• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

அந்த்யேஷ்டி (அபர கர்மா)

Status
Not open for further replies.
அந்த்யேஷ்டி (அபர கர்மா)

அந்த்யேஷ்டி (அபரகர்மா)
This excerpts taken from a chapter on Apara Karma of the Tamil book titled வேதமும் பண்பாடும் authored by Sarma Sastrigal and released by Pujya Sri Jayendra Saraswati Swamigal at Chennai recently.

எல்லோரும் ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொண்டுள்ளோம். மனிதன் பிறந்த நொடி முதல் மரணத்தை நோக்கி நடைபோடுகிறான் என்பதே அது, ஆனால் ஒருவர் இறந்துவிட்டார் என்று தீர்மானிக்க மனம் வருவதில்லை, அவன் பரலோகம் அடைந்தான். அவன் நித்ய ஜீவனாய் இருக்கிறான். அநித்யமான உடலே நீங்கியது என்பதே சத்யம். ஜீவன் நல்ல கதியை அடைந்துவிட்டான் என்பதில் தான் இறந்தவரின் பந்துக்களுக்கு மனச்சாந்தி உண்டாகிறது.

ஒரு ஜீவன் பாபியாக இருந்தால் பாப பலனை அனுபவிக்க நரகத்தை அடைவான் என்றும், புண்ணியவானாக இருந்தால் புண்யபலனை அனுபவிக்க ஸ்வர்கத்தை அடைவான் என்றும் வேதம் சொல்கிறது. அதாவது 100 சதவிகிதம் புண்யம் செய்தால் ஸ்வர்க்கம், 100 சதவிகிதம் பாபம் செய்திருந்தால் நரகம். பாதி புண்யம். பாதி பாபம் என்றால் மனுஷ ஜன்மம். பாபமே மிகுதியாக செய்திருந்தால் மிருக ஜன்மம் என்று பொதுவாக கூறலாம்.

மேலும் பல ஜன்மாக்களில் செய்யும் தபஸ், புண்ய குவியலினால் தேவதைகளுடைய லோகத்தை அடைவது ஸாலோக்யமாகும். தேவதைகளின் ஐஸ்வர்யத்தை அடைவது ஸார்ஷ்டிதமாகும். தேவதைகளாகவே ஆகிவிடுவது ஸாயுஜ்யமாகும். இவ்வாறு அவரவர் புண்யத்திற்கு தக்கபடி பலன் கிடைக்கும்.

நல்ல கதி:
இறந்து போனவன் நரகத்தையடையாமல் புண்ணிய லோகத்தையோ அல்லது மறுபிறவியில் சுகானுபவம் பெற உதவி புரிவதற்காகவே அபர கர்மா செய்யப் படுகிறது. புத்திரன் (அல்லது மற்ற பந்துக்களோ) இறந்தவருக்காக முறைப்படி செய்யும் அபர கர்மாக்களை பொறுத்தும், இறந்தவன், தான் வாழ்ந்த காலத்தில் செய்த, தான தர்மங்கள், கர்மானுஷ்டானங்கள் போன்ற பலன்களைப் பொறுத்தும் ஜீவன் நல்ல கதியை அடைவதோடு, மறுபிறவி ஏற்பட்டாலும் நல்ல பிறவியை அடைகிறது என்று கூறுகிறது சாஸ்திரம். சுருக்கமாகச் சொல்வதென்றால் இறந்துபோன ஒரு பிறவி நல்ல கதியை அடைய வேண்டும் என்றால் செய்ய வேண்டிய அபர கர்மாவை புத்திரன், தனது சக்திக்கு மேல், எந்தக் குறையுமில்லாமல் செய்ய வேண்டும். கர்மாவை செய்யாவிடில் இறந்தவர் பிரேத சரீரத்திலிருந்து விடுபடுவதில்லை. சுகானுபவம் இல்லை, துக்கத்திலேயே மூழ்கியவர்களாக இருக்கிறார்கள். அவர்களுடைய துக்கத்தைப் போக்காத வரையில் குடும்பத்திற்கு «க்ஷமம் கிடைப்பதில்லை.

இந்த அபர கர்மா மொத்தம் 12 நாட்கள் நடைபெறும் என்பது நாம் அறிந்ததே. சுபஸ்வீகாரத்துடன் சேர்த்தால் இது மொத்தம் 13 நாட்களாகும்.

ஸம்ஸ்காரத்தின் மஹிமையும், பலனும் மிகவும் உயர்ந்தது. இவைகளை பெரியோர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு முறைப்படி செய்வது தாய், தந்தையர்க்கு பிள்ளையாக பிறந்ததற்கு இதைவிட பிரதி உபகாரம் வேறொனறுமில்லை எனக் கூறலாம். இதுவும் ஒருவிதமான கடன்தான். சிரத்தை மிகவும் அவசியம். சிரததை என்பது தளராத நம்பிக்கை. பித்ருக்கள் விஷயமாக நம்பிக்கையுடன் செய்கின்ற கார்யங்கள்தான் பித்ருகர்மா எனக் கூறினால் மிகையாகாது.

