• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

ashtaka and anvashtakaa siraatham.

Status
Not open for further replies.

kgopalan

Active member
1. அஷ்டகா அன்வஷ்டகா

மார்கழி ,தை, மாசி ,பங்குனி மாதங்களின் க்ருஷ்ண பக்ஷ ஸப்தமி, அஷ்டமி, நவமி திதிகளில் பித்ருக்களுக்கு சிராத்தம் அல்லது தர்பணம் செய்ய வேன்டும்.

அஷ்டமி அன்று செய்யப்படும் அஷ்டகைய ப்ரதானமாக க்கொண்டு முதல் நாள் சப்தமிக்கு பூர்வேத்யு; என்று பெயர். மறு நாள் நவமிக்கு அநு+அஷ்டகா
==அந்வஷ்டகா என்று பெயர்.

மேற்கூறிய நான்கு மாதங்களிலும் ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் வீதம் 12 தர்பணங்கள் ஷண்ணவதி தர்பணம் செய்பவர்கள் செய்ய வேண்டும்.
இது முதல் பக்ஷம்.

ஷண்ணவதி தர்பணம் செய்ய இயலாதவர்கள் தை மாதம் மட்டும் (மாக மாதம்) ஸப்தமி, அஷ்டமி, நவமி அன்று தர்பணம் செய்யலாம். அல்லது அஷ்டமி ஒரு நாளாவது பித்ருக்களுக்கு தர்பணம் செய்ய வேண்டும்.

ஒவ்வொரு வருஷமும் தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்வது போல் இந்த அஷ்டகை, அந்வஷ்டகை நாட்களிலும் பித்ருக்களுக்கு ஹோமம் செய்து, சாப்பாடு போட்டு , முறையாக சிராத்தமாக செய்யலாம். இது இரண்டு விதமாக இருக்கிறது.

1, ஸப்தமி அன்று மாலை ஒளபாசனாக்னியில் அப்பம் தயார் செய்து ஹோமம் செய்ய வேன்டும். மறு நாள் அஷ்டமியன்று காலையில் எட்டு பேரை வரித்து தர்பணம் செய்து விட்டு, ஹோமம் செய்து முறையாக சிராத்தம் செய்ய வேன்டும். மறு நாள் (நவமி) அன்வஷ்டகா அன்று
ஐந்து பேரை வரித்து சிராத்தம் செய்ய வேண்டும்.

2. அல்லது ஸப்தமி அன்று மாலை மற்றும் அஷ்டமி அன்று செய்ய வேண்டிய அஷ்டகா சிராத்தம் இரண்டிற்கும் பதிலாக தத்யஞ்சலி ஹோமம்
என்னும் ஹோமம் செய்துவிட்டு மறு நாள் (நவமி) அன்வஷ்டகை அன்று ஐந்து பேரை வரித்து ஹோமம் செய்து, சாப்பாடு போட்டு சிராத்தம் செய்யலாம்.

அல்லது இந்த நாட்களில் சிராத்தம் அல்லது தர்பணம் செய்யும் போது ஏற்படும் குறைவை நிறைவு செய்ய ஒரு மந்திரத்தை நூறு முறை ஜபம் செய்யலாம்.

(ரிக் விதானம்) ஏபிர் த்யுபிர் ஜபேந் மந்திரம் சத வாரம் து தத் திநே..
அன்வஷ்டக்யாம் யதா ந்யூனம் ஸம்பூர்ணம் யாதி சர்வதா. என்பதாக
அன்வஷ்டகை யன்று சிராத்தம் அல்லது தர்பணம் செய்யும்போது ஏற்படும் குறைவை நிறைவு செய்ய விரும்புவர்கள் ,

ரிக் வேதத்திலுள்ள ஏபிர் த்யுபி: (அஷ்டகம்-1,53,4 ).என்று தொடங்கும் வேத மந்திரத்தை நூறு முறை ஜபம் செய்யலாம். இதனால் அஷ்டகை, அந்வஷ்டகையில் ஏற்பட்ட தோஷம் விலகு மென்கிறது ரிக் விதானம் என்னும் புத்தகம்.

