Hello Members/Readers : SAIRAM and GREETINGS. May I, for the benefit of those devotees who do know, inform about the ancient Temple of NEELAYADAKSHI AMMAN @ KAYAROGANESWARAR Temple at NAGAPATTINAM. My article about this temple at chennaionline site can be viewed in the link
http://chennaionline.com/tamil/news/newsitem.aspx?NEWSID=62fa6b58-c1c2-4080-b299-a38e72461b49CATEGORYNAME=anmee
சிறப்புகள் வாய்ந்த இத் திருக்கோயில், பக்தர்கள் அதிக அளவில் தரிசிக்க வராததால், சரிவர பராமரிக்க முடியாத நிலையில் இருப்பது, வருந்தத்தக்கதாக இருக்கிறது. அரசும், அதைச் சார்ந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் இன்னும் நன்றாகக் கவனித்தால், சரித்திரப்புகழ் பெற்ற பழமையான இத் திருக்கோயில் அதற்குரிய மதிப்பையும் புகழையும் மீண்டும் பெற்று, திருவிழாக்கள் அனைத்தும் நல்ல முறையில் நடத்தப்பட்டு, சீரும் சிறப்புடன் திகழ உறுதுணையாகும் என்பது நிச்சயம்.
பக்தர்களும் இக்கோயிலுக்கு அடிக்கடி சென்று, சக்தி வாய்ந்த அன்னை நீலாயதாக்ஷி சமேத காயாரோகணேஸ்வரர், மற்றும் இதர தெய்வங்களின் அருளுடன் எல்லா ஐஸ்வர்யங்களும் பேறும் பெற்று நலமுடனும் வளமுடனும் வாழ்ந்திட பிரார்த்திக்கிறோம்.
"கண்கவர் தங்கமய நீலாயதாக்ஷி
என்றென்றும் நமஸ்காரம் ஏற்றருள் புரிவாயே!"
அன்னையைப் போற்றும்பொழுது,
"அம்மை காமாட்சியே கருணா கடாட்சியே,
அரிய மதுரை ஆளும் மீனாட்சியே
நம்பும் அடியார்கள் கண்ணுறும் காட்சியே
நாகையதனில் வாழும் நீலாயதாக்ஷியே
சம்பு மோகித்திடும் காசி விசாலாக்ஷியே
சாலத் திகழும் ஆரூர் கமலாக்ஷியே
அடியாரைக் கரையேற்றும் அகிலாண்ட நாயகியே
கும்பிட்டு உனதடி குறுகிப் பணிந்தோம்
கெளரியே எழுந்தருள்வாயே"
என்று போற்றி வணங்குகிறோம்.
அருள்மிகு காயாரோகணேஸ்வரர் உடன் உறையும் அன்னை நீலாயதாக்ஷி திருக்கோயில், காவிரி ஆற்றின் தெற்கே அமைந்த திருநாகை என்னும் நாகப்பட்டினம் நகரில், கடற்கரையிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டருக்குள் அமைந்திருக்கிறது. இக்கோயில் ஏறத்தாழ 6ஆம் நூற்றாண்டில் சோழர்களால் கட்டப்பட்டதாகக் குறிப்புகள் கூறுகின்றன..
இத்திருக்கோயில், தேவார தலங்களில் 82ஆவதாகவும், 64 சக்தி பீடங்களிலும், சப்தவிடங்க தலங்களில் ஒன்றாகவும் பெருமையாகத் திகழும் தலமாகும்.
Thanks & Regards
V. Ramaswamy