• Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன்

Status
Not open for further replies.
வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன்

soas+valluvar.jpg

Picture: Tamil Poet Valluvar's Statue at SOAS, University of London


பொய்யா மொழிப் புலவன் திருவள்ளுவன் ஒரு பெரிய சம்ஸ்கிருத அறிஞன். அவன் செய்த திருக்குறள் போல வேறு எம்மொழியிலும் நூல் இல்லை. இனி ஒரு காலத்திலும் இவ்வளவு அழகாக ஒரு புலவர் செய்ய முடியுமா, அப்படியே செய்தாலும் அதை வள்ளுவனை ஏற்றார் போல உலகம் ஏற்குமா என்பதெல்லாம் கேள்விக்குறியாகவே தொக்கி நிற்கும். இப்படி வான் புகழ் பெற்று தேன் தமிழில், தென் தமிழில், தெள்ளு தமிழில் குறள் செய்த வள்ளுவன் தமிழில் ஒரு அமைதிப் புரட்சியையும் செய்தான். தமிழில் முதல் தடவையாகத் துணிந்து சம்ஸ்கிருதத்தைப் புகுத்தினான். அதனால் தமிழ் அழகு பெற்றதே அன்றி சோபை குன்றவில்லை. மொழியைக் கெடுக்காமல், அளவோடு செய்தான். நம் காலத்தில் பாரதியார் செய்ததைப் போல.


வள்ளுவப் பெருமான், பகவத் கீதையைக் கரைத்துக் குடித்திருப்பாற் போலத் தோன்றுகிறது. ஏனெனில் தானம்,தவம் என்ற சொற்றொடரும் குணம் என்ற சொல்லும் சமன் என்ற சொல்லும் பகவத் கீதையில் ஏராளமான ஸ்லோகங்களில் வரும். தமிழில் தைரியமாக இப்படி சம்ஸ்கிருதச் சொற்களுடன் வேறு யாரும் கவிதையையோ பாடலையோ துவக்கியதில்லை.
கீதையில் தானம்,தவம் என்ற 2 சொற்களும் சேர்ந்தே வரும் (கீதை 10-5, 16-1,17-7,17-28,18-5; கீதையில் 14ஆவது அத்யாயம் குணத்ரய விபாக யோகம். ஒவ்வொரு செய்யுளிலும் குணம் என்ற சொல் வருகிறது. அதே சொல்லுடன் தவங்கும் ஸ்லோகமும் உண்டு. சமம் என்ற சொல்லுடன் கீதையில் குறைந்தது ஆறு ஸ்லோகங்களாவது துவங்குகின்றன. இதை எல்லாம் பார்க்கையில் அவர் குறளை எட்டுக்கட்டும்போது அவரை அறியாமலே இந்தச் சொற்கள் பீறிட்டெழுந்திருக்க வேண்டும்.


வள்ளுவன் கையாண்ட பல கருத்துக்கள் வடமொழி நூல்களான பர்த்ருஹரியின் சதகங்கள், மனுதர்ம சாஸ்திரம், கீதை, தம்மபதம் ஆகியவற்றில் இருப்பதைச் சுட்டிக்காட்டி நிறைய கட்டுரைகள் வந்துவிட்டதால் அவைகளைத் திரும்பச் சொல்லப் போவதில்லை.
‘தானம் தவம் இரண்டும்’ (குறள் 19, 295) என்றும், ‘குணம் என்னும் குன்று ஏறி’ என்றும் ‘சமன்’ செய்து என்றும் துணிவாகச் சம்ஸ்கிருதச் சொற்களுடன் குறளைத் துவக்குகிறார். முதல் குறளிலேயே அ’கரம்’, ‘ஆதி பகவன்’ என்றும் அடித்து நொறுக்குகிறார். இந்தத் துணிவு இவர் ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்ததால்தான் வந்தது. மனம், கருமம், காமம்,தெய்வம், முகம் போன்ற சம்ஸ்கிருதச் சொற்களுடன் இன்னும் நிறைய குறள்களைத் துவக்குகிறார். இவருக்குப் பின் வந்த நாயன்மார்களும், ஆழ்வார்களும் ஏராளமான வட மொழிச் சொற்களைப் பயன்படுத்த வள்ளுவனே வழி வகுத்தான் போலும்.


வள்ளுவன் உள்ளத்தால் பொய்யாதொழுகிய உத்தமன். அதனால்தான் அவன் உலகத்தாற் உள்ளத்துள் எல்லாம் உளன். அவனுக்கு வட மொழி தென் மொழி என்ற காழ்ப்புணர்ச்சி இல்லை. இரு மொழியும் இரு கண்கள் என்பதை உணர்ந்த பெரியோன் அவன். யாராவது திருக்குறளில் இருந்து வடமொழிச் சொற்களை எடுத்தால் அது செல்லரித்துப் போன ஏடு போல, வைரஸ் பாதிப்புக்குள்ளான ‘சாFட்வேர்’ போல ஆகிவிடும்.


தொல்காப்பியத்திலும், சங்க இலக்கியத்திலும் வட மொழிச் சொற்கள் இல்லாமல் இல்லை. நக்கீரர் கூட ‘உலகம்’ (லோக) என்ற வடமொழிச் சொல்லோடு திருமுருகாற்றுப் படையைத் துவக்குகிறார். சிறுபாணாற்றுப் படை, ‘மணி’மலை என்று துவங்குகிறது. ஆனால் இவ்விரு நூல்களும் பிற்காலத்தில் எழுந்தவை என்பது சில ஆராய்ச்சியாளரின் கருத்து. சிறுபாணாற்றுப்படை, கடை எழு வள்ளல்களை வரிசைப்படுத்தி உரைப்பதால், இப்படி ஏற்பட கபிலர் பரணர் காலத்திலிருந்து 200, 300 ஆண்டுகளாவது ஆயிருக்கும். ஆனால் தொல்காப்பியர், வள்ளுவர், இளங்கோ ஆகிய மூவரும் ஒரே காலத்தில் வாழ்ந்ததால்தான் “அதிகாரம்” என்ற சொல்லை மூவரும் தங்கள் நூல்களில் பயன்படுத்தினர். (காண்க என் கட்டுரை: தொல்காப்பியர் காலம் தவறு)