அஷ்டகா : மாக மாசத்தில் அஷ்டகாதி சிராத்தம்.:- முதல் நாள் இரவு ஒளபாசனம் செய்து . ஒரு வகையான அடைபோல் செய்து , அஷ்டகா தேவதைக்கு ஒரு ஹோமமும் ,

ஸ்விஷ்டக்ருத்திற்கு ஒரு ஹோமமும் செய்ய வேண்டும். . அதன் மிகுதியை , மறு நாள் ப்ராம்மணர்களாக வரிக்கும் எட்டு ப்ராஹ்மணர்களுக்கும் அளிக்க வேண்டும்.

அஷ்டகா சிராத்தத்தில் விச்வேதேவர் இருவர், பித்ரு வர்க்கம் மூவர், மாத்ரு வர்க்கம் மூவர் ஆக எட்டு ப்ராஹ்மணர்களை வரித்து , பார்வண சிராத்தம் போல் சில மாறுதல்களுடன் செய்ய வேண்டும்.

அஷ்டமி இரவு ஒளபாசனம் செய்து விச்வே தேவர்களுக்காக ஒருவர் ,பித்ரு, பிதாமஹர். ப்ரபிதாமஹருக்கு ஒருவர், மாத்ரு, பிதாமஹி ப்ரபிதாமஹிக்கு ஒருவர், மாதாமஹ வர்க்கத்திற்கு ஒருவர், மஹாவிஷ்ணுவிற்கு ஒருவர்,


ஆக ஐந்து ப்ராஹ்மணர்களை வரித்து , நவமி அன்று சில மாறுதல்களுடன் பார்வண சிராத்தம் போல் செய்ய வேண்டும்.

அந்வஷ்டகைக்கு ப்ரதிநிதியாக தத்யஞ்சலி ஹோமம் ஒன்றை செய்ய வேண்டும்.. அதில் இரு கரங்களாலும் தயிரை எடுத்து , அஷ்டகா தேவதைக்கு ஒரு ஹோமமும் , ஸ்வஷ்டக்ருத்துக்கு ஒரு ஹோமமும் செய்ய வேண்டும்.

மாக மாதத்தில் பெளர்ணமிக்கு பிறகு வரும் க்ருஷ்ண பக்ஷ அஷ்டமி , கேட்டை நக்ஷதிரத்துடன் கூடும். அதில் அஷ்டகா சிராத்தம் செய்ய
வேண்டும். ஸுதர்சண பாஷ்யத்தில் கேட்டை நக்ஷத்திரம் கூடாமலிருந்தாலும் அந்த அஷ்டமியில் அஷ்டகா சிராத்தம் செய்ய வேண்டும் ..எனக்கூறபடுகிறது.

அஷ்டமி அன்று செய்ய வேன்டிய அஷ்டகா சிராதத்திற்கு அங்க பூதமான
அபூப ஹோமம் செய்ய வேண்டும். ஸப்தமி அன்று மாலை ஒளபாசனம் செய்து அதில் (நெல்லைக்குத்தி அரிசியாக்கி, மாவாக்கி, அதை தட்டையாக செய்து வேக வைக்க வேண்டும்.) இது தான் அபூபம் என்பது.

பிறகு பார்வண ஸ்தாலி பாகத்தில் சொன்ன மாதிரி அக்னிப்ரதிஷ்டை முதல்
ஆஜ்ய பாகம் வரை செய்துகொண்டு , அஞ்சலியால் அபூபம் எடுத்துக் கீழ் கண்ட மந்திரத்தை சொல்லி ஹோமம் செய்ய வேண்டும்.

“”யாம் ஜனா: ப்ரதிநந்தந்தி ராத்ரீம் தேநுமிவாயதீம் ஸம்வத்சரஸ்ய யா பத்னீ ஸா னோ அஸ்து ஸுமங்கலி ஸ்வாஹா.””
ஏகாஷ்டகையை ஸம்வத்சர பத்நியாக மற்ற விடத்தில் சொல்லியிருந்தாலும்
ஏகாஷ்டகையின் ஸாமீப்யம் இருப்பதால் ஸப்தமி திதியின் ராத்ரியும் சம்வத்ஸர பத்நியாக இங்கு ஸ்துதிக்கப்படுகிறது.

கேட்டை நக்ஷதிரத்துடன் மாக மாத க்ருஷ்ண பக்ஷ அஷ்டமியும் சேர்வதை ஏகாஷ்டகை என்கின்றனர்.
ஹோமம் செய்த பிறகு மிச்சமுள்ள அபூபத்தை எட்டாக பிறித்து எட்டு ப்ராஹ்மணர்களுக்கு கொடுக்க வேன்டும். ராத்ரியின் அபிமான தேவதையை ஹோமத்தால் பூஜிக்கிறோம்.

