• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள்

Status
Not open for further replies.

saidevo

Active member
வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள்

வெண்பாட்டில் ஸம்ஸ்க்ருத அறிவுரைகள்

1. பெரியோரை மதித்தல்
பெரியோரை வந்தித்து நாள்தோறும் நின்றால்
பெருகும் நலன்களே நான்கு விதத்தினில்
ஆயுளும் கல்வியும் கீர்த்தி பலமென்றும்
ஓயாது மேலும் வளர்ந்து.

abhivAdana shIlasya nityaM vRuddhopasevinaH |
chatvAri tasya vardhante AyurvidyA yasho balam ||

अभिवादन शीलस्य नित्यं वृद्धोपसेविनः ।
चत्वारि तस्य वर्धन्ते आयुर्विद्या यशो बलम् ॥

*****

2. செல்வமும் மானமும்

செல்வத்தை வேண்டுவோர் கீழ்நிலையே மானமும்
செல்வமுடன் வேண்டுவோர் மத்தியில் -- அல்லாது
மானத்தை மட்டுமே வேண்டுவோர் உத்தமம்
மானமே செல்வத்தின் மிக்கு.

adhamAH dhanamichChanti dhanaM mAnaM cha madhyamAH |
uttamAH mAnamichChanti mAno hi mahatAM dhanam ||

अधमाः धनमिच्छन्ति धनं मानं च मध्यमाः ।
उत्तमाः मानमिच्छन्ति मानो हि महतां धनम् ॥

*****
 
Last edited:
3. உடல் மன ஆத்மா புத்தியின் தூய்மை

புறந்தூய்மை நீரான் அமையும் துலங்கும்
அறம்சார்ந்த உண்மையால் உள்ளம் -- மறைசார்ந்த
வித்தை தவத்தினால் ஜீவாத்மா ஞானத்தால்
புத்தியும் தூய்மை யுறும்.
---மனுஸ்மிருதி 5.109

adbhirgatrANi shudhyanti manaH satyena shudhyati |
vidyAtapobhyAM bhUtAtmA bhuddhirj~jAnena shudhyati ||

अद्भिर्गत्राणि शुध्यन्ति मनः सत्येन शुध्यति ।
विद्यातपोभ्यां भूतात्मा भुद्धिर्ज्ञानेन शुध्यति ॥

*****

4. மடிமையும் வாழ்க்கையும்

கல்வி வருமோ மடிமை இருந்தாலே
கல்வியின்றி செல்வம் வருவது எங்ஙனம்
செல்வமின்றி நண்பர் உறுவது எங்ஙனம்
நண்பரின்றேல் ஏது உவப்பு?

alasasya kuto vidyA avidyasya kuto dhanam |
adhanasya kuto mitram asmitrasya kutassukhaM ||

अलसस्य कुतो विद्या अविद्यस्य कुतो धनम् ।
अधनस्य कुतो मित्रम् अस्मित्रस्य कुतस्सुखं ॥

*****
 
5. கல்வி செல்வம் அறம் சாதித்தல்

இல்லை முதுமை மரணம் எனக்கருதி
கல்வியும் செல்வமும் சாதித்த(ல்) ஆற்று
மரணம் தலைமயிர் பற்றுதல்போ(ல்) எண்ணி
அறவழி நின்று ஒழுகு.

ajarA&maravat prAj~jo vidyAmarthaM cha sAdhayet |
gRuhIta iva kesheShu mRutyunA dharma mAcharet ||

अजराऽमरवत् प्राज्ञो विद्यामर्थं च साधयेत् ।
गृहीत इव केशेषु मृत्युना धर्म माचरेत् ॥

*****

6. அரிதென்பது...

இல்லையே மந்திர(ம்) ஆகா எழுத்தொலி
இல்லை மருந்தென ஆகாத மூலிகை
இல்லை தகவிலர் யாரும் அரிதென்ப(து)
எல்லாம் நிகழ்விப் பவர்.

amantram-akSharaM nAsti vanaspatir-anauShadham |
ayogya purusho nAsti yojakara-tatra durlabhaH ||

अमन्त्रमक्षरं नास्ति वनस्पतिरनौषधम् ।
अयोग्य पुरुशो नास्ति योजकरतत्र दुर्लभः ॥

*****
 
7. தீயோர் குணங்கள்

கருணையின்மை காரணமில் பூசல் அயலார்
பொருள்மனை வேட்கை உறவினர் நல்லார்
பொறையின்மை தீயோர்கண் தாமே அமைந்த
தறுதலைத் தன்மைக ளாம்.
---பர்த்ருஹரி, நீதி ஶதகம் 52
[பொறை=பொறுமை, பொறுத்தல்]

akaruNatvam-akAraNa-vigrahaH paradhane parayoShiti cha spRuhA |
sujana-bandhujaneShva-sahiShNutA prakRuti-siddhamidaM hi durAtmanAm ||
--bhartRuhari, nIti shataka, 52

