• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

பல்லாங்குழி ஆட்டம் பரவிய மர்மம்!

Status
Not open for further replies.
பல்லாங்குழி ஆட்டம் பரவிய மர்மம்!

pallankuzi.jpg


பல்லாங்குழி விளையாட்டு உலகின் பல பகுதிகளில், குறிப்பாக ஆப்பிரிக்காவின் கிழக்குக் கடற்கரை நாடுகளிலும் இந்தோநேசியா உள்பட தென் கிழக்கு ஆசிய நாடுகளிளும் பரவலாக விளையாடப்படுகிறது. தமிழ்நாட்டின் கிராமப் புறங்களில் தூய தமிழ்ச் சொற்கள் அல்லது சில சம்ஸ்க்ருத சொற்களுடன் ஆடப்படும் இந்த ஆட்டம் எங்கே தோன்றியது என்று ஆராய்ந்தேன். தமிழ்நாட்டில்தான் இது பெரும்பாலும் தோன்றியிருக்க வேண்டும் பின்னர் தமிழர்கள் வணிகத்துக்காக சென்ற இடங்கள் எல்லாம் இதை எடுத்துச் சென்று பரப்பியிருக்கலாம். இவ்வாறு நம்புவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.


1.நாம் இந்தோநேசியா, வியட்நாம், மலேசியா முதலிய நாடுகளுடன் தொடர்பு கொண்டிருந்தோம். பல்லவ கிரந்தம் என்னும் வட்டெழுத்துதான் தென்கிழக்காசிய நாடுகளின் எழுத்து வடிவங்களுக்கு மூலம். இதை

1.India-Madagascar Link via Indonesia,
2.Sanskrit Inscriptions in Strange Places,
3.Pandya King who ruled Vietnam,
4.Did Indians build Pyramids?


ஆகிய கட்டுரைகளில் ஏற்கனவே விளக்கிவிட்டேன். 2.இரண்டாவது காரணம் காசி, பசு, மூன்று விரை(விதை) ஆட்டம், ஆறு விரை ஆட்டம், சீதா பாண்டி, ராஜா பாண்டி, காசி பாண்டி முதலிய சொற்கள் அனைத்தும் தமிழ் அல்லது வடமொழிச் சொற்கள் ஆகும் 3. சீதை அசோகவனத்தில் ஆடிய ஆட்டம் என்பதே சீதாப் பாண்டி என்று மக்கள் நம்புவதாகும். இது இலங்கையிலும் பழங்காலம் முதலே இருக்கிறது. 4.எண்கள், கணக்கு விஷயத்தில் இந்தியர்கள் கண்ட முன்னேற்றத்தை உலகமே ஒப்புக் கொள்கிறது. செஸ் விளையாடு நம் நாட்டிலேயே தோன்றியது. பிதகோரஸ் தியரம், பை என்பன எல்லாம் இந்தியாவில் தோன்றியனவே. செஸ் தோன்றிய சுவையான கதையை “இந்தியா மீண்டும் உலக செஸ் சாம்பிய”னென்ற கட்டுரையில் கொடுத்துவிட்டேன். 5. தமிழ்நாட்டின் பழைய செப்பேட்டில் பல்லாங்குழி என்ற சொல் இருக்கிறது.


தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் நமக்குள்ள தொடர்பை அங்குள்ள 800 சம்ஸ்கிருத கல்வெட்டுகளும் காளிதாசர் முதலியோரின் குறிப்புகளும் காட்டுகின்றன. இந்தோநேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் பல்லாங்குழியை சொங்கக் ,சுங்க என்று அழைக்கிறார்கள். இது சங்க்யா(எண்ணிக்கை) என்ற சம்ஸ்கிருத சொல்லின் திரிபாகும். தென் கிழக்காசிய நாடுகளின் சொற்களில் ஏராளமான சம்ஸ்கிருத சொற்கள் இருப்பது மொழியியல் நிபுணர்கள் அறிந்த விஷயமே.
செப்பேட்டில் பல்லாங்குழி
pallankuli.JPG


பல்லாங்குழி என்ற சொல் கி.பி 550-இல் பல்லவ மன்னன் சிம்மவர்மன் வெளியிட்ட பள்ளன்கோவில் செப்பேட்டில் காணப்படுகிறது. வஜ்ரநந்தி குரவர்க்கு பள்ளிச் சந்தமாகக் கொடுக்கப்பட்ட நிலத்துக்கு நாற்பால் எல்லைகளைச் சொல்லுகையில் கீழ்க்கண்ட வரி வருகின்றது:
“ வட பால் எல்லை பல்லாங்குழிக் காவின் தெற்கும்”
பல்லாங்குழிகள் நிறைந்த தோட்டம் அல்லது பல்லாங்குழி போல பல குண்டும் குழியும் நிறைந்த தோட்டம் என்று இதற்குப் பொருள் கொள்ளலாம். என்ன பொருளாக இருந்தாலும் பல்லாங்குழி என்ற சொல் அப்போதே புழக்கத்தில் இருந்ததை அறிகிறோம்.
இந்தியில் மங்கலா