அதிகாரம் என்ற சொல்லைக் கருத்திற் கொண்டால் வள்ளுவன் சம்ஸ்கிருத் சொற்களைப் பயன்படுத்தாத அதிகாரமே இல்லை! ஒவ்வொரு அதிகாரத்திலும் சம்ஸ்கிருதச் சொற்களைக் குறள்களிலும் காண்கிறோம். நான் ‘ஹைலைட்டரை’க் கொண்டு வடமொழிச் சொற்களை ‘ஹைலைட்’ செய்தபோது எல்லா பக்கங்களிலும் வடமொழிச் சொற்கள் இருப்பதைக் கண்டேன்.
வள்ளுவனுக்கு பகவத் கீதை அத்துபடி என்பதற்கு இன்னும் ஒரு சான்றும் இருக்கிறது. கீதையில்:

“ப்ரஹ்மார்ப்பணம் ப்ரஹ்மஹவிர் ப்ரஹ்மாக்னௌ ப்ரஹ்மனாஹுதம்
ப்ரஹ்மைவ தேன கந்தவ்யம் ப்ரஹ்மகர்ம சமாதினா” (4-24)

என்று ஒரு ஸ்லோகம் வருகிறது. இதே போல உபநிஷதத்தில்

“பூர்ணமதப் பூர்ணமிதப் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவா வஷிஷ்யதே” –என்று ஒரு மந்திரம் வருகிறது. இதே ‘ஸ்டைலில்’—பாணியில்-- வள்ளுவனும்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை ----(குறள் 12) என்று பாடுகிறான். முன் எவரும் இப்படிச் செய்ததில்லை.

tiruvalluvar-at-soas-university-of-london.jpg


The Opening Ceremony took place on 13th May 1996. Dr L M Singhvi, High Commissioner of India in grey suit is at left extreme, Dr Stuart Blackburn in grey suit is in the middle and I am (London Swaminathan, author of this article) at the far right in the picture.


வடமொழிச் சொற்பட்டியல்

வள்ளுவர் பயன்படுத்திய வடமொழிச் சொற்கள் பட்டியலை தமிழ் பேரறிஞர் வையாபுரிப் பிள்ளை அளிக்கிறார். அத்தோடு வள்ளுவர் பயன்படுத்தும் புதிய தமிழ் இலக்கண அமைப்புகளும் அவர் எக்காலத்தவர் என்பதை காட்டிவிடுகிறது.வள்ளுவர் 137 வட மொழிச் சொற்களைப் பயன்படுத்துகிறார். ஒவ்வொரு சொல்லையும் பலமுறை பயன்படுத்தும் போது இது பன்மடங்கு அதிகரிக்கும்.:


அகரம், அச்சு, அதி, அவி, அந்தம், அமிர்தம், அங்கணம், அரங்கு, அமர், அமரர், அமைச்சு, அரங்கு, அரண், அரசர், அவம்,அவலம், அவை, ஆசை, ஆகுலம், ஆசாரம், ஆதி, ஆணி, ஆயிரம், ஆயம், இசை, இந்திரன், இமை, இரா, இலக்கம்,உரு, உருவு, உலகு, உல்கு, உவமை, உறு, ஏமம், ஏர், கஃசு, கருமம், கணம், கணிச்சி, கதம்,காந்து, கலுழும், கவரி, கவுள், கழகம், களம், களன், கனம், காரிகை,கானம், காமம், காரணம், காமன், காலம், குணம், குடங்கர், குலம், குவளை, கூர், கூகை, கொக்கு, கோடி, கோட்டி, கோட்டம், சலம், சமன்,சிவிகை,சுதை,சூது,சூதர் , தகர், தண்டம், தவம், தானம், தாமரை, திண்மை, திரு, துகில், துலை,தூது, தெய்வம், தேயம், தேவர்,தொடி, தோட்டி, தோணி, தோள், நத்தம், நயம், நாகம், நாவாய், நாகரிகம், நாமம், நிச்சம், நீர், நுதுப்பேம்,பகவன், பக்கம், பகுதி, படாம், படிவத்தர், பதம், பயன், பரத்தன், பண்டம்,பளிங்கு, பள்ளி, பாக்கியம்,பாகம், பாவம்,பாவி, பூரியர்,பூசனை. புருவம், பூதம், பீழிக்கும் ,பீழை, புருவம், பூசனை, பூதங்கள் பேடி, பேய், மங்கலம், மடமை, மதலை, மயிர், மயில், மனம், மந்திரி, மணி, மதி, மா, மாடு, மாதர், மாத்திரை, மாயம், மானம், மீன், முகம், யாமம், வஞ்சம், வண்ணம்,வளை, வாணிகம், வித்தகர்