अकरुणत्वमकारणविग्रहः परधने परयोषिति च स्पृहा ।
सुजनबन्धुजनेष्वसहिष्णुता प्रकृतिसिद्धमिदं हि दुरात्मनाम् ॥
--भर्तृहरि, नीति शतक, ५२

*****

8. ஆதார தர்மம்

பிறர்க்கின்னா செய்யாமல் தீயோர் தொடர்பின்றி
நற்குணத்தோர் நட்பில் இழப்பின்றி யாரும்
சிறிதளவே தர்மத்தில் நின்றாலும் அஃது
பெரிதெனவே கொள்ளப் படும்.

akRutvA parasaMtApaM agatvA khanalamratAm |
anutsRujya satAm vartma yat svalpamapi tadbahu ||

अकृत्वा परसंतापं अगत्वा खनलम्रताम् ।
अनुत्सृज्य सताम् वर्त्म यत् स्वल्पमपि तद्बहु ॥

*****
 
9. நிலையுறுதி கொண்டோர்க்கு...

உலகமே தாழ்வாரம் ஆழ்கடல் பொய்கை
பிலமெனும் பாதாளம் சுற்றுலா இன்னும்
நலமிக்க மேரு எறும்புகளின் சிற்றில்
நிலையுறுதி கொண்டா(ர்) இடத்து.

a~ggaNavedI vasudhA kulyA jaladhiH sthalI cha pAtAlam |
vAlmikaH cha sumeruH kRutapratij~jasya dhIrasya ||

अङ्गणवेदी वसुधा कुल्या जलधिः स्थली च पातालम् ।
वाल्मिकः च सुमेरुः कृतप्रतिज्ञस्य धीरस्य ॥

*****

10. நான்முகனுக்கும் அரிது!

கல்லானை இன்புறுத்த(ல்) ஓரெளிய காரியம்
கற்றாரை இன்புறுத்த(ல்) இன்னும் எளிதாகும்
தானெனும் கர்வ(ம்) உடையவனை இன்புறுத்தல்
நான்முக னுக்கும் அரிது.
---பர்த்ருஹரி, நீதி ஶதகம்

अज्ञः सुखमाराध्यः सुखतरमाराध्यते विशेषज्ञः ।
ज्ञानलवदुर्विदग्धं ब्रह्मापि नरं न रञ्जयति ॥
---भर्तृहरि, नीति शतकम्

*****
 
11. செல்வம் நுகர்தல்

பேராசை யின்றிப் பொருளாசை கைக்கொண்டு
நேரான தன்னுழைப்பில் நிற்கும் பொருள்வளம்
ஆரவார மின்றி அமைதியாய் மெல்லமெல்ல
ஆராய்ந்து துய்த்தல் தகும்.

atitRuShNA na kartavyA tRuShNAM naiva parityajeta |
shanaiH shanaishcha bhoktavyaM svayaM vittamupArjitam ||

अतितृष्णा न कर्तव्या तृष्णां नैव परित्यजेत ।
शनैः शनैश्च भोक्तव्यं स्वयं वित्तमुपार्जितम् ॥

*****

12. சந்தன விறகு!

மிகுமாண் பழக்கம் இகழ்ச்சி விளைக்கும்
வெகுவாகச் சந்திக்க வீழும் மதிப்பு
மலயப் பழங்குடிப் பெண்டிர் அடுப்பில்
நலமிகு சாந்த விறகு.
[மிகுமாண்=மிகவும் அதிகமான சாந்தம்=சந்தனம்]

atiparichayAdavaj~jA saMtatagamanAt anAdaro bhavati |
malaye bhillA puraMdhratI chaMdanatarukAShTham iMdhanam kurute ||

अतिपरिचयादवज्ञा संततगमनात् अनादरो भवति ।
मलये भिल्ला पुरंध्रती चंदनतरुकाष्ठम् इंधनम् कुरुते ॥

*****
 
13. அண்மையும் சேய்மையும்

தீங்கே விளையலாம் சார்ந்தே யிருப்பதால்
நீங்கியே நின்றாலோ நன்மையேதும் வாராது
நங்கை நிருபன் நெருப்பு குருவிடம்
நீங்காது அண்டாது நில்.
[நிருபன்=அரசன்]

atyAsannA vinAshAya dUrasthA na phalapradA |
sevyantAM madhyabhAgena rAjA vahNirguru striyaH ||

अत्यासन्ना विनाशाय दूरस्था न फलप्रदा ।
सेव्यन्तां मध्यभागेन राजा वह्णिर्गुरु स्त्रियः ॥

