• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பெருங்காயம்

Status
Not open for further replies.
காலம் காலமா பெருங்கயத்தை ரசத்திலும் சாம்பாரிலும் சேர்க்கும் சமையல் முறை தமிழனுடையது...இது பீட்சா,பர்க்கரில் இல்லை..இதன் அவசியம் என்ன..?


பெருங்காயத்தின் மூக்கைத் துளைக்கும் தீவிர மணத்தின் அருமை தெரியாத மேற்கத்தியர் ஆரம்பத்தில் இதற்கு வைத்த பெயர் “ நாற்றம்பிடித்த பிசின்/பிசாசின் மலம்”(devil’s dung /stinking gum). கழுதைக்குத் தெரியுமா கற்பூர வாசனை என்பது 1918-இல் பெருங்காய விஷயத்தில் ஊர்ஜிதமானது.

கிட்டத்தட்ட வாரம் ஒன்றுக்கு 10,000 அமெரிக்கர்களை பலிவாங்கிய ஸ்பானிஷ் விஷ ஜுரத்தின் (SPANISH FLU) போது, மற்ற மருந்துகள் எல்லாம் பொய்த்துப் போன போது பெருங்காயம் தான் கடைசியில் ஒட்டுமொத்த அமெரிக்கரையும் காப்பாற்றியது.

இன்று உலகின் அத்தனை மருந்துகளையும் தர கட்டுப்பாடு செய்து உலகெங்கும் மருத்துவ விற்பனையை ஒழுங்குபடுத்தும்(?) அமெரிக்காவின் FDA அமைப்பு பெருங்காயம் Spanish flu-ற்கு பயனளிக்கும் என்று அங்கீகரித்து பயன்படுத்த அறிவுறுத்தியது.

’பிசாசு மலம்-ஐய்யயே!’- என்று ஏளனம் செய்தவரெல்லாம்- உருத்திராட்சம் போடுவது போல், பெருங்காயக் கட்டியை கழுத்தில் போட்டு தம்மைக் காப்பாற்றிக் கொண்டதை வரலாறு வர்ணிக்கிறது. அதன்பின் 2009-இல் பறவைக்காய்ச்சல் உலகெங்கும் பயமுறுத்திய போது, அதே அமெரிக்க, ஐரோப்பிய விஞ்ஞானிகள் பெருங்காயம் HINI VIRUS-க்கு எதிராக ஆய்வகத்தில் செயல் புரிவதை மீண்டும் நிரூபித்தனர்...எந்த ஜுரமாக இருந்தாலும்,எப்படிப்பட்ட புதுவகையான காய்சலாக இருப்பினும் பெருங்காயம் அதற்கு மாமருந்து!!தமிழன் அப்பவே உணர்ந்துட்டான்பா!!

Source:harikrishnamurthy
 
காயமிருக்க கவலை ஏன்?

மார்பில் சளி அடைத்து மூச்சிரைப்பு திணறலும் ஏற்பட்டு அவதிப்படுவோர் மிளகு, துளசி இலைகள், பெருங்காயம் மூன்றையும் சம அளவில் தண்ணீரில் போட்டு கஷாயமாகக் காய்ச்சிக் குடித்தால் சளித்தொல்லை கட்டுக்குள் வரும்.
பாதங்களில் ஏற்படும் பித்த வெடிப்புகள் குணமாக மஞ்சளுடன் பெருங்காயத்தை அரைத்து வெடிப்புகளில் பூசி வர, சில நாள்களில் குணமாகும்.
பெருங்காயம், சுக்கு இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடியாக்கி தண்ணீர்விட்டு மையாக அரைத்து வாணலியில் போட்டுச் சூடாக்கி, இளஞ்சூடாக இருக்கும்போதே மூட்டு வலி உள்ள இடங்களில் தடவி வர, மூட்டுவலி வெகுவாகக் குறையும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி தேன், எண்ணெயில் வறுத்த பெருங்காயப்பொடி ஒரு சிட்டிகை ஆகியவற்றை போட்டுக் கலக்கி காலையில் தூங்கி எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்து வர, உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து உடல் கச்சிதமாகும்.
வாயுத் தொல்லையா? ஒரு டம்ளர் மோரில் ஒரு சிட்டிகை பெருங்காயம், உப்பு கலந்து குடித்தால் வாயுத்தொல்லை காணாமல் போகும்.
வயிறு மந்தம் தட்டி, இயல்பான பசியில்லாமல் செரிமானக் கோளாறால் அவதிப்படுவோருக்கு பெருங்காயம் நல்ல மருந்து. பெருங்காயத்தூளை எண்ணெயில் வறுத்து அதை எலுமிச்சை இலைகளுடன் கலந்து விழுதாக அரைத்து உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் செரிமானம் சரியாகும்; நன்கு பசி எடுக்கும்.


(Published in :தினமணி : 08 July 2012.)
 

Dear Brahmanyan Sir,

I have noted down all the 'home remedies' you have posted. Thank you very much! :)
 
Raji Madam

There are many sites which gives the Scientific uses of Asafoetida or Hing, or in Tamil பெருங்காயம் in Engilsh
I got this through Mail, hence i just shared with members.

Brahmanyam Sir Post is also only in Tamil.

Ammam , Many of your posts are only in TAMIL!!
Who will rewrite them in English?
 
......Kaali Perungaya Dabba from Mandhira Punnagai

What does it mean?

Are old people becoming KALI PERUNGAYA DABBA? ........
Dear P J Sir,

You must have heard 'gAyamE idhu poyyadA verum kAtradaiththa paiyadA'!

In that context this song is written. 'PerungAyam' means 'big body', which the hero thinks is useless (empty)!

May be oldies are kAli perungAya dabba! They want to be useful but many a time they are NOT!! :D

P.S: Enjoy this hilarious video -
காயமே இது பொய்யடா
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top