என்றும் என்னுடைய 575 ஆராய்ச்சிக் கட்டுரைகளில் ஆதாரத்துடன் எழுதியுள்ளேன். சில கட்டுரைகளின் பெயர்களை மட்டும் கீழே காண்க:


விரிவஞ்சி இப்போதைக்கு இத்தோடு முடிக்கிறேன்.

சந்தானம் சுவாமிநாதனின் முந்தைய கட்டுரைகள்:
1.முதல் திராவிட ராணி கி.மு 1320, (2).Dravidian Queen (1320 BC) in North India (3).The Biggest Brainwash in the World (4). ஆதிசங்கரர் காலம்: தமிழ் இலக்கியச் சான்றுகள் 5.தமிழன் காதுல பூ!!!! (6).மூன்று தமிழ் சங்கங்கள்: உண்மையா? கட்டுக்கதையா? (7) 3 Tamil Sangams: Myth and Reality 8. தமிழ் இனத்தின் வயது என்ன? 9. தமிழ் ஒரு கடல் 10.தமிழ்-கிரேக்க தொடர்பு 11..Indra festival in the Vedas and Tamil Epics 12.Bull fighting: Indus valley to Spain via Tamil Nadu 13.Karikal Choza and Eagle shaped Fire A tar 14.Why do British judges follow a Tamil king? 15.Flags : Indus Valley- Egypt Similarity 16.தமிழ் முனிவர் அகஸ்தியர் 17.வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன் 18.கொடி ஊர்வலம்: சிந்து சமவெளி—எகிப்து அதிசிய ஒற்றுமை 19.வீரத் தாயும் வீர மாதாவும் 20.Veera Matha in the Vedas and Tamil Literature 21.இந்திர விழா: வேதத்திலும் தமிழ் இலக்கியத்திலும் 22.கரிகால் சோழனின் பருந்து வடிவ யாக குண்டம் 23.பருவக்காற்றைக் கண்டுபிடித்தது தமிழனா? 24.பிரிட்டிஷ் நீதிபதிகள் நரை முடி தரிப்பது ஏன்? 25. தொல்காப்பியர் காலம் தவறு ( ஐந்து பகுதிகள் கொண்ட கட்டுரைகள்)+ 550 கட்டுரைகள்.
 

திராவிடர்கள் பிராமணர்களே ! பிராமணர்கள் திராவிடர்களே !!


...

இந்த மூன்று விளக்கங்களில் எது சரியானாலும் திராவிட என்பது ஒரு பிராமணச் சிறுவனைக் குறிக்க பயன்படுத்தப் பட்டதே.

....

... ஆக, திராவிட என்பது பிராமணரைக் குறிக்கும்!


(இந்த அற்புதமான விளக்கம், பஞ்ச திராவிடர் என்பது பிராமணரை மட்டுமே குறிக்கும் என்பதைக் கட்டுகிறது.
LS is very emphatic up to this point that Dravida means Brahmins. Then, with equally immense confidence and great abandon LS declares, completely oblivious of the fact he is contradicting himself:


பிராமணர்கள் மட்டுமே திராவிடர்கள் என்று சொல்லவில்லை. திராவிட என்பது தெற்குத் திசையை மட்டுமே குறிகும் சொல் ஒரு இனத்தைக் குறிக்கவந்த சொல் இல்லை, இல்லாவே இல்லை (emphasis added by me) என்று சொல்லவே இவ்வ்வளவும் எழுதினேன்.

Then he further offends rationality with:
தமிழ் நாடு --- திராவிடம் அல்ல!!!!!
So does the word Dravida mean தெற்குத் திசை in general or a particular தேசம் outside Tamil Nadu? LS claims both. According to what பழங்கால தேசப்பட புத்தகங்கள், he does not say.

So, LS's post in summary -- Dravida means Brahmin, it refers to the south and not a caste at all, it refers to just a small country outside Tamil Nadu.


......எல்லோரையும் ஏமாற்றுகையில் அழுவதா, சிரிப்பதா? என்று தெரியவில்லை. ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?
I get the same emotion when I read posts like this by LS.

Thanks ...
 
Last edited by a moderator:
Dear Nara
Thanks very much for reading posting comments.
The contradiction is not in me, but in the way it has been used historically.

I made it very clear in the beginning that I believe in ''Every town is my town and all re my kinsmen'' (Puram. 192). But in the north they used only to denote Brahmins at one point. Slowly it meant the entire south like North Indians calling all southerners MADRASIS.

Dravida is listed as a small area out side Tamil speaking areas when it came to 56 countries. All are facts.
As long as you dont contradict my main point Dravida is not a racial term and it included Brahmins as well I am very happy.

Keep reading. I forgot to upload the English version. I will do it in a short while.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top