*****

14. துணையில் சிறப்பன

மாணிக்கம் மாற்றி லுயர்ந்த மணியெனினும்
ஆணிப்பொன் சேர்ந்துதான் ஆபரண மாகும்
படர்க்கொடியும் பண்டிதரும் பெண்ணு(ம்) ஒளிர்தல்
உடன்வரும் கூட்டாலே தான்.
[மாற்று=விலை]

anargham api mANikyam hemAshrayam apekShate |
vinA AshrayaM na shobhante paMDitAH vanitAH latAH ||

अनर्घम् अपि माणिक्यम् हेमाश्रयम् अपेक्षते ।
विना आश्रयं न शोभन्ते पंडिताः वनिताः लताः ॥

*****
 
15. புத்தியின் இலட்சணம்

முயற்சியில் காரியம் கைவரா தென்றால்
முயலா திருத்தலே புத்தியின் உச்சி
தெரிந்தே செயலைத் தொடங்கின் முடித்தல்
அறிவின் இரண்டாம் குறி.
[அறிவு=புத்தி, intelligence]

kAryANAm anArambho hi prathamaM buddhi-lakshaNam |
Arabdha kAryasya pUrtaM dvitIyaM buddhi-lakshaNam ||

कार्याणाम् अनारम्भो हि प्रथमं बुद्धि-लक्शणम् ।
आरब्ध कार्यस्य पूर्तं द्वितीयं बुद्धि-लक्शणम् ॥

*****

16. சாத்திரம் எனும் நேத்திரம்

ஐயம் பலவே அகற்றித் தெளிவுறுத்தும்
மெய்யின் மறைபொருள் காட்டி விளக்கிடும்
சாத்திரங்கள் கண்ணாகும் எல்லார்க்கும் -- அத்தகைய
நேத்திரமில் லாதான் குருடு.

aneka saMshayochChedi parokShArthasya darshakam |
sarvasya lochanaM shAstraM yasya nAstyandha eva saH ||

अनेक संशयोच्छेदि परोक्षार्थस्य दर्शकम् ।
सर्वस्य लोचनं शास्त्रं यस्य नास्त्यन्ध एव सः ॥

*****
 
17. தர்மம் தலைகாக்கும்

யாக்கை நிலையிலா தோர்நா(ள்) அழியுமே
ஆக்கமும் நிற்காது செல்வதே யாகும்
மரணமோ நாளும் நெருங்கும் -- எனவே
அறமெனச் செய்வது நன்று.
[ஆக்கம்=செல்வம்]

anityAni sharIrANi, vibhavaH naiva shAshvataH |
nityaM sannihitaH mRutyuH, kartavyaH dharmasaMgrahaH ||

अनित्यानि शरीराणि, विभवः नैव शाश्वतः ।
नित्यं सन्निहितः मृत्युः, कर्तव्यः धर्मसंग्रहः ॥

*****

18. தாயும் தாய்நாடும்

பொன்னார் இலங்கை எனக்கிது என்றுமே
மின்னுவ(து) அன்பான தல்ல இலக்குமணா
அன்னையும் தாய்நாடும் மேலுலகைக் காட்டிலும்
அன்பும் அணியு முடைத்து.

api svarNamayi laMkA na me rochati lakShmaNa |
jananIH janmabhUmishcha svargAtapi garIyasI ||

अपि स्वर्णमयि लंका न मे रोचति लक्ष्मण ।
जननीः जन्मभूमिश्च स्वर्गातपि गरीयसी ॥

இராவணனைக் கொன்றபின் இலக்குவனிடம் இராமன் சொன்னதாகப் புகழ்பெற்ற
மேல்வரும் ஸ்லோகம் வால்மீகி இராமாயணத்தில் காணப்படவில்லை.
எனினும் அதுபோன்ற இன்னொரு ஸ்லோகம் கீழ்வருமாறு வருகிறது.

தோழரும் செல்வமும் தானியமும் மக்களால்
வாழ்த்தி உயர்வாகப் போற்றப் படுவன
அன்னையும் தாய்நாடும் மேலுலகைக் காட்டிலும்
அன்பும் அணியு முடைத்து.
---வால்மீகி இராமாயணம், 6.124.17

mitraaNi dhana dhaanyaani prajaanaaM sammataaniva |
jananI janma bhUmishcha svargAdapi garIyasI || 6-124-17 ||
Ref: Valmiki Ramayana - Yuddha Kanda - Sarga 124 
Valmiki Ramayana - Yuddha Kanda

मित्राणि धन धान्यानि प्रजानां सम्मतानिव ।
जननी जन्म भूमिश्च स्वर्गादपि गरीयसी ॥ ६-१२४-१७ ॥

*****
 
19. தானத்தில் சிறந்தது

அருமையான தானமே அன்னதானம் -- இன்னும்
பெருமையான தானமாகும் கல்வியே -- அன்னத்
திருப்தி கணநேரம் நிற்பது -- கல்வித்
திருப்தியோ வாழ்நாள் வரை.

