• This forum contains old posts that have been closed. New threads and replies may not be made here. Please navigate to the relevant forum to create a new thread or post a reply.
  • Welcome to Tamil Brahmins forums.

    You are currently viewing our boards as a guest which gives you limited access to view most discussions and access our other features. By joining our Free Brahmin Community you will have access to post topics, communicate privately with other members (PM), respond to polls, upload content and access many other special features. Registration is fast, simple and absolutely free so please, join our community today!

    If you have any problems with the registration process or your account login, please contact contact us.

இன்று சக்கரத்தாழ்வார் ஜெயந்தி:

Status
Not open for further replies.
V

V.Balasubramani

Guest
இன்று சக்கரத்தாழ்வார் ஜெயந்தி:

இன்று சக்கரத்தாழ்வார் ஜெயந்தி:
சக்கரத்தாழ்வார் என்பவர், திருமாலின் ஆயுதங்களில் ஒன்றான சக்கராயுதத்தின் உருவமாக கருதப்பெறுகிறார். இவர் சுதர்சனர்,

திருவாழியாழ்வான், சக்கரம், திகிரி என்றும் அறியப்பெறுகிறார். இவர் பதினாறு கைகளை கொண்டவராகவும், சில இடங்களில் முப்பத்திரண்டு கைகள் கொண்டவராகவும் அறியப்பெறுகிறார். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கென தனி சந்நிதி காணப்பெறுகிறது.

ஆண்டுதோறும் ஆனி மாதம் தசமி திதியில், சித்திரை நட்சத்திரத்தில், ஸ்ரீ சக்கரத்தாழ்வார் அவதாரத் திருநாள், ஸ்ரீ சுதர்சன ஜயந்தி உற்சவமாக கொண்டாடப்படும்.

மஹா விஷ்ணுவின் திருக்கரங்களில் ஐந்து ஆயுதங்களைக் காணலாம். இவற்றில் முக்கியமானது சக்கரம் என்று போற்றப்படுகின்ற ஸ்ரீ சுதர்ஸனர். இவரே திருமாலின் காத்தல் தொழிலுக்கு உறுதுணையாக இருப்பவர்.

சக்கரத்தானை திருவாழியாழ்வான்" என்று போற்றுகின்றனர் ஆழ்வார்கள். இவருக்கு"ஹேதிராஜன்" என்ற திருநாமமும் உண்டு. சுவாமி தேசிகன் இவரை "சக்ர ரூபஸ்ய சக்ரிண" என்று போற்றுகிறார். அதாவது திருமாலுக்கு இணையானவர் என்று பொருள்.

பெரியாழ்வாரும் சக்கரத்தாழ்வாரை," வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு" என்று வாழ்த்துகிறார். மேலும் "என்னையும் என் உடமையையும் உன் சக்கரப் பொறி ஒற்றிக்கொண்டு " என்று குறிப்பிடுகிறார் ..

ஆண்டாள் தன்னுடைய திருப்பாவையில் ,"சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன் "என்றே பெருமாளை பாடுகிறார் ..
திருமழிசையாழ்வார் இவரின் அம்சமாக அவதரித்தார் ..

சக்கரத்துடன் இணைந்தவரே திருமால் என்பது நம்மாழ்வாரின் வாக்கு. அவர் திருமாலுக்கு" சுடராழி வெண்சங்கேந்தி வாராய்" என்று பாமாலை சூட்டுகிறார்.

சுதர்ஸனர், பல புராணங்களில் பேசப்படுகிறார். நரசிம்ம அவதாரத்தில் இரணியனை வதம் செய்வதற்கு நகங்களாக இருந்தவர் சுதர்ஸனர்தான் என்கிறது புராணம்.

அதேபோல், திருமாலின் வாமன அவதாரத்தின்போது தானம் கொடுக்க வந்த மஹாபலி சக்கரவர்த்தியைத் தடுத்தார் சுக்ராச்சாரியார்.அவரின் எண்ணத்தை திசை திருப்பியவர் சக்கரத்தாழ்வார்.

அதேபோல் சிசுபாலனை சக்கரத்தாழ்வாரைக் கொண்டே அழித்தார் ஸ்ரீகிருஷ்ணர். கஜேந்திர மோட்சத்தில் சக்கரத்தாழ்வாரைக் கொண்டே முதலையின் கழுத்தை அறுத்து கஜேந்திரனை காப்பாற்றினார் திருமால்.

புண்டரிக வாசுதேவன் மற்றும் சீமாலி ஆகிய அரக்கர்களின் ஆணவம் அழிந்திட சக்கரத்தாழ்வாரே காரணம். மகாபாரதப் போரில் ஜெயத்ரதனை அழித்திட, கிருஷ்ண பரமாத்மா ,சூரியனை மறைக்க சுதர்ஸனரையே பயன்படுத்தினார்.

துர்வாச முனிவரின் சாபத்தில் இருந்து ,விஷ்ணு பக்தனான அம்பரீசனை காப்பாற்றி ,துர்வாசரின் கர்வத்தை அடக்கியது சக்கரமே ....

இந்த சுதர்ஸனர், திருவாழியாழ்வான், சக்கரம், திகிரி என்றும் அறியப்பெறுகிறார். இவர் பதினாறு கைகளை கொண்டவராகவும், சில இடங்களில் முப்பத்திரண்டு கைகள் கொண்டவராகவும் அறியப்பெறுகிறார். திருமால் கோவில்களில் சக்கரத்தாழ்வாருக்கென தனி சந்நிதி காணப்பெறுகிறது. சக்கரத்தாழ்வார் தனது பதினாறு ஆயுதங்களை கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது.