இந்தி மொழியில் இந்த ஆட்டத்துக்கு மங்கலா என்று பெயர். இது அராபிய சொல் நகலா (நகர்த்தல்) என்பதில் இருந்து வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள் இது சரியில்லை என்றே தோன்றுகிறது. முதலில் நகலா என்பதே தமிழ் சொல் நகர்த்து என்பதுடன் தொடர்புடையது! இந்தியாவின் வடகோடி முதல் இலங்கையின் தென்கோடி வரை ராமாயண காலத்தில் இருந்து ஆடப்படும் (சீதாப் பாண்டி) ஆட்டம் எப்படி அராபிய நாட்டில் இருந்து வந்திருக்க முடியும்? மேலும் நகலா என்பதற்கும் மங்கலாவுக்கும் தொடர்பு மிகவும் குறைவு.


உண்மையில் அராபியர்கள் விஞ்ஞான விஷயங்கள் முழுதையும் நம்மிடம் கற்று மேலை உலகத்துக்கு எடுத்துச் சென்றனர். இதனால்தான் இந்து எண்களை அராபிய எண்கள் என்று மேலை உலகம் கூறுகிறது. அல்பெருனி, இபின் படூடா போன்ற எழுத்தர்கள் இந்திய அறிவியல் முன்னேற்றத்தைப் பற்றி வியந்து போற்றி இருக்கிறார்கள்.
மங்கலா என்பது மங்களம் (சுபம்) என்ற சொல்லில் இருந்தே வந்திருக்க வேண்டும் இதை எதிர்ப்போர் நம் எல்லோருக்கும் வேறு ஒரு கேள்விக்கு பதில் சொல்ல வேண்டி இருக்கும். உலகம் முழுதும் 800 வகையான பல்லாங்குழி ஆட்டங்கள் இருப்பதாக விக்கிபீடியா கூறுகிறது. இந்திக்காரர்களைத் தவிர மற்ற எல்லோரும் புதுப் பெயர் வைத்துக் கொண்டார்கள் என்பதை நம்ப முடியாது. அப்படியானால் உண்மை என்ன? மண் கல என்பது மண் குழி என்பதன் திரிபாகவும் இருக்கலாம். பலர் மண்ணில் குழி செய்தும் விளையாடும் படங்கள் என்னிடம் உள்ளன.


இந்த விளையாட்டு தென் இந்தியாவில் தோன்றி மெல்ல மெல்ல இந்தோநேசியா மூலம் மடகாஸ்கர், மொசாம்பிக் மற்றும் ஆப்பிரிக்க எல்லை நாடுகளுக்குள் நுழைந்திருக்கவேண்டும். ஆப்பிரிக்காவிலும் கிழக்குக் கரை அருகிலேயே இது பரவி இருப்பது நோக்கற்பாலது.
ஓவாரி, நானோவாரி ஆவாரி(அவாலி) என்ற ஆப்பிரிக்க பல்லாங்குழி ஆட்டப் பெயர்களில் உள்ள வாரி என்பது தமிழ் சொல்லாகும். வாரி எடுத்தல் அல்லது விரை=வாரி என்று மருவி இருக்கலாம். சிரியா, எகிப்து, லெபனான் நாடுகளில் கூட மங்கலா என்பது ஒரே ஆட்டத்தைக் குறிக்கவில்லை.


இந்தியர்களின் கணிதப் புலமை, செஸ் முதலிய ஆடங்களை உண்டாக்கிய பழமை, தென்கிழக்காசிய நாடுகளை 1300 ஆண்டுகளுக்கு ஆண்ட திறமை, பல்லாங்குழி ஆட்டச் சொற்களின் வளமை ஆகியவற்றைப் பார்க்கையில் நாம் இதை உலகுக்கு ஏற்றுமதி செய்தோமா அல்லது நாம் வேற்று நாட்டிலிருந்து இறக்குமதி செய்தோமா என்பதை வாசகர்களே உய்த்துணர்வது கடினமல்ல.

Awale.jpg

பல்லாங்குழி என்றால் என்ன?

“இது ஒரு விளையாட்டுப் பலகை. இதில் பக்கத்திற்கு ஏழாக இரண்டு பக்கத்திற்கு 14 குழிகளில் குழிக்கு ஐந்தாக 70 காய்களைக் கொண்டு ஒவ்வொரு குழியிலுள்ள காயை ஒவ்வொன்றாக எடுத்து இருவர் குழியிற் போட்டு ஆடுகையில் யாருடைய பக்கத்தில் காய்கள் எல்லாம் சேர்ந்துவிடுகின்றனவோ அவர்கள் வென்றவர்களாம். இது ஒரு வகை. இதிற் இன்னும் பலவகை யுண்டு” (பக்கம் 1052, அபிதான சிந்தாமணி)

பல்லாங்குழி ஆட்டத்தின் மூலம் மனக்கணக்கு, மனதைக் குவியப்படுத்தும் சக்தி, பொதுவாக கணக்கில் ஆர்வம் உண்டாகும்.