अन्नदानं परं दानं विद्यादानं अतः परम् ।
अन्नेन क्षणिका तृप्तिः यावज्जीवं च विद्यया ॥

*****
20. உலகம் ஒரு குடும்பம்

அவரோர் அயலார் இவர்நமர் என்று
தவறாது எண்ணுவர் துன்மதி கொண்டோர்
நலமார் மனத்தினர் நாளும் நினைப்பர்
உலகமெலாம் ஓர்குடும்பம் என்று.
[துன்மதி=மூட/கலங்கிய மனம்]

ayaM nijaH paraH vA iti gaNanA laghuchetasAm |
udAracharitAnAM tu vasudhA eva kuTuMbakam ||

अयं निजः परः वा इति गणना लघुचेतसाम् ।
उदारचरितानां तु वसुधा एव कुटुंबकम् ॥

*****
 
21. துன்பத்தின் உறைவிடம்

பாடுபட்டுச் சேர்க்கும் பொழுதிலும் துன்பமே
பாதுகாப்பில் வைக்கும் பொழுதிலும் துன்பமே
துன்பமே செல்வம் வருவதும் போவதும்
துன்பத்தின் பங்கிலென்ன வேட்பு?
---நீதிசாரம் 5

arthanAm-Arjane duHkham arjitAnAM tu rakShaNE |
Aye duHkhaM vyave duHkhaM arthaH kiM-duHkha-bhAjanam ||
---~nItisAraH 5

अर्थनामार्जने दुःखम् अर्जितानां तु रक्षणॆ ।
आये दुःखं व्यवे दुःखं अर्थः किंदुःखभाजनम् ॥
---~नीतिसारः 5

*****

22. வெங்காய குணம்

கற்பூரத் தூளிட்ட கிண்ணத்தில் வைத்துடன்
கஸ்தூரி வாசனை கூட்டியே அத்துடன்
மங்கல அத்தர் துளிபெய்யப் போகுமோ
வெங்காய வாச குணம்?
---நீதிசாரம் 8

kaRpUra-dhUli-kalit-AlavAlE kastUrikA-kalpita-dohala-shrIH |
hima-aMbukA-bhairabhi-ShichyamAnaH prA~jchaM guNaM mu~jchati no palANDuH ||
---~nItisAraH 8

कपूरधूलिकलितालवालॆ कस्तूरिकाकल्पितदोहलश्रीः ।
हिमांबुकाभैरभिषिच्यमानः प्राञ्चं गुणं मुञ्चति नो पलाण्डुः ॥
---~नीतिसारः 8

*****
 
23. கல்வியில் காலும் காலமும்

மாணவன் கல்வியில் கால்பங்கு ஆசானின்
மாணவன் தானே முயல்வது கால்பங்கு
மாணவத் தோழர் தருவது கால்பங்கு
காலத்தின் போக்கினில் கால்.
---நீதிசாரம் 8

AchAryAtpAdamAdattE pAdaM shiShyasvamEdhayA |
pAdaM sabrahmachAribhyaH pAdaM kAlakramENa ||
---~nItisAraH 8

आचार्यात्पादमादत्तॆ पादं शिष्यस्वमॆधया ।
पादं सब्रह्मचारिभ्यः पादं कालक्रमॆण ॥
---~नीतिसारः 9

*****

24. மகளின் திருமணத்தில்...

தந்தை விழைவது மாப்பிள்ளை கல்வியே
அன்னை விழைவது மாப்பிள்ளை செல்வமே
உற்றார் விழைவது மாப்பிள்ளை வம்சம்
மகளோ மணமகன் நோக்கு.
---நீதிசாரம் 10

shrutimichChanti pitarO dhanamichChanti mAtaraH |
bAndhavAH kulamichChanti rUpamichChanti kayyakA ||
---~nItisAraH 10

श्रुतिमिच्छन्ति पितरॊ धनमिच्छन्ति मातरः ।
बान्धवाः कुलमिच्छन्ति रूपमिच्छन्ति कय्यका ॥
---~नीतिसारः 10

*****
 
25. நஞ்சுள்ள அங்கம்

கொடுந்தேளின் நஞ்சு கொடுக்கிலே -- பூக்கண்
படுந்தேனீ நஞ்சு தலையிலே -- நாயகன்
தீவேள்வி தப்பிய தட்சனுக்குப் பல்லிலே
தீங்கிழைப்போர் மேனியெங்கும் நஞ்சு.
---நீதிசாரம் 11