பொய்யாமொழியைச் சுற்றி ஒரே பொய் மூட்டைகள்!!!
வள்ளுவன் காலம் அவன் பயன்படுத்தும் வடமொழிச் சொற்களாலும், புதிய சொற்றொடர்களாலும், பிற்கால இலக்கணத்தாலும் நன்கு தெரிந்த பின்னரும், இதை வையாபுரியார் முதற்கொண்டு பல அறிஞர் பெருமக்கள் எடுத்துக்காட்டிய பின்னரும், சிலர் ‘கட்டைப் பஞ்சாயத்து’ முறையில் வள்ளுவனை கி.மு.31 என்று முத்திரை குத்தியது பொய்யாமொழிப் புலவனையே அவமானப் படுத்துவதாகும். இது தொடர்பான பழைய மகாநாட்டில் காரசார விவாதங்கள் நடந்து வெளிநடப்பு நடந்தபின்னர் ஒரு கோஷ்டி இப்படி வள்ளுவருக்குப் பொய்க் காலம் போட்டுக் கொடுத்தது. இதை வள்ளுவனே மன்னிக்கமாட்டான்.
வள்ளுவன் பெருமை அவன் வாழ்ந்த காலத்தால் அல்ல. அவன் எழுதிய நூலால்தான். இன்று வள்ளுவன் இப்படி ஒரு நூல் எழுதியிருந்தாலும் இந்தியாவிலேயே அவன் ஒருவன் தான் இப்படிப்பட்ட சாதனையைச் செய்தவனாக இருந்திருப்பான். ஏற்கனவே நேர்மையற்ற அரசியல்வாதிகள் எல்லாம் அவன் குறளை மேடை தோறும் முழக்கி அவனை மஹாத்மா காந்தியைப் போல மதிப்பு இல்லாமல் நகைப்புக்குரியவராகச் செய்துவிட்டார்கள். அவன் வாழ்ந்த காலம் பற்றிய மோசடியையாவது மாற்றி உண்மையைச் சொன்னால் அவனுக்கு ஆத்ம சாந்தியாவது ஏற்படுமே.

மொழியியல் ரீதியில் வள்ளுவனை கி.மு.வில் வைக்க முடியாது. அப்படி வைத்தால் சங்க இலக்கியம் முழுவதையும் கி.மு 4 அல்லது 5ஆம் நூற்றாண்டுக்குத் தள்ள வேண்டியிருக்கும். அதுவும் முடியாது. கடல் வணிகம் பற்றிய சங்க இலக்கிய குறிப்புகளும் ரோமானிய ,கிரேக்க எழுத்தர் குறிப்புகளும் சங்க இலக்கியத்தை முதல் மூன்று (கி.பி) நூற்றாண்டுகள் தான் என ஐயம் திரிபு அற முடிவு செய்துவிட்டன (காண்க கனக சபைப் பிள்ளை, டாக்டர் இரா.நாகசாமி, கமில் சுவலெபில் நூல்கள்)

வள்ளுவன் வடமொழி வாசகத்துடன் பாடலைத் துவக்கியதோடு நிற்காமல் ஆங்காங்கே சில சம்ஸ்கிருதச் சொற்றொடர்களுக்கு அருமையான மொழிபெயர்ப்பும் செய்திருக்கிறான். சினம் பற்றிய அதிகாரத்தில் ‘சேர்ந்தாரைக் கொல்லி ‘என்ற சொல் ‘ஆஸ்ரயாச:’ என்பதன் தமிழாக்கம். தாமரைக் கண்ணன் என்பது கமலநயன, அரவிந்தாக்ஷன் என்பதன் தமிழாக்கம். தர்ம,அர்த்த,காம (அறம், பொருள், இன்பம்) என்ற இந்து மதக் கோட்பாடுகளுடன் இந்திரன் முதலாக பல்வேறு இந்துக் கடவுளரையும் குறிப்பிடுகிறார்.

வள்ளுவனின் வேறு சில அழகான மொழிபெயர்ப்பு:சம்சார சாகரம்=பிறவிப் பெருங்கடல்,அஹங்காரம்,மமகாரம்=யான்,எனது என்னும் செருக்கு, ரிக்வேதத்தில் வரும் கவீம் கவீனாம்=நூலாருல் நூல் வல்லான், கீதை ஸ்லோகம் உத்தரேத் ஆத்மநாத்மானம்= உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல், தர்மோ ரக்ஷதி ரக்ஷித:= அல்லவை தேய அறம் பெருகும்.
வள்ளுவர் “இந் நான்கும்”, “இம்முன்றும்” என்று சொல்லுவதும் வட மொழி அணுகுமுறை. பழந்தமிழ் நூல்களில் காணப்படா.


கடவுள் வாழ்த்தில் உள்ள பத்து பாக்களில் ஏழு குறள்களில் இறைவனுக்கு பாத நமஸ்காரம் செய்கிறார் (அடி போற்றுதல், தாள் வணங்குதல்). இது சம்ஸ்கிருத நூல்களில் தடுக்கி விழுந்தால் பார்க்கக்கூடியது. (Please read my post WHY DO HINDUS WORSHIP SHOES?).
கோடி என்ற வடமொழிச் சொல்லை இவர் பயன்படுத்திய அளவு வேறு எந்த பழந்தமிழ் கவிஞனும் பயன்படுத்தியிருக்க மாட்டான். சின்னக் குழந்தை சொல்லும் வடமொழி ஸ்லோகத்தில் கூட “சூர்யகோடி சமப்ரபா” என்ற வடமொழி வாசகம் வரும்
.
வேறு யாரும் சொல்லாத இன்னொரு விஷயம். வள்ளுவர் பஞ்ச தந்திரக் கதைகளையும் நன்கு படித்தவர் என்பது குறள்கள் 273, 274, 277, 481, 495, 633 முதலியவை மூலம் தெரிகிறது.

வாழ்க வள்ளுவன் புகழ். வளர்க வாய்மை, பொலிக தூய்மை!
 
அண்மைக்காலமாகத் தான் இங்கு
தாண்டவம் ஆடுகிறது மொழி வெறி!

பண்டைக் காலத்தில் தமிழ் அறிஞர்கள்.
கண்களாகவே போற்றி வந்துள்ளனர்

வடமொழி தமிழ் மொழி இரண்டையும்.
திடமாகக் கூறுவேன் இதை என்றும்.

"குறளும், கீதையும்" பற்றிக் பேசுவார்
குறைவின்றி ஒரு நல்ல சுவாமிகள்.

நானே கேட்டு வியந்தது உண்டு அந்த
நல்ல கருத்துக்களின் ஒற்றுமையை.
 