விஷ்ணுவின் வலது கையில் உள்ள சக்கரத்தை "சுதர்சனம் என்பர். இதற்கு "நல்ல காட்சி என்று பொருள். தீயவர்களை அழிக்கும் போது மறச்சக்கரமாகவும், (வீராவேசம் கொண்டதாகவும்), நல்லவர்களுக்கு அறச்சக்கரமாகவும்(தர்மச் சக்கரம்) இருப்பது, இதன் சிறப்பு. சக்கரத்தாழ்வார் அறுங்கோண சக்கரத்தின் நடுவில் இருப்பார். மூன்று கண்கள் இருக்கும்.(நெற்றிக்கண்) தலையில் அக்னி கிரீடம் தாங்கி, பதினாறு கரங்களில் ஆயுதம் ஏந்தி காட்சியளிப்பார்.

ஸ்ரீ சக்கரம் என்னும் ஸ்ரீ சுதர்ஸனம் எம்பெருமான் ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பிரதான ஆயுதம்! அவர் தம் வலத் திருக்கரத்தில் ஏந்தியுள்ள ஸ்ரீ சுதர்ஸனம், பக்தர்களைக் காக்கவும், துஷ்டர்களை அழிக்கவும் செய்கிறது.

ஸ்ரீ அனந்தன் என்ற நாகம், கருடன், ஸ்ரீ சுதர்ஸனம் - இம்மூவரும் பகவானை ஒரு நொடி கூட பிரியாது அவரைத் தொழும் ‘நித்யசூரிகள்’.

ஸ்ரீ வைகுண்டத்தில் ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் இருக்கையாகவும், பாற்கடலில் பாம்புப் படுக்கையாகவும், ஆதிசேஷனாக குடையாகவும், நடக்கையில் பாதுகையாகவும் இருப்பவர் அனந்தன்.

பகவான் மனதால் நினைத்தவுடன், நினைத்த இடத்திற்கு அவரைத் தாங்கிச் செல்லும் வாகனமாகவும், அவரது தாஸனாகவும் திகழ்பவர் கருடன்.

ஸ்ரீ சுதர்ஸனாழ்வார், ஸ்ரீ கருடாழ்வார், ஸ்ரீ அனந்தாழ்வார் என இவர்கள் மூவர்கள் மட்டுமே ஸ்ரீ பகவானை ஆட்கொண்டவர்கள் என்பதால் ஏற்பட்ட சிறப்பாகும் - ஆழ்வார் என்ற அடைமொழி.

ஸ்ரீ மகாவிஷ்ணுவின் பஞ்சாயுதங்களிலும், ஸ்ரீ சுதர்ஸனரே முதன்மையானவர். இந்த சக்ராயுதத்தின் பெருமை வேதங்களால் (சுக்ல யஜுர் வேதம்) புகழப்படுகிறது. இந்த்ராதி தேவர்களாலும், பூஜிக்கப்பட்டு பகைவர்களை அழித்தவர். ஸ்ரீ மகாவிஷ்ணு தனது அனேக அவதாரங்களிலும், துஷ்ட நிக்ரஹத்தை ஸ்ரீ சுதர்ஸனம் மூலமே நிகழ்த்தி அருளினார். ஊலக இயக்கத்திற்கே ஆதாரம் ‘மகா சுதர்ஸனமே’ என்கின்றனர்.

“புனரபி ஜனனம், -புனரபி மரணம்” (மீண்டும், மீண்டும் பிறந்து மரித்தல்) என்ற உலக நியதியான இயற்கை ஸ்ரீ சுதர்ஸனரை ஆதாரமாகக் கொண்டே நிகழ்கிறது.

இவர் ராமாவதாரத்தில் பரதனாக அவதரித்து ஸ்ரீராமருக்கு சேவை செய்ததால்தான், “பரதாழ்வான்” எனப்பட்டார்.

பல வைணவ ஆலயங்களில் நிகழும், பிரத்மோத்ஸவ விழாவின்போது, தினமும் காலை, மாலையில் ஸ்ரீ சுதர்ஸனர் எழுந்தருளிய பின்பே, பெருமாள் புறப்பாடு (வீதியுலா) நடைபெறும்.

இந்த ஐந்து ஆயுதங்களிலும் ‘சக்கரம்’ என்ற ஸ்ரீ சுதர்சனாழ்வார்தான் முதன்மை ஆனவர். ஆகவே இவரை ‘ஐவருள் முதல்வர்’ என்கின்றனர் ஆன்றோர்.

பகவானுக்கு பஞ்சாயுதங்கள் (5). ஆனால் ஸ்ரீ சுதர்சனாழ்வானுக்கு பதினாறு ஆயுதங்கள்! ஸ்ரீ சுதர்சனர், சக்கரம், ஈட்டி, கத்தி, கோடாரி, சதமுகாக்னி, மாவட்டி, தண்டம், சக்தி என்னும் எட்டு ஆயுதங்களை வலது கையிலும், இடது கையில், சங்கு, வில், கண்ணி, கலப்பை, உலக்கை, கதை, வஜ்ரம், சூலம் என ஏந்தியுள்ளார்.

நிகமாந்த மஹா தேசிகர் ஸ்ரீ சுதர்சனாழ்வாரின் பெருமைகளை ‘ஸ்ரீ சுதர்சனாஷ்டகம்’ எனவும

Source: Sri Rngachari Ji / Face book
 
Status
Not open for further replies.

Latest ads

Back
Top