[தட்சன்=மன்னன் பரீக்ஷித்தைக் கொன்ற நாகர் தலைவன்
நாயகன்=மன்னன், இங்கு ஜனமேஜயன்]

vRushchikasya viShaM puchChaM makShikAyAH viSham shiraH |
takShakasya viShaM dantaM sarvaMgaM durjayasya cha ||
---~nItisAraH 11

वृश्चिकस्य विषं पुच्छं मक्षिकायाः विषम् शिरः ।
तक्षकस्य विषं दन्तं सर्वंगं दुर्जयस्य च ॥
---~नीतिसारः 11

*****

26. வல்லமை எல்லை

வண்ணப் பறவைக்கு வானமே வல்லமை
தண்ணீரே மீனின் திறலாம் -- நலிவுற்று
வாடும் வறியோர்க்கு வல்லமை வேந்தனே
வாய்விட்(டு) அழுதல் சிறார்க்கு.
---நீதிசாரம் 12

पक्षीणां बलमाकाशं मत्यस्यानामुदकं बलम् ।
दुर्बलस्य बलम् राजा बालानां रॊदनं बलम् ॥
---~नीतिसारम् 11

pakShINAM balamAkAshaM matyasyAnAmudakaM balam |
durbalasya balam rAjA bAlAnAM rOdanaM balam ||
---~nItisAram 11

*****
 
27. வெல்லும் வழிகள்

உண்மையால் வெல்க உலகம் முழுவதும்
வண்மையால் வெல்க வறியாரை -- தாழ்ந்த
பணிவிடையால் வெல்க பெரியோரை -- மாற்றான்
துணிவுள்ள வில்லாண்மை யால்.
---நீதிசாரம் 20
[வண்மை=ஈகைக்குணம்]

satyena lokaM jayati dAnairjayati dInatAm |
gurUn shushrUShayA jIyAddhanuShA eva shAtravAn ||
---~nItisAraH 20

सत्येन लोकं जयति दानैर्जयति दीनताम् ।
गुरून् शुश्रूषया जीयाद्धनुषा एव शात्रवान् ॥
---~नीतिसारः 20

*****

28. தந்தையர் ஐவர்

பிள்ளையைப் பெற்றவர் தந்தையெனில் பிள்ளையைப்
பள்ளியில் சேர்ப்பவர் பாடம் பயிற்றுவோர்
அன்னமிட்டார் அச்சமறக் காப்பவர் ஐவரும்
ஆவாரே தந்தைக்கு ஒப்பு.
---நீதிசாரம் 22

janitA chopanetA cha yastu vidyAM prayachChati |
annadAtA bhayatrAtA pa~jchaitE pitarasmRutAH ||
---~nItisAraH 22

जनिता चोपनेता च यस्तु विद्यां प्रयच्छति ।
अन्नदाता भयत्राता पञ्चैतॆ पितरस्मृताः ॥
---~नीतिसारः 22

*****
 
அன்பு சாய்தெவோ ந்ண்பரே!! தங்களின் இந்த மொழி பெயர்ப்பு, மிகவும் அற்புதம். ஒவ்வொரு தலைப்பும் கீழே வரும் பாடல்களும் உங்களின் தமிழ் மொழியின் ஆளுமையை அழகாக வெளிக்கொண்டு வருகின்றது.

Cheers
 
29. தாயார் ஐவர்

பெற்றதாய் மட்டுமல்ல கற்பித்தார் இல்லாளும்
கொற்றவன் நாயகியும் மூத்தோன் மனைவியும்
தன்னில்லாள் தாயுமென் றைந்துவகை நங்கையரை
உன்னுவரே தாய்க்கு நிகர்.
---நீதிசாரம் 22

gurupatnI rAjapatnI jyeShThapatnI tathaiva cha |
patnImAtA svamAtA cha pa~jchaitE mAtarasmRutAH ||
---~nItisAraH 23

गुरुपत्नी राजपत्नी ज्येष्ठपत्नी तथैव च ।
पत्नीमाता स्वमाता च पञ्चैतॆ मातरस्मृताः ॥
---~नीतिसारः 23

*****

சம்ஸ்க்ருத அறவுரைகள் தமிழ் நீதிப் பாடல்களில்

1. விலகிச் செல்லும் வகைகள்

கொம்புளதற்கு ஐந்து குதிரைக்குப் பத்து முழம்
வெம்புகரிக்கு ஆயிரந்தான் வேண்டுமே--வம்புசெறி
தீங்கினர்தம் கண்ணில் தெரியாத தூரத்து
நீங்குவதே நல்ல நெறி.
--நீதிவெண்பா ௨0