நீங்கள் சொல்லுவது முற்றிலும் சரியே. இப்போதும் கூட தேனி சித்பவானந்த ஆஸ்ரம சுவாமிகள் ஸ்ரீ ஓம்காரானந்தா அருமையான தமிழில் குறளையும் கீதையையும் ஒப்பிட்டுப் பேசிவருகிறார். ராஜாஜி அவர்கள் ஸ்வராஜ்யா பத்திரிக்கையில் குறளும் கீதையும் என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் எழுதி வந்ததாக ஞாபகம். ராமகிருஷ்ண மடத்தின் கீதை மொழிபெயர்ப்பில் அண்ணா அவர்கள் ஆங்காங்கே கீதையை மேற்கோள் காட்டுகிறார். சுவாமி சித்பவானந்த சுவாமிகள் அந்தர்யோக நிகழ்ச்சிகளிலும் இதைக் கேட்டிருக்கிறேன். தமிழர்கள் அதிர்ஷ்டசாலிகள். இரண்டையும் ஒப்பிட்டு அதிக ஞானம் பெறலாம்.
 
ஐயா

தங்களின் அளப்பறிய மொழி அறிவை மதிக்கின்ற அதே நேரத்தில் தங்களின் வயதிற்கும் அனுபவத்திற்கும் தாள் வணங்குகிறேன்.
உங்களுக்குத் தெரியாதது எதுவும் இல்லை. இருந்தும் இங்கு என் கருத்தைப் பதியலாமா வேண்டாமா என்ற ஆழ்ந்து சிந்தித்ததற்கு கிடைத்த விடை; பதிந்து விடுவோம்- பிறகு ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக் கொள்ளாததும் அவரவர் விருப்பமே என்று விட்டுவிடுவோம் என்பதே.

வள்ளுவன் எந்த இனம் மொழி சார்ந்தவன் என்று வாதிடுவதை தவிர்த்து அய்யன் திருவள்ளுவன் வகுத்தளித்த வாழ்வியல் நெறிமுறைகளைப் பற்றி ஆராயலாமே.

உலகப் பொது மறையாம் திருக்குறளை ஐயம் திரிபுர கற்றுணர்ந்தும் இந்துக்களின் புனித நூலாம் ''பகவத் கீதை'' யில் கொள்வான கொண்டும் கொள்ள முடியாததை விடுத்தும்- இரண்டு நூல்களையும் வாழ்வியல் நெறிமுறைகளோடு ஒப்புமை அமைத்து வாழ்வோம்.
 
Last edited:
உங்கள் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி. கருத்துக்களைப் பதிவு செய்வதில் தவறே இல்லை. முற்றிலும் எதிர் மாறான கருத்துக்களையும் நான் வரவேற்கிறேன். நான் கிணற்றுத் தவளையாக வாழ விரும்பமாட்டேன். வள்ளுவர் பற்றியும் கீதை பற்றியும் நிறைய தவறான கருத்துக்கள் பரவிவிட்டதால் இதை ஒப்பிட்டு எழுதினேன். கண்ணனோ வள்ளுவனோ இன்று கீதையையும் குறளையும் செய்தாலும் அவர்களுக்கு இலக்கிய நோபல் பரிசு கிடைக்கும் என்பதில் இருவேறு கருத்துக்கு இடமும் உண்டோ!
 
என் கையறுபட்டு நிற்கின்றேன் ஐயன்மீர்
தமிழ் மன்றத்தில் சொல்லறுபட்டு போகுமுன்
செப்பிட விளைகிறேன் ஒன்று மட்டும்
நீவீர் தள்ளிவிட நினைத்தாலும் தளர்ந்திடேன்
ஏற்றுக்கொண்டு சிறப்பிதாலும் மயங்கிடேன்
வள்ளுவம் மயங்கும்-பலரிடம் பார்த்திருக்கிறேன்
வள்ளுவனை மறைத்துப் பார்க்கின்றேன் உம்மிடம்!
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு- இவ்விடம்
இறை அரசனார் கட்டிக்காத்த தமிழ்
மாற்றோர் கைபட்டு மறை(த்)தல் தகுமோ?
எழுத்து வடிவம் இல்லா மொழிகொண்டு
எழுதி விட்டான் திருக்குறள் என்பார்-
இங்கிருந்து போன சேஷப்பையர் அங்கே
ஷேக்ஸ்பியர் ஆகிவிட்டார் என்பார் அவர்
நெஞ்சு பொறுக்குதில்லை ஐயா இந்த
நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்!
 
Last edited:
அன்பு சால் நெஞ்சத்தோரே ஐயா இறையரசனாரே இதுகாறும் அய்யன் திருவள்ளுவரைப் பற்றி தாங்கள் சில பல கருத்துக்கலைக் கூறி வந்துள்ளீர்கள். நன்றி. எல்லாவற்றுக்கும் மேலாக வள்ளுவனின் முழு உருவச் சிலையை இலண்டன் மாநகரில் நிறுவி பொய்யாமொழிப் புலவனின் புகழ் பாடியமைக்கு தமிழ் கூறும் நல்லுலகு உங்களை என்றென்றும் மறவாது என்பது திண்ணம்.வாதி என்றொருவர் இருந்தால் பிரதிவாதி என்றொருவர் இருப்பார் இல்லையா? இதுதானே உலக நியதி? இப்படி இருக்கும்காளை என்னையே நீங்கள் பிரதிவாதியாகக் கொண்டு எனது வாதங்களையும் காய்தல் உவத்தலின்றி செவிமடுப்பீர்கள் என்று நம்புகிறேன்.மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவனும் தம் தம் தாய் மொழியைத்தான் உயர்வாகக் கொண்டாடுவான். இதில் நீங்களும் - ஏன் நான்கூட விதிவிலக்கில்லை. நிற்க!மேலை நாட்டுப் பெருமகன் ஹீராஸ் பாதிரியார் கூற்றுப்படி சிந்து சமவெளி நாகரிகத்தின் அடிப்படைக் கூறே திராவிட நாகரிகம் தான் என்பதை இங்கு ஈண்டு நோக்கவேண்டும். நமக்குக் கிடைத்த நூல்களில் தொல்காப்பியம் ஒன்றே மிகப் பழமை வாய்ந்தது. ஆனால் இந்த நூலில் கூட என்ப, என்மனார் புலவர் என்று தமக்கு முன்தோன்றியோரைக் குறிப்பிடுவதைப் பார்கும்பொழுது தமிழின் தொன்மை குறித்து ஒருவாறு அறியமுடியும் தொடரும்
 

திருவள்ளுவர் சமஸ்கிருத மொழியில் தேர்ச்சி பெற்றவர் என்பது மறுக்க முடியாத உண்மை!

