|
முக்கூடல்:- தெய்வவழிபாட்டில் பேதம் இல்லை என காட்டும் ஒரு அதிசயத் தலம்.
ஒரு பெருமாள் பக்தர், இவ்வூருக்கு வந்தாராம். ஊர் மக்கள் அவரை வரவேற்று உபசரித்தார்கள்.
அவர் தினமும் ஒரு பெருமாள் கோவில் அல்லது பெருமாள் தரிசனம் இல்லாமல் உண்வு உட்கொள்ள மாட்டார்.
ஆகவே, அவர் ஊர் காரர்களிடம் அவ்வூரில் ஏதேனும் பெருமாள் கோவில் இருக்கிறதா? என வினவினார்.
ஊர் மக்களும், ஊர் எல்லையில் ஒரு கோவிலிருப்பதாகவும், ஆனால் யாருமே அங்கு போனதில்லை என கூறினார்கள்.
பெருமாள் பக்தரும் ஊர் எல்லைக்குச் சென்று கோவிலைப் பார்த்தார். உள்ளே நுழைந்தவர், போன வேகத்தில் கோபத்தோடு திரும்பி வந்தார். ஊர் மக்களைப் பார்த்து, நான் பெருமாளைத்தவிர யாரையும் வணங்கமாட்டேன் என்று கூறியும், நீங்கள் என்னை சிவன் கோவிலுக்குள் போக வைத்து விட்டீர்களே என கடும் கோபம் கொப்பளிக்க கத்தினார்.
ஊர் மக்களுக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தும் பக்தரின் கோபம் அடங்கவில்லை. ஊர் மக்கள் எவ்வள்வோ சொல்லிப் பார்த்தார்கள், கேட்பதாய் இல்லை.
அப்பொழுது, கும்பலிலிருந்து ஒருவன், பெருமாள் பக்தரை நெருங்கி, ஐயா நீங்கள் போனது, திருமாலின் ஆலயம் தான். சரியாக பார்க்காமல், ஊர் மக்களை கோபித்தால் எப்படி? வாருங்கள் நான் அழைத்துப் போகிறேன் என மீண்டும் பக்தரை அழைத்துச் சென்றான்.
கோவிலுக்குள் நுழைந்து உள்ளே போய் பார்த்தால், ஆவுடையாரில் பெருமாளின் நின்ற திருக்கோலத்தை தரிசித்தார். அவர் கண்களை அவராலேயே நம்ப முடியவில்லை. சிவன் கோவில் என்று நினைத்தால் இது பெருமாள் கோவிலாய் எப்படி மாறியது? என அதிர்ச்சியடைந்தார்.
ஆனால் அது சிவன் கோவில் தான். சிவனுக்கான ஆவுடையாரில் பெருமாள் காட்சி கொடுத்து அரியும் சிவனும் ஒண்ணு என போதித்த தலம் தான் முக்கூடல்.
சிறப்பு :- பெருமாள் சன்னதியில் விபூதி தரும் அரிய காட்சியை இங்கு காணலாம்.
காஞ்சிபுரம் தாண்டி காவேரிப்பாக்கத்தில் 2 கி.மீ தொலைவில் இத்தலம் உள்ளது.
__________________
__________________
SARVE JANA: SUKHINO BHAVANTHU
|