’ஶகடம்’ எனும் சம்ஸ்க்ருதச் சொல்லுக்கு ’வண்டி, வாகனம், தேர்’ என்று பொருள்.
நீதிவெண்பாப் புலவர் இங்கு ’கொம்பு’ என்று வேறு சொல்லையும் பொருளையும் பயன்படுத்தியுள்ளார்.

shakaTaM pa~jchahasteShu tashahasteShu vAjitam |
gajaM hastasahasreShu durjanaM dUratastyajet ||
---~nItisAraH 24

शकटं पञ्चहस्तेषु तशहस्तेषु वाजितम् ।
गजं हस्तसहस्रेषु दुर्जनं दूरतस्त्यजेत् ॥
---~नीतिसारः 24

*****
 
30. கேடுகள் ஐந்து

வறுமையில் இல்லாள் இருவரும் சாலை
வரும்வழியில் வீடும் விளைநில ஊர்கள்
இருவேறும் நீதிமன்ற சாட்சிஜாமீன் ஐந்தும்
உறுவது தன்செயலால் தான்.
---நீதிசாரம் 29

daritratvE dvibhAryAtvaM pathikShetraM kRuShidvayam |
prAtibhAyya~jcha sAkShitvaM pa~jchAnarthAH svayaMkRutAH ||
---~nItisAraH 29

दरित्रत्वॆ द्विभार्यात्वं पथिक्षेत्रं कृषिद्वयम् ।
प्रातिभाय्यञ्च साक्षित्वं पञ्चानर्थाः स्वयंकृताः ॥
---~नीतिसारः 29

*****

31. முன்னிற்கும் தேவைகள்

ஆடை அலங்காரம் செய்வதில் முன்னிற்கும்
ஆவின்நெய் ஆகாரம் முன்னிற்கும் -- நங்கைக்கு
நற்குணம் முன்னிற்க வேண்டுமே -- பண்டிதர்க்குக்
கற்றறிந்த கல்வியே முன்.
---நீதிசாரம் 33

vastramukhyamalaMkAraM dhRutamukhyamantu bhOjanam |
guNamukhyamantu nArINAM vidyA mukhyastru paNDitaH ||
---~nItisAraH 33

वस्त्रमुख्यमलंकारं धृतमुख्यमन्तु भॊजनम् ।
गुणमुख्यमन्तु नारीणां विद्या मुख्यस्त्रु पण्डितः ॥
---~नीतिसारः 33

*****
 
32. மெல்ல மெல்ல வளர்வன

எறும்புகளின் புற்றுமண்ணும் தேன்கூட்டில் தேனும்
பிறைவளர் சந்திரனும் பார்த்திபனின் சீரும்
இறைஞ்சிப் பிச்சைபுக்கு உண்ணும் உணவும்
சிறிது சிறிதே மிகும்.
---நீதிசாரம் 34
[சீர் என்ற சொல்லுக்குச் செல்வம் என்றும் பொருளுண்டு--பிங்கள நிகண்டு]

vAlmIkaM madhuhArashcha pUrvapakShE tu chaMdramA |
rAjadravya~jcha bhaikSha~jcha stOkastOkena vardhatE ||
---~nItisAraH 34

वाल्मीकं मधुहारश्च पूर्वपक्षॆ तु चंद्रमा ।
राजद्रव्यञ्च भैक्षञ्च स्तॊकस्तॊकेन वर्धतॆ ॥
---~नीतिसारः 34

*****

33. சுற்றம் ஆறு பேர்

உண்மையே அன்னை உள்ளறிவு தந்தை
வண்மை சகோதரன் காருண்யம் தோழனே
தாரமே அமைதி பொறுமை மகனென்று
ஆறு சுற்றம் எனக்கு.
---நீதிசாரம் 35

satyam mAtA pitA ~jAnaM dharmO bhrAtA dayA sakhI |
shAntiH patnIH kShamA putraH ShaDamI mama bAndhavA ||
---~nItisAraH 35

सत्यम् माता पिता ञानं धर्मॊ भ्राता दया सखी ।
शान्तिः पत्नीः क्षमा पुत्रः षडमी मम बान्धवा ॥
---~नीतिसारः 35

நேர்பொருள்:
உண்மை அன்னை தந்தை ஞானம் தர்மம் சகோதரன் தயை தோழன் |
அமைதி மனிவி பொறுமை மகன் அறுவகை எனது உறவினர் ||

*****
 
34. கூட வருவன

உடைமைகள் செல்வம் உறையுளுடன் நிற்கும்
சுடுகாடு மீளுவர் சுற்றமும் மக்களும்
நல்வினை தீவினை மட்டுமே கூடவரும்
நல்லுயிர் நீங்கிடும் போது.
---நீதிசாரம் 40

arthAH gRuhE nivartantE shmashAnE putrabAndhavAH |
sukRutaM duShkRuta~jchaiva gachChantamanugachChati ||
---~nItisAraH 40