இதில் வருந்துவதற்கு என்ன உள்ளது, திரு. சிவஷண்முகம் அவர்களே? :confused:
 

'கிரிகெட்' என்ற சொல் எப்படி வந்தது என்று வேடிக்கையாக 'சோ' ராமசாமி அவர்கள் எழுதியுள்ளார்!

'கிரி' என்றால் மலை. அது கெட்டால் மைதானம்! மைதானத்தில் விளையாடும் விளையாட்டு என்பதால்,

'கிரிகெட்' என்று பெயர் வந்தது! :)

 
அன்புடையீர்,

தமிழனின் தொன்மை குறித்து எள்ளளவும் சந்தேகம் இல்லை. ஆனால் தமிழின் புகழை ஆங்கிலம் முதலிய மொழிகள் மூலம் பரப்பாமல் சம்ஸ்கிருத மொழியையும் இந்துமதக் கருத்துக்களையும் திட்டித்திட்டி குடல் வெந்து போகும் வீணர்களைக் கண்டு வேதனைப் படுகிறேன். 150 ஆண்டுகளாக் இதைச் செய்துவருகின்றனர். திராவிட என்னும் சொல்லை கிறிஸ்தவ மதத்தைப் பரப்பவந்தவர்களும் வெள்ளைக்காரன் ஆட்சி நீடிக்கவேண்டும் என்று சொன்ன ஜஸ்டிஸ் கட்சிக் காரர்களும், அறுந்து தொங்கிக் கொண்டிருக்கும் அவர்களுடைய வால்களும் (அதாவது..... இன்றைய திராவிடக் கட்சிகள்) தவறான பொருளில் பயன்படுத்திவருகின்றனர். நான் சிந்து வெளி நாகரீகம் பற்றி எழுதிய 15 கட்டுரைகளைப் படித்துவிட்டு அல்லது அறிஞர்கள் எழுதிய சிந்துவெளி நூல்களைப் படித்துவிட்டு எது திராவிடம் என்பதை முதலில் வரையறை செய்யட்டும். ஆதாரமே இல்லாமல் திராவிடம் என்பதை பல 'அரை வேக்காடுகள்' பயன்படுத்திவருவதை மனச்சாட்சி படைத்தவர்கள் அறிவர்.

எனது பணி தமிழ் கூறும் நல்லுலகின் அருமை பெருமைகளை புதிய கோணத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் சொல்லுவதாகும். நான் 1993ம் ஆண்டில் இலண்டன் தமிழ்ச் சங்க பொங்கல் மலரில் எழுதிய 'தமிழ் ஒரு கடல்' மற்றும் இலண்டன் 'மேகம்' மாத இதழில் 12 ஆண்டுகளுக்கு முன் எழுதிய 'வியட்நாமை ஆண்ட தமிழ அரசன்' ஆகிய கட்டுரைகள் இதற்கு சான்று பகரும். மற்றும் கீழ்கண்ட கட்டுரைகளிலும் தமிழின் புகழை தமிழில் எழுதுவதோடு நில்லாமல் ஆங்கிலத்திலும் மொழிபயர்த்து எழுதுகிறேன். இப்போது 350 கட்டுரைகளைத் தாண்டிவிட்டேன். இன்னும் புதுப் புது கருத்துக்கள் உடன் கட்டுரைகள் வரும். ஆதாரம் இல்லாமல் எதையும் எழுதக் கூடாது என்பதற்காக இன்னும் சில கருத்துக்களை வெளியிடவில்லை. பொறுத்திருந்து பாருங்கள். புதுமைகள் வரும்.

பழைய சில கட்டுரைகளின் தலைப்புகள்: 1.தமிழ் ஒரு கடல் 2.வியட்நாமை ஆண்ட தமிழ் மன்னன் 3.கரிகால் சோழனின் பருந்துவடிவ யாக குண்டம் 4.பழமொழிகளில் இந்துமதம் 5.தமிழில் 20,000 பழமொழிகள் 6.சுமேரியாவில் தமிழ் பறவை 7.தமிழ் இலக்கியத்தில் காளிதாசனின் உவமைகள் 8.புறநானூற்றில் சூரியகிரகணம் 9. புறநானூற்றில் பகவத்கீதை 10.குறுந்தொகையில் இருதலைக் குழந்தை 11.அதிசய பறவைத் தமிழன் 12. வரலாறு எழுதிய முதல் தமிழன் 13. தமிழர்களின் எண் சோதிடம் 14. தமிழர்களின் கணிதப்புலமை 15முதல் திராவிட ராணி 16. மூன்று தமிழ் சங்கங்கள்: உண்மையா?கட்டுக் கதையா? 17. சுமார் 25 அறிஞர்கள்,புலவர்களுடன் 60 வினாடி கற்பனைப் பேட்டிகள் 18. கேள்வி-பதில் பாணியில் பொது அறிவுத் தமிழ்

The Wonder That is Madurai Meenakshi Temple, Amazing Powers of Human Mind and Time Travel by Two Tamil Saints get constant hits. Now I get 1000 hits a day for the 300+ articles. So glory of Tamils is spreading.நன்றி.Thanks.
 