பாலில் மாவை போட்டு கிண்டிய கூழுக்கு பிஷ்டான்னம் என்று பெயர்.
இந்த பிஷ்டான்னத்தால் ஹோமம் செய்ய வேன்டும்.””உக்தயஸ்ச அஸி அதிராத்ரஸ்ச ஸாத்யஸ்கிஸ்சந்த்ரஸாசஹா. அபூபத்ருதாஹுதே நமஸ்தே அஸ்து மாம்ஸபிப்லே ஸ்வாஹா. “

பிறகு ஆஜ்ய ஹோமம் .பின் வரும் ஏழு மந்திரம் சொல்லி.
.பூ: ப்ருதிவ்யகினமர்சாமும்மயி காமம் நியுநஜ்மிஸ்வாஹா.
,.புவோ வாயுநா அந்தரிக்ஷேண ஸாம்னாமும் மயே காமம் நியுனஜ்மி ஸ்வாஹா.
ஸ்வர்திவஆதித்யேன யஜுஷாமும் மயே காமம் நியுனஜ்மி ஸ்வாஹா.

ஜனதப்திரதர்வாடிங்கரொ பிரமும் மயி காமம் நியுநஜ்மி ஸ்வாஹா.
ரோசனாயாசிராயாக்னயே தேவஜாதவே ஸ்வாஹா.
கேதவே மனவே ப்ருஹ்மணே தேவஜாதவே ஸ்வாஹா

ஸ்வதா ஸ்வாஹா.
அக்னயே கவ்ய வாஹனாய ஸ்வதா ஸ்வாஹா.
பிறகு ஸ்விஷ்ட கிருத் என்ற கர்மம் முதல் பிண்டப்ரதானம் என்ற கருமம் முடிய உள்ள கார்யங்களை மாஸி சிராதத்த்தில் செய்த மாதிரி செய்ய வேணும்..

நவமி அன்று மட்டும் தான் ( அன்வஷ்டகையில் தான்) பிண்டதானம் செய்ய வேண்டும். என சிலர் வாதம். இது அஷ்டகையின் முக்ய கல்பம்.

இனி கெளண கல்பம் கூறப்படுகிறது. எந்த மந்திரம் சொல்லி அபூப ஹோமம் செய்கிறோமோ அதே மந்திரத்தை சொல்லி அஞ்சலியால் தயிரை ஹோமம் செய்ய வேண்டும்.இது மற்றொரு முறையாகும்.

யாம் ஜனா: ப்ரதிநந்தந்தி என்றதால் தயிரை ஹோமம் செய்ய வேண்டும். அபூபத்தை விலக்க வேண்டும். இந்த தயிர் ஹோமமானது அபூப ஹோமம் முதல் ஆஜ்ய ஹோமம் முடியவுள்ள

எல்லா கர்மங்களின் ஸ்தானத்திலும் விதிக்க படுவதால் இந்த தயிர் ஹோமத்தை தவிர்த்து மற்ற ஹோமங்களை செய்ய வேண்டுவதில்லை என்று ஸுதர்சன பாஷ்யத்தில் கூறப்பட்டிருக்கிறது.

அன்வஷ்டகையை மாசி சிராத்தம் மாதிரி செய்ய வேண்டும்.

சிராத்தங்கள்:--மாசி சிராத்தம்:--மாசி சிராத்தம் நித்ய கர்மாகளில் இதுவும் ஒன்று. க்ருஷ்ண பக்ஷத்தில் ஏதேனும் ஒரு திதியில் தொடங்கி , ஒவ்வொரு மாதமும் அதே திதியில் செய்ய வேண்டும். இது, பிதா , பிதாமஹர்., ப்ரபிதாமஹர் என்ற மூவரை உத்தேசித்து செய்ய படுகிறது.

ஆனால் பித்ருக்கள் பூஜிக்கபடும் இடத்தில் மாதா மஹாதிகளும் பூஜிக்க பட வேன்டும் என விதித்திருப்பதால் , புராணம், ஸ்மிருதியின் படி தாயின் தந்தை, பாட்டனார், அவர் தகப்பனார் ஆகியோரையும் சேர்த்து இரு

வம்சத்திற்கும் , ஹோமம், ப்ராஹ்மண போஜனம், பிண்ட ப்ரதானம் ஆகியவற்றுடன் செய்ய படுகிறது. இன்று செய்யபடும் சிராத்தங்கள் அனைத்திற்கும் இதுவே முன் மாதிரியாகும்.

