கோமளவல்லித் தாயார் - திருவெஃகா !
கோமளவல்லித் தாயார் - திருவெஃகா !
வடிவிணையில்லா மலர்மகளான பிராட்டி , மென்மையானவளாயும் , ஒரு மென்கொடி போலவும் இங்கு புன்னகை தவழ வீற்றிருப்பதாலேயே கோமளவல்லி என்னப்படுகிறாள் !
பக்தாநுகந்து ( அடியவர் எண்ணங்களைப் பின் தொடர்பவன் ) என்றும் சொன்ன வண்ணம் செய்த பெருமாள் ( = வடமொழியில் யதோக்தகாரி ) என்றும் இத்திருத்தலத்து இறைவன் போற்றப்படுகின்றமைக்குக் காரணம் , இம் மென்கொடி ( கோமளவல்லி ) அவனைப் பற்றிப் படர்ந்திருப்பதினாலேயாம் !
"ச்ரிய ஏவைநம் தத் ச்ரியமாததாதி" என்கிறபடியே கோமளவல்லியைப் பணிபவர்களுக்கு, யதோக்தகாரிப் பெருமான் மேன்மேலும் கைங்கர்யச் செல்வத்தை அளிப்பவனாகின்றான் !
பிராட்டிக்கு ' ஸுவர்ணா' என்றொரு ஸுப்ரஸித்தத் திருநாமமுண்டு !
யோகத்தாலே சிறந்த ஸித்தர்கள், பரமபுருஷனான பெருமான் என எல்லாரும் நன்கு விளங்குவது இவளால் / இவள் பொருட்டேயாம் !
அவனை , அவன் அழகை வேதங்கள் வருணிக்கின்றன ! வேதங்களுக்கு இத்திறல் எங்கிருந்து வாய்த்ததெனில், இவளே ( பிராட்டியே ) வேதமாகி வேத நாயகனாகிய வேகாஸேதுப் பெருமானை , அவன் அழகை வருணிக்கின்றாளாம் !
"அர்த்தோ விஷ்ணுரியம் வாணீ" என்பர் பராசர முனிவர் ! ( பகவான் பொருள் ; பிராட்டி சொல் )
ஸுவர்ணையான ( மற்றவர்களை நிறம் பெறச் செய்பவள் )
( நிறம் = ஒளி, புகழ் , சோபை )
நம் மென்கொடியின் ( கோமளவல்லி ) இன்னருள் என்றென்றும் நமக்கு ஏற்படுவதாகுக !
எழுத்து ஸ்ரீ உ.வே. அக்காரக்கனி ஸ்ரீநிதி ஸ்வாமி ( Srinidhi Akkarakani )
ஸ்ரீ கோமளவல்லி தாயார். திருவெஃகா, காஞ்சிபுரம்.