சங்ககாலத்தில் தெற்கில் குமரியும் வடக்கில் திருவேங்கடமலையும் கிழக்கு மேற்கில் கடலும் எல்லைகளாக விளங்கின. மூவேந்தர்களும் இப்பகுதிக்கு உட்பட்ட நாட்டையாண்டனர். இவர்கள் பேசிய மொழி தமிழ். வடக்கே உள்ளவர் இதனைத் தென்மொழி என்றனர். தென்மொழி காலப்போக்கில் திராவிடமொழியாயிற்று.

உலகில் மிகப்பழமையான மொழிகள் என்று எடுத்துக்கொண்டால் இலத்தீன், கிரேக்கம் ஈப்ரு, வடமொழி இவற்றோடு தமிழும் சுட்டப்படுகிறது. எனினும் வடமொழிக்கு இல்லாத எழுத்து வடிவம் தமிழுக்கு வந்திருந்தது அணிகலனாகத் திகழ்கிறது. சுருங்கக் கூறின் பிறமொழி சார்ந்தது நில்லாமல் தமிழ் எனும் கன்னி தனக்கே உரித்தான எழுத்து வடிவம் எனும் அணிகலன் பூண்டு யவனம் மாறாமல் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இன்முகம் காட்டி புன்னகை பூத்துக் கொண்டிருக்கிறாள்.
 
Last edited:
anbu nenjame,

anbin panbu anaithukkondu ottrumai peenuvathu. verruppin panbu pirivina parratti arrutthukkolvathu.


anbu nenjame anaithukkondu ottrumai parrattuvoom.


thangal vendumenral entha murr kallathillurinthu samskrutha ver chol arrave kalavatha nool onrai kaattunngallen parkkalam.


tamizh annaiannaval thagappan samskruthan jodi aag azhagu bhavani vaubahaval , vanthaval.


thanbathiyarai prikka muzharchikkamal irrungalaen, thangal anbu nenjathhirkku intha anban vidutha veendukool.

idaiyir kurukkuvidatharrkuu iru salaraum mannikavum


anbai nokkudan.
 
I am worldless after reading this valuable information.
It is a blow to the people who make politics with the greatest person.
Keep posting valuable informations like this.
Thanks
srikanth.s
 
Even though I posted this in Lord Vinyaga is who... thread in terms of the important role of LORD Vinayaga to Tamizh nadu , i felt it is also appropriate to post it here.

Arunagirinathar says he has given tamizh to us ...

kaithal nraikani appamodu aval pori
kappiya karimuga adi penni

katrridum adiyavar buddhiyil uraibhavar karpagam ena vinai kadithegum
...

muththamizh adaivinai murpadu girithanil murpada ezhuthiya muthalvone..

Lord GANESHA is the FIRST ONE to give tamizh to us..

Lord GANESHA also gave KAVERI to Tamil nadu by spilling the kamandalu of Sage Agasthiyar.

Lord GANESHA also made sure LORD Ranganatha remains in Srirangam by deceiving VIBHISHANA and there by making sure the PROTECTOR of dharma to remain in Tamizh.
(ref - maha periyaval's deivathin kural)

Lord GANESHA is instrumental in Giving Tamizh "DEVARA THIRUMURAI"

In this way LORD GANESHA helped Tamizh people to achieve the four pursuits .

LETS REJOICE ON THE SPECIAL ANUGRAHA OF LORD GANESHA FOR TAMIZH COUNTRY.

JAI GANESHA.
 
I would like to say that my argument about the long and short title of the ''Thiruvalluvan Oru Samaskirtha Aringhan’’ has not yet completed.
This was delayed for the hectic work and the plaint may be submitted in the next week.

With Regards
Sivashanmugam
 
Last edited:
வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன் (?)

ஆக... தமிழ் மிகவும் தொன்மையான மொழி என்பதில் இருவேறுபட்ட கருத்துக்கள் இல்லை. இதையே தமிழாய்ந்த பெரியோர்களும் நமது போற்றுதலுக்கும் மரியாதைக்கும் உரிய மேலை நாட்டு அறிஞர் பெருமக்களும் தங்களின் விழுமிய பதிவுகளால் நமக்கு உணர்த்தியுள்ளனர்.

இதை இத்துடன் நிறுத்திவிட்டு எடுத்துக்கொண்ட பிரச்சனைக்கு வருவோம். அதற்கு முன்பு நாம் ஐந்து கேள்விகளுக்கு விடை காண வேண்டியுள்ளது.

வினா எண் 1: காலத்தால் முற்பட்டது தமிழா அல்லது பாலி, சமஸ்கிரதம் உள்ளிட்ட வட மொழியா?

வினா எண் 2: காலத்தால் முற்பட்ட மொழிகளில் எந்தெந்த மொழிகள் எழுத்து மற்றும் இலக்கண வரம்பை தன்னகத்தே கொண்டுள்ளது?

வினா எண் 3: திருக்குறளில் இடைச் செருகல்கள் உண்டா?

வினா எண் 4: திருக்குறளை இயற்றியவர் சமணரா தமிழரா அல்லது வடமொழி ''தேவநகரி`` சமஸ்கிரதத்தில் பயிற்சி பெற்ற அந்தணரா?

வினா எண் 5 : திருவள்ளுவர் தமிழ்மொழி தவிர்த்து தனி வடமொழியில் நூல் எழுதினாரா?

மேற்கண்ட இந்த கேள்விகளுக்கு விடை அளித்தால் மட்டுமே அய்யன் திருவள்ளுவர் ஒரு சம்ஸ்கிருத அறிஞரா இல்லையா என்ற கேள்விக்கும் விடையளிக்க முடியும்.