இதை ஒற்றி வருவதே தர்ச சிராத்தமாகும். இதன் விக்ருதிகளே (96) ஷண்ணவதி சிராத்தங்கள். .ஒரு வருடத்தில் செய்ய வேன்டுவன .இவற்றில் ஒவ்வொன்றிர்க்கும் சிற்சில மாறுதல் உண்டு.

தாய் தந்தையருக்கு செய்யப்படும் ப்ரத்யாப்தீக சிராத்தம்,, கிரஹண, மற்றும் புண்ய கால தர்பணங்கள். முதலியன மாசி சிராதத்தை அடிபடையாக கொண்டு செய்ய படுபவை. ஆனால் இவை ஸப்த பாக யக்ஞங்களில்

சேராதவை.. இவை ஜீவத்பித்ருகனுக்கு (( தந்தை உயிருடன் இருக்கும்போது)) கிடையாது. ஆனால் மாசி சிராத்தம் தந்தை உயிருடன் இருக்கும் போதும் ஹோமம் வரை செய்ய வேண்டும்.என்பது ரிஷியின் அப்பிப்ராயம். தந்தைக்கு யார் தேவதைகளோ அவர்களே இவனுக்குமாவார். .

ஒளபாசன அக்னியில் பிண்டபித்ரு யக்ஞம் செய்ய வேண்டும்.. அஷ்டகா சிராதத்தை ஒரு போதும் விடக்கூடாது. தை அமவாசையை அடுத்து வரும் க்ருஷ்ன பக்ஷ அஷ்டமி ஏகாஷ்டகை எனப்படும்.
அந்த தேவதையை குறித்து ஹோமமும் பித்ரு, பிதாமஹர், ப்ரபிதாமஹர். மாத்ரு, பிதாமஹி, ப்ரபிதாமஹி, விஸ்வேதேவர் இருவர் ஆக எட்டு ப்ராஹ்மனர்களை வரித்து செய்வதால் அஷ்டகா என்று பெயர்.

அஷ்டகா தேவதை பித்ருக்களுக்கு நாம் அளிக்கும் ஹவிஸை அமோகமாக அளவற்றதாக ஆக்கி காமதேனு பால் சுரப்பது போல் சுரப்பதாக கூற பட்டுள்ளது. ஸம்வத்ஸர தேவதையின் பத்நியாகவும் ஏகாஷ்டகை கூறப்பட்டுள்ளது.

மனிதர்களுக்கு விழிப்பை ஏற்படுத்தி அறிவை தரும் உஷஹ் கால தேவதையும் ஏகாஷ்டகையே. இவளே யாகங்களை செய்விப்பவள் என்றெல்லாம் மிக உயர்வாக கூறப்பட்டுள்ளது.

உரல் அம்மி முதலியவையும் இந்த அஷ்டகா சிராத்தம் செய்வதில் உத்ஸாகத்துடன் ஈடுபடுவதாக வேதம் கூறுகிறது.

இதை செய்பவனுக்கு , ஸந்ததி, சாரீர பல விருத்தி, மற்றும் வைதீக கர்மாக்களில் சிரத்தை செய்யக்கூடிய பாக்யம் ஏற்படுகிறது. என்று கூறுகிறது.

இதை கலி யுகத்தில் ஸ்ம்ருதியில் கூறப்பட்டபடி செய்ய முடியாது.

எனவே ரிஷிகள் தத்யஞ்சலி (தயிர்) ஹோமம் எனும் அனுகல்பத்தை விதிதுள்ளனர்.
இம்முறைகளில் அவதான முறைப்படி கையில் தயிரை எடுத்துக்கொண்டு ஒளபாஸனாக்னியில் ஏகாஷ்டகையை குறித்து ஹோமம் செய்வதாகும்.
2.
( பிறகு சிராத்த முறைப்படி ப்ராஹ்மண போஜனம்) மறுநாள் அன்வஷ்டகை.
அன்வஷ்டகையை தர்ச சிராத்தம் போன்றே வர்கத்வய பித்ருக்களை உத்தேசித்து செய்யபடுவது ஆகும். விஸ்வேதேவர், பித்ரு , மாத்ரு, மாதாமஹர், விஷ்ணு என ஐந்து ப்ராஹ்மணர்களை வரித்து சிராத்தம் செய்வது..