अर्थाः गृहॆ निवर्तन्तॆ श्मशानॆ पुत्रबान्धवाः ।
सुकृतं दुष्कृतञ्चैव गच्छन्तमनुगच्छति ॥
---~नीतिसारः 40

*****

35. பிள்ளை வளர்ப்பு

இளம்கோ இளவயதில் ஐந்துவரை -- பின்னர்
உளமறிந்து செய்பணியில் ஊழியனாம் பத்தாண்டு
பத்தாறு ஆண்டுகள் ஆனாலோ பிள்ளையை
மித்திரன் என்றே நடத்து.
---நீதிசாரம் 43

rAjavatpa~jchavarShANi dashavarShANi dAsavat |
prApte tu ShoDaShe varShe putraM mitravadAcharet ||
---~nItisAraH 40

राजवत्पञ्चवर्षाणि दशवर्षाणि दासवत् ।
प्राप्ते तु षोडषे वर्षे पुत्रं मित्रवदाचरेत् ॥
---~नीतिसारः 40

*****
 
36. பெயரளவில் பயன்

புத்தகத்தில் கட்டுண்(டு) கிடந்திடும் கல்வியும்
பத்திரமாய் வேறோர்கை யுள்ளநம் சொத்தும்
அயல்நாடு சென்றுவிட்ட அன்பு மகனும்
பெயரளவில் மட்டும் பயன்.
---நீதிசாரம் 50

pustakasthApitA vidyA parahastagataM dhanam |
deshAntaragataH putraH nAmamAtramupAcharet ||
---~nItisAraH 50

पुस्तकस्थापिता विद्या परहस्तगतं धनम् ।
देशान्तरगतः पुत्रः नाममात्रमुपाचरेत् ॥
---~नीतिसारः 50

*****

37. ஈயாதான் வள்ளல் ஈந்தவன் கஞ்சன்!

இறக்கும் சமயம் துறப்பதால் எல்லாம்
பிறர்க்கேதும் ஈயாதான் வள்ளல் -- இறப்பில்
வறியார்க் களித்த பலன்பெற்றுச் செல்வதால்
வள்ளல் உலோபியென லாம்.
---நீதிசாரம் 62

adAtA puruShastyAgI danaM saMtyajya gachChati |
dAtAraM kRupaNaM manye mRuto&pyarthaM na mu~jchati ||
---~nItisAraH 62

अदाता पुरुषस्त्यागी दनं संत्यज्य गच्छति ।
दातारं कृपणं मन्ये मृतोऽप्यर्थं न मुञ्चति ॥
---~नीतिसारः 62

*****
 
ஸாயிதெவோ நண்பரே, ஒவ்வொரு பாடலுக்கும் ஒரு வரியில் அர்த்தமும் ஸேர்த்து எழுதினால் இன்னும் அற்புதமாக இருக்கும். முடியுமா?..பாடல் 30க்கும், நீதிப்பாடல் 1க்கும், விரிவான அர்த்தம் எழுதினால் நன்றாக இருக்கும். அர்த்தம் புரிந்தாலும் உங்களின் எழுத்தில் அது இன்னும் நன்றாக இருக்கும் என்பதால் இந்த வேண்டுகோள். மிக்க நன்றி.
 
38. செல்வம் அழிவது...

தெய்வத் திருப்பணி தன்சுற்றம் சான்றோர்
சுயகார்யம் என்று செலவிடாச் செல்வமே
நீரால் பகையால் நிருபனால் கள்வரால் ... ... ... [நிருபன்=அரசன்]
சீர்கெட் டழிந்து விடும்.
---நீதிசாரம் 65

na devebhyo na viprebhyo na bandhubyo na chAtmanE |
jalArinRupachorebhyo nishchayaM dhananAshanam ||
---~nItisAraH 65

न देवेभ्यो न विप्रेभ्यो न बन्धुब्यो न चात्मनॆ ।
जलारिनृपचोरेभ्यो निश्चयं धननाशनम् ॥
---~नीतिसारः 65

*****

39. அறவோர் அருங்குணம்

குயிலின் அருங்குணம் கூவும் குரலே
மயிலன்ன மங்கையின் நற்பண்பு கற்பே
அறமொழுகும் சான்றோர் அருங்குணம் கல்வி
துறவிக்கு நோன்மையே பண்பு. ... ... ... [நோன்மை=பொறுமை, சகிப்புத்தன்மை]
---நீதிசாரஃ 68

kokilAnAm svaraM rUpaM nArIrUpaM pativratA |
vidyArUpashcha viprANAM kShamArUpaM tapasvinAm ||
---~nItisAraH 68