வினா எண் 1, 2: விடை

ஆதியில் மனிதன் தோன்றினான். அதற்குப் பின்பு ''ஆ'' ''ஊ'' என்ற ஒலி அசைவுகள் தோன்றியிருக்கக் கூடும். பின்பு நாகரிகம் வளர வளர தனது எண்ணங்களை சைகையாலும் ஒலி ஏற்படுத்துவதினாலும் பிறருக்கு தெரிவிப்பதை விட்டு மெல்ல சித்திரங்கள் மூலம் பிறருக்கு தெரியப்படுத்தினான்.. இதுவே பிறகு மாறி எழுத்தாக வடிவம் பெற்றது.

எழுத்து வடிவம் கண்டவுடன் மனிதன் புதிய பாதையை நோக்கிப் பயணிக்கத் தலைப்பட்டான். அங்கே அவனுக்கு என்னற்ற சொல் வளம் இலக்கிய இலக்கண வளம் இருப்பதைக் கண்டான். அவைகளைத் தான் பேசிய மொழிகளுக்கு ஓர் அரணாக அமைத்துக்கொண்டான்.


இங்கு நாம் மேற்சொன்ன சரித்திர நிகழ்வுகளைப் பார்க்கும் பொழுது தமிழ் மொழி இதற்கு தகுதி வாய்ந்த ஒரு மிகப் பழமையான மொழியாக இருப்பதற்கு அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளதைக் காணலாம்.

இங்கு தேவநாகரி என்ற சம்ஸ்கிருத மொழிக்கு தனக்கென எழுத்து வடிவமோ இலக்கண வரம்போ இல்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். இப்படி இருக்கும் போழ்து இந்நிலையில், திருவள்ளுவர் இந்த மொழியில் தேர்ச்சி பெற்ற அறிஞராக இருப்பாரா என்று தீர்மானிக்க வேண்டியுள்ளது.

வினா எண் 3: விடை

வட சொற்கள் தமிழில் எவ்வாறு அமைய வேண்டும் என்பதை

''வடசொற் கிளவி வடவெழுத் தொரீஇ
எழுத்தொடு புணர்ந்த சொல்லாகுமே''

எனும் நூற்பா உணர்த்தும். இதனால் தொல்காப்பியர் காலத்திலேயே தமிழில் வட சொற்கள் புகுந்துவிட்டமையும், அவற்றை அப்படியே விட்டு விடாமல் தமிழுக்கேற்ப எவ்வாறு மாற்ற வேண்டுமென்ற விதியினையும் தருகின்றார்.

அறத்துப்பால் வெஃகாமை என்ற தலைப்பின் கீழ் ஃ என்ற வடவெழுத்து கலந்துள்ளதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.
இன்னும் சற்று விரித்து நோக்குங்கால் தொல்காபியதிலும் ஃ எழுத்து தனி வீடாக (உயிரெழுத்துடன் கலக்காமல்) வருகின்றது.

இந்தநிலையில் வள்ளுவனும் தொல்காப்பியனும் சம்ஸ்கிருத அறிஞர்கள் என்று யாரேனும் முடிவெடுத்தால் அவரைக் கண்டு தமிழ் கூறும் நல்லுலகு எள்ளி நகையாடாதோ?

வினா எண் 4: விடை

திருக்குறள் தமிழால் தமிழ் இலக்கண வரம்பிற்கு உட்பட்டு வெண்பாவில் அமைந்த நூல். இதைமட்டும் கருத்தில் கொள்ளவேண்டும். அதை விடுத்து வள்ளுவன் தமிழரா அல்லது சமண மதத்தை சார்ந்தவரா என்பது போன்ற வீண் விவாதங்களில் ஈடுபடுவதால் யாருக்கு என்ன இலாபம்?

வினா எண் 5: விடை

இதைப் பார்த்தவுடன் தமிழில் போதிய பயிற்சி இல்லாதவர்கூட ''இல்லை திருவள்ளுவர் தமிழ் தவிர மற்ற வடமொழியில் நூல் எழுதினாரில்லை'' என்றே கூறிடுவர். வடமொழயில் வள்ளுவப் பெருந்தகை அறிஞனாக இருந்திருந்தால் அவர் வடமொழியில் யாத்த நூல்களை மேற்கோள் காட்டி ''வள்ளுவன் ஒரு சம்ஸ்கிருத அறிஞன்'' என்ற தனது வாதத்திற்கு பொருள் சேர்த்திருக்கலாமன்றோ?

நன்றி!

அன்புடன் சிவசண்முகம்


















 
Last edited:
கிரிக்கெட் பற்றிய ஜோக்குக்கு நன்றி. உங்கள் மூலமாக சிவசண்முகம் என்ற பெயரை அறிந்தேன்.

அன்பர் சிவசண்முகம் அவர்களே, தமிழும் சம்ஸ்கிருதமும் இரு கண்கள். பாரதப் பண்பாட்டை 100 சதவிகிதம் அறிய இவ்விரு மொழிகளிலும் புலமை வேண்டும். வள்ளுவன் மாபெரும் அறிஞன். அவன் நேற்று இதே திருக்குறளை எழுதி இருந்தாலும் aவனை மிஞ்ச உலகில் யாரும் இருக்கமுடியாது. ஆக, நானும் நீங்களும் ஏறத்தாழ ஒரே கருதுடையவர்களே.

ஒரு சிறிய கருத்டு வேறுபாடு. ஹீராஸ் பாதிரியார் கூறுவது சரியல்ல. என்னுடைய சிந்dhu சமவெளி கட்டுரைகளைப் படித்தால் இதை அறிவீர்கள். தமிழருக்கும் இந்த நாகரீகத்துக்கும் எந்தத் தொடர்பையும் காட்டும் எந்த சான்றும் இதுவரை கிடைக்கவில்லை. எல்லாம் ஊகத்தின் பேரில் கூறப்படுகின்றன. அஸ்கோ பர்போலா, ஐராவதம் மஹாதேவன் முதலான பத்து அறிஞர்களின் வாதங்களையும் படித்துக் கரைத்துக் குடித்துவிட்டேன்.