18-2-2017, 19-2-2017, 20-2-2017 இந்த நாட்களில் அஷ்டகா சிராத்தமோ, தர்பணமோ ஓய்வு பெற்றவர்கள் செய்ய முயற்சிக்கலாமே.

.
 
Excellent bit of information. Thanks for sharing. Also please share the source from where one can find more such information like the branch of Vedam/Puranam etc..
 
Details of ashtaka
நமது தர்ம சாஸ்த்திரம் புத்தகத்திலும் அஷ்டகா சிராத்தம் செய்ய வேண்டும் என்று சொல்லப் பட்டிருக்கிறது. புரட்டாசி மாதத்திலும், மாசி மாதத்திலும் பித்ருக்களுக்கு அன்னம் அளிக்கவேண்டும். என்று அறிவிக்கிறது.

வருடத்தில் இந்த 96 நாட்கள் பித்ருக்களுக்கு பசி எடுக்கும் என நமது முன்னோர்கள் அறிந்து அந்த நாட்களை காட்டி கொடுத்து இருக்கிறார்கள்.

பசியுடன் இருப்பவருக்கு நாம் உடனே ஆகாரம் அளிக்க வேண்டும்.

கார்த்திகை. மார்கழி. தை. மாசி இம்மாதங்களில் தேய் பிறை சப்தமி, அஷ்டமி, நவமி திதிகளில் சிராத்தம் மற்றும் தர்ப்பணம் செய்ய வேன்டும் என்கிறது. வைத்தினாத தீக்ஷிதீயம் பக்கம்-321ல்.

ஆஸ்வலாயன மகரிஷி இம்மாதிரி 12 நாட்கள் சிராத்தம் செய்ய முடியாவிடினும் மாசி மாதம் ஒன்றிலாவது அவசியம் செய்ய வேண்டுமென்கிறார்..

அஷ்டமி திதிக்கு முன் தினமும் பின் தினமும் செய்யவேண்டியுள்ளதால் அஷ்டகை என பெயர் பெற்றது..

அஷ்டமிக்கு முன் தினம் பூர்வேத்யுஹு என்றும் அல்லது மூன்று நாள் தொடர்ச்சியாக வருவதால் திஸ்ரேஷ்டகா என்றும் பஞ்சாங்கங்களில் குறிப்பிட்டிருக்கும். . அஷ்டமிக்கு மறுநாள் அன்வஷ்டகா என்றும் பஞ்சாங்கங்களில் இருக்கும். .

வைத்தினாத தீக்ஷிதீயம் –சிராத்த காண்டம் புத்தகத்தில் இதற்கான மந்திரங்கள், செய்முறை உள்ளன.
இதற்கு பண வசதி இல்லாதவர்கள் தர்பணமாவது செய்யுங்கள் என்கிறார்.

இதற்கும் பண வசதி இல்லாதவர்கள் தீர்த்தம் நிறைந்த குடத்தை யாருக்காவது அஷ்டமி அன்று தாநம் செய்யவும் .சிராத்த மந்திரங்களை ஜபம் செய்யுங்கள்; பசு மாட்டிற்கும், காளை மாட்டிற்கும் வைக்கோல். புல் கொடுக்கவும்.

இதற்கும் பண வசதி இல்லாதவர்கள் புல், புதர் இருக்குமிடத்தை தீயிட்டு கொளுத்தி அஷ்டகை செய்யும் சக்தியும், வசதியும் இல்லாததால் இந்த அக்னி தாஹத்தால் நீங்கள் த்ருப்தி அடையுங்கள் என கதறவும்.

“ந த்வேவ அநஷ்டகா ஸ்யாத்” என்பதாக நாம் பித்ருக்களுக்கு அஷ்டகா தினங்களில் எதுவும் செய்யாமல் இருக்க கூடாது என்கிறது சாஸ்திரம்.
அஷ்டகை சிராத்தம் செய்பவர்கள் குடும்ப வம்சத்தில் குழந்தைகள் அழகு உள்ளவர்களாகவும், அறிவு உள்ளவர்களாகவும். எப்போதும் மிக பெரிய பணக்காரர்களாகவும் இருப்பார்கள் அனைத்து நன்மைகளும் கிட்டும் என்கிறது நமது தர்ம சாஸ்திரம்.