Pictures are taken from various websites.Thanks: swami
 
பல்லாங்குழி ஆட்டம் பரவிய மர்மம்!

அன்பர் சுவாமிநாதன் அவர்களுக்கு
நமஸ்காரம் ,

நல்லதொரு கட்டுரை . பண்டைய பொழுதுபோக்கு விளையாட்டு களெல்லாம் இந்த தலைமுறைக்கு எடுத்து
சொன்னால் தான் தெரியவரும் நிலையில் தங்களது கட்டுரை மிகவும் உதவியாக இருக்கும் . அந்த நாட்களிலே மிகவும் பிரபலமாயிருந்த பல்லாங்குழி, தாயக்கட்டம், பரமபதம், ஆடுபுலி விளையாட்டுகள் எல்லாம் மறைந்து விட்டன .இந்த ஆட்டங்களின் உபகரணங்களும் பெரிய நகரங்களில் கிடைப்பதில்லை. நான் சென்ற முறை கும்பகோணம் சென்றபோது கும்பேஸ்வரர் ஆலயத்தில் உள்ள கடைகளில் பல்லாம்குழி பலகை மற்றும் (பித்தளை) தாயக்கட்டை களைத்தேடி வாங்கிவந்தேன் . மிகவும் சாதரணமாக செய்யப்பட்டிருந்தன . பழைய காலத்தில் உள்ள அழகில்லை . அந்தக்காலத்தில் தாயக்கட்டைகளை உருட்டினால் வெண்கல மணி சத்தம் கேட்கும் . வெண்கல கட்டைகள் இப்போது கிடைப்பதில்லை .
நலம்கோரும்
ப்ரஹ்மண்யன்
பெங்களூரு
 
Last edited:
திரு. பிரம்மண்யன் அவர்களுக்கு பொங்கல் வாழ்த்துக்கள். நீங்கள் சொல்லுவது முற்றிலும் சரியே. நானும் மீனாட்சி கோவில் கடையில் ஒரு எவெர்சில்வர் ப்ல்லாங்குழியை த்தான் வாங்கிவந்தேன். பழைய கால பல்லாங்குழிகள் ஏதாவது இருந்தால் எல்லோரையும் பத்திரப்படுத்திவைக்கச் சொல்லுங்கள் ஆண்டிக் வால்யூ உண்டு. சிறிது காலம் கழித்து லண்டனில் ஏலம் விட்டால் ஆயிரக் கணக்கில் பவுன் கிடைக்கும். இப்போது இங்குள்ள மியூசியங்களில் இதைக் காணலாம். பல்லாங்குழி பற்றி சில புத்தகங்கள் வந்திருந்தாலும் ஆழ்ந்த ஆராய்ச்சி காணப்படவில்லை. லண்டனில் ஒரு ஆந்திர பல்கலைக்கழக பெண்மணியைச் சந்தித்தபோது அவர் போர்டு கேம்ஸ் பற்றிய ஆய்வுக்காக லண்டன் வந்ததாகக் கூறினார். ஆராய்ச்சி முடிவு வெளியாகி இருக்கலாம். இது ஆyவுக்குரிய ஒரு துறை என்பதை நம்மவர்கள் உணரவேண்டும். குறிப்பாக பிராமண குடும்பங்களில் பல்லாங்குழி ஆட்டம் அதிகம் என்பது என் கணிப்பு.
 
In Journal and Proceedings of Asiatic Society of Bengal, Vol XXIII of 1927, Published by Asiatic Society of Bengal, Calcutta in 1929, Article No 23, pp 369-379, there is a quote about an inscription on a stone horse which was found in Northern Oudh and now in Lucknow Museum dated back to Samudhra Guptha shows the Carvings that reflects in Board is designed for explaining Chemistry and this finds a place with Occult Chemistry.


clip_image002.jpg

Fig. 4. Indoor games drawn on a pillar

clip_image004.jpg

Fig 5 Indoor games (Hydrogen Peroxide H[SUB]2[/SUB]O[SUB]2[/SUB])
From the above findings it is very much established that the Brahmans in BCE 25,000 taught Chemistry as a game.

According to philosophy the body is made with five elements Earth, Water, Fire, Sky and Planets. This body is activated by the Planets such as Sun. Moon, Jupiter, Mercury, Venus, Saturn and Mars and activated by South and North Pole
(Rahu and Kethu) which rotates in anti clock wise.

Here the Pallan Kuli comes under Hydrogen Peroxide.

Please send PM to me your mail id and I will send this as attached text.
 
Last edited by a moderator:
Dear Ramachandran
Thanks for adding more interesting information on this topic.
I wish someone in India teaches all these games to our children or find and instal a similar game on internet or make an application. It will be great if someone does it.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top