அஸ்கோ பர்போலாவை நேரில் சந்தித்தபோது புதியது என்ன என்று கேட்டேன். ஒன்றும் இல்லை என்று சொன்னர். அது மட்டுமல்ல அவர் புத்தகத்தில்--Deciphering the Indus Script-- நம் வாழ்நாளுக்குள் சிந்து சமவெளி முத்திரைகளைப் படிப்ப்பது சந்தேகமே என்று முடித்துவிட்டார்.

பெரிய பெரிய அறிஞர்களையும் கம்ப்யூட்டர் நிபுணர்களையும் திக்குமுக்காட வைக்கிறது சிந்து சம்வெளி. நானும் 40 ஆண்டுகளாக அவ்வபோது வெறி பிடித்தாற்போல ஆறு மாதம் தொடர்ந்து ஆராய்வேன் அப்புறம் ஒரு இடைவெளி கொடுப்பேன். எனது சந்தேகங்களை ஆறு ஏழு கட்டுரைகளில் எழுதிவிட்டேன். இன்னும் எழுதுவேன்.
 

'கிரிகெட்' என்ற சொல் எப்படி வந்தது என்று வேடிக்கையாக 'சோ' ராமசாமி அவர்கள் எழுதியுள்ளார்!

'கிரி' என்றால் மலை. அது கெட்டால் மைதானம்! மைதானத்தில் விளையாடும் விளையாட்டு என்பதால்,

'கிரிகெட்' என்று பெயர் வந்தது! :)


''ஜோக்'' நன்றாகத்தான் உள்ளது... இதே சோ இராமசாமி அவர்களின் ஆரம்பகால(1971) துக்களக் ஏடுகளை புரட்டிப் பார்க்கும் பொழுது அதில் உள்ள விபரீதங்களும் தெரியவருகிறது. தமிழில் மாற்றம் செய்கிறேன் என்று கூறி f என்ற ஆங்கில எழுத்தில் ) இந்த குறியீட்டை இணைத்து (f இதுபோன்ற ஒரு புது எழுத்தை உருவாக்கி இணைத்து எழுதி தமிழின் தனித்தன்மைக்கு களங்கம் உண்டாக்க துணிந்த அந்த செயலை நினைக்கும்போழ்து மனம் வருத்தமாகவும் இருக்கிறது...
 
I dont think anything wrong about CHO trying with f. This was only an attempt. A lot of things are rejected by "time". If people dont want it, it will go to dustbin. If people wanted it, not even a powerful government can prevent it. EVR suggested Tamil Orthography reforms long back.Nobody accepted it for long. Only after unicode Tamil, they found EVR's suggestions are good. If Tamil is not computerised even EVR's Tamil reforms would have gone in to dustbin.We must always welcome new ideas. TIME will decide whether it is right or wrong. Bharathiar and his views were rejected by the people when he lived.Only 15 people were there in the crematorium on the day he died. Now the whole world recognises him as the greatest modern Tamil poet.
 
I have collaborated with your views were the suggestionshave been given by the true rationalist EVR, about the Tamil Orthographyreforms and the same has observed by the Dravidian governments. Proud to say,these reforms in the Tamil Orthography as the vision, done by EVR. These,reforms were done because to simplify the printing technology. At then theTamil letters lai, nai was hard to mold because of the horns. Later this wasrectified by modifying as a present. However, I would not find any merits inyour argument where, the correction made by CHO Ramasamy was right one. Sorry.You are confusing and concealing the variations between the words reform andthe damage. Here, it could be realized where, the Periyar’s deeds were calledas reforms of Tamil letters but, the CHO’s nonsense this was damaging the TamilOrthography.
 
I have collaborated with your views were the suggestions have been given by the true rationalist EVR, about the Tamil Orthography reforms and the same has observed by the Dravidian governments. Proud to say, these reforms in the Tamil Orthography as the vision, done by EVR. These, reforms were done because to simplify the print. At then theTamil letters 'lai', 'nai' was hard mold because of the horns. Later this was rectified by modifying as a present. However, I would not find any merit in your argument where, the suggestion made by CHO Ramasamy was right one. Sorry. You are confusing and concealing the variation between the words ''reform'' and the ''damage''. Here, it could be realized where, the Periyar’s deeds were called as reforms of Tamil letters but, the CHO’s nonsense this damaging the Tamil Orthography.
 
Last edited:
As I mentioned in my reply to you TIME itself rejected CHO's suggestion of using f.
Even Rajaji at one time said I am making a MAD PROPOSAL that INDIA and Bangladesh and Pakistan must merge. This was after two wars with Pakistan. The proposal was rejected by the People or TIME immediately. We must always welcome new ideas. We must always welcome who give new ideas.There is nothing wrong in it.

CHO is a great thinker. Many of his predictions have come true.But he is not GOD. When grantha lipi was introduced into Tamil (sa, Sha, Ha, Ja, ksha), some people objected to it like you object f. But TIME has accepted Grantha lipi. I see some Tamil people writing rasenthiran instead of Rajendran. They cant write Stalin's name as சுடாலின் ஒர் ச்டாலின்.They are rejected by TIME. Every year I teach my Tamil students in London that without the Grantha lipi we cant pronounce most of the English names.In short donட் find fault with people like CHO.
 
[h=2][/h]
அன்புடையீர்

தங்களின் தமிழ் ஆசிரியப் பணி பற்றி அறிந்து பெரிதும் மகிழ்ச்சி கொள்கிறேன்.

நான் எனது பக்கங்களில் எழுத ஆரம்பித்துள்ள தமிழ் எழுத்து சீரமைப்பா? சிதைப்பா? என்ற தொடரை படித்து தங்களின் மேலான கருத்துக்களை பதிந்தால் மிகவும் நன்றாக இருக்கும்.







 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top