कोकिलानाम् स्वरं रूपं नारीरूपं पतिव्रता ।
विद्यारूपश्च विप्राणां क्षमारूपं तपस्विनाम् ॥
---~नीतिसारः 68

*****
 
40. தீயோரின் மூன்று இலட்சணம்

தாமரைப் பூப்போல் திகழும் வதனமும்
சாமான்யப் பேச்சினில் சந்தனத் தண்மையும்
தீயாய் எரியும் திருட்டு இதயமும்
தீயோர் இலட்சணம் மூன்று.
---நீதிசாரம் 69

mukham padmadalAkAraM vachanashchandanashItalam |
hRudayaM vahnisantaptaM trividhaM duShTalakShaNam ||
---~nItisAraH 69

मुखम् पद्मदलाकारं वचनश्चन्दनशीतलम् ।
हृदयं वह्निसन्तप्तं त्रिविधं दुष्टलक्षणम् ॥
---~नीतिसारः 69

*****

41. தென்னைபோன்ற நல்மனத்தோர்
(பலவிகற்ப பஃறொடை வெண்பா)

இளங்கன்றாய்த் தானுண்ட தண்ணீர் நினைந்து
வளர்ந்து தலைதாங்கும் காய்ச்சுமையின் தீஞ்சுவைநீர்
வாழ்நாள் முழுதும் வழங்கிடும் தென்னைபோல்
வாழ்வில் தமக்களித்த நன்றியை நல்மனத்தோர்
என்றும் இருப்பர் நினைத்து.
---நீதிசாரம் 70

prathamavayasi dattaM toyamalpaM smarantaH
shirasi nihitabhArA nALikerA narANAm |
salIlamamRutakalpaM dadyurAjIvanAntam
na hi kRutamupakAraM sAdhavo vismaranti ||
---~nItisAraH 70

प्रथमवयसि दत्तं तोयमल्पं स्मरन्तः
शिरसि निहितभारा नाळिकेरा नराणाम् ।
सलीलममृतकल्पं दद्युराजीवनान्तम्
न हि कृतमुपकारं साधवो विस्मरन्ति ॥
---~नीतिसारः 70

*****
 
42. ஒளிரும் இயல்புகள்
(பலவிகற்ப பஃறொடை வெண்பா)

மதத்தால் ஒளிருமே யானை முகில்நீர்ப்
பதத்தாலே வானம் முழுமையால் வெண்ணிலவு
நற்குணத்தால் நங்கை விரைவால் குதிரையே
உற்சவத்தால் கோவில் இலக்கணத்தால் சொல்வன்மை
நன்மகனால் தன்குலம் மன்னனால் தன்நாடு
அன்னத்தால் ஆறுகளும் ஆன்றோரால் பேரவையே
மூவுலகம் மின்னிட பானு.
---நீதிசாரம் 74
[பானு=சூரியன்]

nAgo bhAti madena khaM jaladharaiH pUrnendunA sharvarI
shIlena pramadA javena turago nityotsavairmandiram |
vANI vyAkaraNanena haMsAmithunainadyaH sabhA paNDitaiH
satputreNa kulaM nRupeNa vasudhA lokatrayaM bhAnunA ||
---~nItisAraH 74

नागो भाति मदेन खं जलधरैः पूर्नेन्दुना शर्वरी
शीलेन प्रमदा जवेन तुरगो नित्योत्सवैर्मन्दिरम् ।
वाणी व्याकरणनेन हंसामिथुनैनद्यः सभा पण्डितैः
सत्पुत्रेण कुलं नृपेण वसुधा लोकत्रयं भानुना ॥
---~नीतिसारः 74

*****

43. தீயோர் நல்லோர் செயல்கள்

கல்வியெனில் வீண்வாதம் செல்வமெனில் கேளிக்கை
அல்லல் விளைத்திடத் தம்வலிமை தீயோர்க்கு;
நல்லோர்க்கோ கல்விஞானம் செல்வதானம் அத்துடன்
வல்லமை காப்பதற் கே.
---நீதிசாரம் 79

vidyA vivAdAya dhanaM madAya shaktiH paralokanipIDanAya |
khalasya sAdhOrviparItametad j~jAnam dAnAya cha rakShaNAya ||
---~nItisAraH 79

विद्या विवादाय धनं मदाय शक्तिः परलोकनिपीडनाय ।
खलस्य साधॊर्विपरीतमेतद् ज्ञानम् दानाय च रक्षणाय ॥
---~नीतिसारः 79

*****
 
vaNakkam Manohar.

I may not be able to capture the meaning of each song in a single line, which is why I have tried to provide expressive captions. As for the explanations required, I shall post them soon, possibly with the revised versions of the veNpAs.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top