|
ப்ருங்கி மாமலை : தொண்டை மண்டலத்திலிருக்கும் பழம் பதிகளில் இந்த ப்ரிங்கி மாமலை தொன்மையானது. ப்ருங்கி மகரிஷி வழிபட்ட மலைக்கடவுளாம் ஈசன் இங்கே காசி விஸ்வநாதனாய் காசி விசாலாட்சியோடு அருட் கோலம் அருளுகிறார். ப்ருங்கி மாமலையில் இருந்த சிவன் கோவில் கால வெள்ளத்தில் கீழே இறக்கப்பட்டு இப்பொழுது தரையில் இருக்கிறது. st. thomas mount மலைக்கு அருகேயுள்ள சிவத்தலம் அவ்வளவாக யாரும் அறியாமல் இருக்கிறது. கோவிலின் பழமையைப் பார்க்கும் போது தொன்மை புலப்படுகிறது. அத்துடன் இங்கு ஒரு சரித்திரம் சத்தமில்லாமல் அழிந்து வருகிறது. கோவிலுக்கு நேரே ஒரு பெரிய கிணறு ஒன்று கோபுரங்களுடன் வடிவமைக்கப்பட்டு தற்சமயம் பாழ்பட்டு, அழகான படிக்கட்டுகளுடன் இருக்கின்றன். கிணற்றின் அடிவரை இறங்கிச் சென்று நீர் எடுக்கும் வகையில் அமைக்கப்பட்யிருக்கிறது. இது தான் மலையிலே சிவாலயம் இருந்த பொழுது அபிஷேகத்திற்கு பயன் பட்டது என யூகிக்கிறோம். இப்பொழுது பாழடைந்து கிடக்கிறது. கிண்டி கத்திபாராவிலிருந்து ராமாவரம் போரூர் பாதையில் பரங்கிமலை அடிவாரத்தில் இருக்கிறது. கோவில் அழகாக பராமரிக்கப்படுகிறது. ப்ருங்கி மா முனிவர் பூசித்த ஆலயம் பகதர்களுக்காக காத்திருக்கிறது.
__________________
ப்ருங்கி முனிவர் உபசரித்த பட்டாபிஷேக ராமன்: ராமபிரான் அயோத்தி திரும்பும் வேளையில் இந்த ப்ருங்கி மலையில் ப்ருங்கி முனவரின் உபசாரத்தை ஏற்று தங்கினாராம். சில நாட்கள் கழித்து அயோத்திக்கு புறப்படும் போது, ராம்பிரானை ப்ருங்கிமுனிவர் வேண்ட தன்னுடைய "உயிர்க்கலை"யை அர்ச்சாவதாரத்திலே த்ந்து அனுக்ரகித்தாரம். அதன் படி ராம் பிரானை அயோத்தியிலும், இந்த நந்தம்பாக்கத்திலும் தான் உயிராக தரிசிக்கமுடியும் என்பது சிறப்பு. ஒரு முறை தரிசிப்பவர்கள் மனமுருகி விடுவர். ப்ரஸன்ன சீனிவாசப் பெருமாள் சன்னதியும், ச்ரீ சுதர்ஸனரின் சன்னதி கோசாலை என பேரழகுடன் திருக்கோவில் திகழ்கிறது. chennai trade centre எதிரே செல்லும் சிறு சந்தில் இந்த பெரிய கோவில் இருக்கிறது. ராமபிரான் இங்கு தங்கியதன் அடையாளமாய் இன்றும் ராமாவரம், சீதாவரம், தேவிபுரம் என பல கிராமங்கள் இன்றும் உள்ளன. ராம் ராம்ராம்ராம்ராம்ராம்ராம்ராம்ராம்ராம்ராம்ராம்ராம்ரா ம்ராம்
__________________
பூவரசன் குப்பம் - லக்ஷ்மி நரசிம்மர் : சனிக்கிழமையன்று இத்தலத்திற்கு செல்லும் வாய்ப்பு கிட்டியது. விழுப்புரத்திலிருந்து 16 கிமீட்டர் தொலைவில் விழு - பாண்டி சாலையில் வளவனூரிலிருந்து தெற்கே செல்லும் சாலையில் 6 கி.மீ தொலைவில் இத்தலம் உள்ளது. லக்ஷ்மி நரசிம்மரின் ஆலயம் தொன்மையானதாய் இருக்கிறது. இக்கோவிலில் பக்தர்கள் அனைவரும் சட்டை பனியன் கழற்றி தான் உள்ளே செல்லவேண்டும் என்று வைத்திருப்பதே இங்கு வருபவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பதற்கு சாட்சியாய் இருக்கிறது.
அருமையான சன்னதி.
சிறுவந்தாடு - சிறு பந்தாடு : பூவரசன்குப்பம் போகும் வழியில் உள்ள வைப்பு தலம். சிறுபந்தாடும் ஈசனே என்று பாடப்பெற்ற சிவத்தலம். உமையவள் ஈசனோடு சிறு மலர் பந்துகளை வைத்து விளையாடி மகிழ்ந்த தலம். கோவில் இடிந்து கிடக்கிறது. திருப்பணி நடந்து கொண்டிருக்கிறது. அழகேசன் எனும் அழகிய நாமத்துடன் ஈசன் காட்சி தரும் கோலம் மனதை மயக்கும்.
இவ்வாலயத்தில் ஒரு மாது தானே ஈசனுக்கும் அம்பிகைக்கும் பணி செய்து வரும் காட்சி இறைவனின் அருட்திறத்தை எடுத்துக் காட்டுகிறது. அந்த மாது இறைவனுக்கு தோத்திரங்கள் பாடி தீபாராதனை செய்த பொழுது மனம் குளிர்ந்தது.
__________________
__________________
SARVE JANA: SUKHINO BHAVANTHU
|