பித்ருகர்மாவை இரண்டு விதமாகப் பிரிக்கலாம். 1. உயிர் பிரிந்த நொடியிலிருந்து 12 நாட்கள் வரை செய்யப்படும் அபர கர்மா, 2. பிறகு தொடர்ந்து வருஷம் தோறும் அதே திதியில் செய்யும் சிராத்தம். முன்னது பிரேதத்திற்குப் பித்ரு நிலையைத் தருவது. இரண்டாவது பித்ரு நிலையில் உள்ளவருக்குத் த்ருப்தி அளிப்பது.

முழு ஒத்துழைப்பு:
இந்த அபர கர்மாவில் ஜீவநாடியாக இருப்பவைகள் இரண்டு,

1. மந்திரங்களுடன் சேர்ந்த ப்ரயோகங்கள்
2. தானங்கள்,

முதலாவதைப் பற்றி கர்மாவை நடத்தும் சாஸ்திரிகள் பார்த்துக் கொள்ளுவார், நாம் அவருக்கு முழுமையான ஒத்துழைப்புத் தந்தால் போதுமானது. ஒத்துழைப்பு என்றால் அவர் சொல்லும் மந்திரத்தை கூடுமான வரையில் ஸ்வரத்துடன் திருப்பிச் சொல்ல முயற்சி செய்வதும், அவர் கூறுகிற நோத்தில் நாம் தயாராக இருந்து இடையூறுகள் ஏற்பட்டாலும் அவற்றைப் பொருட்படுத்தாமல் ச்ரத்தையுடன் ப்ரயோகத்தை அவர் சொல்படி செய்வதும்தான்.

இரண்டாவதாக தானங்கள். இதன் அளவையும் தன்மையையும் கர்த்தா தான் முடிவு செய்ய வேண்டும். இது போதும் என்று யோசிக்காமல் முடிவு எடுத்தால் கர்மா நஷ்டமாக வாய்ப்பு உண்டு. இந்த நேரத்தில் செய்யும் தானங்கள் அளவிட முடியாத பலனைத் தரும் என்பதில் சந்தேகமில்லை. வாங்கியளிக்கும் தான சாமான்கள் நல்லதாகவும். சிறந்ததாகவும் இருத்தல் அவசியம். மனசு வர வேண்டும்.

வசதி இல்லாத போது:
சரி, பணவசதி இல்லாதவர்கள் என்ன செய்ய? என்ற கேள்வியும எழலாம். கவலைப்பட வேண்டாம். உங்களாத்து சாஸதிரிகளை அணுகினால் அதற்குத்தக அவர் செய்து தருவார். பணம் அதிகம் இருந்தால்தான் கர்மா செய்யப்படும் என்பதில்லை. விரலுக்குத்தக்க வீக்கம்தான் வீங்க வேண்டும். வசதி இல்லாதவர்கள் எளிமையாக செய்தால், பித்ருக்கள் மகிழ்ச்சியடைவார்களே தவிர, எந்த தோஷமம் வராது.

மனோபாவம்:
ஒருவேளை அப்பா, அம்மா உயிருடன் இருக்கும் போது நாம் அப்படி, இப்படி இருந்திருந்தாலும், அவர்கள் மறைந்த பிறகாவது அவர்களுக்காக, அவர்கள் நற்கதியடைய கர்மாவை சரிவர செய்யாவிடின், பின் சந்ததிகள் கஷ்டப்படுவார்கள் என்பது பெரியோர்களின் வாக்கு. மொத்தத்தில் கர்மா பண்ணுவதும், சரியாக பண்ணாமல் இருப்பதும் அவரவர்கள் வளர்ந்த சூழ்நிலையைப் பொருத்தும், மனோபாவத்தைப் பொருத்தும் அமையலாம்.

நாம் தனிப்பட்ட முறையில் கவனமாக இருந்தால் போதும். நம்மால் இயன்ற வரையில் கர்மாக்களை விடாமல் அனுஷ்டிக்க முடிவு செய்தால் நமது குடும்பம் க்ஷமமாக இருக்கும்.

வேதங்களும் சூத்திரங்களும்:
கருணாமூர்த்திகளான ஆபஸ்தம்பர், போதாயனர், ஆஸ்வலாயனர், திராஹ்யாயனர் முதலான சூத்திரகார
மகரிஷிகள் மஹா தபஸ் செய்து, நமக்காக எந்த தன்னலமும் இல்லாமல், ஜீவன்கள் நற்கதியடையவும், பித்ருலோக ஸாயுஜ்யம் அடைவதற்கும் அபர சூத்ரம் என்ற பெயரில் அதற்கான சட்ட திட்டங்களை வகுத்துத் தந்துள்ளனர்.
ஒவ்வொரு வேதத்திலும் பல சூத்திரங்கள் உள்ளன அதன் ிவரம்:............................................................................................................"

NB:- For the full text on this subject, one can go through the book which has more light including some FAQs on Apara Karma.
 

Attachments

  • Tamil Front cover.jpg
    Tamil Front cover.jpg
    81.4 KB · Views: 231
Status
Not open for further replies.

Latest ads

Back
Top