ஒவ்வொருவரும் அவரவரது ஜீவிய காலத்தில் ஒரே ஒரு முறையாவது இந்த அஷ்டகா சிராத்தம் செய்ய வேண்டும்.

வருடத்திற்கு 96 தர்பணம் செய்பவர்கள் இந்த 12 தர்பணமும் செய்து விடுகிறார்கள்.
96 தர்பணம் செய்ய இயலாதவர்கள் இந்த 12 தர்பணங்கள் செய்யலாம். இதற்கும் முடியாதவர்கள் தை மாதம் சப்தமி, அஷ்டமி, நவமி மூன்று நாள் தர்பணம் செய்யலாம்.

ஒவ்வொரு வருஷமும் நம் தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்வது போல் இந்த சப்தமி, அஷ்டமி, நவமி திதிகளில் பித்ருக்களுக்கு சாப்படு போட்டு ஹோமம் செய்து சிராத்தமாகவும் செய்யலாம்.

---இது இரண்டு விதமாக இருப்பதால் ஏதோ ஒரு முறையில் செய்யலாம்.

ஸப்தமியன்று மாலை 7 மணி சுமாருக்கு ஒளபாஸனம் செய்யவும். இதே அக்னியில் அபுபம் தயாரிக்க வேன்டும். மாலை 5 மணிக்கு 2 கைப்பிடி அளவு பச்சரிசி எடுத்து தண்ணீர் விட்டு களைந்து நிழலில் ஒரு துணி மேல் உலர விடவும். நன்றாக உலர்ந்த பிறகு மிக்சியில் மாவாக அறைக்கவும். மாவு சல்லடையில் சலிக்கவும். இந்த மாவில் சிறிது தயிர் விட்டு கெட்டியாக பிசைந்து சப்பாத்தி மாதிரி இட்டு

கொள்ளவும். ஒளபாசன அக்னியில் தோசை கல்லை போட்டு இந்த அரிசி மாவு சப்பாத்தியை தோசைகல்லில் போட்டு இரு பக்கமும் வேக விடவும். இதுதான் அபூபம்.

இதே ஒளபாசனாக்னியில் மந்திரம் சொல்லி இந்த அபூப ஹோமம். . மீதமுள்ள அபூபத்தை மறு நாள் வரப்போகும் சாஸ்திரிகளை இப்போதே வரசொல்லவும். அப்பா, தாத்தா, கொள்ளு தாத்தா- 3 பேர். அம்மா, பாட்டி,

கொள்ளு பாட்டி -3 பேர். விசுவேதேவர் -2 பேர். மொத்தம் -8 பேர். இந்த 8 சாஸ்திரிகளை சப்தமியன்று மாலை 6 மணிக்கே வரசொல்லி. அவர்களை ஆவாஹனம் செய்து இந்த அபூப துண்டுகளையும், கோதுமை மாவு சப்பாத்தி இந்த எட்டு பேருக்கும் தயார் செய்து சட்னியுடன் இலையில் பரிமறவும்..

அவர்கள் சாப்பிட்ட பிறகு மறு நாள் காலை 10 மணிக்கு அவர்களை வரசொல்லவும். தக்ஷிணை தாம்பூலம், பழம் கொடுத்து அனுப்பவும்.
கர்த்தா, கர்த்தாவின் மனைவிக்கும் இதே தான் ஆகாரம். .இன்று இரவு.

மறு நாள்அஷ்டமி அன்று காலை 10 மணிக்கு இந்த எட்டு பேர் வந்தவுடன் எண்ணைய், சீயக்காய் கொடுத்து வெந்நீர் போட்டு கொடுத்து ஸ்நானம் செய்து விட்டு வந்தவுடன். முதல் நாள் இரவு ஆவாஹனம் செய்த வாரே

மறுபடியும் ஆவாஹனம் செய்து ஒன்பது ஐந்து வேட்டி துண்டு ஒவ்வொருவருக்கும் கொடுத்து சாப்பாடு போட்டு சிராத்தம் முடிந்த பிறகு தக்ஷிணை, தாம்பூலம் கொடுத்து அனுப்ப வேண்டும்.
இன்று சமாராதனை சமையல், ஒரு வாழை இலை போதும்..
8 பேர் வைத்து சிராத்தம் செய்ய பண வசதி இல்லாதவர்கள் அப்பா வர்க்கம் ஒருவர், அம்மா வர்க்கம் ஒருவர்; விசுவேதேவர் ஒருவர் என மூவர் வைத்தும் செய்யலாம். சாஸ்திர சம்மதம் இருக்கிறது.

.மறு நாள் நவமி அன்று வேறு ஐந்து சாஸ்திரிகள் வரச்சொல்லி எண்ணய் ஸ்நானம் செய்து புது ஒன்பது ஐந்து வேட்டி வாங்கி கொடுத்து சிராத்தம் முடிந்த பிறகு தக்ஷிணை தாம்பூலம் கொடுத்து அனுப்ப வேண்டும்.

நவமி அன்று அப்பா வர்க்கம் ஒருவர், அம்மா வர்க்கம் ஒருவர், அம்மாவின் பெற்றோர் வர்க்கம் ஒருவர், விசுவேதேவர் ஒருவர், மஹா விஷ்ணு ஒருவர் என ஐந்து பேர். .

இதற்கு மஹா விஷ்ணுவிற்கும் ஒருவர் அவசியம் வர வேண்டும். ஹோமம் அப்பா வர்க்கம் -6 ஹோமம் வழக்கம்போல். பிறகு தாயின் பெற்றோர் வர்கத்திற்கும் 6 ஹோமம் உண்டு. விகிரான்னம் உண்டு.

பிண்ட ப்ரதானமும் தாய் தந்தையருக்கு 6; அம்மாவின் தாய் தந்தைக்கும் 6 மொத்தம் . காருண்ய பித்ருக்களுக்கு -6 என 18 பிண்டம் .
இன்று சிராத்த சமையல் அவரவர் வீட்டு வழக்கப்படி, இரு வாழை இலைகள்.. மஹா விஷ்ணு விற்கு இலை மாத்திரம் போட்டு பரிமாறும் வழக்கம் உள்ளவர்களுக்கும் இந்த அஷ்டகா சிராத்தத்தில் மஹாவிஷ்ணுவிற்கு ஒரு சாஸ்திரிகள் அவசியம் வர வேண்டும்.

மற்றொரு விதம்;- இரு கைகளாலும் தயிர் ஹோமம் செய்வது. ததி ஹோமம்.

ஸப்தமி அன்று எதுவுமில்லை. அஷ்டமி அன்று காலையில் தயிர் ஹோமம் ஒளபாசானாக்னியில் செய்து விட்டு நவமி அன்று ஐந்து பேரை வரித்து ஹோமம், சாப்பாடு போட்டும் நிறைவு செய்யலாம்.

அஷ்டகா தர்ப்பணம் முதலில் இரு நாட்களும் செய்து விட்டு பிறகு தான் சிராத்தம் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.. ஞாபகமாக இதை வைத்து கொள்ளவும்..
இ3ந்த மூன்று நாட்களிலும் ஒளபாசனம் தினமும் செய்ய வேண்டும்.. மூன்று நாட்களிலும் ஒளபாசன அக்னி அணையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

அல்லது தினமும் விச்சின்னாகினி ஹோத்ரம் செய்து பிறகு ஒளபாசனம் செயது அந்த அக்னியில் சிராத்த ஹோமம் செய்ய வேண்டும்.
ரிக் விதான மந்திரம் ஒன்று உள்ளது. இதை நூறு முறை சொல்ல வேண்டும்.

நான்கே வரிகள் தான். இந்த தர்பணம், ஹோமம் செய்யும்போது ஏற்படும் குறைகளை சரி செய்யும்.. ருக் வேத மந்திரம் ஆதலால் சரியாக உச்சரிக்க
வேண்டும். .அஷ்டகம் 1, 53, 4 ஏ பிர் த்யுபிர் என்று ஆரம்பிக்கும்.. ருக் வேத சாஸ்திரிகளிடம் இதை சரியாக உச்சரிக்க கற்றுக்கொண்டு சொல்லலாம். .

http://www.tamilbrahmins.com/showthread.php?t=31675

you can get sankalpam mantras for astaka, thiஸ்restaka and anvashtaka. you can see these astaka days in your paampu panchangam/,

also you have to do daily sandhyavandhanam and gayathri japam.
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top